28 September 2017

*மனைவி, தாய் வீட்டிலேயே இருக்கலாமா :)

        '' இன்ஸ்பெக்டர் ஸார், பிறந்தகத்துக்கு போன ,உங்க மனைவி தீவிரவாதிகளை விட மோசம்னு  சொல்றீங்களே ,ஏன் ?''
          ''சமாதான பேச்சுவார்த்தைக்குக் கூட வர மறுக்கிறாளே !''

இது கபாலிக்கு புகுந்த வீடு :)
            ''போலீஸ்  ஸ்டேசன் பக்கம் வரவே பயம்மா இருக்கு ,உனக்கு எப்படி கபாலி ?''

           ''உங்களுக்குத்தான் அவங்க Pol'ICE',எனக்கு அவங்க வெறும் cool'ICE'தான் !''

சம்பாதிக்க வக்கில்லாதவனுக்கு வாழ்க்கைப் பட்டா ...?                    
            ''ஹலோ ,ஹலோ ,நல்லா சத்தமா பேசும்மா ,கிணற்றில் இருந்து பேசுற மாதிரி இருக்கு !''
           ''அங்கிருந்துதான்ப்பா பேசுறேன் ,என்னை எப்படிப்பட்ட பாழும் கிணற்றில் தள்ளி இருக்கீங்கன்னு இப்பவாவது புரியுதாப்பா ?சீக்கிரம் வந்து காப்பாத்துங்க !''
டாக்டர் கையெழுத்து புரியாதுதான் ,அதுக்காக இப்படியா ?
            ''ஹலோ டாக்டர் ,உங்க பிரிஸ்கிரிப்சன்படி மருந்தை நோயாளி  வாங்கிட்டு போய்விட்டார் ,ஏன் கேட்குறீங்க ?''
           ''அதிலே பேனா எழுதலைன்னு நான் கிறுக்கி இல்லே பார்த்திருந்தேன் ?''
            ''விடுங்க டாக்டர் ,எழுதி இருந்தாலும் என்ன மருந்தை எழுதுவீங்க எங்களுக்குத் தெரியாதா ?''

பூவின் மணம் பூவையருக்கும் உண்டு என்பது உண்மையா :) 
உள்ளூறும் ஓர் திரவம்  பூவிதழ்களின் வழியே
வியர்வை போல் வெளியேறி ஆவியாகும் போது
நறுமணமாகிறது நம் நாசிக்கு  ...
மனிதனுக்கு இப்படியோர் இயற்கை மணம் இல்லைதான் ...
உழைப்பினால் உண்டாகும் வியர்வை நாறலாம்...
பூவின் மணத்திலும்மேன்மையானதுஅந்த நாற்றம் ...
அதுதான் வீடும் நாடும் மணக்க காரணம் !

டிஸ்கி :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

இங்கே க்ளிக் செய்தும் தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம் :)


26 comments:

  1. Replies
    1. உற்சாகம் தரும் உங்கள் முதல் ஆதரவுக்கு நன்றி ஜி :)

      Delete
  2. உழைப்பின் அருமையை விளக்கிய விதம் சூப்பர் ஜீ

    ReplyDelete
    Replies
    1. ஆனால் ,இங்கே அந்த வியர்வைக்கு ஏற்ற கூலி கிடைகாதது கஷ்டமாய் இருக்கிறதே ஜி :)

      Delete
  3. ​டாக்டர் பிரிஸ்க்ரிப்ஷன் ஜோக்தான் டாப்!​

    ReplyDelete
    Replies
    1. டாக்டர் கமிஷன் வாங்கிக் கொண்டு ,அவர் பரிந்துரைக்கும் மருந்துகளைத் தானே மருந்துக் கடையில் வாங்கி வைக்கிறார்கள் ,இதென்ன தேவரகசியமா :)

      Delete
  4. சமாதான பேச்சுவார்த்தைக்குச் சிகப்புக்கொடியுடன் துப்பாக்கியத் தூக்கிக் காட்டினா எப்படி...?!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. அவரோட தொழில் புத்தி அவரை விட்டு போகாதே :)

      Delete
  5. அனைத்தையும் ரசித்தேன்...தம+1

    ReplyDelete
    Replies
    1. இப்படி செயல்படும் போலீசுக்கு not'ice'கொடுக்கலாமா :)

      Delete
  6. Replies
    1. டாக்டரின் திருவிளையாடல் எப்படி :)

      Delete
  7. டாக்டர் ப்ரிஸ்க்ரிப்ஷன் ஹாஹாஹாஹாஹா....கரீக்டுத்தான்..

    அனைத்தும் ரசித்தோம்

    ReplyDelete
    Replies
    1. மருந்து கம்பெனி ,ரெப்,மருத்துவர்கள் இவர்களின் முக்கூட்டு சதி,மக்களுக்குத் தானே அய்யா துன்பம் :)

      Delete
  8. நல்ல வேளை என்னை பாழுங்கிணத்துல தள்ளல. ஒருவேளை மாமா இப்படிதான் அவங்கம்மாக்கிட்ட பேசுவாரோ!

    கபாலி புகுந்த வீடு ரசிக்க வைத்தது.

    பொண்ணுங்களுக்கு அம்மா வீட்டுக்கு போயிட்டாலே தனி பலம் கூடிடுறது உண்மைதான்

    ReplyDelete
    Replies
    1. மாமா அப்படித்தான் சொல்வார்ன்னு படுது ,எப்படி ஜூரம் போட்டுபார்த்தாலும் பிளாக் ,fbயிலேயே இருக்கீங்களே :)

      'ஐஸ்'ன்னாலே ஜில்லுன்னு ஆகிவிடுமே :)

      தனிக் குடித்தனம் வந்த பிரகும்தானே :)

      Delete
  9. த ம 15 சுவைத்தேன்

    ReplyDelete
    Replies
    1. மருந்துக் கூட்டணி இருப்பது உண்மைதானே அய்யா ;)

      Delete
  10. மனைவி பேச்சு வார்த்தைக்கும் வராத தீவிரவாதி
    கபாலிக்கு பழகிப்போன இடம்
    உணமையிலேயே கிணற்றின் உள்ளிருந்துதானே பேசுகிறார்

    ReplyDelete
    Replies
    1. இதுதான் வித்தியாசம் :)
      மாமியார் வீடாச்சே :)
      உங்களுக்கும் கேட்டிருச்சா :)

      Delete
  11. மருந்து சீட்டில் டாக்டர் எழுதுவது பற்றிய நகைச்சுவை அருமை,

    ReplyDelete
    Replies
    1. நகைச்சுவையாக தோன்றினாலும் ,நம் கண்ணெதிரே தெரியும் யதார்த்தம்தானே இது :)

      Delete
  12. அனைத்தும் அருமையாக இருந்தது

    ReplyDelete
    Replies
    1. அந்த சினிமா பட ஸ்டில்லே கருத்துப் படம் போலிருப்பதை நான் ரசித்தேன் ,நீங்க :)

      Delete
  13. நாங்கள் இருவரும் இரவோடிரவாவே வோட் போட்டிட்டோம்ம்ம்ம் என்பதனை.. இந்த தேம்ஸ் கரைப் பச்சைப்பாசிமேல் அடித்துச் சத்தியம் செய்கிறேன் பகவான் ஜீ:)..

    ReplyDelete
    Replies
    1. தமிழ்மண வாக்கு போட்டால் போதுமா ,உங்கள் அருள்வாக்கு எங்கே என்றுதான் கேட்டேன் :)

      Delete