25 December 2014

மனைவியிடம் மறைக்க நினைத்தவருக்கு மறை கழன்று விட்டதா ?

------------------------------------------------------------------
தொழில் செய்வதிலும் தலைக்கீழ் தானா ?        
           ''உங்கப்பா  ஐம்பது வருடம் முன்னாலே செய்த வியாபாரத்தை ,நீ இப்போ தலைக்கீழா செய்றீயா ,அப்படின்னா  ?''
           ''ரவை வியாபாரம் அவரோடது ,வைர வியாபாரம் என்னோடது !''

சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...

 மனைவியிடம்  மறைக்க நினைத்த கணவருக்கு மறை கழன்று விட்டதா ?

                        ''உங்க வீட்டுக்காரர்  மெண்டாலிட்டி  சரியா  
இருக்கான்னு ஏன் செக் பண்ணச் சொல்றீங்க ?''
                   '' ATM ல் பணம் எடுத்தவர் பணத்தை  குப்பைக் கூடையில் கிழிச்சுப்போட்டுட்டு ,பாலன்ஸ்  சிலிப்பை  
கொண்டு வந்திருக்கிறாரே,டாக்டர்  !''

இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....
                              முட்டா நைனா25 December 2013 at 23:15
இவ்ளோ நாள் சொம்மா கீச்சுகுக்கினுருந்தாரு... இப்ப ரெம்ப "காஸ்ட்லி"யா கீச்சுக்கினார்... அதாம்பா மேட்டரு...
ReplyDelete


  1. ரொம்ப காஸ்ட்லிதான்,ccu வில் கிடக்கிறாரே !
    நன்றி
  2. ஒரு லூஸை பார்த்து "நீ லூஸா?"-ன்னு கேட்ட லூஸு!
    ReplyDelete


    1. லூசுக்கு லூசு கேட்டது டைட்டா ..தப்பு ,தப்பு ..சரியாப் போச்சு ,அப்படித்தானே ?
      நன்றி

    2. 2012ம் இதே நாளில் ,ஜோக்காளியில்........
    3. நாட்டுப் பற்றிலே இது ஒருவகை !

                 ''நாட்டுப் பற்று அதிகமா இருப்பதால்தான் 
                                   குடிக்கிறேன்னு சொல்றீயே ,ஏன்?''
    4.                          ''டாஸ்மாக் வியாபாரம் நொடிச்சுப் போச்சுன்னா....அரசாங்கம்  பணத்துக்கு எங்கே போகும் ?''

    5. இதுக்கு காவிரித் தண்ணீர் தேவையில்லை!

      திருமணம் ஆயிரம் காலத்து பயிர் ...
      வரதட்சனைத் தண்ணீரால் 
      வாடாமல் வளரும் அபூர்வப் பயிர் !







    1.                      

        1.                
      












42 comments:

  1. 01. அப்போ.... 'அப்பா' ரவை வியாபாரம் செய்து மகனுக்கு வைர வியாபாரம் செய்யிற அளவுக்கு சொத்து சேர்த்துட்டாரா ?

    02. டாக்டர் தெளிவு தானே....

    03. இவண்தான்டா இந்தியன்

    04. கவிதை ஸூப்பர்

    தமிழ் மண இணைப்புடன் குத்து ஒன்று

    ReplyDelete
    Replies
    1. 1.ஒருவேளை ,சட்ட விரோத 'ரவை 'வியாபாரம் செய்து சம்பாதித்து இருப்பாரோ :)
      2.கையிருப்பை மறைக்க வேண்டும் என்ற தப்பான எண்ணம் வரும்போது உண்டாகும் பதற்றம் ,அதனால் ஏற்பட்ட குழப்பம் இது :)
      3.எல்லா மாநிலங்களிலும் இந்த நிலைதான் ,அப்படித்தானே :)
      4.வரதட்சணைக் கொடுமைகள் கூடிய போதும் வரதட்சனைக் குறைந்தபாடில்லையே :)
      நன்றி

      Delete
  2. வணக்கம்
    அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. முட்டா நைனாவின் கமெண்டும் அருமைதானே ,ரூபன் ஜி ?
      நன்றி !

      Delete
  3. சிரித்தேன்...
    த ம மூன்று
    Click here.. My Wishes!

    ReplyDelete
    Replies
    1. 'கிளிக்கி 'உங்க பதிவையும் ரசித்தேன் :)
      நன்றி

      Delete
  4. Replies
    1. உங்க கடமையை நிறைவேற்றியதற்கு நன்றி :)

      Delete
  5. என்னமா யோசிக்கிறீங்க ஜி...!

    ReplyDelete
    Replies
    1. உண்மையாத்தான் சொல்றீங்களா ,ஜி ?
      நன்றி

      Delete
  6. Replies
    1. உங்கள் வேலு நாச்சியாரை நானும் ரசித்தேன் !
      நன்றி

      Delete
  7. அனைத்தும் அருமை அண்ணா

    தம

    ReplyDelete
    Replies
    1. குடிகாரனின் நாட்டுப் பற்றையும் ரசித்தீர்களா ?
      நன்றி

      Delete
  8. ஹா....ஹா... ரவை எங்கே... வைரம் எங்கே... அடேங்கப்பா..!

    அய்யய்யோ.... தண்ணி போட்டாரோ!

    என்ன ஒரு நாட்டுப்பற்று! குடும்பத்தை நினைச்சுப் பாருங்கப்பா...!

    மோசமான பயிரா இருக்கும் போலேருக்கே!

    ReplyDelete
    Replies
    1. அப்பன் சொல்லுக்கே நேர்மாறா செய்தவர்கள் ஆச்சே ,இப்படி வியாபாரம்தான் செய்வார்கள் :)
      அவருக்கு தண்ணியில் கண்டமில்லை ,வீட்டிற்கு போய் கண்டமாகத்தான் போறார் :)
      நாட்டைவிட வீடா முக்கியம் :)
      களைகள் நிறைந்த பயிர் :)
      நன்றி

      Delete
  9. பயத்தில், பேலன்ஸ் ஸ்லிப்பை மட்டும் எடுத்துக் கொண்டு, பணத்தை எடுக்காமல் செல்பவர்களும் இருக்கிறார்களே!

    ReplyDelete
    Replies
    1. இருந்தாலும் இவ்வளவு பயம் இருக்கக்கூடாது :)
      நன்றி

      Delete
  10. பேரு மட்டுமா தலைகீழா இருக்கும்!!! லாபமும் தானே!!!

    ReplyDelete
    Replies
    1. லாபம் தலைக்கீழானால் நட்டமாகி விடாதா:)
      நன்றி

      Delete
  11. தலைகீழ் வியாபாரக்கற்பனை அருமை
    இனிய கிறிஸ்மஸ் தின நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அவர் ,அப்பனுக்கு எதிராவே எல்லாவற்றையும் செய்வார் போலிருக்கே :)
      நன்றி

      Delete
  12. இப்படியும் நாட்டுப்பற்று உள்ளவர்கள் பூமியில் இருக்க வேண்டியவ் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. உலகப் பற்று அவரை சாக விடவில்லையே :)
      நன்றி

      Delete
  13. இவ்வ்கையில் கூட நாட்டுப்பற்றை வெளிப்படுத்தலாமா?

    ReplyDelete
    Replies
    1. விடிந்ததும் அவரிடம் ,உங்க கேள்வியை நானும் கேட்டேன் ....நானா அப்படி சொன்னேன்னு சொல்றாரே :)
      நன்றி

      Delete
  14. சூப்பர் !புத்திசாலித் தனமான ஜோக்

    ReplyDelete
    Replies
    1. ரவா உப்புமா தொடர்ந்து சாப்பிட்டதால் வந்த புத்திசாலித் தனமோ :)
      நன்றி

      Delete
  15. ''ரவை வியாபாரம் அவரோடது ,வைர வியாபாரம் என்னோடது !''

    நல்ல ’சொல் விளையாட்டு’ பகவான்ஜி[ரவை - வைர]

    ReplyDelete
    Replies
    1. அப்பன் சொல்லை தலைக்கீழாவே எடுத்து செய்றவங்களாச்சே :)
      நன்றி

      Delete
  16. எல்லாமே சிரிக்க வைத்தன! அருமை!

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை,சிந்திக்க வைக்கலையே :)
      நன்றி

      Delete
  17. ரவை வியாபாரம் வைர வியாபாரம் வரை வளர்த்து விட்டிருக்கே
    மனைவியின் கொடுமை தாங்காமல் அவனுக்கு மறை கழண்டுச்சு போல
    நாட்டின் மேல் அக்கறை கொண்ட உண்மையான குடிமகன்
    கவிதை சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. அந்தக் காலத்திலே செய்த இந்தக் காலத்திலேயும் செய்ய முடியுமா :)
      நிறைய பேருக்கு இப்படித்தான் :)
      பாரத ரத்னா விருது தந்து விடலாமா :)
      வரதட்சனை இல்லேன்னா நாட்டிலே பாதிப் பேருக்கு கல்யாணமே ஆகாது போலிருக்கே :)
      நன்றி

      Delete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. ரவை ஆகிப்போன வைரம் நன்றாகயிருக்கிறதே/

      Delete
    2. ரவையை வைரமாக்கும் ரசவாத வித்தையை அவர் எங்கே அறிந்து கொண்டாரோ :)
      நன்றி

      Delete
  19. பயிருக்குப் புதிய விளக்கம்!
    கவிதையாகவும் தெரிகிறதே ஜி!
    த ம கூடுதல் 1

    ReplyDelete
    Replies
    1. நானும் கவிதைப் பயிரைப் போட்டு பார்க்கிறேன் ,ஊஹும் :)
      நன்றி

      Delete
  20. ரவை... வைர வியாபாரம் ரசிக்க வைத்தது...
    பொண்டாட்டி பயத்துல எதைக் கிழிக்கிறதுன்னு தெரியாம கிளிச்சிட்டாப்புல போல... இனி என்னத்தைக் கிழிச்சீங்கன்னு கேட்டா பணத்தை கிழிச்சவனாக்கும் நான்னு பெருமையா சொல்லிக்கலாம்ல்ல...
    மற்றவையும் ரசிக்க வைத்தன.

    ReplyDelete
    Replies
    1. வியாபாரம் கொடிகட்டிப் பறக்குதே :)
      இந்த பயம் தேவைதானா :)
      நன்றி

      Delete