1 April 2015

பொண்ணு பிடிக்கலைன்னு இப்படிச் சொல்லலாமா :)

--------------------------------------------------------------------

விடாக் கண்டனும் கொடாக் கண்டனும் :)
        ''உன் கல்யாணம் என்னைக்குன்னு சொல்லு ,மொபைலில்  குறிச்சுக்கிறேன்!''
        ''ஃகிப்ட்  வாங்க  மறந்துறக் கூடாதுன்னு தானே கேட்கிறே ?''
        ''அட நீ ஒண்ணு, ,என்னோட வாழ்த்தை  sms ல்  டைப் பண்ணலாம்னு , கேட்டா ஏதேதோ கற்பனை பண்றீயே !''

மனைவி மயக்கத்திலேயே கணவன் இருந்தால் ....!

         "மனைவிக்காக தாஜ் மஹாலை கட்டிய ஷா ஜஹானை ,சிறை 
வைத்தது அவர் மகன்தானாமே ,இதிலிருந்து என்ன தெரியுது ?"
            "நல்ல கணவனா இருந்தா மட்டும் போதாது நல்ல அப்பனாவும் 
இருக்கணும்னு  தெரியுது !"
Mythily kasthuri rengan1 April 2014 at 06:56
ஷாஜகான் தனக்காக ஒரு கருப்பு தாஜ்மஹாலை இப்போ இருக்க தாஜ்மஹாலுக்கு முன் கட்ட நினைத்திருக்கிறார். ஏற்கனவே கம்பெனி நட்டத்தில ஓடுது உனக்கு இது தேவையான்னு நாம ஔரங்கசீப் முடிவுபண்ணி அப்பாவை உள்ளதூக்கி வச்சுட்டார். இது ஜோக் இல்ல fact . நல்ல வேலை ,இருக்க ஒரு தாஜ்மகால் கே இந்த கவிஞர்கள், காதலர்கள் தொல்லை தாங்க முடியல, :))




  1. Bagawanjee KA1 April 2014 at 09:18
    ஷாஜஹானுக்கு இருந்த ஏழு மனைவிகளுள் ஒருவர் கருப்பு தேவதையாக இருந்து இருப்பாரோ ?
    கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலருன்னு சொல்றவங்க ,கருப்பு தாஜ் மகாலும் இருந்து இருந்தா கொண்டாடி இருப்பாங்களே ,ஹும் அவங்களுக்கு கொடுப்பினை இல்லை !
  2. Mythily kasthuri rengan1 April 2014 at 18:54
    இன்னொன்னு தெரியுமா ? தாஜ்மஹால் கட்ட செலவிட்ட வரிப்பணம் ,பயன் படுத்திய அடிமைகள், எடுத்துக்கொண்ட கால அளவைப்பற்றி விரிவா பாடம் நடத்திட்டு இருதேன்(அது டெக்ஸ் புக் ல இல்லாத மேட்டர் ) என் மாணவி ஒருத்தி டௌட் கேட்டாள் நெத்தியடியா "இவ்வளோ பாடுபட்டு அவர் மனைவிக்கு தானா மிஸ் கட்டடம் கட்டினார் // வருங்காலம் பிரகாசமா தான் இருக்கு!
  3. Bagawanjee KA1 April 2014 at 22:21
    ஒளிமயமான எதிர்காலம் என் கண்களிலும் தெரியுதே !
    Thulasidharan V Thillaiakathu3 April 2014 at 20:38
    அரசர்கள் பொதுவாக, நல்ல கணவனும் கிடையாது! நல்ல தகப்பனும் கிடையாது என்றே தோன்றுகின்றது! 




    1. நமக்கு சொல்லித் தருகிற சரித்திரத்தில் அரசரின் நல்ல முகங்கள் மட்டுமே காட்டப் படுகின்றன ,உண்மை முகம் தெரிவது எப்போது?
    2. பொண்ணு பிடிக்கலைன்னு இப்படிச் சொல்லலாமா ?

       ''இனிமேல் பொண்ணுப் பார்க்க வர்றவங்களுக்கு மட்டமான ஸ்வீட் .
    3. காரம் கொடுத்தா போதுமா  ,ஏன் ?''
    4.  ''ஏற்கனவே பார்த்துட்டு போனவங்க 'ஸ்வீட் .காரம் மட்டும்தான் பிடிச்சது 'ன்னு சொல்றாங்களே !

    5. மழை அளவு குறைவு தரும் பாடம் ?



      ஊரிலே ஒரு நல்லவர் இருந்தாலும் மழை பெய்யுமாம் ...
      'நான் இருப்பதால்தான் மழை பெய்கிறது 'என 
      எல்லோரும் நினைத்துக் 'கொல்' கிறார்கள் !


25 comments:

  1. 01. நேரடியாக வாயிலேயே சொல்லிட்டா இதுகூட செலவு இல்லையே...
    02. ஊரான் விட்டு நெய்யே எம்பொண்டாட்டி கையேன்னானாம்.
    03. ஸ்வீட்டே மட்டமா இருக்கு பொண்ணு வீட்டுக்காரனும் மட்டமாத்தான் இருப்பானு போயிட்டா....
    04. நினைப்பு பொழைப்பை கெடுத்துறாமே...

    ReplyDelete
    Replies
    1. 1.கல்யாணத்தன்று நேரடியா வெறும்கையோடு சொன்னா நல்லா இருக்காதே,அதான் தப்பிக்க வழி தேடுறார் :)
      2.ராஜாவை யாராவதுஎதிர்த்து கேட்க முடியுமா ,மகனைத் தவிர :)
      3.நாலு பவுன் சேர்த்துப் போடுறேன்னு சொன்னா வந்துடப் போறான் :)
      4.நான் சொன்னது சரிதான்னு இன்று காலையில் இங்கே மழைக் கொட்டித் தீர்ந்ததே :)

      Delete
  2. 1) ஹா....ஹா...ஹா... சிக்கனமான மனிஹ்டார்!

    2) அவர் நல்ல கணவனா இருந்தார்னுதான் என்ன நிச்சயம்?

    3) இனிமே அதுவும் பிடிக்கலைன்னு சொல்வாங்க!

    4) "நான்" இருக்கும்வரை யார்தான் முன்னேற முடியும்?!!!

    ReplyDelete
    Replies
    1. 1.இதுவா சிக்கனம் ,கருமித்தனமாச்சே :)
      2.மும்தாஜுக்கே வெளிச்சம் :)
      3.ஸ்வீட்டே வேண்டாம் ,பொண்ணே போதும்னு சொல்லவும் ஒருவன் வருவான் :)
      4.உள்ளே இருக்கும் நான் தொலைவது எப்போ :)

      Delete
  3. வணக்கம்
    ஜி
    ஆகா...ஆகா... இரசித்தேன் ...த.ம2
    என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஜீவநதி இதழ்லே:
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஜீவநதி ங்கிறது உங்கள் அவள்ன்னு நினைச்சு ,பல்பு வாங்கிட்டேனே :)

      Delete
  4. மாப்பிள்ளை பிடிக்கவில்லையென்றாலும் இம்முறையைக் கடைபிடிக்கல்லாமா?

    ReplyDelete
    Replies
    1. பல்லு இருக்கிறவனுக்கு பக்கோடா சாப்பிடச் சொல்லியா தரணும்:)

      Delete
  5. "நான்" அழிந்தால் என்றும் சுகமே...!

    ReplyDelete
    Replies
    1. சுகம்தான் ,அடுத்தவன் அழியணும்னு இங்கே சிலர் கங்கணம் கட்டிக்கிட்டு அலையுறாங்களே :)

      Delete
  6. எதுக்கு சுவிட் காரம் கொடுத்துகிட்டு.....வர்ரவங்களோட முகத்த உர்ர்ன்னு பாத்தா போதாதா..?????......

    ReplyDelete
    Replies
    1. உர்ருன்னு பார்த்த குரங்கு பொண்ணுக்கு என்ன வேணும்னா கேட்டா என்ன சொல்றது :)

      Delete
  7. அப்போ மழைக்கு நான் காரணமில்லையா.?சம்பந்தம் முடியாத போது கை நனைக்க மாட்டோம் என்று சொல்வது சம்பிரதாயம், அதுபோல் பெண்பிடித்திருந்தால்தான் ஸ்வீட் காரம் காப்பி எண்ர் முதலிலேயே சொல்லி விடலாம். தாஜ்மஹால் குறித்து நிறைய செய்திகள் எல்லாவற்றுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள். என் பக்கம் காணலியே ஜோக் எழுதி இருக்கிறேனாக்கும்

    ReplyDelete
    Replies
    1. இரண்டு நாளாய் இங்கே மதுரையில் பெய்கிற மழைக்கு நானும் ஒரு காரணம் என்பதை அடக்கத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் :)

      முதலில் சொன்னால் பெண் பார்க்கக்கூட வர மாட்டார்களே :)

      தாஜ் மகால் அழகின் பின்னால் நாம் அறியாத நிறைய செய்திகள் இருக்கும் போலிருக்கே :)

      உங்க பக்கமும் எட்டிப் பார்த்துட்டேனே :)

      Delete
  8. ஹஹஹஹஹ் நல்ல விடா, கடா கொண்டங்கள்....மொபைல் வந்தாலும் வந்துச்சு....கணவனும் மனைவ்யும் பக்கத்துப் பக்கத்து ரூம்ல இருந்துகூட எஸ் எம் எஸ் லதான் அதுவும் வாட்ஸப்ல இப்பல்லாம்....ஹஹ்ஹ

    தாஜ் மகால்...ம்ம்ம்ம் ஸாரி ஜி ஏனோ எல்லோரும் சொல்லுவது போல் அப்படி ஒன்றும் அதில் இருப்பதாகத் தெரியவில்லை. அதுவும் அதிசயங்களில் ஒன்று என்று சொல்லும் அளவு!!!

    இன்னும் ஸ்வீட் காரம் லாம் கூட இருக்க என்ன...நாங்க நினைச்சோம் பீசா ஹட் இல்லனா காஃபி டே நு....

    ReplyDelete
    Replies
    1. நேருக்கு நேராய் பேசுவதைக்கூட கெடுத்து விட்டதே ,இந்த விஞ்ஞான முன்னேற்றம் :)

      அந்த கால பிரமாண்டம் என்று வேண்டுமானால் ரசிக்கலாம் :)

      காபி டே ஷாப்பில் பெண் பார்க்கும் காலமும் வந்தாச்சு :)

      Delete
  9. உங்கள் 'கழுதை'யை விடவா :)

    ReplyDelete
  10. ஜி இங்க எங்களையும் நினைவு கூர்ந்து குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி ஜி!

    ReplyDelete
    Replies
    1. என் மனதில் தோன்றியதை சொன்ன உங்களை மறக்க முடியுமா :)

      Delete
  11. அன்புள்ள பகவான் ஜீ,

    “ S.M.S.சா ... சாரி...மேன்... சாரி.... கிப்ட் கொடுக்க வக்கில்லை... இதுல என்ன குறிச்சி வச்சுக்கிறியாக்கும்...!
    கல்யாணத்துக்கு வந்தாலும் மொய் போடப் போறதில்ல... சரி...சரி... கூச்சப்படாம வந்து சாப்பிட்டு போ...!”

    “நா இதுக்குன்னு இல்ல... எதுக்கும் கூச்சப் படமாட்டேன்...”

    “ வெக்கம்... மானம்... இல்லேன்னு சொல்லாம சொல்றீயாக்கும்...”


    “யார் மனைவிக்காக தாஜ்மகால் கட்டினார் ஷாஜகான்?” அது மொதல்ல சொல்லலியே...!


    “ இருக்கவே இருக்கு அச்சு வெல்லம்... சில்லி... மட்டும் கொடுத்து மட்டம்தட்ட வேண்டியதுதானே...!”


    “ ஊரிலே ஒரு நல்லவர் இருந்தாலும் மழை பெய்யுமாம் ... நான்தான் வெளியூர்ல இருக்கிறப்ப எப்படிப் பெய்யும்?”

    நன்றி.
    த.ம.10.

    ReplyDelete
    Replies
    1. கூச்சப்படாம வந்து சாப்பிட்டு போ...இப்படியல்லவோ இருக்கணும் நட்பு :)

      மும்தாஜ் அடுத்தவன் மனைவிதான் என்று சரித்திரம் சொல்லுதே :)

      அச்சு வெல்ல ஐடியா ,சூப்பர் ஐடியா :)

      வெளியூர்லே மழைப் பெய்யாதா :)

      Delete
  12. வாழ்த்து சொல்ல நல்ல வழி தான்! :)


    கருப்பு தாஜ்மஹால் வேற வேணுமா.... - நல்ல அப்பாவாகவும் இருக்க வேண்டும்.... சரி தான்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல வழிகாட்டிய நண்பனுக்கு சிலை வைக்க வேண்டியதுதான் :)

      அடடா ,அவர் ஆசையை நிறைவேற விடாமல் தடுத்து விட்டாரே ஔரங்கசிப்:)

      Delete
  13. நல்ல நண்பன், தாஜ்மஹால் தகவல்கள் அருமை! நல்ல ஐடியா! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தாஜ் மகால் ..மறைக்கப் பட்ட உண்மைகள் என்று புஸ்தகமே வரும் போலிருக்கே :)

      Delete