1 June 2017

லேப்டாப்பை விட செல்போன் மோசமா :)

பையன் மேல் அவ்வளவு நம்பிக்கை :)              
              ''உங்க கணவரிடம் அதிர்ச்சியான செய்தியை சொன்னால் செத்துடுவார்ன்னு சொன்னேனே ,என்ன சொன்னீங்க ?''
               ''நம்ம பையன் பத்தாவது பாஸ்னு தான்  சொன்னேன் !''

லேப்டாப்பை  விட செல்போன் மோசமா :)                   
                  ''இனிமேல் ,மாணவர்கள் செல்போனைப் பள்ளிக்குக் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப் போறாங்களாமே !''

                  ''லேப் டாப்பைக்  கொடுத்துட்டு செல்போனைப் பறிப்பது எந்த வகையில் நியாயம் ?''

வியாபாரியிடம் மனிதநேயத்தை எதிர்பார்க்கலாமா :)
                 '' அந்த ஆட்டோ டிரைவரை , டாக்டர்  ஏன் அடிச்சு விரட்டச் சொல்றார் ?''
                  ''உங்க கிளினிக் வாசலில்  'பிரசவத்துக்கு இலவசம் 'னு  எழுதிப்  போட முடியுமான்னு கேட்டாராம் !''
இந்த படத்தில்  கமல் 'லிப் லாக் ' சீன் இல்லாமல் போகுமா :)
               '' கமல் சின்னப் பையனா இருக்கும் போது நடிச்ச  களத்தூர் கண்ணம்மா படத்தோட பார்ட் 2 வந்தால் என்ன பெயர் வைக்கலாம் ?''
                ''பெருங்களத்தூர் கண்ணம்மா !''

சோமலிங்கம் மகன் மாரியை  ..சோமாறின்னு கூப்பிடலாமா ?
                ''ஏண்டா பாலு ,உங்கப்பா சேவியர் ,உன்பேரை சே .பாலுன்னு  தமிழ்லே  பதிஞ்சது நல்லதா போச்சா ,ஏன்  ?''
                ''ஆமா ...X .பாலுன்னா ,சில  அகராதிகள் ,அப்பன் பெயர் தெரியாதான்னு கேட்பாங்களே !''

சிலர் நெஞ்சு முழுவதும் நஞ்சு ...காரணம் ?
எல்லோருக்கும் பிறப்பின்போதே ...
வெளியே தெரியும் நஞ்சுக்கொடி வெட்டப்பட்டுவிடும் !
ஒரு சிலருக்கு மட்டும் ...
நஞ்சுக் கொடி நெஞ்சுக்குழி வரை 
வேர்விட்டு பரவிவிடுமோ ?

இந்த லிங்க் >>>http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1461852செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)   

33 comments:

  1. Replies
    1. மரணத்தில் ஏது ஆனந்தம் :)

      Delete
  2. நள்ளிரவு வணக்கம் பகவான் ஜீ :)

    ReplyDelete
    Replies
    1. மறு வணக்கம் சொல்ல அடுத்த நள்ளிரவு வந்துவிடும் போலிருக்கிறது என் வேலை அப்படியாகி விட்டதே ஜி :)

      Delete
  3. பையன் பத்தாவது பாஸா ? - ரொம்ப அதிர்ச்சியா இருக்கே?

    ReplyDelete
    Replies
    1. அவங்க வம்சத்திலேயே பெரிய படிப்பு படித்த முதல் பிள்ளை இவன்தானோ :)

      Delete
  4. வணக்கம் ஜி !

    எல்லாம் நன்றாக இருக்கின்றன சோமாரியும்
    ஆட்டோக்காரனும் ரொம்ப பிடித்திருக்கிறது
    ஆனாலும் இந்த அப்பனுக்கு இவ்வளவு நம்பிக்கை ஆகாது ஹா ஹா ஹா

    தமன்னா வாக்கு மேலும் ஒன்று

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கை உயிரையே பறிச்சிடுச்சே :)

      Delete
  5. சிரிக்காமல் போக நினைச்சேன்ன் ஆனாலும் சிரிக்க வச்சிட்டார் ஜோக்காளி...:) என்னா அடி அது? ஹா ஹா ஹா விசிலடி.. எனக்கு காத்துத்தான் வரும் :).. சத்தம் வராது.

    ReplyDelete
    Replies
    1. பகவான் ஜீ ,,,.... மகுடம் இப்போ என் கைக்கு வந்துவிட்டதூஊஊஊ நம்ப முடியவில்லை... ஹா ஹா ஹா.

      Delete
    2. அது கில்லர்ஜி தலைக்கு போய் இப்போ என் தலைக்கே வந்து விட்டதே :)

      Delete
  6. சரிதான், பையன் பாஸ் ஆவதே அதிர்ச்சியா!!!

    அதானே!

    அது முடியாது.... அது முடியாது!

    பெருங்களத்தூர் பெரியம்மா!

    மிஸ்டர் எக்ஸ்!

    ம்ம்ம்....

    ReplyDelete
    Replies
    1. அவன் பிறப்பு அப்படி :)

      ஓசியில் கிடைப்பதை மட்டும் அனுபவித்தால் போதுமா :)

      அட ரெண்டு ஏழை பாழைகளுக்கு உதவினால் தான் என்ன :)

      பேவுக்கு பே சரிதான் :)

      எக்ஸ்க்கு பிறந்த பிள்ளை ஒய்யா:)

      சுயநலக் காரனைக் கண்டால் அப்படித்தானே தோன்றுகிறது :)

      Delete
  7. Replies
    1. X.பாலு என்றால் தப்பாய் நினிக்கத் தோணுமா :)

      Delete
  8. கடைசி கேள்வி நச்

    ReplyDelete
    Replies
    1. நான் யாரைக் குறிப்பிடுகிறேன் என்று உங்களுக்குத் தெரியுதா :)

      Delete
  9. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  10. Replies
    1. ஆகா ,வேர்விட்டு பரவிவிடுமோ என்ற கேள்விக்குத் தானே ஜி :)

      Delete
  11. TM 11 //ஒரு சிலருக்கு மட்டும் ...
    நஞ்சுக் கொடி நெஞ்சுக்குழி வரை
    வேர்விட்டு பரவிவிடுமோ //

    உண்மைதான் நெஞ்சுகுழிமட்டுமல்ல உடல் முழுவதும் பரவி இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. பிஞ்சிலேயே படருவதைப் பார்த்தால் இந்த கொடி பரம்பரைக் கொடி போலத் தோணுதே :)

      Delete
  12. Replies
    1. தைரியம் இருந்தால் அரசு கொடுத்ததை பறி முதல் செய்யலாமே :)

      Delete
  13. பையன் பாஸ் ஆனதே அதிர்ச்சிதானோ ?

    ReplyDelete
    Replies
    1. அந்த லட்சணத்தில் படிப்பான் போலிருக்கு :)

      Delete
  14. நடக்காத ஒன்றை... இவ்வளவு பெரிய அதிர்ச்சிய கொடுக்கக்கூடாதில்ல...!

    பெரிசக் கொடுத்திட்டு... சின்னத எடுத்துக்க வேண்டியதுதானே...!

    சவமானப் பார்ப்போம்...!

    களத்தூர் கண்ணம்மாப்பாட்டி...!

    எக்ஸ் பார்ட்டி... தீர்ப்பாயிடப் போவுது...!

    நஞ்சுக் கொடி கட்டிப் பறக்குதோ...?!

    த.ம. 15

    ReplyDelete
    Replies
    1. ஒரு வேளை இவர் பத்து முறை முயன்றும் பத்தாவது பெயில் ஆகியிருப்பாரோ :)

      சின்னதுதானே கைக்கு அடக்கமா இருக்கு :)

      இலவச ஆம்புலன்ஸ் வசதியா :)

      தாத்தா போயிட்டாரா :)

      ஜாக்கிரதையாய் இருப்பது நல்லதுதானே :)

      காற்று மண்டலத்தையே கெடுத்து விட்டிருச்சே :)

      Delete
  15. ரசித்தேன் என்று சொல்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. சொல்லா விட்டாலும் நீங்கள் ரசிக்கக் கூடியவர் தானே :)

      Delete
  16. நஞ்சுக் கொடி நெஞ்சுக்குழி வரை இருப்பது நல்லதா ஜி :)

    ReplyDelete
  17. நஞ்சுக் கொடி நெஞ்சுக்குழி வரை
    வேர்விட்டு பரவியதால்
    சிலர் நெஞ்சு முழுவதும் நஞ்சோ?

    ReplyDelete
    Replies
    1. இருக்கத்தானே செய்கிறார்கள் :)

      Delete