3 April 2015

சைட் அடிக்க இடம் பொருள் ஏவல் உண்டா :)

-----------------------------------------------------------------------

விவரமான பய பிள்ளையா இருக்கானே :)

               ''நொறுங்கத் தின்றால் நூறாண்டு வாழலாம்னு என்று நான் சொல்றதை நம்ப முடியலையா ,ஏண்டா ? ''

                       ''ஆமைக்கு பல் இல்லேன்னு சொன்னதும் நீங்கதான் ....அது மனுசனை விட அதிக ஆண்டுகள் உயிர் வாழுதே,ஸார் !''
''

சைட் அடிக்க இடம் பொருள் ஏவல் உண்டா ?

           ''கோவிலிலே சைட் அடிக்கிறது தப்புன்னு பட்டது, அதனாலே 
விட்டுட்டேன்!''
       '' எதை?''
         ''கோவிலுக்குப்  போவதை !''
துரை செல்வராஜூ3 April 2014 at 08:20
நல்ல காரியம்!..
எப்படியோ கோயில் தப்பிச்சது!.
Bagawanjee KA3 April 2014 at 08:43
கோவில் கர்ப்பக்கிரகத்தில் தேவநாதன் போன்ற பூசாரிகள் இருந்தால் எந்த பொண்ணும் தப்ப முடியாதே !
துரை செல்வராஜூ3 April 2014 at 11:10
நினைத்தேன்..
Bagawanjee KA3 April 2014 at 11:57
அப்ப எனக்கு நூறு வயசுன்னு சொல்றீங்களா ?
Jeevalingam Kasirajalingam5 April 2014 at 16:19
''கோவிலிலே சைட் அடிக்கிறது தப்புன்னா
கோவிலுக்கு போவதை விட்டிடலாமா!'' என
நீங்க சொன்னாலும் ஐயா...
கோவிலுக்கு போற வழியில
நம்மாளுகள் சைட் அடிப்பாங்களே!
Bagawanjee KA5 April 2014 at 19:10
தேரடி வீதியில் தேவதை வந்தா திருவிழான்னு பாட வேண்டியது தான் !

சினிமா /கோவில்னு சொன்னா 'நோ பிராப்ளம் '!

         ''ஒரு உண்மையைச் சொன்னதாலே குடும்பத்திலே குழப்பமா ,ஏன் ?''
         ''FM ரேடியோவிலே ,'நிம்மதி வேணும்னா எங்கே போவீங்க 'ன்னு கேட்டாங்க ,
ஆர்வக் கோளாறிலே 'சின்ன வீட்டுக்கு 'ன்னு சொல்லித் தொலைச்சிட்டேன் !

பாடல் அருமை !ஆனால் 'லாஜிக் '?

புருஷோத்தமன் புகழை ...
புல்லாங்குழல்கள் பாடினால் இனிமைதான் !
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்கள் பாடினால் நல்லாவா இருக்கும் ...?



25 comments:

  1. 01. இருந்தாலும் பயபுள்ளே இவ்வளவு வெவரமா இருக்க கூடாது கண்ணுபட போகுதய்யா
    02. நல்ல பாலிஸிதான்
    03. அவசரக்குடுக்கை.
    04. உதைக்கத்தான் செய்யுது.

    ReplyDelete
    Replies
    1. 1.என்னைக்கோ சொன்னதை இன்னைக்கும் ஞாபகம் வச்சிருக்கானே :)
      2.வாலிபர்கள் விரும்பும் பாலிஸி:)
      3.ஊரையும் பேரையும் சொல்லிட்டு இதை சொல்லலாமா :)
      4.மூங்கில்கள் கொடுத்த புல்லாங்குழல்களே என்று சொல்லி இருந்தால் சரியா இருக்குமோ :)

      Delete
  2. ''ஆமைக்கு பல் இல்லேன்னு சொன்னதும் நீங்கதான்..''
    ''கோவிலுக்குப் போவதை விட்டுட்டேன்!'' !''
    மூங்கில்கள் பாடினால் நல்லாவா இருக்கும் ...? எல்லாம் ஜோரு தான்
    ரசித்து சிரித்தேன்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஜோக்கு ஜோருதானா :)

      Delete
  3. வணக்கம்
    ஜீ..
    ஆமை பற்றி தகவல் அறிந்தேன்
    இந்தகால பசங்க இப்படியான இடங்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்..
    மற்றவைகளை இரசித்தேன் த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஆமைக்கு பல்லுதான் இல்லை ,தாடையே பல்லு மாதிரிதானே இருக்கு :)

      இந்த பசங்க காதல் ,தெய்வீக காதலாய் இருக்குமோ :)

      Delete
  4. 1) விவகாரமான கேள்வி கேக்குறானே...

    2) அடப்பாவி... அந்த நேரம் கூட வேஸ்ட் ஆகாமலா?

    3) அய்யய்யோ.... நுணல்!

    4) என்னை வெட்டித் துண்டாக்கிட்டீங்களேடா பாவி...ன்னு கேக்குமோ! :))))))

    ReplyDelete
    Replies
    1. 1.விவரமா கேட்டா விவகாரமான கேள்வியா :)
      2.வேஸ்ட் பண்ணிட்டானோ நல்ல நேரத்தை :)
      3.உண்மை ஒருநாள் வெளி வந்துதானே தீரும் :)
      4.துண்டாக்கியது மட்டுமில்லாம ,துளையும் போட்டு ..என் கஷ்டத்தில் ...அப்படியென்ன கிளுகிளுப்பு உங்களுக்கு வேண்டி இருக்குன்னு கூட கேட்கும் :)

      Delete
  5. Replies
    1. புல்லாங்குழல் மூங்கிலிலிருந்து பிறந்தாலும் ,இசை புல்லாங்குழலில் இருந்து தானே பிறக்கும் :)

      Delete
  6. கொஞ்சம் சிந்திக்க வேண்டிய ஜோக்தான். ஆமை எப்படி நொறுங்கத் திங்கும்..!
    த ம 5

    ReplyDelete
    Replies
    1. பல்லே இல்லாமல் பக்கோடாவுக்கு ஆசைப் படலாமா :)

      Delete
  7. அருமை..... அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நானும் உங்கள் 'அனைத்தையும் "ரசித்தேன் :)

      Delete
  8. ஆமைக்குப் பல்லு இல்ல...ஆனால் மெதுவா மூச்சு விடறதுனால அது நிறையகாலம் வாழுது நம்ம பசங்க வேக வேகமா பட படன்னு நெஞ்சு அடிக்க லப் டப் லப் டப் அதான் உள்ளருந்து ஏதோ ஒண்ணு இப்படி அடிச்சுக்குமாமே....ஹஹஹ் அப்படி இருந்தா என்ன பண்ணறது....

    இது ஏதோ ஒரு பழமொழிய நினைவு படுத்தல ஹஹ அஹ்டான் சின்ன வீடு...
    மூங்கில் பாடினாலும் நல்லாருக்கும் ஜி! மூங்கில் காட்டுக்குள்ள போனா அப்ப காத்து அடிச்சுதுன்னு வைங்க....நல்ல பிஜிஎம் எஃபெக்ட்....

    ReplyDelete
    Replies
    1. கையிலே லேப்டாப் இருந்தால் இதயம் கூட லப் டப்பைக் கூட்டிடுதே :)
      இயற்கை இசையை அனுபவித்ததில்லையே :)

      Delete
  9. சைட் அடிக்க இடம் பொருள் ஏவல் உண்டா :)--- இல்லையா...பின்ன...... கண்ட இடத்துல சைட் அடித்தா... நொங்க ...நோண்டி எடுத்துபுடுவாங்கே மச்சான் காரங்கே....!!!

    ReplyDelete
    Replies
    1. கண்ட இடம் என்றால் புரியலே ,பார்வை நீந்தும் இடமா ,கால்கள் நிற்கும் இடமா :)

      Delete
  10. கோவிலில்தான் பக்திப் பரவசத்துடன் காதலிக்க முடியும். கடவுளும் சாட்சி அல்லவா. புல்லாங்குழல்கொடுத்த மூங்கில்களே புரு ஷோத்தமன் புக ழ் பாடுங்களேன் இதிலெலாம் லாஜிக் பார்க்கக் கூடாது சாமி கண்ணை குத்தும்.

    ReplyDelete
    Replies
    1. அரங்கத்தில் வராதே அவன் சாட்சி :)
      பாரதப் போர் முடிக்க சங்கை எடுத்த சாமி ,கண்ணைக் குத்தினால் பரவாயில்லை ,சங்கூதாமல் இருந்தால் சரிதான் :)

      Delete
  11. பகவான்ஜி!
    எல்லா தளத்திற்கும் சென்று கண்டமேனிக்கு வாந்தி எடுக்கும் வாந்தி பேதி வருண் ஏன் உங்கள் தளத்திற்கு வருவதில்லை! சொல்லுங்க ஜி! அவர் வாராதபடி அப்படி என்ன மாயமந்திரம் போட்டீர்கள் ஜி!
    Reply

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே ஒருமுறை நீங்கள்தான் ...என் பதிவு அய்யா பழனிச் சாமி அவர்களின் கண்ணில் பட்டால் ,அது சம்பந்தமாய் ஒரு பதிவு போட்டு அவர் கழுத்தறுப்பார் என்று எழுதியதாய் ஞாபகம் .இப்போ வருணை வம்புக்கு இழுக்கிறீர்களே ,இதனால் என்ன லாபம் அனானியாரே :)

      Delete
  12. அனைத்தும் அருமை... சிரித்து மகிழ்ந்தேன்.த ம+1

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை,கிறுகிறுத்துப் போகவில்லையே :)

      Delete