9 December 2013

காதலுக்கு மரியாதை இதுதானா ?

பூண்டிலே ஒருதலைப்பூண்டு ஆரோக்கியத்திற்கு நல்லதுதான் ...
ஆனால் ,காதலில் ஒருதலைக் காதல் இருக்கே ,எந்தக் கொடுமையையும் செய்யத் தயங்காது என்று பஞ்சாப்பில் நடந்த கொடூரம் மூலம் மீண்டும் தெரிகிறது ...

திருமணத்திற்காக பியூட்டிப் பார்லரில் அலங்காரம் செய்துக் கொண்டிருந்த பெண் மீது ...
கூரியர் தபால்காரனைப் போல் உள்ளே வந்த கொடூரன் ...
ஆசிட்டை வீசியதில் ...
அந்தப் பெண்ணின் முகம் கழுத்து மார்பு வயிற்றுப் பகுதிகள் பாதிக்கப்பட்டன ...
C C TV கேமரா பதிவைக் கொண்டு அந்த கொடூரனை கைது செய்து விசாரித்ததில் ...
அந்தப் பெண்ணை தான் காதலித்ததாகவும் ,காதலை அவள் ஏற்றுக் கொள்ளாததால் ...
ஆசிட்டை வீசியதாகவும் கூறியுள்ளான் ...
உண்மையாக அந்தப் பெண் மீது அவனுக்கு காதல் என்றால் இப்படி செய்ய மனம் வருமா ?
தனக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்ற பொறாமையை எப்படி காதல் என்று சொல்ல முடியும் ?

19 comments:

  1. Replies
    1. அதுவும் சுயநலவெறி !
      நன்றி

      Delete
  2. இது காதல் அல்ல! மன நோய்! காதலில் சோகம் வரும்போது, தன்னைத்தானே துன்புறுத்திக் கொள்வது, அதாவது கையைச் சுட்டுக் கொள்வது, ப்ளேடால்/கத்தியால் கீறிக் கொள்வது, பச்சைக் குத்திகொள்வது எல்லாமே ஒரு வகையான மனம் சம்பந்தப்பட்டது. ஆனால் அதைத் தானே உண்மையான காதல் என்று நம் தமிழ் சினிமா கலாச்சாரம் பேசுகிறது!!! பகவான்ஜி!!!

    த.ம. போட்டச்சு!!

    ReplyDelete
    Replies
    1. தன்னைதானே துன்புறுத்திக் கொண்டால் பரவாயில்லை ,பெண்ணின் மீது ஆசிட் ஊற்றுவதை என்ன சொல்ல ?
      நன்றி

      Delete
  3. செய்தியின் கீழே இருக்கும் சிரிப்பின் பொரு:ள் புரியவில்லையே

    ReplyDelete
    Replies
    1. நம்ம ஊரில் காதல் இப்படி சிரிக்கும்படியாத் தானே இருக்கு ?
      நன்றி

      Delete
  4. ஆறறிவு படைத்த மிருகம்.

    ReplyDelete
    Replies
    1. அவ எனக்கு கிடைக்காட்டி ,அவளுக்கு ஆசிட் அபிஷேகம் நடத்துகிறேன் என்று வேண்டுதலாவும் இருக்குமோ ?
      நன்றி

      Delete
  5. உண்மையில் இந்த செய்தி கேட்டதும்
    மிகவும் அதிர்ந்துதான் போனேன்

    ReplyDelete
    Replies
    1. மனிதனில் மிருகம் உண்டென்பதை நிரூபித்து விட்டான் !
      நன்றி

      Delete
  6. வணக்கம்

    இப்படியான விசமிகளை கட்டிவைத்து உப்பும் மஞ்சலும் கலந்த கலவையை பனமட்டை தண்டில் பூசிய பின் நெருப்பில் வாட்டிய பின் அதனால் அடிக்க வேண்டும் நன்பரே...ஏற்படும் தழும்பு. மாறாது..நினைத்து நினைத்து கண்ணீர் விடுவான் அருமை வாழ்த்துக்கள்

    தைப்பொங்கலை முன்னிட்டு மா பெரும் கட்டுரைப்போட்டி மேலும் தகவல் .இங்கே-http://2008rupan.wordpress.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பாழாய்ப்போன ஜனநாயகம் நீங்கள் சொல்லும் தண்டனையை நிறைவேற்ற விடாமல் தடுக்கிறதே !
      தகவலுக்கும் நன்றி

      Delete
  7. அழைப்பிற்கு நன்றி !

    ReplyDelete
  8. அடக் கொடுமையே.....

    இந்த வெறியர்களை தண்டிக்க வேண்டும்....

    த.ம. 5

    ReplyDelete
    Replies
    1. கடுமையாக தண்டிக்காததால் கொடுமை தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது !
      நன்றி

      Delete
  9. Replies
    1. ஊர் நடுவிலே வச்சு தோலை உரித்தால் தவிர இப்படிப்பட்ட நாதாரிகள் திருந்தவே மாட்டாங்க!
      நன்றி

      Delete