18 December 2014

பெண்ணின் மனதை அறிய முடியுமா ,முடியாதா ?

----------------------------------------------------------

 சொல்வது எளிது ,செய்ய முடியுமா ?

              ''சிங்கத்தை வலையில் அடைப்போம் ,கொசுவுக்கு பயந்து வலையில் படுப்போம்ன்னு எழுதியவனை தேடிக்கிட்டு  இருக்கீ யா ,ஏன் ?
            ''நான் வேணா கொசுவலை இல்லாம படுக்கிறேன் ,நீ சிங்கத்தைப் பிடித்துக் காட்டுன்னு சொல்லத்தான் !''






சென்ற வருடம் இதே நாளில்  ஜோக்காளியில்...
        

நோயாளிக்கு பேச்சு வராது ,டாக்டருக்குமா ?

              ''நாலு மாசத்திலே எட்டு லட்ச ரூபாய் செலவு செய்ஞ்சும் உங்கப்பாவுக்கு பேச்சு வரலேன்னா ,டிஸ்சார்ஜ் செய்யச் சொல்ல வேண்டியது தானே ?''
                   ''மூச்சு இருக்கிறவரைக்கும் டிஸ்சார்ஜ் என்கிற பேச்சுக்கே இடமில்லைன்னு டாக்டர் சொல்றாரே !''

இதற்கு வந்த, ரசிக்க வைத்த கமெண்ட்....


                       
                Thulasidharan V Thillaiakathu18 December 2013 at 09:30
இப்போதைய டாக்டர்களின் அடையாளமாகிய நல்ல டாகடர்!!! டாக்டர்கள் டிஸ்சார்ஜ் என்ற வார்த்தையை அதுவும் இந்தக் கால கட்டத்தில் சொல்லுவது மிக அரிது! இனி எந்த ட்ரீட்மெண்டும் பயனில்லை வீட்டுக்கு கொண்டு செல்லுங்கள் என்பது போன்ற வாக்குகள் உங்கள் காதில் விழுந்தால் சொல்லுங்கள்! அந்த டாக்டருக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்தலாம்!! பிணத்தையே பணம் கட்டினால் தான் "டிஸ்சார்ஜ்" என்று சொல்லும் 5 ஸ்டார் ஆஸ்பத்திரிகள் தானே!! அதனால் இவர் "practical" டாக்டர்தான்!!!
ReplyDelete

Replies


  1. பிணத்திற்கும் ஸ்கேன் எடுக்கிற கூத்தெல்லாம் இங்கே நடக்கிறதே !
    பிணத்தை வைத்துக்கொண்டு பேரம் ,நாடு வெளங்கும் ?
    நன்றி
சென்ற 2012 ம் வருடம் இதே நாளில் ஜோக்காளியில்...

பயத்துக்கும் ஒரு அளவில்லையா?

            ''ஊரெல்லாம் டெங்கு காய்ச்சல் ...கடையிலே விற்கிற பாக்கெட்டை வாங்கக்கூட பயமா இருக்கா ,என்ன பாக்கெட் ?''
             
               ''புளிக் ' காய்ச்சல்' பாக்கெட்தான் !''





தேவதாஸ்களின் புலம்பல் !

பெண்ணின் மனதை அறியவே முடியாதாம் ...
ஆணின் மனதில் உள்ளது மட்டும் ...
நெற்றியில் 'டைட்டில் 'போல தெரிகிறதா  என்ன ?



25 comments:


  1. 01. நல்லதுக்கு காலமில்லைதான் போலயே...


    02. டாக்டருக்கு பீசு இல்லைனு சொன்னா சரியாப்போச்சு

    03. பாக்கெட் சாராயம் அடிக்கிறவன்கூட கொஞ்சம் யோசிப்பான்

    04. நாமக்கவிதை நமக

    த.ம.இ.1

    ReplyDelete
    Replies
    1. 1. இப்போதான் அது உங்களுக்கு தெரிந்ததா :)
      2.உசிரும் சரியாப் போகுமே ,பரவாயில்லையா :)
      3.யோசிச்சு என்ன பிரயோசனம் ,விடிஞ்சா போய் நிற்கிறது டாஸ்மாக்கிலேதானே :)
      4.நாமம் போட்டவன் கூட கோவில் கருவறையிலேயே பெண்களுக்கு நாமம்
      போடுகிறானே :)
      இரட்டிப்பு நன்றி

      Delete
  2. 1. இப்படியெல்லாம் எடக்கு மடக்கா கேள்வி கேட்டா, என்ன செய்வது?
    2. ஐயையோ அந்த டாக்டர் அட்ரெஸை யாருக்கும் கொடுக்காதீங்க .
    4. ஆணின் மனதை கஷ்டப்பட்டு அறிய வேண்டாம், அவர்களே உளறி கொட்டிவிடுவார்கள்

    ReplyDelete
    Replies
    1. 1.அவர் பேசுறதை நிறுத்துங்க :)
      2.உலகப் புகழ் பெற்ற டாக்டராச்சே அவர் :)
      3.??????????இங்கேயிருந்து புளிக்க்காய்ச்சல் அங்கே நீங்கள் கொண்டு போக மாட்டீர்களா :)
      4.சொந்த அனுபவமா :)
      நன்றி

      Delete
    2. 3. இங்கேயிருந்து புளிக்க்காய்ச்சலை எங்க ஊருக்கு கொண்டுக்கிட்டு போனா, அங்க ஏர்போர்ட்ல தூக்கிப்போட்டுடனுமாக்கும்.
      4. நான் ரொம்ப அப்பாவிங்க, என் மனசுல எதுவும் தாங்காது.

      Delete
  3. Replies
    1. உங்கள் ஊரிலும் அந்த டாக்டர் இருப்பாரே :)
      நன்றி

      Delete
  4. எளிதாக சொல்லி உள்ளேன் ஜி... உங்களுக்கும் உதவலாம்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/12/Speed-Wisdom-10.html

    ReplyDelete
    Replies
    1. அந்த லிங்காவை விட உங்க லிங்கா அருமை ஜி !:)
      நன்றி

      Delete
  5. Replies
    1. திருமுருகன் ,உங்களுக்கு அந்த தேவதாஸ் அனுபவம் உண்டா :)
      நன்றி

      Delete
  6. வணக்கம்
    ஜீ
    ஒவ்வொரு கருத்தும் மிக அருமையாக மிகஅருமையாக உள்ளது... இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி
    த.ம5

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்கட நாட்டிலே இம்மாதிரி டாக்டர்கள் உண்டா ?:)
      நன்றி

      Delete
  7. சூப்பர் ஜோக்ஸ்! புளிக்காய்ச்சல் மிகவும் ரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. புளிக்காய்ச்சலை பச்சரிசியோட கலந்து கட்டி சாப்பிட்டுப் பாருங்க இன்னும் அருமையா இருக்கும் :)
      நன்றி

      Delete
  8. இது ஒரு நல்ல கேள்வி!! கேட்டவருக்கு ஒரு நயம் கொசு வலை பரிசாக அளிக்கபடுகிறது:))

    ReplyDelete
    Replies
    1. தலைப்பில் இன்னுமொரு அருமையான கேள்வி இருக்கே ,அதுக்கென்ன பரிசு தரப் போறீங்க :)
      நன்றி

      Delete
  9. நகைச்சுவைகள் அருமை.

    ReplyDelete
    Replies
    1. அருமை என்று பரிந்துரைத்த பரிவை குமார் ஜீக்கு நன்றி !

      Delete
  10. சுவைத்தேன்!

    ReplyDelete
    Replies
    1. சுவைத்தமைக்கு மிக்க நன்றி !

      Delete
  11. புலி காய்ச்சல், பறவை காய்ச்சல்,கொசு காய்ச்சல் என்று இருக்கும்போது..புளி காய்ச்சலும வந்து உலாவினா தடுக்கப்போவது யாரு...?

    ReplyDelete
    Replies
    1. நாமதான் தடுத்துக்கணும் ,தடுக்கப் போறது யாருன்னு பாடிக் கொண்டிருக்கவா முடியும் :)
      நன்றி

      Delete
  12. இப்பவெல்லாம் டாக்டர்களுக்கு
    நோயாளி நலனை விட
    பணம் நலன் பெரிதாப் போச்சுது
    தொடருங்கள்

    ReplyDelete