4 June 2017

காதலுக்கு மறுபெயர் 'கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்'டா:)

அரசியல் 'வியாதி 'களுக்கு  இதானே கொள்கை :)         
               ''அஞ்சு வருஷத்தில் ஏழு கட்சி மாறி ஆளும் கட்சிக்கு வந்துட்டீங்களே ,உங்களுக்கு கொள்கைன்னு ஒண்ணும் இல்லையா ?''
              ''யார் சொன்னா இல்லைன்னு ,எப்படியும்  சம்பாதிக்கணுங்கிற கொள்கையிருக்கே !''

அங்கேயும் இதே தொழில்தானா :)           
             ''கொஞ்ச நாளா ஆளையே காணலையே ,பிச்சை எடுப்பதை விட்டுட்டியா ?''

             ''அக்கினி வெயிலில் இருந்து தப்பிக்க ஊட்டிக்குப்  போயிருந்தேன் !''

எத்தனை அடை சாப்பிட்டாலும் இவன் அறிவுப் பசி அடங்காது :)
            ''அடைக்கு ஆர்டர் பண்ணிட்டு என்னடா யோசிக்கிறே ?''
            ''அடைன்னா ஒண்ணே ஒண்ணுதான் தர்றாங்க ,தொடர்ந்து பெய்ற மழையை ஏன் 'அடை'மழைன்னு சொல்றாங்க ?''

எறும்பு வராத காரணம் என்ன :)                    
         ''அளவுக்கு மீறி ஆசைப்படாத ஒரே ஜீவராசி எறும்பாத்தான் இருக்கும்னு எப்படி சொல்றீங்க ?''
        ''வீ ட்டிலே சீனி சிந்தினாலே எறும்பு வந்திடுது ,ஸ்வீட் கடையிலே எறும்பையே பார்க்க முடியலையே !''

காதலுக்கு மறுபெயர் 'கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்'டா:)
        ''கெமிஸ்ட்ரி லேப்புக்கு வந்தும், அவளையே ஏண்டா சைட் அடிச்சுக்கிட்டே இருக்கே ?''
       '' அவளுக்கும் எனக்கும் 'கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்' ஆகணும்னுதான் !''

தேவைப்பட்டால் கொலையும் செய்வான் :)
மலருக்கு துளியும்  சேதமின்றி 
துளித்துளியாய் தேனை சேர்ப்பது  தேனீ ...
புகை போட்டு அதை விரட்டி தேனை 
புட்டியில் அடைத்து காசு பார்ப்பவன் மனிதன் !



இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1462179செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)   

38 comments:

  1. ஆவ்வ்வ்வ்வ்வ் மீ த 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஉ:)

    ReplyDelete
    Replies
    1. இப்போ நான் இங்கின எதுவும் பேசமாட்டேன் ஜாமீஈஈ:) ஏதோ அஞ்சு வின் கதை ஆரம்பத்திலேயே அடிபடுவதுபொல ஒரு பீலிங்காவே இருக்கு:).

      Delete
    2. அஞ்சுவைப்பற்றி இப்படி சொல்லப்படாது ,அவரோட கைத் திறமை யாருக்கு வரும் :))

      Delete
  2. ஸூப்பர் கொள்கை.

    பிச்சை எடுக்க ஊட்டியென்ன... கொடைக்கானல் என்ன... வருமானம் வந்தால் சரிதான்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) அவர் பிச்சை எடுக்க ஊட்டிக்குப் போகல்ல:) எடுத்த காசில என்சோய் பண்ண உல்லாசப் பயணம் போயிருக்கிறார்ர்..:)

      Delete
    2. பாயிண்டை சரியா பிடிசசிட்டீங்க :)

      Delete
  3. அடைமழை செம கிரியேட்டிவிட்டி ஜீ... எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க?

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் அந்த அடை தந்த ஞானம் தான் :)

      Delete
  4. பிச்சைக்காரனே ஊட்டிக்குப் போறான். நான் இன்னும் போவல. வாட் எ பிட்டி? :) :)

    ReplyDelete
    Replies
    1. கவலையை விடுங்க ,நாம சுவிஸ் போவோம் ஜி :)

      Delete
  5. Replies
    1. அசடு வழிந்தால் ஆசிட் காலில் கொட்டிடப் போவுது :)

      Delete
  6. TM 5 எனக்கும் என் மனைவிக்கிடையேயும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட்' ஆகி கல்யாணம் பண்ணிக் கிட்டோம் ஆனால் அதனால் ஏற்பட்ட ரியாக்ஷன் இப்ப பூரிக்கட்டை வடிவில் கிடைக்குது ஹும்ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகவில்லை என்றாலும் இதே ரியாக்ஷன்தான் உண்டாகி இருக்கும் :)

      Delete
  7. ‘நெ(நா)ஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி, வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே! வாய்ச் சொல்லில் வீரரடி...’

    இந்த சீசனுக்கு நல்ல வருமானம்... கூட்டம் அதிகமுல்ல... ‘ஊட்டி வரை உறவு...!’.

    ‘அடடா மழைடா அடைமழைடா...!’

    எறும்புக்கு மருந்து போட்டு விருந்து வைப்பது தெரியுமுல்ல...!

    வாக் அவுட் பண்ணிட்டா...!

    காசேதான் கடவுளப்பா...!

    த.ம. 7




    ReplyDelete
    Replies
    1. இன்னோவா படுத்தும் பாடு அப்படி பேச வைக்குதே :)

      அடுத்த வருஷம் ,ரஜினி போற ஊருக்கு போக வேண்டியதுதான் :)

      நனஞ்சிகிட்டே சாப்பிடுங்க :)

      மருந்துக்கும் கண்ணுக்கு மருந்து தெரிலையே :)

      இப்படி அவர் டக் அவுட் ஆகலாமா :)

      காசுக்கு பூசைப் போடுங்க :)

      Delete
  8. வலுவான கொள்கை அரசியல்வாதிகளுக்கு!

    ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. சாகும் வரை விட மாட்டார்கள் :)

      Delete
  9. கொள்கை என்று மாறும் ஜி...?

    ReplyDelete
    Replies
    1. மக்கள் கொந்தளித்தால் மாறும் :)

      Delete
  10. அடடே...இப்பத்தான் புரிஞ்சது பார்த்துகிட்டடே..இருந்ததான் கெமிஸ்ட்ரி ஒர்க்கவுட் ஆகுமென்பது.....

    ReplyDelete
    Replies
    1. நல்லா பாருங்க மெட்ராஸ் ஐ வந்திராம :)

      Delete
  11. Replies
    1. புட்டியில் அடைத்து காசு பார்ப்பவன் மனிதனை ரசிக்க முடியுதா :)

      Delete
  12. அடையையும் கெமிஸ்ட்ரியையும் ரசித்தோம்...அனைத்தும் தான்...

    ReplyDelete
    Replies
    1. அடையும் மழையும் அனைவருக்கும் பிடிக்கும்தானே :)

      Delete
  13. அரசியல்வாதியின் கொள்கை நிஜம்...!

    ReplyDelete
    Replies
    1. அவர்களின் நிறம் பச்சோந்தி :)

      Delete
  14. கொள்கைப் பிடிப்பு உள்ளவர் .
    வருமானத்துக்கு வருமானம் கோடை வெயிலிலிருந்து விடுதலை
    ஒன்றுக்கு மேல் தின்ன யார் தடை அடைக்கு
    ஸ்வீட் கடையில் எறும்பு வர விடுவதில்லை
    ஒர்க் அவுட் ஆகும் கெமிஸ்ட்ரி எங்கும் ஆகாதோ
    பணம் பண்ண எதுவும் செய்வான் மனிதன்

    ReplyDelete
    Replies
    1. படிப்புதான் குறைவு :)
      டூ இன் ஒண்ணா :)
      அடை மழை என்றால் நிறைய வரணுமே :)
      அதன் ரகசியம் என்ன :)
      ஆகக் கூடியது ஆகும் :)
      பத்தும் செய்வான் மனிதனா :)

      Delete
  15. எறும்பின் ஞானம் மனிதர்களுக்குப் படிப்பினை
    கெமிஸ்ட்ரி லேப் காதல் அருமை
    பகிர்வுக்கும் தொடரவும்
    நல்வாழ்த்துக்களுடன்..

    ReplyDelete
    Replies
    1. எறும்பால் அகலக் கால் வைக்க முடியாதே :)
      காரம்தான் அதிகமோ :)

      Delete
  16. பிச்சைக்காரன் வாழ்வே தேவலாம் போலிருக்கே

    ReplyDelete
    Replies
    1. இக்கரைக்கு அக்கரை கிரீன் :)

      Delete
  17. ''அளவுக்கு மீறி ஆசைப்படாத ஒரே ஜீவராசி எறும்பாத்தான் இருக்கும்னு எப்படி சொல்றீங்க ?''
            ''வீ ட்டிலே சீனி சிந்தினாலே எறும்பு வந்திடுது ,ஸ்வீட் கடையிலே எறும்பையே பார்க்க முடியலையே !''//

    அருமை.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் தம வாக்கு அளித்துள்ளது போல் கனவு கண்டேன் ....இது ஏன் அளவுக்கு மீறிய ஆசையா :)

      Delete
  18. தேனீயைப் போல
    மனிதன் அமைய மாட்டான் தான்

    ReplyDelete
    Replies
    1. தேன்எடுக்க சுறுசுருப்பாய் அலைவானே :)

      Delete