7 June 2017

'சிலுக்கு' ரசிகரின் கவிதைப் புலம்பல் :)

ஜிகர்தண்டா, இதுவரை குடித்திருக்க மாட்டாரோ :)          
            ''அதோ அவர் குடிக்கிறாரே ,அதையே எனக்குக் கொண்டு வாங்க !''
           ''அவர் பாதி குடிச்சிட்டாரே ,இப்போ கேட்டால் நல்லாவாயிருக்கும் ?''

ஏலம் முடிந்தது நல்லபடியாக :)             
         ''ஒரு தரம் ,ரெண்டு தரம் ,மூணு தரம்னு  கல்லறையிலே எழுதியிருக்காங்களே ஏன் ?''
          ''இறந்தவர், ஏலக்கடை வைத்திருந்தாராமே !''

அப்பன் குணம் அறிந்த பிள்ளைங்க  :)
             ''என்னங்க ,நீங்கதான் போலீஸாச்சே ,நம்ம புள்ளைங்க போலீஸ் திருடன் விளையாடும் போது, ஏன் எறிஞ்சு விழறீங்க ?''
            '' மாமூல் கொடுக்க  வீட்டுக்கு வராதேன்னு சொன்னால்  உனக்கு புரியாதா நாயேன்னு கேட்கிறானே !''

 'சிலுக்கு' ரசிகரின்  கவிதைப் புலம்பல் :)
            ''அவர்,தற்கொலை செய்துகொண்ட கவர்ச்சி நடிகையின் தீவிர ரசிகர் போலிருக்கா ,எப்படி ?''
            ''இருக்கும் போது தூக்கத்தைக் கெடுத்தாய் ... தூக்க மாத்திரை  அதிகமாய்  உண்டு துக்கத்தை ஏன் கொடுத்தாய்னு புலம்புறாரே !''

முதல் அழுகை ,தாய்க்கு ஆறுதல் :)
பிறந்ததும் சிசு அழுதது ...
தாயின் வலியை உணர்ந்து !



இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1462494செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)   

51 comments:

  1. குடிகார மட்டைக்கு இதெல்லாம் தெரியாது வாங்கி கொடுங்க ஜி

    ReplyDelete
    Replies
    1. ஆண் பாவம் படத்தில் என்று நினைக்கிறேன் ,தவக்களை இப்படித்தான் எச்சிலைத் துப்பிக் கொடுப்பான் ,ஞாபகம் வருதா ஜி :)

      Delete
  2. மீ தான்ன்ன்ன்ன்ன் 1க்கு அடுத்ததூஊஊஊ:)

    ReplyDelete
    Replies
    1. மகுடம் ரொம்ப கனக்குமே, என் தலைக்கு மாற்றி விடுங்களேன் :)

      Delete
    2. ஹா ஹா ஹா எனக்கு 20 வோட்ஸ் கிடைச்சிருக்கூஊஊஊஊஊ:).. நாளைக்குப் பின்னேரம் உங்களுக்குத்தேன்ன்:).. ஆனா கில்லர்ஜி உம் முறைச்சுப் பார்க்கிறாரே.. தெரியேல்லை பார்ப்போம் யாருக்கு..நாகூர் பிரியாணி என:) ஹா ஹா ஹா:).

      Delete
    3. மீக்கு ஸ்வீட் 17:)

      Delete
  3. ஹாய் பகவான் ஜீ..!

    ReplyDelete
  4. ஜிகர்தண்டா என்றால் என்ன ஜீ ?? ( ஆதவன் படத்தில் வடிவேலு குடித்துவிட்டு புலம்புவார். அதையும் ஜிகர்தண்டா என்றுதான் சொன்னதாக ஞாபகம் )

    ReplyDelete
    Replies
    1. உடனுக்குடன் கலந்து செய்து தரப்படும் ஜில்ஜில் குளிர்பானம் ,மதுரையில் ரொம்ப பேமஸ் :)

      Delete
  5. சிலுக்கு ரசிகர் - ஹா ஹா

    குட் நைட் ஜீ :)

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை ,இவரும் துக்கத்தில் மாத்திரை விழுங்காமல் போனார் :)

      Delete
  6. குழந்தை அழும் காரணம்
    மிகப் புதுமையாய் அருமையாய்
    நடிகை மற்றும் போலீஸ் விஷயமும்..
    வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
    Replies
    1. நான் அழுதது அதுக்குத்தான் ஜி :)

      Delete
  7. பகவான் ஜி நல்லா கவனிச்சீங்களா ''ஒரு தரம் ,ரெண்டு தரம் ,மூணு தரம்னு கல்லறையிலே எழுதியிருக்காங்களா அல்லது ஒரு தாரம் ரண்டு தாரம் மூன்று தாரம் என்று எழுதியிருக்காங்களா? TM 6

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ,நீங்க சொன்னதுக்கு அப்புறம்தான் யோசிக்கிறேன் ,ராத்திரி று மணிக்கு போய் பார்த்து விடுகிறேன் :)

      Delete
  8. வணக்கம்
    ஜி

    சிலுக்கு இரசிகர் பற்றியும் தரம் பற்றி எழுதியது மிக மிக அருமை இரசித்தேன் வாழ்த்து த.ம 7

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தரமான சிலுக்கு அஞ்சலிதானா இது :)

      Delete
  9. பிறந்ததும் சிசு அழுதது...
    தாயின் வலியை உணர்ந்து!
    ஆனால்,
    தாயின் வலி குறைந்ததாம்
    சிசுவின் அழுகை கேட்டு...

    ReplyDelete
    Replies
    1. அதுதானே உண்மை :)

      Delete
  10. குழந்தைகள் விளையாட்டில் வெளியாகும் ரகசியங்கள்! ஏஞ்சலின் பதிவு நினைவுக்கு வருகிறது!

    மகுடம் சூடுவதில் உங்களுக்கும் ஆஷா போஸ்லேவுக்கும் பயங்கர போட்டி போல!

    ReplyDelete
    Replies
    1. ஹை ஸ்ரீராம் அப்போ பகவான் ஜீயும் நன்றாகப் பாடுவார் போல!!! ஆஷா போஸ்லே கூடப் போட்டி போடுவது என்றால் ஹஹஹஹஹ்...சரி எந்த சூப்பர் சிங்கர் போட்டியோ!!!!? ஹிஹிஹி

      கீதா

      Delete
    2. ஏஞ்சலின் அந்த பதிவின் லிங்கைக் கொடுங்க ஜி :)

      ஆரோக்கியமான போட்டி இருப்பதும் ஊக்கம் தரும்தானே :)

      Delete
    3. நானும் பாடும் நிலா பகவான்ஜி என்று வைத்துக் கொள்ளலாமா ஜி :)

      Delete
  11. மது...ரை... ஜிகர்தண்டாதானே...!

    ஒரு தாரம் ,ரெண்டு தாரம் ,மூணு தாரம்... தவறுதலா காலை மறந்துவிட்டார்கள்...!

    இதுக்குத்தான் பயலுக்கு முன்னாடி திட்டாதேன்னு சொல்றது...!

    ‘நேத்து ராத்திரி யம்மா...’

    அழ வைப்பதற்கு இதுதான் ஆரம்பம்...!

    த.ம. 9

    ReplyDelete
    Replies
    1. மதுவை நான் டேஸ்ட் செய்ததில்லையே ஜி :)

      ஏலத்தில் நல்ல வசூல் போல :)

      பயபிள்ளே போக்கு கற்றவனா இருக்கானே :)

      அதுக்கு முதல் ராத்திரி எல்லாம் சும்மாவா :)

      சிரிக்க மறந்தாய் மானிடனே :)

      Delete
  12. Replies
    1. ஜிகர்தண்டா சூபர்தானே :)

      Delete
  13. நகைப்பணி தொடர்க
    தம +

    ReplyDelete
    Replies
    1. ஏலம் போடாமல் தொடர்கிறேன் ஜி :)

      Delete
  14. புலம்பல் பிடிச்சிருக்கு ஜி...!

    ReplyDelete
    Replies
    1. ரசனையான புலம்பல் பிடிக்காமல் போகுமா ஜி :)

      Delete
  15. ஹோட்டல்ல அடுத்தவங்க சாப்பிடுறதை பார்த்து ஆர்டர் செய்யுறவங்க இன்னும் இருக்காங்க

    ReplyDelete
    Replies
    1. இதிலாவது சுயமா முடிவெடுக்கக் கூடாதா :)

      Delete
  16. அர்த்தமே வேறுதான் அகராதியே வேறுதான்
    ஒருதரம் இரண்டு தரம் மூன்று தரம் என்றா எழுதியிருந்தது கவனமாகப் பாருங்கள்
    விளையாட்டை வினை ஆக்குவார்களோ என்ற பயமா
    எத்தனையோ கவர்ச்சி நடிகைகள் இவர் மட்டு ம் என்ன ஸ்பெஷல்
    குழந்தை அழுதது தாய் துன்பத்திலும் சிரித்தாள்

    ReplyDelete
    Replies
    1. எந்த அகராதி என்றாலும் ஒரே அர்த்தம்தானே வரணும் :)
      இதிலென்ன சந்தேகம் :)
      திருட்டிலும் தொழில் தர்மமா :)
      கண்களை உற்றுப் பாருங்கள் ,மாமி வீட்டில் இல்லா நேரத்தில் :)
      ஜனித்த உயிரைக் கண்டு மகிழ்ச்சி இருக்கத்தானே செய்யும் :)

      Delete
  17. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  18. பிடிச்சிருக்கு!முற்றும்

    ReplyDelete
    Replies
    1. என் பதிவு என்றும் முற்றாது அய்யா :)

      Delete
  19. Replies
    1. போலீஸ் திருடன் விளையாட்டு தான் கொஞ்சம் உதைக்கிறது :)

      Delete
  20. // ''அதோ அவர் குடிக்கிறாரே ,அதையே எனக்குக் கொண்டு வாங்க !''//

    பெரிய உணவு விடுதிகளில் நாம் ருசித்தறியாத பண்டங்கள்! இதனாலேயே நான் அங்கெல்லாம் போவதில்லை. அவர் சாப்பிடுறதைக் கொடுங்கன்னும் கேட்கவும் முடியாதே!

    ReplyDelete
    Replies
    1. அதுவே வேண்டாம் ,அது மாதிரி வேண்டும்னு சொன்னால் சர்வர் கோபித்துக் கொள்வாரா :)

      Delete
  21. குழந்தையின் அழுகை நன்று

    ReplyDelete
    Replies
    1. சத்தமில்லா அழுகை சுகம்தானே :)

      Delete
  22. அய்யோ.....பாவம்..சிலுக்குதான் அந்த ரசிகரின் கனவில் வந்து ஆறுதல் சொல்லனும்

    ReplyDelete
    Replies
    1. கனவுக் கன்னி ஆறுதல் சொன்னாலும் இவர் தேறுதல் இல்லையே :)

      Delete
  23. மதுரை ஜிகிர்தண்டா ஆஹா சூப்பர்!!! குழந்தை பிறக்கும் போது தாயின் வலி அறிந்து அழுது ஆனால் வயதாகும் போது அதுவும் மணம் முடித்த பிறகு தாயின் வலி தெரியாமல் போகிறதோ??!!!!

    அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. இது வளர்ச்சியா ,வீழ்ச்சியாச்சே ஜி :)

      Delete