24 September 2017

சரியான டயாபெடிக் உணவு பழக்க வழக்கம் :)


மைனஸ் வோட்டு போட்டு கலாய்த்த நண்பரே ....
           என் மண்டையைக் காய வைத்த , நீங்கள் எந்த குரூப் என்று தெரிந்து விட்டது !நேற்று ,உங்க 'தல' ஆ...மூ விடம் பேசிவிட்டேன் ....அடப் பாவிங்களா ,இப்படியுமா கலாய்ப்பீங்க ? உங்களிடம் மீதம் இருக்கும் ஜனவரி ,பிப்ரவரி போன்ற 12 மாத பெயர்கள்,சனி ,ஞாயிறு போன்ற 7 வாரநாள் பெயர்கள் ,mg ராமச் சந்திரன் போன்ற எழுபது போலி பெயர்களில் இனிமேல் பிளஸ் வாக்கு போடுங்க ,நல்லா வருவீங்க :)

*நட்பு என்றால் இதுவல்லவா நட்பு :)
                 ''ஊருக்கு வர்றேன்னு சொல்லி இருந்தால் ,ரயில்வே ஸ்டேசனுக்கு நான் வந்திருப்பேனே, ஏண்டா சொல்லலே ? ''
                ''உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா ,சொல்லியிருந்தால் வீட்டைப் பூட்டிட்டு கிளம்பியிருப்பீயே !''

இந்த லாஜிக் சரிதானே :)
               ''பரமேஸ்ங்கிற  உன் நல்ல  பெயரை  எதுக்கு 'பராங்குசம் 'னு மாற்றிக்கப்  போறே ?''
               ''நல்ல பெயர் ஞாபகம் வர மாட்டேங்குதுன்னு யாரும் சொல்லக் கூடாதுன்னுதான் !'' 

ஜோதிடம்தான் , வங்கி வேலைக்கு அடிப்படையா :)
             ''  வங்கி மேலாளர்களுக்கு ஜோதிடமும் பார்க்கத் தெரியணுமா, ஏன்  ?''
                ''யார் கடனை திருப்பி கட்டுவார்கள் என்று ஜாதகத்தைப்  பார்த்து , கடனைக் கொடுக்க உதவுமே !''

எழுத்தாளரை  இப்படியா அவமானப் படுத்துவது :)
               ''பாத்திரக் கடைக்கு மனைவியோட  ஏண்டா போனோம்னு ஆயிடுச்சா .ஏன் ?''
             ''பாத்திரத்திலே பெயர் வெட்டுறவர் கூட ஒரு எழுத்துக்கு இவ்வளவுன்னு சம்பாதிக்கிறார், நீங்க பக்கம் பக்கமா எழுதி பைசாவுக்கு  பிரயோசனம் இல்லையேன்னு  குத்திக் காட்டுறாளே !''

கல்யாண மொய் ,மணி ஆர்டரில் வந்திருந்தா வருத்தமில்லே:)
            ''தந்தி சேவையை பத்து வருசத்திற்கு முன்னாடியே நிறுத்தி தொலைச்சிருக்கணும்னு  வருத்தப் படுறீங்களே ,ஏன் ?''
            ''அப்போ நடந்த என் கல்யாணத்திற்கு ..மொய் செய்யாமல் முப்பது  வாழ்த்து தந்தி வந்தது ...நான்  இன்னும் இருபது வாழ்த்து தந்தி அனுப்ப வேண்டி இருக்கே !''

சரியான டயாபெடிக் உணவு பழக்க வழக்கம் :)
'மூணுவேளை மூக்கு முட்ட சாப்பிடுவேன் 'என்றேன் ...
'இனி  ஆறுவேளை சாப்பிடுங்கள் ......'என மருத்துவர் கூற ...
'ஆஹா'என்றேன் !
ஆஹாவுக்கு ஆப்பு வைத்தார் ...
'ஆறு வேளையும் அரை வயிறுக்கும் கீழ்தான் சாப்பிடணும் !'
டிஸ்கி :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

இங்கே க்ளிக் செய்தும் தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம் :)


44 comments:

  1. 'உன்னைப் பற்றி எனக்குத் தெரியாதா ,சொல்லியிருந்தால் வீட்டைப் பூட்டிட்டு கிளம்பியிருப்பீயே !''அண்ணா நகர் முதல் தெரு காமெடி தான் நியாபகத்திற்கு வந்தது ஜீ

    ReplyDelete
    Replies
    1. நானும் அந்த படத்தைப் பார்த்துள்ளேன் ,ஆனால் நினைவுக்கு வரவில்லை ஜி :)

      Delete
  2. // மைனஸ் வோட்டு போட்டு கலாய்த்த நண்பரே ....
    என் மண்டையைக் காய வைத்த , நீங்கள் ///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உங்களுக்கு மண்டை மட்டும்தான் காய்ந்தது, உங்கள் அவஸ்தை பார்த்து நாங்கள் காய்ந்து கருவாடாகிட்டோம்ம்:)..

    ////எந்த குரூப் என்று தெரிந்து விட்டது !நேற்று ,உங்க 'தல' ஆ...மூ விடம் பேசிவிட்டேன் ....அடப் பாவிங்களா ,இப்படியுமா கலாய்ப்பீங்க ? ///

    எந்த குரூப்?:) ஆமி?:)நேவி?:)) ஹா ஹா ஹா... சரி விடுங்கோ அது முக்கியமில்லை... நான் ஆரம்பமே சொன்னேனே.. யாரோ வேணுமெண்டு செல்லமாக தனகுகிறார்கள்போலவும் இருக்குதென... ஆனா நீங்க ஓவரா சீரியஸ் ஆகிக்கொண்டு போகும்போது கஸ்டமாக இருந்துது.. அத்தோடு.. நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் புளொக்குகளில்கில் ஒரு சிறு கீறல் தெரிந்தாலும் கஸ்டமாகிடுது... நிம்மதி போயிடுது.. எல்லோரும் ஹப்பியாக இருக்கோணும்.

    ///எழுபது போலி பெயர்களில் இனிமேல் பிளஸ் வாக்கு போடுங்க ,நல்லா வருவீங்க :)///

    ஆங்ங்ங்ங்ங்ங் அப்பூடியே எனக்கும்.. கவனம் தம் அப்:)[கவனிக்கவும்:)] வோட்டுப் போட்டு, பகவான் ஜி யிடம் இருந்து மகுடத்தைப் பறிக்க வைங்கோ:)). இத்தோடு மைனஸ் வோட்டுக்கு “டொட்”:) _()_ .

    ReplyDelete
    Replies
    1. எனக்குத்தான் வேற கவலையே இல்லை ,உங்களுக்குமா ?எதுக்கும் தேம்ஸ் பக்கம் போகாதீங்க .காய்ந்த கருவாட்டை கொக்கு கொத்திகிட்டு போகலாம் :)

      செல்லமாக தனகுகிறார்கள்போலவும் இருக்குதென சொன்னது உண்மைதான் ஆகிட்டது ,ஆனாலும் மூலத்தை அறியாமல் இருக்க முடியவில்லை ,விட்டுருவோமா ..கண்டுபிடிச்சாசில்லே:)

      தம ஒன்னில் இருந்து இறக்கிவிடுவதுதான் இவர்கள் பொழுதுபோக்கே :)நீங்கள் வந்தால் உங்களையும் கலாய்ப்பார்கள் :)

      Delete
  3. நட்பின் ஜோக் சத்யராஜையும், ஜனகராஜையும் நினைவு படுத்துகிறது!!!

    ரசித்தேன்.

    மைனஸ் வோட்டு மர்மம் விடுபட்டதில் மிக்க மகிழ்ச்சி. நண்பரே என்று அழைத்திருப்பதால் நல்லுறவு என்றும் தெரிகிறது. என் அபிப்ராயத்தில் சில வரிகள்..

    முதலாவதாக, தமிழ்மணம், வாக்கு, மகுடம் போன்றவற்றைப் பெரிதாக எண்ண வேண்டாம். வந்ததை வரவில் வைப்போம். வரவில்லை என்றால் லூஸில் விடுவோம். இவற்றை எல்லாம் விடப் பெரியது வலை மூலம் அறிமுகமாகி இருக்கும் நம் நட்பு.

    இரண்டாவது மைனஸ் வோட்டு என்பதை நீங்கள் கண்டு கொள்ளாமலேயே விட்டிருக்கலாம். அப்போது அவர்கள் தொடர்ந்திருக்க மாட்டார்கள். நாகேஷ் சொல்வார். ''யாராவது உன்னை கோபப் படுத்தினால் அவர்கள் உன்னை ஜெயித்து விட்டதாகப் பொருள். அவர்களை ஜெயிக்க விடாதே" இதை அவர் தன் வீட்டு சுவரில் மாட்டி வைத்திருந்ததாய்ப் படித்த ஞாபகம்.


    எபப்டியும் இனி தொடராது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ///''யாராவது உன்னை கோபப் படுத்தினால் அவர்கள் உன்னை ஜெயித்து விட்டதாகப் பொருள். அவர்களை ஜெயிக்க விடாதே"////
      100 வீதம் கரீட்டு:)... ஆனா இந்தப் பக்குவம் அதிராவைப்போல ஞானி ஆனால் மட்டுமே வரும்:) பகவான் ஜீக்கு வராதாக்கும்:)

      ஹையோ இப்போ எதுக்கு பகவான் ஜீ முறைக்கிறார்... உப்பூடி முறைச்சால் ரஜனி , கமல் அங்கிளிடம் சொல்லி மைனஸ் வோட் போட வைப்பேன்ன்ன்ன் ஹா ஹா ஹா இனி இதைச் சொல்லியே எல்லோரையும் மிரட்டிடலாம்ம்ம்:)..

      Delete
    2. அண்ணாநகர் முதல் தெரு என்றாலே எனக்கு ,மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டுதான் நினைவில் வருகிறது :)

      நண்பரே என்று சொன்னது ஒரு மரியாதைக்காகவே ,அவரும் என் தளத்தில் இதுவரை வந்ததில்லை ,நானும் அவர் தளத்துக்கும் போனதில்லை ,ஆனால் உங்களுக்கும் அறிமுகமான பிரபல பதிவர்தான் :)

      நம் நட்பு வட்டத்தில் உள்ள யாரையும் நான் சந்தேகப் படவில்லை ,உங்களை உள்பட !தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசியிருக்கும் என்பது உணமைதானே ?அதனால்தானே ,பிரச்சினைக்கு ஒரு முடிவு வந்துள்ளது :)

      Delete
    3. அதிரா ......கோபப் பட்டதால் தானே ,ரஜினி கமல் அங்கிள் விலாசம் எனக்கு கிடைச்சிருக்கு ?
      நீங்கதான் ஞானியாச்சே அவர்களின் பெயரைச் சொல்லுங்க பார்ப்போம் :)

      Delete
    4. ஸ்ரீராம் உங்கள் கருத்தை அப்படியே டிட்டோ செய்கிறோம்!!! வரிக்கு வரி!! அன்று சொல்ல நினைத்தது...நாகேஷ் சொன்னது பற்றி தெரியாது ஆனால் அந்த வாசகம் மிகவும் சரியே!!!

      பகவான் ஜீ எஞ்சாய்!!!

      Delete
    5. துளசிதரன் ஜி .....இது கேடு செய்யாத பொய்கோபம் மட்டுமே ,உண்மை கோபம் என்றால் இந்நேரம் கில்லர்ஜியிடம் கோடரி வாங்கிக் கொண்டு போய் பிளந்து இருக்க மாட்டேனா :)

      Delete
    6. ///அதிரா ......கோபப் பட்டதால் தானே ,ரஜினி கமல் அங்கிள் விலாசம் எனக்கு கிடைச்சிருக்கு ?///

      நிட்சயமா, அத்தோடு மனைஸ் வோட் விழுந்தமையால்தான் தமிழ்மணம் ராங்:).. மகுடம் பற்றி எல்லாம் அலசினோம்:).. ஹா ஹா ஹா:)..

      பகவான் ஜீ ஒரு க்குளூ குடுங்கோவன்.. அந்தக் கமல் அங்கிள் என் பக்கம் வருபவரா?:).. இல்லை வேறு எங்காவது ஒரே இடத்தில் சந்தித்திருக்கிறோமா?:).. இல்ல அவருக்காவது என்னைத்தெரியுமோ?:).. ஹா ஹா ஹா:)..

      இருப்பினும் நீங்க அவரை இப்பூடி சிம்பிளா மன்னிச்சு விட்டது தப்பூஊஊஊஊ:).. இப்போ எனக்கு தேம்ஸ்ல அவரை அல்ல:) உங்களைத்தள்ளோணும் என வருதே:)

      Delete
    7. கமல் அங்கிளுக்கு ஒருமுகம் இல்லை பஞ்சமுகம் ,ஒரு முகம் உங்களுக்கும் தெரிந்த முகம்தான் !
      சத்தியம் வாங்கியிருக்காங்க ,மீறினால் மறுபடியும் மைனஸ் ஒன்றில்லை ,எழுபது வோட்டு வரலாம் !

      என்ன செய்றது ,முன் விரோதம் இல்லாமல் செய்யப்படும் கொலையைக் கூட கோர்ட் மன்னித்து விடுகிறதே !
      லண்டனுக்கு வருவதாய் இருந்தேன்,கேன்சல் செய்துவிட்டேன்,தேம்ஸ் வற்றினால் சொல்லுங்க வருவதைப் பற்றி யோசிக்கிறேன் :)

      Delete
    8. ////சத்தியம் வாங்கியிருக்காங்க ,மீறினால் மறுபடியும் மைனஸ் ஒன்றில்லை ,எழுபது வோட்டு வரலாம் !///

      ஹா ஹா ஹா உந்தப் பயம் எப்பவும் இருக்கட்டும்:) இது எனக்கு அப்பப்ப உதவியா இருக்கும் உங்களை மிரட்ட:)..

      Delete
    9. கமல் ,ரஜினி அங்கிள் விலாசத்தை உங்கள் ஞானத் திருஷ்டியாலும் கண்டுபிடிக்க முடியாதே :)

      Delete
    10. நான் எப்பவும் விலாசம் எடுத்தோ அல்லது உள்பெட்டியிலோ யாரோடும் தொடர்பு வைப்பதில்லை பகவான் ஜீ.. என் கூக்குரல், பேச்சு, முழக்கம்,சண்டை எல்லாமே பப்ளிக்கில்தான்... அதனால இங்கு வந்துதான் கூவி அழைப்பேன்ன்.. என் குரல் கேட்டு ஓடிவருவார்கள்:) மைனஸ் வோட் போட ஹா ஹா ஹா:)

      Delete
    11. அப்படி ஒரு நினைப்பு இருந்தால் மறந்து விடுங்கள் ,அப்புறம் அவர்களை நான் பப்ளிக்கில் நாற அடித்து விடுவேனே :)

      Delete
  4. இனி நடப்பது நலமாகும்...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கோடரி இருக்க பயமில்லை ஜி :)

      Delete
  5. இனி தொடராது.....//

    மகிழ்ச்சி...மிக்க மகிழ்ச்சி பகவான்ஜி.

    ReplyDelete
    Replies
    1. நேற்று வந்த பாகவதர் சுபமங்களம் பாடிட்டு இடத்தைக் காலி செய்துவிட்டார்:)

      Delete
  6. ரயில்வே ஸ்டேசனுக்கு நான் வந்து ரயிலேறிப் போயிருப்பேன்...!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. நான் பேக் அப் ஆகக்கூடாதுன்னுதான் ,உங்க பிக் அப்பைத் தவிர்த்து விட்டேன் :)

      Delete
  7. Replies
    1. ஆறு வேளையும் அரை வயிறுக்கும் கீழ்தான் சாப்பிடணும் ..இது அருமையிலும் அருமைதானே :)

      Delete
  8. Replies
    1. நீங்களும் முகநூலில் பிசியாகி விட்டீர்களே அய்யா :)

      Delete
  9. எழுத்தாளர் ஜோக் நன்று த.ம. வாக்குடன்

    ReplyDelete
    Replies
    1. ஏமாற்றுகிற அரசியல்வாதிக்கு உள்ள மரியாதைக் கூட, சிந்திக்கிற எழுத்தாளருக்கு இங்கே இல்லைதானே ஜி :

      Delete
  10. யாருன்னு கண்டுப்பிடித்தாகிவிட்டதா?! எனக்கு ட்ரீட் வைக்கோனும்

    ReplyDelete
    Replies
    1. கிரிமினல் எப்படி புத்திசாலியா செயல் பட்டாலும் ,அவனையும் அறியாமல் ஒரு தடயத்தை விட்டு சென்று இருப்பான் என்பார்கள் ,உங்கள் தளத்தின் மூலமாக அந்த தடயம் எனக்கு கிடைத்தது ..உங்களுக்கு இல்லாத ட்ரீட்டா ,ஏற்கனவே புளியோதரை சுவைக்க வருமாறு அழைத்திருந்தேன் ..வரவேயில்லை !மதுரைக்கு வரும் நாளைச் சொல்லுங்க :)

      Delete
  11. tha.ma.13 இன்னும் அந்த அன்பர் யாரென்று என்னால் யூகிக்க இயலவில்லை.

    ReplyDelete
    Replies
    1. உங்க காதில் மட்டும் ரகசியமா சொல்லலாம் என்று மெயில் செய்தால் address not found என்று வருகிறதே !அன்பர்கள் யார் யார் என்று சொன்னால் 'புருட்டஸ் நீயுமா'என்று கேட்பீர்கள் ,நட்பில் வேண்டாமே என்னால் விரிசல் :)

      Delete
  12. அனைத்தும் ரசித்தோம்!!! ஜி!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் பிடித்த நாகேஷின் கருத்தையும்தானே ரசீத்தீர்கள் :)

      Delete
  13. மூனு வேளையிலேயே ஒழுங்கா சாப்பிட முடியவில்லை...ஆறு வேளை.....எப்படி,,,,,??

    ReplyDelete
    Replies
    1. உண்மை உண்மை ,ஏழைகளுக்கு வரக்கூடாத நோய் சர்க்கரை நோய் ,ஒரே நேரத்தில் நிறைய சாப்பிட்டால் சர்க்கரை அளவு கூடும் ,விட்டுவிட்டு நிறைய தடவைச் சாப்பிட்டால் நல்லது என்கிறார்கள் மருத்துவர்கள் ,ஏழைகளால் முடியுமா :(

      Delete
  14. அடடா! அப்படின்னால் அந்த மைனஸ் ஒட்டு விடயமான பதிவு அவர் போட்டதும் நிஜம் தானா? நான் என்னமோ விளையாட்டு என நினைத்தேன். இந்த ஒட்டு பிளஸ் மைனஸ் எனும் ஓட்டப்போட்டியெல்லாம் விட்டு தமிழுக்காக எழுதுங்கள் சார். எல்லாமே சரியாகும்.

    ReplyDelete
    Replies
    1. தமிழ் உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே ,தமிழுக்காக நீ என்ன செய்தாய்னு சிந்திக்கணும் அப்படித்தானே ?
      பிளஸ் மைனஸ் எல்லாம் ஒரு மேட்டரே கிடையாது ,மாசம் எட்டு பதிவு போட்டாலே தம டாப் 20 ல் இடம் பிடித்து விடலாம் :)

      Delete
  15. Replies
    1. வகுப்பு நேரத்தில் போட்டு விட்டீர்கள் போலிருக்கே ,நன்றி :)

      Delete
  16. தமிழ் மணத்தில் வாக்கு போடுவதற்கே வருவதில்லை தெரிவதில்லை தமிழ் மண மகுடம் இப்படி பரிந்துரையால் வருவதா வலை உலகில் நட்பு என்பதே இல்லை. எல்லாம் அறிமுகங்களே அதிலும் பலரும் போலி நட்போடு வளைய வருகிறார்கள் போகட்டு முஜ்ங்கள் முதுகில் ஏறி யிருந்த அந்த மைனஸ் ஓட்டு அளிப்பவர் இறங்கினால் சரி வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தெரியாவிட்டால் என்ன ,மற்றவர்களுக்கு நீங்கள் வாக்கு போட்டால் உங்களுக்கு வாக்கு தானாய் விழுந்து விடும் ,இப்போது உங்களின் கடைசி இரண்டு பதிவும் வாசகர் பரிந்துரையில் வந்து விட்டதே :)
      போலி நட்பா ,ஏனிந்த சலிப்பு அய்யா :)
      அவர் எங்கே இறங்கினார் ,நான் இல்லையா அவரைத் தள்ளிவிட்டேன் :)

      Delete
  17. வங்கி மேலாளர்களுக்கு ஜோதிடத்தை விட கடன் பெற விரும்புவோரின் மனதை அறியும் கலை தெரிந்திருப்பது நலம்.

    ReplyDelete
    Replies
    1. எந்த புற்றில் எந்த பாம்புன்னு அவரால் கூட கண்டுபிடிக்க முடியாதே .மல்லையாவுக்கு கடன் கொடுத்தவர்கள் எந்த மனநிலையில் கொடுத்து இருப்பார்கள் :)

      Delete