27 September 2017

விதவையின் மகிழ்ச்சி வெளியே தெரியக் கூடாதுதானே :)

*இந்த காலத்தில் இப்படியும் ஒரு கிராமத்தானா:)
             '' டோக்கன்னு சாப்பிடுற அயிட்டம் எதுவும் இருக்கான்னு கேட்கிறீங்களே ,ஏன் ?''
             ''டோக்கன் வாங்கிச் சாப்பிடவும்னு அங்கே எழுதி போட்டிருக்கே !''

இந்த வில்லனுக்கு வில்லனா இருக்காங்களே :)            
               ''டிரைவர், வண்டிக்குள்ளே  சிகரெட் பிடிக்கிறவரை இறக்கி விடணும்னு  விசில் அடித்தால்   வண்டியை  ஏன் நிறுத்த மாட்டேங்கிறீங்க ?''

               ''ஸ்டாப் இல்லாத  இடத்தில்  இறங்கணும்னு  , இப்படி  செய்வது  அந்த  பயணியின் வழக்கமாச்சே  !'' 

வேகாத பருப்புக்கு இந்த பெயர் சரிதானே :)
          ''ரேஷன்  கடையிலே போடுற பருப்பை ,ஏன் துயரம் பருப்புன்னு சொல்றீங்க ?''
          ''லேசுலே வேக மாட்டேங்குதே !''

 புரியுது ,ஆனா புரியலே :)              
           ''கல்யாணத்துக்கு அப்புறம்தான் என் மேலே உங்க கைபடணும்,புரியுதா ?''
           ''புரியுது ,ஆனா யார் கல்யாணத்துக்கு அப்புறம் என்றுதான் புரியலே !''

இவர் ஆன்மீக குருவா ?இவர் ஆண்மைமிகு குருவா :)
           ''குருவே ,ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம் ?''
          ''அழகான  பெண்ணுக்கு புருஷன் ஆகணும்னு நினைச்சா ஆசை ,அழகான பெண்ணுங்களுக்கு எல்லாம் புருஷன் ஆகணும்னு நினைச்சா பேராசை !''

விதவையின் மகிழ்ச்சி வெளியே தெரியக்  கூடாதுதானே :)
இளம் வயதிலேயே விதவை ஆகிவிட்டாளேங்கிற 
என் மன சோகம் மாயமானது  ...
தினசரி அடிவாங்கி மரத்துப் போன அவள் மனதில் ...
'குடிகார சனியன் தொலைஞ்சுப் போனான் 'ங்கிற  சந்தோசம்  இருப்பது  அறிந்து !

டிஸ்கி :என் பதிவு ,புதியதும் பழையதும் கலந்த கலவைதான் *குறி இட்டது மட்டுமே புதிய பதிவு :)

இங்கே க்ளிக் செய்தும் தமிழ்மணத்தில் வாக்களிக்கலாம் :)


44 comments:

  1. Replies
    1. நன்றியைத் தவிர வேறென்ன சொல்றது ஜி :)

      Delete
  2. டோக்கன் மாதிரி வடை சுடுவாங்களோ...

    ReplyDelete
    Replies
    1. சில டோக்கன் முக்கோணமா இருக்கு ,வடை அப்படி சுட முடியுமா ஜி :)

      Delete
  3. கல்யாணத்துக்கு அப்புறம்தான் கை படணும் ஆமா ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. எப்படி ஒரு எதிர்கால திட்டத்தோடு பழகுறான் படவா பய :)

      Delete
  4. டோக்கன் ஜோக்கை ரசித்து, சிகரெட் பயணியை வியந்து, துயரம்பருப்பை ருசித்து, கல்யாண ஜோக்கைப் படித்து சிரித்து, குரு ஜோக்கையும் ரசித்து, விதவையின் சந்தோஷக்காரணம் அறிந்து...

    இன்று சென்று நாளை வருகிறேன் மீண்டும்!

    ReplyDelete
    Replies
    1. இன்று போய் நாளை வான்னு சொல்ல நான் ராமனும் இல்லை ,கேட்பதற்கு நீங்கள் இராவணனும் இல்லை என்பதால் நாளை வரவேற்க காத்திருக்கிறேன் :)

      Delete
  5. Replies
    1. உங்கள் ஊரிலும் துயரம் பருப்புதானா :)

      Delete
  6. Replies
    1. இப்படி புத்திசாலி பயணிகளை பார்த்து இருக்கீங்களா :)

      Delete
  7. அனைத்தும் ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. ஆண்மைமிகு குரு யாருன்னு தெரியுதா ஜி :)

      Delete
  8. "வேகாத பருப்புக்கு துயரம் பருப்பு " ஹா ஹா ... இதுவும் நல்லாத்தான் இருக்கு ஜீ .

    ReplyDelete
    Replies
    1. போர்டிலேயே துயரம் பருப்புன்னு எழுதி போடச் சொல்லலாமா ஜி :)

      Delete
  9. Replies
    1. குடிகார மட்டையின் மனைவியின் சந்தோஷம் சரிதானே அய்யா :)

      Delete
  10. பீட்சா... பர்க்கர்... போல இதுவும் புது ஐட்டமோன்னு பாத்தேன்...!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. பெயர் வாயில் நுழையவில்லை என்றாலும் அயிட்டம் உள்ளே போயிடுதே:)

      Delete
  11. உங்க வீட்டில் நீங்க சமையல் இல்லன்னு நினைக்குறேன்,அதான் ரேஷன் பருப்பு சீக்கிரம் வேகாதுன்னு சொல்றீங்க..


    வில்லனுக்கு வில்லன் செம.....

    ஆசைக்கும், பேராசைக்குமான வித்தியாசம் இன்னிக்குதான் தெரிஞ்சுக்கிட்டேன்

    ReplyDelete
    Replies
    1. சமைக்க உங்களுக்கு நேரமிருக்கா :)

      சரியான போட்டிதானே :)

      பேராசை பிடித்த சாமியார்கள் மாட்டிகிட்டு வர்றாங்களே :)

      Delete
  12. இன்னிக்கும் தமன்னா பொய் சொல்றாளே!

    ReplyDelete
    Replies
    1. வேற சிம் அல்லது சிஸ்டம் மூலமாய் நுழைந்து வோட் போட்டு பாருங்களேன் :)

      Delete
  13. டோக்கின் வாங்கிச் சாப்பிடவும்/// ஹா ஹா ஹா இன்றைய காலத்தில வாயில் நுழையாத பெயரெல்லாம் உணவுக்கு வைக்கிறார்கள்.. முக்கியமா மக் டொனால்ட் கே எஃப் சி க்களின் புதுசு புதுசா பெயர் வருது பாடமாக்கி எடுப்பதுக்குள் இன்னொன்று வந்திடுது கர்:)..

    அந்த வகையில் டோக்கின் ஐயும் உணவாக நினைச்சதில் தப்பில்லே:)..

    //புரியுது ,ஆனா புரியலே :) // நேக்கும்தேன்ன்:)..

    பகவான் ஜீ, பத்து மணித்தியாலத்துக்குள் என் மகுடத்தை கில்லர்ஜி பறிச்சிட்டார் கர்ர்:)).. ஆனாலும் அதிராவோ கொக்கோ:) மகுடத்தோடு செல்பி எடுத்திட்டேனே:) ஹா ஹா ஹா...

    ஆமா.. ரஜனி அங்கிள் இங்கின வந்தாரோ?:).

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா பகவான் ஜீ இப்போ திரும்ப மகுடம் என் கைக்கு வந்து விட்டது ஓஓஓஓஓ லலலாஆஆஆஆஆஅ:)..

      Delete
    2. # ரஜனி அங்கிள் இங்கின வந்தாரோ?:)
      மகுடம் உங்களுக்கு வந்ததுக்கும் ,போனதுக்கும் காரணம் யாரென்று உங்களுக்குத் தெரிந்து இருக்குமே :)

      Delete
    3. பகவான் ஜீ நீங்க தேடிய கமல் அங்கிள் இங்கின வந்திருக்கிறாரே.. ஆனா.. திரும்பவும் ஆரம்பத்திலிருந்தா? முடியல்ல முருகா:)..

      Delete
    4. இந்த ஐடியை வைத்திருக்கும் அன்பரிடம் தொடர்பு கொண்டு பேசிய போது,நான் அந்த வோட்டைப் போடவில்லை ,யார் போட்டுள்ளார் என்பதை விசாரித்து சொல்கிறேன் என்று கூறியுள்ளார் ,நல்லதே நடக்கும் என்று நம்புகிறேன் :)

      Delete
  14. ரசித்தேன் நண்பரே
    த+ம=14

    ReplyDelete
    Replies
    1. 'குடிகார சனியன் தொலைஞ்சுப் போனான் 'என்பதையும்தானே :)

      Delete
  15. நிச்சயம் கிராமத்தான் இல்லை அவர்களுக்கு இதெல்லாம் அத்துபடி
    வண்டியை நிறுத்த இப்படியும் ஒரு வழியா
    வேகாத பருப்பு என்று வேறு எதையோ சொல்வார்களே
    விதவையை நினைத்து இரு முறை மகிழ்ந்தீர்களா
    கல்யாணம் எதையும் ஒப்புக் கொள்ளும்
    இப்போதெல்லாம் ஆன்மீக குருக்கள் எல்லாம் ஆண்மை மிகு குருக்களே
    விதவைகள் குறித்து இருமுறை மகிழ்ந்தீர்களா

    ReplyDelete
    Replies
    1. அதனால்தானே கேள்விக் குறியோடு தலைப்பை வைத்திருக்கிறேன் :)
      எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க :)
      நாம் நல்ல பருப்பையே நினைப்போமே :)
      அதெப்படின்னுதான் புரியலே :)
      சமீபகால சாமியார்கள் அதை நிரூபித்து வருகிறார்களே :)
      இதை மட்டும் ஏன் இரண்டு தடவைக் கேட்டிருக்கீங்கன்னு புரியலையே :)

      Delete
    2. விதவைகள் குறித்து இரண்டு முறை மகிழ்ந்ததைப் படித்தேன்

      Delete
    3. அட ஆமாம் ,நீங்க இரண்டாம் முறை கூறிய பிறகுதான் கவனித்தேன் ,சரி செய்து விட்டேன் :)

      Delete
  16. Replies
    1. கிராமத்தான் என்று இப்போது யாரையும் அசட்டை செய்ய முடியாது. அவர்கள் நம்மை விட விவரமாகத்தான் இருக்கிறார்கள்.

      Delete
    2. நீங்கள் சொல்வது உண்மைதான் :)

      Delete
  17. துயரம் பருப்பு நன்றாக இருக்கிறது. த.ம. வாக்கு ஏற்கனவே அளித்துவிட்டதாக தெரிவிக்கிறது

    ReplyDelete
    Replies
    1. சகோதரி ராஜி அவர்களும் இப்படித்தான் நேற்றும் ,இன்றும் சொன்னார் ,நீங்களும் அடிக்கடி இப்படித்தான் சொல்கிறீர்கள் ,என்ன காரணமோ ,கூகுள் ஆண்டவருக்கே வெளிச்சம் :)

      Delete
  18. அனைத்தையும் இரசித்தேன்! முதல் நகைச்சுவை துணுக்கு போன்று இன்னொன்று உண்டு. நம்மவர் ஒருவர் கர்நாடகா மாநிலம் சென்று உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது உணவு பரிமாறுபவர் வந்து சாக்கா, பேக்கா (போதுமா அல்லது இன்னும் வேண்டுமா) என்று கன்னடத்தில் கேட்டபோது, இவர் அதையும் சாப்பிடும் ஐட்டம் என நினைத்து, சாக்கிலே கொஞ்சம் பேக்கிலே கொஞ்சம் என்றாராம்.

    ReplyDelete
    Replies
    1. அருமை அய்யா ,சாக்கு போக்கு சொல்லாமல் அவர் கேட்ட அயிட்டத்தை சர்வர் கொண்டு வந்திருக்கணுமே :)

      மைனஸ் வாக்கு விழுந்துள்ள நிலையிலும் ,இந்த பதிவுக்கு, தமிழ்மண மகுடம் சூட்டி விட்டது உங்கள் வாக்கு ,சிறப்பான நன்றி அய்யா :)

      Delete
  19. இப்பதான் டோக்கன் வாங்கி சாப்பிட்டேன் 😜😜

    ReplyDelete
    Replies
    1. அடடா ,நான்தான் லேட்டாயிட்டேனோ,இப்படி நீங்க டோக்கன் வாங்கிவீங்கன்னு தெரியாம போச்சே ஜி :)

      Delete