18 December 2013

யார் சொல்வதை நம்பலாம் ?

''இன்னைக்கு விவாதிக்கிற லோக் பால் பற்றி ,யார் சொல்றதை நம்புறதுன்னு தெரியலேன்னு ஏன் சொல்றீங்க ?''
''அதை நல்ல மசோதான்னு அன்னாஹசாரேயும், அது வலு இல்லாத 'சோதா'ன்னு அரவிந்த் கேஜ்ரிவாலும் சொல்றாங்களே !''

18 comments:

  1. இதுக்குதான் நியூசே பார்க்கக் கூடாதுன்னு!! ஒவ்வொருத்ததும் ஒவ்வொரு மாதிரி சொல்லி குழப்பி விட்டுடுவாங்க

    ReplyDelete
    Replies
    1. நாட்டு நடப்பைத் தெரிஞ்சுக்க நீயுசை பார்த்துதானே ஆகா வேண்டியிருக்கே !
      நன்றி

      Delete
  2. பகவான் ஜி! இப்ப உள்ள அரசியல்ல உள்ளவங்க எல்லாருமே ஒரே மட்டையில் ஊறிய குட்டைகள்தான்!! அது இப்பவந்த கெஜ்ரி வாலாக இருந்தால் என்ன யாராக இருந்தால் என்ன?! யாரையும் நல்ல அரசியல் வாதி என்று நம்புவதற்கில்லை!! கெஜ்ரி வாலும் தான். அதுதான் உண்மை! என்ன சரியா?!

    ReplyDelete
    Replies
    1. புலி வாலை பிடித்தவர் போலாகி விட்டார் அரவிந்த் கேஜ்ரிவால் ,பதினெட்டு நிபந்தனைகளை விதித்து,மற்ற கட்சியின் ஆதரவு பெற்று ஒருவேளை ஆட்சி அமைத்தாலும் ...அந்த அரசு நித்ய கண்டம் பூரண ஆயுசு போலாகிவிடும் !
      நன்றி

      Delete
  3. இதெல்லாம் அரிசியலப்பா

    ReplyDelete
    Replies
    1. ஆதரவு அளிப்பதும் ,காலை வாருவதும் தானே ?
      நன்றி

      Delete
  4. டெல்லியில் ஒரு தி.மு க
    அண்ணா திமுகன்னு
    வைத்துக் கொள்ளவேண்டியதுதான்

    ReplyDelete
    Replies
    1. இரண்டில் ஒரு கட்சியின் ஆதரவைப் பெற்றாலும் அரவிந்த் கட்சி அம்பேல் ஆகிவிடும் !
      நன்றி

      Delete
  5. Replies
    1. நமக்குதான் குழப்பம் ,எந்த அரசியல்வாதியாவது தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக்குவானா ?
      பல ஓட்டைகள் உள்ள லோக்பால் மசோதாவைத் தான் நிறைவேற்றுவார்கள் !
      நன்றி

      Delete
  6. கட்சியுடைய பெயரிலேயே "ஆம்" என்று வைக்கும்போதே உஷாராகவேண்டாமா?
    நாம் எப்போதுமே "மாங்கா"-வாகவே இருக்கின்றோம்.

    ReplyDelete
    Replies
    1. மற்ற கட்சிகள் என்ன வாழுது ?ஒன்று ரோம ராஜ்யம் ,இன்னொன்று ராம ராஜ்யம் என்பவர்கள் ஆச்சே !நாம் மாங்காயா ,ஆத்மிகளாய் சில நாளில் தெரிந்து விடும் !
      நன்றி

      Delete
  7. மனுஷர்[ஹசாரே]உண்ணாவிரதம் இருந்து இருந்து கலைச்சுட்டார் வேற வழி இல்லாமே நல்ல மசோதான்னு சொல்லி கதையை முடிக்கலாம்னு இருக்கார் கெஜ்ரிவாலோ இப்பத்தானே அரசியல் துவங்கி இருக்கார் அரசியல் நடத்த வேண்டாமா [safeertirupur@gmail.com]

    ReplyDelete
    Replies
    1. அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா ...டயலாக் சாகாவரம் பெற்ற டயலாக்கா ?
      நன்றி

      Delete
  8. Replies
    1. தலைநகர் அரசியலை அருகிலேயே இருந்து நீங்கள் கவனிப்பதால் உங்கள் கருத்து சரியாகத்தான் இருக்கணும் !
      நன்றி

      Delete