8 December 2013

பெண்ணுமா இப்படி ,யாரைத்தான் நம்புவதோ ?

Multy Level Marketing எம்பதை சுருக்கமாக M L M என்பார்கள் ...
அந்த M L M யை கணினியில் தமிழில் தட்டச்சுச் செய்தால் ...
மலம் என்று வரும் ...உண்மையும் அதுதான் ...

M L M பக்கம் போகாமல் இருப்பது நல்லது என்று ...
முன்பு ட்வீட்டரில் நான் ட்வீட்டியதை உண்மையென நிரூபித்துள்ளனர் ...
அண்மையில் கோவை போலீசாரால் கைது செய்யப் பட்டிருக்கும் வக்கீல் தம்பதியினர் ...
அவர்கள் மேல் உள்ள குற்றச்சாட்டுகளைப் படித்தால் ...
இருவரும் வக்கீலுக்குப் படித்தவர்கள்தானா என சந்தேகம் எழுகிறது ...
ஓடிசாவில் தொடங்கிய MLM நிறுவனத்திற்கு அந்த பெண்மணிதான் ...
தலைமைப் பொறுப்பு ஏற்று நடத்தி வந்தாராம் ...
வேண்டிய மட்டுக்கும் மக்களின் பணம் வந்தவுடன் கம்பி நீட்டிய வழக்கில் இருந்து தப்பிக்க ...
தன்னை நம்பி வழக்கை ஒப்படைத்த பெண்ணைக் கொன்று ...
அந்தச் சடலத்தை வைத்து தன் மனைவி இறந்து விட்டதாக ஆள் மாறாட்டம் செய்து ...
ஒடிசா பண மோசடி வழக்கில் இருந்து மனைவியை காப்பாற்றி இருக்கிறார் அவரது கணவர் ...
இறந்த மனைவி இறந்ததாகவே இருந்தாலும் பரவாயில்லை ...
இன்னொருவர் சொத்தை அபகரிக்க இறந்தவரை  உயிர்ப்பித்து இருக்கிறார் ...
இது மட்டுமல்ல ,இன்னொரு ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கிலும் ,மாயமான பெண் வழக்கிலும் சேர்க்கப் பட்டுள்ளனர் வக்கீல் தம்பதியர் ...
இவர்களின் புகழ்லண்டனில் இருந்து வெளியாகும்  'தி ஏசியன் ஏஜ் 'பத்திரிக்கை மூலம் உலகெங்கும் பரவி விட்டது !
வக்கீலிடம் உண்மையை மறைக்ககூடாது என்பார்கள் ...
இந்த வக்கீல் தம்பதியினர் உண்மையை மறைத்து சமூகத்தில் பெரிய மனிதர்களாய் வலம் வந்துக் கொண்டு இருந்ததைப் பார்த்தால் ...
யாரைத்தான் நம்புவது என்றே புரியவில்லை !

22 comments:

  1. மயானத்தில் எரித்த அந்த பெண் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கதி?

    ReplyDelete
    Replies
    1. ஜெயிலுக்கு சென்று அந்த வக்கீல் தம்பதிகளிடம்தான் கேட்கணும் !
      நன்றி

      Delete
  2. பேதை நெஞ்சம் யாரையும் நம்பாது...!

    ReplyDelete
    Replies
    1. அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம் என்பது உண்மைதான் போலிருக்கிறதே !
      நன்றி

      Delete
  3. யாரைத்தான் நம்புவதோ!

    த.ம. 4

    ReplyDelete
    Replies
    1. படித்த வக்கீலே இப்படியென்றால் யாரிடம் நீதி கேட்பது ?
      நன்றி

      Delete
  4. பேராசையின் விளைவு
    இப்படித்தான் நாசத்தில் முடியும்

    ReplyDelete
    Replies
    1. மாட்டிக்கொண்டவுடன் காவலர்களுக்கு முன்னிலையே தம்பதிக்குள் வாக்குவாதம் துவங்கி விட்டதாம் ...ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டு !
      நன்றி

      Delete
  5. Replies
    1. சட்டம் மட்டுமா இருட்டறை .ஜெயிலும் இருட்டறை என்று புரிந்திருக்கும் !
      நன்றி

      Delete
  6. யாரைத்தான் நம்புவதோ
    த.ம.7

    ReplyDelete
    Replies
    1. சட்டத்தைக் கரைச்சு குடித்தவர் ,சட்டப் பாதுகாப்பு கேட்டு வந்தவங்க உயிரையும் உறிஞ்சு குடித்து இருக்கார் !
      நன்றி

      Delete
  7. பேராசை ஒரு உயிரைப் பறித்திருக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. இன்னும் எத்தனை உயிர் போயிருக்கோ ,இனிமேல்தான் தெரியவரும் !
      நன்றி

      Delete
  8. சட்டம் படித்தவர்களே இப்படி செய்வதா???...
    கண்டிப்பாக இந்த வழக்கு இன்னும் ஒரு மாதத்தில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்டுவிடும் என்று
    நான் நம்புகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நம்மூர்லே இவ்வளவு சீக்கிரம் தீர்ப்பு வந்து விடுமா ?
      நன்றி

      Delete
  9. Replies
    1. பணத்தாசைக்கும் எல்லையே இல்லையா ?
      நன்றி

      Delete
  10. பிணம் தின்னும் பேய்கள் என்பது இதுதானோ?

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ,கண்ணில் தெரியும் பேய்கள் இவர்கள்தான் !
      நன்றி

      Delete