2 September 2017

வலையுலகுக்கு டாட்டா ,பை பை :(

அன்புமிக்க  வலையுலக உறவுகளுக்கு வணக்கம் !
            ஜோக்காளி தளத்தை புறக்கணிக்கும் இனிய நண்பர்களின்  எண்ணத்திற்கு மதிப்பு அளிக்கும் வகையில் ,இன்றிலிருந்து என் பதிவுகளை  நிறுத்திக் கொள்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் !
              இதுவரையிலும் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி !
                                                                                                  அன்புடன் ,
                                                                                                   பகவான்ஜி .




69 comments:

  1. உங்களின் அதிரடி முடிவு அதிர்ச்சியளிக்கிறது மறு பரிசீலனைக்கு வாய்ப்பில்லையா ?

    ReplyDelete
    Replies
    1. உங்க விருப்பத்தை நிறைவேற்றி விட்டேன் ஜி :)

      Delete
  2. என்ன பகவான் ஜீ? என்ன ஆச்சு? எதுக்கு இப்படி ஒரு முடிவு? உண்மைதானா இது?.. இல்லை சும்மா ஏதும் விளையாட்டுக்கு ஜோக் பண்ணுறீங்களோ?... நல்லாத்தானே போய்க் கொண்டிருக்கு.. உங்கள் பதிவுகள் பிடிக்கவில்லை எனில்.. முதலாம் இடம் கிடைச்சிருக்குமோ? எதுக்கு அப்படி சொல்றீங்க... பிளீஸ்ஸ்.. நம்ப முடியவில்லை என்னால்.. உண்மையைச் சொல்லிட்டு வந்திடுங்கோ.

    ReplyDelete
    Replies
    1. வந்து விட்டேன் :)

      Delete
  3. நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
    அன்புடன் கந்தசாமி

    ReplyDelete
    Replies
    1. வலை உறவு இன்றி நீடுழி வாழ என்னால் முடியாது ,அதான் திரும்ப வந்து விட்டேன் :)

      Delete
  4. ஜி என்ன பிரச்சனை ?
    இது சரியில்லை அலைபேசிக்கு வருகிறேன்....

    ReplyDelete
    Replies
    1. அலை பேசிக்கு வந்தனைக்கு நன்றி ஜி :)

      Delete
  5. மீண்டும் வருக... மக்களை மகிழ்வியுங்கள்... வருபவர்களை மதிக்காமல், வராதவர்கள் பற்றி ஏன் கவலைப்படுகிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம் ஜி இந்த கேள்வி எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது...

      Delete
    2. யெஸ் வழிமொழிகிறோம்!! ஸ்ரீராமின் கருத்தை!!!

      Delete
    3. ஸ்ரீராம் போலவேதான் நானும் சிந்தித்தேன் பகவான் ஜீ... நல்லதை மட்டும் பொறுக்கிக் கொள்வோம்ம்.. அனைத்துப் போட்டி பொறாமைக்கும் காரணம்.. இந்த தமிழ்மணம் என்ற ஒன்று இருப்பதுதான் ஹா ஹா ஹா.. நீங்கள் முதலாம் இடத்தில் இருக்கும்போது போட்டி பொறாமை எதிர்ப்புக்கள் வருவது இயல்புதானே... அதை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டாம்.

      புளொக் என்பது நம் பொழுதுபோக்கு மட்டுமே.. அதனால தொடர்து எழுதுங்கோ.. இன்னும் சில மாதங்களில் ரிரயேட் ஆகி விடுவீங்கள் என நினைக்கிறேன்ன்.. அதனால புளொக் எழுத நிறைய ரைம் இருக்கும்... அப்போ மனதும் இலேசாகும்.. தொடருங்கோ விடாமல்.... இதுக்கு மேல எப்படிச் சொல்வது.

      உங்கள் மகன் தான் எழுத வேண்டாம் எனச் சொல்லிட்டாரோ என எனக்கொரு டவுட்.. அப்படி எனில் இதில் எதையும் சீரியசாக எடுக்க வேண்டாம் எனச் சொல்லுங்கோ அவரிடம்.. புளொக் எழுதுவது உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியமான ஒன்று... இதில் ஆர்வம் இருக்கும் நம் போன்றோருக்கு இது நிட்சயம் தேவை.... வேணுமெண்டால் தமிழ்மணத்தை வலையுலகில் இருந்தே தூக்கிடுவோமா?:) அப்படி எனில் போட்டி பொறாமை வர வாய்ப்பில்லையோ.. ஹையோ யாரோ எல்லாம் என்னைக் கலைக்கிறார்கள்... மீ ஓடிடுறேன்ன்ன்

      Delete
    4. ரிடையர், டயம் , நிச்சயம் - உங்கள் எழுத்துக்கு டிக்‌ஷனரி தேவைதான் அதிரா

      Delete
    5. சிறிய மாற்றம் செய்து கொண்டு தொடரலாம் என்று இருக்கிறேன் :)

      Delete
  6. Replies
    1. முற்றுப் புள்ளி வைக்கவில்லை :)

      Delete
  7. ஒரு சின்ன பிரேக் எடுத்திட்டு, அப்பாலிக்கா வாங்க. காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. இப்போ உங்க வரவுக்காய் நான் காத்திருக்கிறேன் :)

      Delete
  8. வலையுலகில் மீண்டும் - நகைச்சுவைத் தென்றல் தவழ வேண்டும்..

    ReplyDelete
    Replies
    1. தவழ ஆராபித்து விட்டது ,மகிழ்ச்சி தானே :)

      Delete
  9. மீண்டும் வருக

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்ன மாதிரி வந்து விட்டேன் :)

      Delete
  10. நண்பரே எனது ஆதங்கத்தினை, ஒரு பதிவாகவே வெளியிட்டு விட்டேன். காண்க.

    வலைப்பதிவர் பகவான்ஜி அவர்களுக்கு http://tthamizhelango.blogspot.com/2017/09/blog-post_2.html

    ReplyDelete
    Replies
    1. பதிவை வாசித்தேன். பகவான்ஜி மனம் மாறுவார் என்பது என் நம்பிக்கை.

      அவரிடமிருந்து இன்றே புதிய பதிவு வெளிவரும்.

      Delete
    2. பதிவு கண்டு நெகிழ்ந்தேன் :)

      Delete
  11. இன்னாபா என்னாச்சுனு இப்படி மூட்டையக் கட்டிக்கினு ஷோக்கா டாட்டா பைபை?? ஜோக்காளி!!! மீண்டும் வருக!! மீண்டு வருக!!!

    ReplyDelete
    Replies
    1. மீண்டு வந்தாச்சு ,நீங்கதான் மொய் வைத்து வரவேற்கக் காணோம் :)

      Delete
  12. உண்மையை சொல்லுங்க எங்க வீட்டம்மா உபயோக்கிற ஆயுதத்தை உங்க வூட்டும்மாவும் பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்களா என்ன? அதனால் பெரிய பாதிப்பா என்ன?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

      Delete
    2. லைட் வெயிட் பூரிக்கட்டை என் வீட்டில் !சில பதிவர்கள் முதுகில் குத்துவதைத் தான் தாங்கிக்க முடியலே :)

      Delete
  13. இதற்கு நாங்கள் ஓட்டளிக்கவில்லை.....பகவான் ஜி!

    ReplyDelete
    Replies
    1. ஆம் நானும் ஓட்டு அளிக்கவில்லை.

      Delete
    2. ஹையோ நான் அனைத்துக்கும் வோட் பண்ணிப் பழகிவிட்டேனே:(..

      Delete
    3. #இதற்கு நாங்கள் ஓட்டளிக்கவில்லை#
      பரவாயில்லை .....'கல்யாணமாகி நாலு வருஷம் ஆகியிருக்குமா 'பதிவுக்கு வாக்களிக்கலாமே ஜி :)

      Delete
    4. ////கல்யாணமாகி நாலு வருஷம் ஆகியிருக்குமா 'பதிவுக்கு வாக்களிக்கலாமே ஜி :)///
      ஹா ஹாஆஅ ஹாஆஅ :)

      Delete
  14. என்ன நண்பரே
    எதற்கு இந்த முடிவு
    அல்லது இதுவும் ஜோக்கா
    மீண்டும் வலைக்கு வாருங்கள் நண்பரே
    காத்திருக்கிறோம்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. உங்கள் காத்திருப்பு வீண் போகவில்லைதானே:)

      Delete
  15. திடீரென ஏன் இந்த முடிவு? தங்களது முடிவை மாற்றிக்கொண்டு திரும்பவும் பதிவுலகம் வந்து நகைச்சுவையை வழங்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் அன்பைக் கண்டு முடிவை மாற்றிக் கொண்டேன் ஜி :)

      Delete
  16. மீண்டும் வருக,காத்திருக்கிறோம்.
    தமிழ் செய்திகள்

    ReplyDelete
    Replies
    1. இந்த முறை பதிவைப் படித்து கருத்து கூறியமைக்கு நன்றி :)

      Delete
  17. //புறக்கணிக்கும் இனிய நண்பர்களின்.....//

    புறக்கணிப்பவர்கள் எப்படி ‘இனிய’ நண்பர்களாக இருக்க முடியும்?

    உங்களின் ‘இனிய’ நண்பர்களில் ஒருவன் என்ற முறையில் வேண்டுகிறேன், அடுத்த நகைச்சுவைப் பதிவை இன்றே வெளியிடுங்கள்.

    இப்போதுள்ள மன நிலையில் புதிய ஜோக்குகள் உதிக்கா எனின், ஆயிரக்கணக்கான பழைய பதிவுகளையே மீள் பதிவுகளாக வெளிடுங்கள்[நான் சில நேரங்களில் அதைத்தான் செய்கிறேன். பதிவைப் புதுப்பித்துத் தலைப்பை மாற்றி...].

    கருத்தொருமித்த நண்பன் என்ற முறையில் மீண்டும் சொல்கிறேன்.....

    மன நலத்திற்கும் உடல் நலத்திற்கும் உகந்த பயிற்சிக்கூடமாக இருப்பது கூகிளின் நன்கொடையான இந்த வலைத்தளம்தான். நம் பதிவுகள் ஓரளவுக்கேனும் வாசிப்போருக்குப் பயன்படுகின்றன என்பதும் உண்மை. எக்காரணத்தைக்கொண்டும் இதிலிருந்து விலகாதீர்கள்.

    நன்றி.




    ReplyDelete
    Replies
    1. அந்த இனிய நண்பர் இந்த பதிவுக்கும் ஒரு மைனஸ் வோட்டு போட்டிருக்கிறாரே :)

      Delete
  18. ஏன் இப்படி சென்சிடிவா இருக்கீங்க. எத்தனைபேர் தளத்துக்கு வந்து படிக்கறங்க. கனி இருப்ப காய் கவரலாமா?

    தொடர்ந்து எழுதுங்க. டென்ஷன் போக்கும் நல்ல வேலையைத் தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அதுதானே கரெக்ட்டாச் சொன்னீங்க நெ. த.... கனிபோல நாமெல்லாம் இருக்கும்போது(சந்தடி சாக்கில நம்ம புகழையும் எடுத்து விட்டிடோணும்:))... காய் எதுக்கு கவர்கிறீங்க... வாங்கோ தொடருங்கோ...

      Delete
    2. தேங்'காயும்'தேவைப் படுதே,எனக்கு எதிராக 'காயை 'நகர்த்தி காயப் படுத்துகிறார்களே :)

      Delete
  19. வணக்கம் பகவானே !

    நல்லமுடிவை எடுத்து இருக்கீங்க வாழ்த்துகள் ! ஆனால் ஒன்று இந்த முடிவை ஆரம்பத்தில் எடுத்திருக்கோணும் இப்போ எடுப்பதால் எந்தப் பயனும் இல்லை ஆகவே ! இந்த முடிவை மறுபரிசீலனைக்கு உட்படுத்துமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்

    பிடிக்காத பதிவுக்கு தமன்னா வாக்கு கிடைக்காது வருந்துகிறேன்
    கிர்ர்ரர்ர்ர்ர்

    ReplyDelete
    Replies
    1. ///வணக்கம் பகவானே !

      நல்லமுடிவை எடுத்து இருக்கீங்க வாழ்த்துகள் /// karrrrrrrrr haa haa haaa:)

      Delete
  20. பகவான் ஜீ... பிளீஸ்ஸ்ஸ் வெளில வாங்கோ...

    ReplyDelete
    Replies
    1. மறு பரிசீலனை பண்ணிட்டேன் ஓகே தானே ஜி :)

      Delete
  21. அன்புடன் கருத்தைத் தெரிவித்து இருக்கும் அனைவருக்கும் நன்றி !
    வலையில் எழுதுவது இன்பச் சுமையாக இருந்தது ,சமீப காலமாக் இன்பம் போய் சுமையாகத் தோன்ற ஆரம்பித்து விட்டதால் ,நண்பர் சேட்டைக்காரன் வேணுஜி சொன்ன மாதிரி ...ஒரு சின்ன பிரேக் எடுத்திட்டு, அப்பாலிக்கா வாங்க:

    ReplyDelete
    Replies
    1. மலை போலே வரும் துன்பங்கள் யாவும் பனிபோல் நீங்கிவிடும் திரு பகவான்ஜீ அவர்களே விரைவில் உங்கள் வருகையை அன்புடன் எதிர் நோக்கும் நண்பர்களில் நானும் ஒருவன் - விமல் -

      Delete
    2. வேணுமெனில் ஒருநாள் அ 2 நாள்(சின்ன பிரேக்) பிரேக் எடுங்கோ..

      https://designshop-6aa0.kxcdn.com/photos/foldingcard-come-back-soon-love-postcards-send-online-8805_93.jpg

      Delete
    3. //அன்புடன் கருத்தைத் தெரிவித்து இருக்கும் அனைவருக்கும் நன்றி !//
      நானும் உங்க ரசிகன் தான். அடிக்கடி கருத்தை, பின்னோட்டம் தெரிவிக்கல்ல என்பதிற்காக அன்பு இல்லை என்பதுவல்ல பகவான்ஜீ.

      Delete
    4. விரைவில் வாருங்கள்.

      ஜோக்குகளின் எண்ணிக்கையைக் குறையுங்கள். தினமும் என்றில்லாமல் இடைவெளி கொடுத்துப் பதிவு வெளியிடலாம். சுமை குறையும்.

      தங்களின் மீள்வருகை மகிழ்ச்சியளிக்கிறது.நன்றி பகவான்ஜி.





      Delete
    5. ஆலோசனைக்கு நன்றி ஜி :)

      Delete
  22. ஜோக்காளி தளத்தை புறக்கணிக்கும் அந்த இனிய நண்பர்கள் யாருன்னு தெரிலையே...அவர்கள்.யாரா இருக்கும்.....????

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து பாருங்கள் ,இன்றைய பதிவுக்கு இரண்டு மைனஸ் வோட் போட்டு உள்ளார்களே :)

      Delete
  23. விரைவில் வாங்க ஜீ !உங்களின் சிரிப்பு வெடிகள் எங்களின் சந்தோஷ மழைகள்! தொடர்ந்தும் என் ஆதரவு எப்போதும் உங்களு இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாக்கு கொடுத்த மாதிரி வாக்கு போட வர மாட்டேங்கிறீங்களே ஜி :)

      Delete
  24. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு

    ReplyDelete
  25. புறக்கணிப்பவர்களைப் புறக்கணித்துவிடுங்கள். தொடருங்கள், வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. ஏனிந்த திடீர் முடிவு! ? என் கடன் எழுதுவது என எண்ணி தொடருங்கள்

    ReplyDelete
  27. ஏனிந்த முடிவு! தமிழ்மணம் நம்பர் 1 பதிவராக இருக்கும் நீங்களே, மற்றவர்கள் புறக்கணிக்கிறார்கள் என நினைத்தால் மற்றவர்கள் என்ன சொல்வது!

    தொடர்ந்து எழுதுங்கள் - சற்றே இடைவெளிக்குப் பிறகு எழுதுவேன் என கருத்துரை தந்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  28. என்ன ஆச்சு ஏன் இந்த அலுப்பும் சலிப்பும், எழுதி கொண்டே இருப்பவர்கள் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் அல்லவா, பிறகு எழுத நினைத்தாலும் சட்டென்று பிடிபடாது. அப்படித்தான் பத்து வருடத்திற்கு முன்னால் எழுதியதை நிறுத்தினேன். மீள்வதற்குள்... பின்தங்கியவனாகி விட்டேன். சிரிப்போடு வாருங்கள்

    ReplyDelete
  29. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  30. This comment has been removed by the author.

    ReplyDelete