27 April 2015

எது நிம்மதி காதலா ,கல்யாணமா :)

மனைவி கதவை திறக்கணும்னு கண்டக்டரின் ஐடியாவோ ?

         ''காலிங் பெல் பக்கத்திலே ஒரு விசிலை தொங்க விட்டு இருக்கீங்களே ,ஏன் ?''        

''கரண்ட் கட் நேரத்தில் இந்த விசிலை ஊதி அழைக்கவும்னு எழுதி இருக்கேனே ,படிக்கலையா ?''

இந்த காதல் தாலியில் முடியாது என்பதால் வந்த கனவோ ?

           ''டார்லிங் ,நேற்று ஒரு கெட்ட கனவு ...நீயும் நானும் ரயில் 
தண்டவாளத்தில் தலை வைத்து படுத்திருக்கிறோம் !''
            ''அய்யய்யோ ,அப்புறம் ?''
          
 ''நீயும்தானே இருந்தே ,அப்புறம் நடந்தது உனக்குத்தான் தெரியுமே !''

வாலாட்ட யோசிக்கும் நாய்கள் ?
          ''டைப்பிஸ்ட் சாந்திகிட்டே யாரும் வாலாட்ட 

மாட்டேங்கிறார்களே ,ஏன் ?''


         ''அவங்க டைப் 'அடிக்கிற ' வேகத்தைப் பார்த்தே 

அரண்டு போயிருக்காங்களே !''

எது நிம்மதி காதலா ,கல்யாணமா ?

காதலே நிம்மதி என்று ...

திருமணம் முடிந்த சில நாளிலேயே புரிந்துவிடுகிறது !

திண்டுக்கல் தனபாலன்27 April 2014 at 08:07
தாமதமாக புரிந்து பயனில்லை... ஹிஹி..
அதுக்காக காலம் பூரா காதலித்துக் கொண்டே இருக்க முடியுமா ?
  விமலன்27 April 2014 at 11:47
காதலும் நிம்மதிதான்/
கல்யாணமும் நிம்மதிதான்னு நேரடியா சொல்ல முடியலையா ,விமலன் ஜி ?

29 comments:

  1. 1. நல்ல ஐடியாதான்.

    2. அடப்பாவி... என்ன உணர்வுபூர்வமான கனவு!

    3. எந்த அடியா இருந்தா என்ன, இல்லை?

    4. மற்றவருடைய பலவீனங்களைப் புரிந்து கொள்ளாமல் புற அழகை மட்டும் பார்த்துக் காதலிப்பதால் வரும் வினை.

    ReplyDelete
    Replies
    1. 1.வீடு மெயின் ரோட்டில் இருந்தால் ,விசில் அடித்ததும் பஸ்ஸோ,மினி பஸ்ஸோகூட நிற்ககூடிய வாய்ப்பிருக்கே :)
      2.தூக்கத்தில் உள்ள உணர்வு ,விழித்திருக்கும் போது இல்லையே:)
      3.நொடிக்கு நாலு அடின்னா பார்த்துக்குங்க :)
      4.காதலில் புறம் தானே பிரதானமாய் இருக்கிறது :)

      Delete
  2. எது நிம்மதி காதலா, கல்யாணமா?
    என்றால்
    காதல் - பொழுதுபோக்கு
    கல்யாணம் - வயிறு வளர்ப்பு
    அப்படியாயின்
    காதலே நிம்மதி
    ஆனால்
    பொழுதுபோக்கினால் சாவு
    வயிறு வளர்த்தால் வாழ்வு

    ReplyDelete
    Replies
    1. புரிந்து விட்டது ,காதலிக்கும் போது காதலியின் வயிறு வளரக்கூடாது ,கல்யாணமான பின் ,சும்மா பொழுது போக்கக் கூடாது ,அப்படித்தானே :)

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  3. Replies
    1. விசில் சத்தம் உங்களுக்கு கேட்டதா :)

      Delete
  4. வணக்கம்
    ஜி
    விசில் பற்றி கேட்டவர் படிப்பு குறைவு போல..
    கனவு கேட்டது என்றால் நல்லது நடக்கும் என்பார்கள். மற்றவைகளை இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லோருமே படிப்பறிவு இல்லாதவர்கள் தானா :)
      அப்படி என்றால் தண்டவாளத்தில் ரயிலே வந்திருக்காதோ:)

      Delete
  5. 1. விசில் சத்தம் - தூள் பறக்குமோ?..
    2. ரயில் வந்ததா.. வரவில்லையா!?..
    3. டைப் ரைட்டர் உருப்படியா இருக்குதா!..
    4. ஆசிரமத்தில (!?) நிம்மதி கிடைக்காதா!...

    ReplyDelete
    Replies
    1. 1.சென்னை சூப்பர் கிங்குக்கு போடுற விசில் சத்தத்தை நீங்கள் கேட்டு இருப்பீர்களே ,அதேதான் :)
      2.ரூபன் ஜி க்கு கூறியுள்ள மறு மொழியைப் பாருங்க :)
      3.அது அந்த கால டைப் ரைட்டர் செம அடி வாங்குது :)
      4.குருவுக்கு கிடைத்தாலும் ,சிஷ்யன் சிரமம் தருவதாக தெரிகிறது :)

      Delete
  6. அதுவும்நல்ல ஐடியாதானே. நல்ல சஸ்பென்ஸ் கனவு. நிம்மதி என்பது எதுவரை காதல் கல்யாணத்தில் முடியும் வரை

    ReplyDelete
    Replies
    1. சின்னப் பசங்க விசிலடிச்சு தொந்தரவு தருவார்களோ :)
      இதிலுமா சஸ்பென்ஸ் :)
      கல்யாணம் முடிந்த பின் ௦ தானா :)

      Delete
  7. எது நிம்மதி காதலா ,கல்யாணமா ?-ரெண்டிலுமே இல்லையென்று ஒரு அனுபவஸ்தர் சொல்லக்கேள்வி......

    ReplyDelete
    Replies
    1. அது கேள்வி ,உங்க பதில் என்ன :)

      Delete
  8. நிலவை நாம் தொடர்ந்தால் காதல்
    நிலவு நம்மை தொடர்ந்தால் கல்யாணம்
    "அமாவாசை முகம்"
    கணவர்களிடமே அதிகம் பகவான் ஜி!
    த ம 7( நிலவு தமிழ் மணத்தை சுற்றி சுகம் காணட்டும்)
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. கருத்திலும் கவிதை ,அருமை !
      அமாவாசை முகம் என்றால் காணாமல் போவதுதானே ,இதுக்கு என்ன காரணம் ?இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளி விடுவதை ரசிக்க முடியாததாலா :)

      Delete
  9. காதல் நிம்மதியே. அது கல்யாணத்தின் பின்னும் தொடர்ந்தால் நல்லதே....இல்லை என்றால் எங்கே நிம்மதி எங்கே நிம்மதி என்று பாட வேண்டி வரும்.....

    ஜி விசில் சத்தம் இப்பல்லாம் நிறைய அர்த்தங்கள் உண்டு...குப்பை அள்ள வர்றவங்க கூட விசில் தான் ஊதறாங்க.....

    ReplyDelete
    Replies
    1. எங்கே நிம்மதி ,எங்கே நிம்மதி என்று தேடிப் பார்த்தேன் ,அது எங்கேயும் இல்லை என்கிற முடிவுக்கு வராமல் இருந்தால் சரிதான் :)

      பாம்பு சீறுகிறமாதிரி ஒலிக்கிற விசிலைத் தேடி வாங்கி மாட்ட வேண்டியதுதான் :)

      Delete
  10. ஹாஹாஹா! இந்த ஐடியாவை எல்லோரும் பின்பற்றலாம் போலிருக்கே! ரசிக்க வைத்த நகைச்சுவை பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பின்பற்றலாம்தான் ,நடு ராத்திரியில் அடிக்கும் விசில் சத்தத்தால் ,பக்கத்து வீடுகளைப் பாதிக்காமல் இருக்கணுமே :)

      Delete
  11. உங்கள் கற்பனைக்கு ஏது எல்லை?
    த.ம.9

    ReplyDelete
    Replies
    1. ஒரு சில நாளில்தான் என் தள பார்வையாளர் எண்ணிக்கை ஆயிரத்தைத் தொடுகிறது ,அதுதினசரி நிரந்தரம் ஆகும்வரை , எல்லை இல்லாமல் என் தொல்லை தொடரும் :)

      Delete
  12. உங்கள் கற்பனைக்கு ஏது எல்லை?
    த.ம.9

    ReplyDelete
    Replies
    1. ரொம்பத்தான் அறுக்கிறேனா :)

      Delete
  13. 01. கரண்ட் செலவும் மிச்சம்தான்.
    02. அப்படீனாக்கா ? 2 பேரும் இன்னும், சாகலையா ?
    03. சாந்திகிட்டே வாலாட்டினா ? சந்தி சிரிச்சுடும்னு தெரிஞ்சவங்கதான்.
    04. காதலிச்சவன் எவன்தான் நிம்மதியோட திரிஞ்சான் முக்கால்வாசிப்பேர் சேது மா3தான் இருக்கானுங்க...

    ReplyDelete
    Replies
    1. 1.உள்ளே இருப்பவர்கள் ,விசில் ஊதுபவர் வாய் வலிக்கும் வரை திறக்காமல் போனால் என்ன செய்வது :)
      2.அவர்கள் சாவதில் உங்களுக்கு என்ன ,அப்படியொரு சந்தோசம் :)
      3.முட்டு சந்திலே முட்டியும் போட வேண்டி வருமே :)
      4.இதுக்காக ,காதலி மேல் 4ஜரி கேஸா போட முடியும் :)

      Delete
  14. கல்யாணத்துக்கு முன்னர் காதலும், காதல் கல்யாணத்தில் முடிவதும் தான் நிம்மதி....

    குட்டி குட்டி ஜோக்ஸ் மிக அருமையாக இருக்குப்பா...

    ReplyDelete
    Replies
    1. கல்யாணத்திற்கு பிறகும் தொடர்ந்தால் அது காதல் இல்லையா :)இல்லை என்பதால்தான் நிம்மதி இல்லையா :)

      Delete