5 April 2015

மனைவி கேள்விபட்டது உண்மையா :)

            ''போட்டுகிட்டிருந்த மூக்குத்தியை ஏன் கழற்றிட்டே ?''

            ''மனைவி மூக்குத்தி போட்டுகிட்டா புருஷன் ரொம்ப நாள் வாழ்வான்னு சொல்றாங்களே !''
   

மனைவி என்றதும் மனதில் தோன்றும் பிம்பம் ?

          ''தலைவரோட சம்சாரம் ஏன் பத்ரகாளி ஆயிட்டாங்க ?''

             ''வரப் போற புயலுக்கு உன் பெயரை வைக்க சிபாரிசு பண்ணி 
இருக்கேன்னு தலைவர் சொன்னாராம் !''

            Mythily kasthuri rengan5 April 2014 at 16:58
வீட்ல புயல் வீசும் போது தலைவர் புயல் எச்சரிக்கை கொடி ஏற்றுவாரோ?
Bagawanjee KA5 April 2014 at 18:58
வழக்கமா ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கைக் கொடி ஏற்றுவாங்க ,அந்த எண்ணிலும் இப்போ இரண்டரையை சேர்த்துக்க வேண்டி இருக்குமோ ?
பேரு வைக்குறதுக்கு முன்னாடியே பத்ரகாளியா.....ஆயிட்டா........பேரு வச்சப பிறகு என்னாவா ஆவாங்க.............???
அவங்க ஆகிறது இருக்கட்டும் ,புயல்லே சிக்கி சின்னாபின்னமாகப் போறாரே தலைவர் !

காதிலே பூ சுத்துறதுக்கும் அளவில்லையா ?

         ''எக்ஸ்ட்ரா சைஸ் பட்ஸ் கிடைக்கும்னு போட்டு இருக்கீங்களே ,எப்படி இருக்கும் ?''

         ''வலது காதில் நுழைத்து இடது காதையும் ,இடது காதில் நுழைத்து வலது காதையும் கிளீன்  பண்ணலாம் !''

அழுவோரைத் தேற்றுவாரில்லை !

குழந்தையின் முதல் அழுகையை கேட்க மட்டுமே 
அனைவரும் ஆவலோடு இருக்கிறார்கள் !




34 comments:

  1. 01. பாசக்கார மனைவியோ....
    02. தலைவர் என்ன பெயருனு சொல்லவே இல்லையே...
    03. ஸ்டீல் கம்பியா ?
    04. உண்மைதானே..

    ReplyDelete
    Replies
    1. 1.அதனால் தான் உண்மையைச் சொல்லி விட்டார்கள் :)
      2.அபிதகுஜாம்பாள் ஆகி இருக்குமோ :)
      3. இல்லே ,ராடு :)
      4.அப்புறம் ,எந்த அழுகையும் காதில் விழாது:)

      Delete
    2. //ன்ன பெயருனு சொல்லவே இல்லையே// கில்லர்ஜி - எந்த பேரை சொல்லியிருந்தாலும் அடி கன்பார்ம் ஆச்சே..

      Delete
    3. கில்லர் ஜி .....ஏழரை எண் புயல் எச்சரிக்கைக் கொடி ஏற்றி ,சின்னா பின்னமாகப் போகும் தலைவரைப் பற்றி கவலைப் படாமல் ,பெயருக்கு என்ன கவலை வேண்டி கிடக்கு :)
      ஆவிஜி ,'வெள்ளைத் தாள் to வெள்ளித்திரை 'பரீசிலனையில் பிசி ஆயிட்டீங்க போலிருக்கே :)

      Delete
  2. ஹா... ஹா... இவளல்லவோ துணைவி...?

    ReplyDelete
    Replies
    1. நம்பிக்கை, இப்படியும் எதிர்வினையை செய்யுமா :)

      Delete
  3. Replies
    1. மூக்குத்தி நம்பிக்கை உண்மையா ,நண்பரே :)

      Delete
  4. Replies
    1. ஆனால் ,தீர்க்கசுமங்கலியாய் போக இஷ்டமில்லைப் போலிருக்கே :)

      Delete
  5. Replies
    1. இது போதும் ,அப்படித்தானே :)

      Delete
  6. அனைத்தும் அருமை. குழந்தை அழுகை நல்ல கருத்தான நகைச்சுவை.

    ReplyDelete
    Replies
    1. அந்த ஒரு அழுகையை மட்டும்தானே ரசிக்க ஆளிருக்கு :)

      Delete
  7. அனைத்தையும் ரசித்தாலும் முதல் ஜோக்கை ஒப்புக் கொள்ள முடியவில்லை.

    :)))))))))

    ReplyDelete
    Replies
    1. #இடதுபுறத்தில் மூக்குத்தி அணிந்தால், கணவனின் ஆயுள் அதிகரிக்குமாம்.#
      இந்த செய்தியை http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=13776&ncat=12 லிங்கில் படித்தேன் ,நம்பிக்கை இப்படியும் இருக்கிறதே நான் என்ன செய்றது ,ஸ்ரீ ராம் ஜி :)

      Delete
  8. அனைத்தையும் ரசித்தாலும் முதல் ஜோக்கை ஒப்புக் கொள்ள முடியவில்லை.

    :)))))))))

    ReplyDelete
    Replies
    1. புருஷன் சொல்லையே கேட்காத அந்த பெண்மணியிடம் நானும் 'இப்படி பண்றீங்களேம்மா 'ன்னு சொல்லிப் பார்த்துட்டேன் :)

      Delete
  9. இப்படி பாசக்கார மனைவி அமைவதெல்லாம் யாரு கொடுத்த வரமோ.....????

    ReplyDelete
    Replies
    1. வரம் இறைவன் கொடுத்தது என்றால் ,சாபத்தையும் அவர்தானே கொடுத்திருக்கணும் :)

      Delete
  10. மூக்குத்தி கணவன் நெருங்க இடைஞ்சலாய் இருக்கும் என்று சொல்லவில்லையா. ?

    ReplyDelete
    Replies
    1. அந்த காலத்திலேயே அது இடைஞ்சலாய் இல்லை ,இப்போ கணவன் இருப்பதே இடைஞ்சலாய் ஆயிடுச்சே :)

      Delete
  11. Replies
    1. அதுதான் ,கஷ்டப் படாமல் புருஷன் சீக்கிரம் போய் சேரட்டும்னு நினைக்குதோ :)

      Delete
  12. முதல் ஜோக்கில் நல்ல மனைவியையும் இரண்டாம் ஜோக்கில் நல்ல கணவனையும் கண்டேன்.
    த ம 10

    ReplyDelete
    Replies
    1. ஆனால் ஜோடி மாறிப் போச்சே ....அனுபவிச்சுதான் ஆகணும்னா யாரால் மாற்றமுடியும் :)

      Delete
  13. 1) புருஷனை முக்கி எடுக்கும் போது மூக்குத்தி முகம் சுழிக்காது இருக்கவே!
    2) ஒன்றை இரண்டாக்குவதுபோல், கருப்பு துண்டை, மஞ்சல் துண்டாக்கும் மஞ்சள் மகிமை!
    3) புயல் நிவாரணம் கேட்டு அரசுக்கு கடிதம் எழுதுவார்?

    4) காதுல எறும்பு பூராட்டி நீதான் யானை என்பீரா?
    எங்கே இப்போது சொல்லு பார்ப்போம்!

    த ம + 1

    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. 1.ஆஹா ,இதுக்குத்தானா :)
      2.ரெண்டாவது பெண்டாட்டி வேறையா ,விஷயம் தெரிஞ்சா அங்கேயும் புயல் மையம்' கொல்'லுமே:)
      3. செயற்கையாய் வரவழைத்துக் கொண்ட துன்பத்திற்கு நிவாரணம் கிடையாதே :)
      4.சிறிய எறும்பு காதில் புகுந்து யானையைப் பாடாய் படுத்தும் என்பது பழமொழி,உண்மையா :)

      Delete
  14. வணக்கம்
    ஜி
    எல்லாவற்றையும் இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம11
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரசனைக்கு நன்றி ,ரூபன் ஜி :)

      Delete
  15. அன்புள்ள பகவான் ஜீ,

    மூக்குத்தி பூ மேல காத்து... ஒக்காந்து பேசுதய்யா.....ங்கிறது இது தானோ? காத்துன்னா... கருப்புன்னு இப்பவாவது சொன்னீங்களே...1


    புயலுக்குப் பிறகு ஓர் அமைதி வருமுன்னு எதிர்பார்க்கிறாரோ தலைவர்?


    வலது கண்ணத்தில் அறைந்தால் இடது கண்ணத்தையும் காட்டுன்னு தப்பா சொல்லிட்டாங்க... ‘காதில்’ என்று மாத்திக்கணுமோ?


    குழந்தைக்கு தெரியாதா...என்ன? அழுத பிள்ளைக்குதான் பாழாய்ப் போனவர்கள் பால் கொடுப்பார்கள் என்று...!

    நன்றி.
    த.ம. 12.

    ReplyDelete
    Replies
    1. இப்படி வினோதமான நம்பிக்கை இருப்பதை நினைத்தால் ...அந்த பாடலைத்தான் பாடத் தோன்றுகிறது :)

      இந்த புயலுக்குப் பின் அமைதி வருமான்னு தெரியலை :)

      கண்ணம் என்பதை வேண்டுமானால் கன்னம்னு மாற்றிக்கலாம் :)

      ஆனால் அந்தக் குழந்தைக்குத் தெரியுமா ,குடிப்பது புட்டிப் பால் என்று :)

      Delete
  16. ஜி அந்தத் தலைவர் அவங்க பேர் வைச்சுருந்தா வீட்டுல சுனாமி எச்சரிக்கை வைக்கப்படும் நு தெரியாதோ அவருக்கு?

    குழந்தையின் முதல் அழுகை மட்டும்தான்பலரும் கேட்க நினைப்பது அப்புறம் எல்லாம் "தே சனியன்" தான்...பாவம் குழந்தைகள்!

    ReplyDelete
    Replies
    1. யானைகள் நலத் திட்டத்திற்கு வைத்து இருந்தாலும் மனைவிக்கு மதம் பிடித்திருக்குமே :)

      பச்சைப் பிள்ளைங்க அழுகைக்கே இந்த மரியாதை என்றால் மற்றவர்கள் அழுதால் .....:)

      Delete