7 April 2015

நடிகை க்கு பிடிக்காத இயக்குனரோட ' பெர்சனல் டச் ' !

------------------------------------------------------------------------

   அதெல்லாம் அந்த காலம் :)         
             ''சர்க்கரை நோயாளிகள்  பெருகிட்டாங்கன்னு  விருந்து பரிமாறுகிறவர் சொல்வதை  நம்பத்தான் வேண்டியிருக்கா ,ஏன் ?''
         ''பக்கத்து இலைக்கு பாயாசம் ஊற்று,அப்படியே எனக்கும் ஒரு கரண்டி ஊற்றுன்னு  இப்போ யாருமே சொல்றதில்லையாம் !''

மருமகளை இந்த நிலையிலும் நம்பலைன்னா ....?

         ''உன்  மாமியாருக்கு இரக்கமே இல்லைன்னு  ஏண்டி சொல்றே ?''
        ''நான் காக்கா வலிப்புலே துடிக்கிறப்போ கூட ,அவங்க இடுப்புலே 
இருந்த இரும்பு சாவியை என் கையிலே தரவே இல்லையே !''
காக்கா வலிப்புன்னாலே, இடுப்பு சாவியைத்தான் கொடுக்கணுமா என்னா:??????
Bagawanjee KA8 April 2014 at 07:25
நட்புக்கு இலக்கணம் சொல்ல வந்த வள்ளுவர் கூட இடுப்பு உடையைத்தான் உதாரணமா சொல்லுகிறார் ,அது உறவுக்கு பொருந்தாதா ?இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலையக் கூடாதுங்கிற நல்ல எண்ணம்தான் !

நடிகைக்கு பிடிக்காத இயக்குனரோட 'பெர்சனல் டச் ' !

              ''அந்த இயக்குனர் படங்களில் 'பெர்சனல் டச் ' சீன்கள் சூப்பராய் இருக்கும் ,அவர் படத்தில் சான்ஸ் கிடைத்தும்  ஏன்  விலகிட்டீங்க ?''
          ''பெர்சனல் டச்சை  அவர் படத்தோட நிறுத்திக்கிற மாதிரி தெரியலே ..அதான் !''

நதிமூலம் ,ரிஷிமூலம் மட்டுமா பார்க்கக் கூடாது ?

தோழிகளிடம் ...
தோழிகள் கொடுத்த 'டெட்டிபியர் 'கள் !
தோழிகளுக்கு ...
கைகழுவிய 'பாய் ப்ரண்ட்ஸ் 'கள் கொடுத்தது !

24 comments:

  1. 01. அதான் மெடிக்கல் காலேஜூல சீட் கிடைக்க மாட்டுதோ...
    02. சாவியை கொடுக்க மனசில்லாத மாமியார் அடுப்படியிலே அருவாள்மனையாவது எடுத்துக்கொடுத்திருக்கலாம்.
    03. கேரமா இல்லாத ஸூட்டிங்கா ?
    04. பாய்ண்ட் சரிதான்.

    ReplyDelete
    Replies
    1. 1.இன்னும் கொஞ்ச நாளில் சர்க்கரை நோய் சிகிச்சை மட்டுக்கும் கூட மெடிக்கல் காலேஜ் வரக்கூடும் :)
      2.அதுவும் கத்திப் பாகம் கையில் பிடிக்கிற மாதிரிதானே :)
      3.கேரவானில் ஏறி டச் பண்றதுதான் நடிகைக்குப் பிடிக்கலே :)
      4.கைவிடப் பொம்மைகள் தானே :)

      Delete
  2. 1) புதிய முறையில் கண்டுபிடிப்பு!

    2) அடப்பாவி... இதுவும் ஒரு எதிர்பார்ப்பா? கண்டுபிடிப்பா!

    3) நல்ல இயக்குனர்!

    4) ம்ம்ம்.....

    ReplyDelete
    Replies
    1. 1.சர்க்கரைப் பயன்பாடே கூட தேசிய அளவில் குறைந்து இருக்கலாம் :)
      2.சாவியைப் பிடுங்க வழி:)
      3.ரசிகர்கள் மனதைக்கொல்லி அடிக்கத் தெரிந்தவருக்கு ,நடிகை மனதை ......:)
      4.கைவிடப் பட்ட காதலன் முகத்தை 'டெடிபியரில் ' பார்த்துக் கொண்டே இருக்க யாருக்கு ஆசை வரும் :)

      Delete
  3. இயக்குனர்..... ம்.... இப்படியும் சிலர்.

    அனைத்தையும் ரசித்தேன்.

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. ஆனால் இயக்குனரின் 'டச்'சை ரசிக்க முடியவில்லைதானே :)

      Delete
  4. Replies
    1. ஆனால் ஓஹோ இல்லை அப்படித்தானே :)

      Delete
  5. பெர்சனல் டச் நன்றாக டச் செய்தது.

    ReplyDelete
    Replies
    1. பிரியமானவர்களின் டச் பிடிக்கத்தானே செய்யும் :)

      Delete
  6. சர்க்கரை வள்ளிக் கிழங்கு... அதுலையும் சர்க்கரை இருக்குமோ?... சமஞ்சது...இல்ல... இல்ல... சமச்சது எப்படி?

    அவுங்கதான் எச்சிக் கையிலகூட காக்கா ஓட்ட மாட்டாங்கன்னு தெரியாதா?...

    பெர்சனாலிட்டி சூப்பர்ன்னு எ இதயத்தை டச் பண்ணப் பார்த்தாரு... என்னோடு இதயம்தான் திருடு போனது அவருக்கு தெரியாதுல்ல... அவரையும் ஏமாத்த எ மனசு இடந்தரல...!

    ரிஷிமூலம் மூலத்த... கண்டுபிடிச்சு சொல்லிட்டீங்க... இதன்மூலமா மருத்துவரப் பார்க்கப் போறேன்.... நதிமூலமா இல்ல..!

    நன்றி.
    த.ம. 5.

    ReplyDelete
    Replies
    1. பெயரிலேயே இருக்கிறதே சர்க்கரை ....கடிச்சாதான் தெரியுமா :)

      முதல்லேயே காக்காவுக்கு வைக்கிறவங்கஎதுக்கு எச்சில் கையாலே விரட்டணும்:)

      மகப்பேறு மருத்துவரைப் பார்க்க வேண்டிய நிலை வந்ததால்தானே பொம்மைகள் கைமாறிப் போச்சு :)

      Delete
  7. செய்து மீதமிருந்த பாயச அளவு இன்னும் சரியாகக் காட்டிக் கொடுத்திருக்குமோ சர்க்கரை நோயாளிகளின் இருப்பை.காக்கா வலிப்பு வந்தால் சாவிக் கொத்துக்கு நிற்குமா தோழிகள் தரும் டெட்டி பேரில் இவ்வளவு விஷயமா.?

    ReplyDelete
    Replies
    1. பத்து வருசத்துக்கு முன்னால் செய்த பாயசத்தின் அளவில் பாதி கூட இப்போ தேவைப் படவில்லையாமே :)
      நாடகம் போடும் இந்த மருமகளுக்கு நிற்கும் :)
      டெடி பேருக்கு பேசும் சக்தி இருந்தால் இன்னும் நிறைய கதைகளைக் கூறும் :)

      Delete
  8. அப்போ யாருமே பாயாசம் சாப்பிடறதில்லையா ஜி?!!!!

    இயக்குனர் டச் பெர்சனல் டச் செம டச் ....ஜி

    டெட்டி பியர் டெல்ஸ் சோமச் ஆங்க்!!!!! ஹஹஹஹ்

    ReplyDelete
    Replies
    1. பக்கத்துக்கு இலைக்கு பாயாசம் ஊற்றச் சொன்னதெல்லாம் அந்த காலம் ,தன் இலைக்கே வேண்டாம் என்பதே இந்த காலம் :)

      இருந்தல்லும் பிடிக்கலையே :)

      அதான் சொன்னேனே ,டெடி பியருக்கு வாயிருந்தால் இன்னும் so much கதைகள் கூறுமென்று :)

      Delete
  9. மருமகள் நடிக்கிறான்னு, மாமியார் நிணச்சு இருக்கலாம்...மில்லிங்களா.......

    ReplyDelete
    Replies
    1. கூரான கத்தியைக் கொடுத்துப் பாருங்கன்னு மாமியாரிடம் சொல்வீங்க போலிருக்கே :)

      Delete
  10. பக்கத்து இலைக்குப் பாயாசம் ஊற்றென்று கேட்காட்டி
    சர்க்கரை நோயாளிகள் பெருகிட்டாங்களா?
    உருளைக்கிழங்குப் பிரட்டல் கேட்பாங்களே!

    ReplyDelete
    Replies
    1. எப்படிக் கேட்பாங்க ,சர்க்கரை நோய் இருந்தா ,மண்ணுக்கடியில் விளையுற கிழங்குகளையும் சாப்பிடக் கூடாதே :)

      Delete
  11. 1)பாயாசம் ஊத்துன்னு சொல்றதிலையும் ஆயாசமா..:))
    2) மாமியார் காக்கா வலிப்புங்கிறத யாரும் காக்கா(த) வலிப்புன்னு புரிஞ்சுகிட்டாங்களோ?
    3) இயக்குநருக்கு வடை போச்சே.... எந்த வடைன்னு கேக்கக் கூடாது அதை முதல்ல இருந்த காக்கா சாப்பிட்டுத்தான் அந்த வலிப்பே வந்திச்சு.
    4) டெட்டி பியர் கொடுத்த பாய்பிரண்ட் எந்த கடையில பியர் குடிச்சு டெட்டாயி கிடக்கிறானோ.. யார் கண்டா?:))

    ReplyDelete
    Replies
    1. 1.அனாவசியமா சாப்பிட்டு அவஸ்தைப் பட முடியாதே :)
      2.அதனால்தான் மற்றவர்களையும் எதையும் கொடுக்க விட மாட்டேன் என்கிறாரோ:)
      3.எந்த வடை என்கிற சந்தேகம் இங்கே யாருக்குமே வராதே :)
      4.இவளைக் காதலிசதுக்கு இந்த கதிதானே கிடைக்கும் :)

      Delete
  12. வணக்கம்
    ஜி
    அனைத்தும் அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம10


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்--

    ReplyDelete
    Replies
    1. பக்கத்து இலைக்கு பாயசம் ஊற்றச் சொல்லி நீங்க கேட்டு வாங்கி சாப்பிட்டதுண்டா,ரூபன் ஜி :)

      Delete