4 September 2017

கல்யாணமாகி நாலு வருஷம் ஆகியிருக்குமா :)

  அன்பார்ந்த வலையுலக உறவுகளே !
                       தேன் எடுத்தவன் வாயும் ,பொடுகுத் தலையன் கையும் சும்மா இருக்காது என்பதைப் போல ,உங்கள் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க ,மீண்டும் பால் காய்ச்சிவிட்டு இரண்டாம் இன்னிங்க்சை தொடங்கி விட்டேன் ,வழக்கமான உங்கள் ஆதரவை நல்க வேண்டுகிறேன் :)
                                                                                                                  அன்புடன் ,
                                                                                                                  பகவான்ஜி 

சிலர் பொறுமையைச் சோதிப்பதால்....:)
                    ''எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் யோசியுங்கள் ,ஆனால் அதற்கு ஏற்ற இடம் இதுவல்லன்னு எங்கே எழுதிப் போடச் சொல்றீங்க ?''

                     ''நம்ம ஆபீஸ் லெட்ரினில் தான் !''

எதுக்கு நேரம் அதிகமாகும் :)            
               ''நான்  டிரஸ் சேஞ்ச்  பண்ணிக்கிட்டு வெளியே  கிளம்புற  நேரத்திலே காப்பி கேட்கிறீங்களே  ..இப்போ பாலைக் கொதிக்க வைச்சா ,பால் 'ஆடை கட்டி' கொதிப்பதற்குள்  போதும் போதும் என்றாகி விடுமே  !''
                  ''நீ 'ஆடைகட்டி ' வருவதற்குள் எனக்கு போதும் போதும் என்றாகிவிடுமே !''

மன நோயாளிகளின் எண்ணிக்கை கூட இவரும்தானே காரணம்  :)
                  ''மன நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கான தொண்டு அமைப்பை தொடங்கி உள்ளாராமே ,அந்த நடிகை ?''
                  ''விசுவாசமுள்ள நடிகை ,தன் ரசிகர்களுக்காக  நல்ல காரியம் பண்ணியிருக்காரே !''

மனைவியின் அர்ச்சனைக்கு 'அது' தேவையா :)
           ''குலம் கோத்திரம்  தெரியக்கூடாதுன்னு ஜாதகம்  பார்க்காம கல்யாணம் பண்ணியும் புண்ணியமில்லாமப்  போச்சா ,ஏன் ?''
           ''வீட்டிலே எனக்கு தினசரி அர்ச்சனை நடந்துகிட்டுதானே இருக்கு ?''

சர்க்கரை நோய் இருந்தா இப்படியும் ஒரு வாய்ப்பு !
             ''உங்க ஸ்வீட் ஸ்டால் கடைக்கு எப்படிப்பட்ட ஆட்கள்  வேலைக்கு வேணும் ?''
            ''அவங்களுக்கு கண்டிப்பா சர்க்கரை நோய் இருக்கணும் !''

உங்களுக்கு அந்த 'ஞானி 'ஞாபகம் வர்றாரா :)           
              '' நீங்களுமா , கலிகாலம்  நடக்குதுன்னு  சொல்றீங்க ?''
               ''ஆமா , 'வார்த்தை ஜாலங்களால் மட்டுமே ஒருவன் அறிஞர் , ஞானி என்று கலிகாலத்தில் அழைக்கப் படுவார் 'னு பாகவதத்தில் சொல்லியிருப்பது சரியாத்தானே  இருக்கு !''

நடிகையின் அன்றைய அழகு ,மீண்டும் வருமா :)            
         ''அந்த  குண்டு நடிகை கஷ்டப் பட்டு 18 கிலோ எடையைக் குறைச்சிட்டாங்களாமே  ?''
       ''வயசுலேயும் 18 வருசம் குறைஞ்சா நல்லாயிருக்கும் !''
மனைவியான பின்பும் மறக்காத மசால் வடை !
            '' எதுக்குமே சிக்காத எலி ,அந்த ஹோட்டல் மசால் வடைக்கு மட்டும் மாட்டும்னு எப்படி உறுதியாய் சொல்றே ?''
              ''காதலிக்கையில் , அந்த ஹோட்டல் மசால் வடையைத் தின்னுட்டு ,இப்போ நானே  உங்ககிட்டே மாட்டிக்கிட்டு முழிக்கிறேனே !''

'வீடியோ காலில் 'தெரிந்த அழகு முகத்தை ...!
              ''செல்லுலே பார்க்கும் போது அம்சமா இருக்கீங்கன்னு சொன்னேன் ,அதுக்கு  தலைவர் 'வைடா போனை 'ன்னு கோபமா கத்துறாரே,ஏன்  ?''
              ''அவர் ஜெயில் செல்லுலே இருந்ததை கிண்டல் பண்றதா நினைச்சுருப்பார் !''

கணவனிடம் இவ்வளவு முன் ஜாக்கிரதை தேவையா ?
    நான் கைக்குத்தல் அரிசியை தின்று வளர்ந்தவன் என்பதை ...
    ஒரு பேச்சுக்குக்கூட சொல்லமுடியவில்லை என்னவளிடம் ...
   'அதுக்காக உங்க கை நீட்டலையும் ,குத்தல்பேச்சையும் சகிச்சுக்க    மாட்டேன் 'என்கிறாள் !

சாப்பிட்டால் போகுமா ,படித்தால் போகுமா சுகர் :)
              ''என்ன சொல்றீங்க ,முப்பது நாவல் படிச்சும் சுகர் குறையலையா ?''
              ''சுகருக்கு நாவல் நல்லதுன்னு  நீங்கதானே சொன்னீங்க டாக்டர் !''  
கல்யாணமாகி நாலு வருஷம் ஆகியிருக்குமா :)           
           ''என்னடி சொல்றே ,குண்டான உன்னை உன் வீட்டுக்காரர் கிண்டல் பண்றாரா ,எப்படி ?''
           ''ரூபாவதிங்கிற என் பெயரை ரூப அவதின்னே சொல்றாரே !''

இவர்  நல்லபடியா டிஸ்சார்ஜ் ஆவாரா :)
      ''டாக்டர் ,எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு !''
       ''எது ?''
       ''நர்ஸை நீங்க மட்டும் சிஸ்டர்னு சொல்ல மாட்டேங்கிறீங்களே !''

தலைவருக்கு தெரிஞ்சதெல்லாம் அதுதானே :) 
           ''கோவில் விழாக் கொடியேற்ற ,அரசியல்வாதியைக் கூப்பிடக் கூடாதுன்னு சொன்னேன் ,கேட்டீங்களா ? ''
          ''என்னாச்சு ?''
          ''அவர் ,தன் கட்சிக் கொடியைத்தான் ஏத்தணும்னு பிடிவாதமா இருக்கார் !''

பெண்ணைப் பெற்ற புண்ணியவான்களே,ஜாக்கிரதை :)
     காவல் இல்லையென்றால் ...
     காய்ச்ச மரம்கூட கல்லடி படும் 
     கன்னிப்பெண் கண்ணடி படுவாள் !

நோய் வராதா ,பக்கத்திலே எந்த நாயும் வராதா :)
             ''சாப்பாட்டில் அதிகமாய் பூண்டைச் சேர்த்துகிட்டா எந்த நோயும்  பக்கத்திலே வராது ,இதிலே உங்களுக்கு என்ன கஷ்டம் ?''
           '' எனக்கொண்ணும் கஷ்டமில்லை டாக்டர்  ,என் பக்கத்திலேதான்  யாரும் வர முடியாம போகும் !''

பழக்க தோஷம் விடாது :)     
            '' தற்காலிக வேலை நீக்கம் பண்ணின பிறகும் ,  ஆபீசுக்கு  ஏன்  வர்றீங்க ?''
             ''வீட்டிலே தூக்கம் வர மாட்டேங்குதே !''

மாமியாருக்கு அடின்னா ,தாங்கிக்க முடியாத மருமகள் :)
            ''அங்கே  லாரியில் அடிபட்டு கிடக்குறது உன் மாமியார் போலிருக்குன்னு ,போய் பார்னு சொன்னா ...என்னாலே தாங்க முடியாதுன்னு சொல்றீயே ,அவங்க மேலே அவ்வளவு பாசமா ?''
             ''அட நீ வேற ,அவங்க என் மாமியாரா இல்லேன்னா ,வர்ற ஏமாற்றத்தை என்னாலே தாங்க முடியாதுன்னு சொல்ல வந்தேன் !''

கணக்கு உதைக்குதுன்னா எதுக்குத்தான் லாயக்கு ? 
             ''என் பையனை கழுதை மேய்க்கக் கூட லாயக்கில்லைன்னு ,ஏன் சொல்றீங்க சார் ?''
             ''இப்ப கணக்கு உதைக்குதுன்னு சொல்றவன், அப்பவும் கழுதை உதைக்குதுன்னு சொல்வான் போலிருக்கே !''

62 comments:

  1. returning back with a vengeance....! எவ்வளவு துணுக்குகள் சில ஏற்கனவே பகிரப்பட்டவை போல் தெரிகிறதே

    ReplyDelete
    Replies
    1. நீல நிற ஜோக் மட்டுமே புதுசு :)

      Delete
  2. இதோ வருகிறேன் ஜி

    ReplyDelete
    Replies
    1. மீண்டும் வருகை தந்தமைக்கு நன்றி மகிழ்ச்சி ஜி.

      இனி பொறுமையாக எழுதுங்கள் இன்று நிறைய விடயங்கள் தந்து விட்டீர்கள் மொத்தமாக... நன்றி ஜி.

      Delete
    2. ஆமாம் ஜி ,சில தெளிவுகள் கிடைத்து இருக்கிறது :)

      Delete
  3. . மீண்டும் பதிவுலகம் வந்தமைக்கு நன்றி! நகைச்சுவைத் துணுக்குகளை இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. கழுதை தப்பினால் குட்டிச் சுவர் தானே :)

      Delete
  4. பழசோடு புதுசையும் ரசித்தேன். மறுபடியும் வந்தது சந்தோஷம் அளிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. கலவை சரியாயிருக்கா :)

      Delete
  5. தாங்கள் இல்லாமல், வலை கலை இழந்து இருந்தது நண்பரே
    தங்களின் வருகை கண்டு மகிழ்கின்றேன்
    தொடர்ந்து வாருங்கள்
    தம+1

    ReplyDelete
    Replies
    1. இரண்டு நாளா நானும் கவலை இல்லாமல் இருந்தேன் :)

      Delete
  6. மீண்டும் வருகை தந்து நகைச்சுவைகளை அள்ளித் தந்த வள்ளலே வாழ்க வளர்க

    ReplyDelete
    Replies
    1. வள்ளல் எல்லாம் டூ மச் :)

      Delete
  7. அடடா ... வந்துடீங்களா சார் சந்தோஷம் இதுக்குமேல சிரிப்புக்கு பஞ்சமில்லை

    ReplyDelete
    Replies
    1. வர வேண்டிய நேரத்துக்கு வந்து விட்டேனா :)

      Delete
    2. நீங்க ஒரு தடவ சொன்னா நூத்தியொரு தடவ சொன்ன மாதிரி சார்

      Delete
  8. எல்லாமே ரசித்தோம் ஜி..புதியத்தையும்......

    மீண்டு, மீண்டும் வந்தமைக்கு மகிழ்ச்சி ஜி

    ReplyDelete
    Replies
    1. மீண்டு வந்தாச்சு ,இனி அடக்கி வாசிக்கணும் :)

      Delete
  9. ஹையோ இவ்ளோம் நடந்திருக்கே எனக்குத் தெரியாமல் போச்சே... இப்போ என் செக்கரட்டரி தகவல் சொல்லித்தானே பார்த்தேன்ன்ன்ன்

    ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ் பகவான் ஜீ வெல்கம் பக்க்க்க்க்க்க்க்க்... சந்தோசம் பொயிங்குதே.... சந்தோசம் பொயிங்குதே.....

    ReplyDelete
    Replies
    1. அந்த செக் இன்னும் இங்கே தலையைக் காட்டலையே :)

      Delete
    2. naan appove vote pottutten :)

      varuga varuga :)

      Delete
    3. ஹா ஹா ஹா நல்லாயிருக்கே சோட் நேம் செக்:).... அவங்க கொஞ்சம் ஷை ரைப்:) என்னைப்போலதேன்:)...
      அதனால வோட் போடுவாங்க மொய் வைக்கத்தயங்குவாங்க:)

      Delete
    4. என்னைப்போலதேன்னு சொல்லிட்டு ஷை ரைப்னு சொல்றதுதான் இடிக்குது :)

      Delete
    5. கர்ர்ர்ர்ர்ர் என்னாஆ சிரிப்பூஊஊஊ:)

      Delete
  10. 2 நாள் இடைவேளை எடுத்தமையாலதான் பெரிய போஸ்ட்டா??? நேக்கு லெக்ஸும் ஆடல்ல ஹாண்ட்ஸும் ஓடல்ல... நல்வரவு நல்வரவு மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. இனி இப்படித்தான் ,தினசரி காட்சி கிடையாது :)

      Delete
    2. அது ஓகே... இது ஒரு பொழுதுபோக்கு அவ்வளவே... அதனால இதுக்காக உடம்பையும் மனதையும் கெடுத்திடக்கூடாது...

      Delete
  11. ஹையோஅதுக்குள் மறந்திட்டீங்க பகவான் ஜீ.. மொபைல் வோட் லிங் எங்ங்ங்ங்ஙேஏஏஏ??:).

    ReplyDelete
    Replies
    1. எப்படியும் உங்க வோட் விழுந்து விடும் என்பதால் சேர்க்கவில்லை :)

      Delete
  12. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் யோசியுங்கள், ஆனால் நல்லதாய்... யோசியுங்கள்...! நல்ல தாய் இனி அவளா...? இனியவளா...?! புளு வேளு முருகனுக்கு... அரோகரா... கோவிந்தா...!

    த.ம. 9

    ReplyDelete
    Replies
    1. நல்ல இடத்தில் இருந்து யோசித்தால் அல்லவா நல்லது யோசிக்கத் தோணும் :)

      Delete
  13. வணக்கம் ஜி !

    சும்மா அள்ளுது எல்லாம்

    ஆடை கட்டி ஆடை கட்டி என்னைக் கொல்லுடி ....நீ
    அழகாக இருந்தாலும் நெஞ்சம் கல்லுடி

    பூண்டுவெடி இங்க வருது ஜி !

    ஆமா சிஸ்டர் என்று சொல்லாத மருத்துவர்களை எடப்பாடி ஐயாக்கிட்ட சொல்லி வேலையை விட்டுத் தூக்கணும்

    வாழ்த்துகள் ஜி அத்தனையும் அருமை மீண்டும் தாங்கள் வந்ததில் மகிழ்ச்சி
    தமன்னா +1

    ReplyDelete
    Replies
    1. நீண்ட கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி :)

      Delete
  14. ///த ம +1 போட்டாலே எனக்கு மகிழ்ச்சிதான் :)////


    தம 1 போடலாம் என்று பார்த்தால் நான் பார்க்கும் போது தம் 12 ஆகிவிட்டது நீங்க தம 1 தான் போடஸ் சொல்லி இருக்கீங்க ஆனால் அதௌ தெரியாமல் பலர் 12 வரைக்கும் போட்டுட்டாங்க...அதனால நானும் தம் 13 போட்டுட்டேன்

    ReplyDelete
    Replies
    1. 13 கூட எனக்கு லக்கி நம்பரதான் :)

      Delete
  15. மீண்டும் (ஏலக்காய், பிஸ்தா போட்டு) பால் காய்ச்சிய வரைக்கும் மகிழ்ச்சி..

    நீங்கள் கொடுத்ததாக - இங்கே நானே குடித்துக் கொள்கிறேன்!..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ,இப்படி ஒரு நண்பர் கிடைக்க நான் கொடுத்துதான் வைத்திருக்கணும்:)

      Delete
  16. நான் வலையுலகில் இருக்கும் வரை என் ஆதரவு தங்களுக்கு உண்டு தலைவரே.....

    ReplyDelete
    Replies
    1. உலகில் இருக்கும் வரை என் ஆதரவும் உங்களுக்குத் தொடரும் ஜி :)

      Delete
  17. மீண்டும் வந்தமைக்கு நன்றி ஜி

    ReplyDelete
    Replies
    1. உங்க நன்றிக்கு நன்றி ஜி :)

      Delete
  18. பகவான் ஜீஈஈஈஈஈஈ வந்த வேகத்திலயே இப்பூடி மகுடத்தைப் பறிச்சிட்டீங்களே...:) இது நியாயமாஆஆஅ தகுமாஆஆஆஆ.... நீங்க என் கொவ்வைக்கொடிக்கு வோட்டுப் போடவில்லை அதனாலதான் மகுடம் கிடைக்காமல் போச்டூஊஊஊஉ.... மனமுடைஞ்சுபோய்ய்ய்... கடிதமும் எழுதி கீழே கை நாட்டும் போட்டு விட்டு தேம்ஸ்ல மீ ஜம்பிங்ங்ங்... அஞ்சூஊஊஉ கையைப் பிடிங்கோ தனியக் குதிக்கப் பயம்மாக் கிடக்கூஊஊஊஉ... எனக்கு தண்ணியில கண்டமாமேஏஏஏ:)

    ReplyDelete
    Replies
    1. #கடிதமும் எழுதி கீழே கை நாட்டும் போட்டு விட்டு #
      எழுதத் தெரிந்தால் கைநாட்டு எதுக்கு ?
      #நீங்க என் கொவ்வைக்கொடிக்கு வோட்டுப் போடவில்லை#
      அதுக்கு இரண்டு காரணம் ,உங்கள் பதிவு உங்கள் தளத்தில் இருந்தால் முதல் வோட் போடுவது நான்தான் :)
      எங்கள் பிளாக்கில் அவர்களோட விருப்ப தளமாக ஜோக்காளி இல்லை :)


      Delete
    2. //எங்கள் பிளாக்கில் அவர்களோட விருப்ப தளமாக ஜோக்காளி இல்லை :)//


      :)))

      Delete
    3. ​நீங்களாவது எங்கள் ப்ளாக் வரத் தவறி இருக்கலாம். நான் ஜோக்காளி தளத்துக்கு வருவதோ, வாக்களிப்பதோ இதுவரை தவறியது இல்லை!​ உங்கள் இந்த கமெண்ட் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது!

      Delete
    4. ஹையோ என்னால காக்கா போக முடியல்லே:)... நல்ல நட்புக்குள் (நண்பர்களுக்குள்)ஒட்டியிருக்கும் தூசியை தட்டி விட்டால்தான் எனக்கு நிம்மதி:)... அதனால்தான் களமிறங்கிட்டேன்ன்ன்ன்ன்:)..

      ஸ்ரீராம் நீங்க வேறு கோணத்தில யோசிக்கிறீங்க:) என்னைப் பொறுத்து.... பகவான் ஜீ யின் கலவை.... ஹையோ இப்போ எதுக்கு கை இப்பூடி நடுங்குதெனக்கு:)... கவலை... இந்த வசனத்தில தான் இருக்கு.... :)

      இதைப் பத்துத்தடவை படிக்கவும்....
      //////எங்கள் பிளாக்கில் அவர்களோட விருப்ப தளமாக ஜோக்காளி இல்லை :)//
      (நான் நினைப்பது கரீட்டா இருக்குமெண்டுதான் .... நான் நினைக்கிறேன்)....
      ஆஆஆஆஆவ்வ்வ்வ் என்னை விட்டிடுங்கோ நானில்ல நானில்ல... மீ ரொம்ப நல்ல பொண்ணூஊஊ:).

      Delete
    5. நான் கேட்டதற்கு சரியான பதில் வரவில்லை ,இருவரிடம் இருந்தும் :)

      Delete
    6. ஹா ஹா ஹா என்ன பகவான் ஜீ இப்பூடிச் சொல்லிட்டீங்க... என்னைப் பொறுத்து வெளிப் பார்வையில்.. “அந்த” ஒரு காரணம்தான் தெரியுது:)[மறைமுகமாகத்தான் சொல்லியிருக்கிறேன்:)].... .. அதைச் சரிப்பண்ணினால் மனக்குறை தீர்ந்திடும்:).. மற்றபடி எனக்கேதும் தெரியல்லே.. ஸ்ரீராம் வந்து சொன்னால்தான் புய்ய்ய்யும்ம்ம்:).

      Delete
    7. உங்க பதிவை உங்க தளத்தில் மட்டும் போட்டுக்கலாமே ?

      Delete
    8. அச்சச்சோஓஒ பிள்ளையார் பிடிக்கவெல்லோ வந்தேன்ன்ன்.. இப்போ என் தலை எழுத்தையே மாற்றிடுவார்போல இருக்கே பகவான் ஜீ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. சட்டுப்பட்டென துவக்கை என் பக்கம் திருப்பிட்டார்ர்ர்:)..

      //உங்க பதிவை உங்க தளத்தில் மட்டும் போட்டுக்கலாமே ?//
      இந்தக் கேள்வியார், இப்போ எதுக்கு உள்ளே வந்தார் பகவான் ஜீ?:).. இது இங்கே சம்பந்தப்படாத கேளியாகத் தெரிந்தாலும் கேட்டதுக்குப் பதில் சொல்லிட்டு.. திரும்பிப் பார்க்காமல் ஓடிடுறேன்ன்.. முடிஞ்சால் கலைச்சுப் பிடிச்சுப் பாருங்கோ என்னை. மீ 1500 மீட்டரின் 2ம் இடத்தில் வந்தேனாக்கும்:)..

      அது நம் பக்கத்தில் போடுவதைக் காட்டிலும், நம்முறைய எழுத்து , சமையல் இன்னொரு இடத்தில் வெளிவரும்போது பயங்கர சந்தோசம் கிடைக்குதே.. இப்போ ஒரு கதையை எழுதிப் படிப்பதிலும் பார்க்க பேப்பரில் வெளிவந்தபோது எவ்ளோ மகிழ்ச்சி அடைகிறார்கள்.. அப்படித்தான் இதுவும் ஒரு சந்தோசத்தைக் கொடுக்குது... நமக்கு தெரியாதோர் கூட அங்கு கொமெண்ட் தரும்போது மகிழ்ச்சி வருது... அதிலயும் துவக்கு கத்தி எல்லாம் காட்டி மிரட்டி எல்லோ என்னுடையதைப்பப்ளிஸ் பண்ண வச்சுக்கொண்டிருக்கிறேன் நான்:).. நீங்க வேற கர்:)..

      மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்:) இதுக்குத்தான் முச்சந்திச் சாத்திரியார் அப்பவே சொன்னார்ர்:) வாயை வச்சிட்டு சும்மா இரு பிள்ளை என.. நான் கேட்டேனா?:) கேட்டேனா?:).. ஹா ஹா ஹா:).

      Delete
    9. நமக்குத் தெரியாதோர் வலைஉலகில் யாருமுண்டா?
      நம்மைக் கண்டு கொள்ளாதவர்கள் வேண்டுமானால் இருக்கிறார்கள் :)

      Delete
  19. tha.ma.16 நன்றியும் வாழ்த்துகளும்

    ReplyDelete
    Replies
    1. நான்தான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் :)

      Delete
  20. வருக வருக! த ம 17

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்து ஊக்கம் தருகிறது :)

      Delete
  21. ''நம்ம ஆபீஸ் லெட்ரினில் தான் !''//
    கொஞ்சமும் இடையூறு இல்லாத இடம்தான்!!

    இர்ண்டாம் இன்னிங்ஸ் தொடங்கியதற்கு மிக்க மகிழ்ச்சி பகவான்ஜி.

    ReplyDelete
    Replies
    1. அங்கேயும் செல்லில் அழைப்பு இடையூறு செய்யுதே :)

      Delete
  22. ரீ எண்ட்ரிக்கு வாழ்த்துகள்.
    என்னை விட்டு ஓடிப்போக முடியுமான்னு இணையமும் பாடும்

    ReplyDelete
    Replies
    1. என் தளத்துக்கு வந்தால் மட்டும் உங்களுக்கு தமிழ் மணம் மறந்து போகுதே ,ஏனோ :)

      Delete
  23. எனக்கு ஒரு டவுட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ ............பதில்கள் பகவான் ஜி யினுடையது போலில்லையே ஏதும் ஆள்மாறாட்டம் நடந்திருக்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ

    ReplyDelete
    Replies
    1. உங்க சந்தேகம் சரிதான் ,என் பாணியில் மறு மொழி இல்லாத காரணம் ,நேரமின்மை :)

      Delete