14 April 2015

ருசியான ரசத்திற்கு ஏங்கும் USA மாப்பிள்ளை :)

--------------------------------------------------

 ரதி ஆண்டு இல்லையே ஏன்:)         

          ''இன்னைக்கென்னடி விசேசம் ?  மல்லிகைப் பூ விற்பனை அமோகமா இருக்கே ?''

          ''இருக்காதா பின்னே ,பிறந்திருக்கிறது 'மன்மத 'வருசமாச்சே !''
 

குளிக்கிறதை யாராவது பார்க்க நினைப்பாங்களா ?

           ''உனக்கேண்டீ , இந்த விபரீத ஆசை ?முத்து குளிக்கிறதைப்  
பார்க்க நினைக்கிறே  ?''
          ''அட நீ வேற ,கடல்லே முத்து எடுக்கிறதைப் பார்க்கணும்னு  
சொன்னா ,தப்பா  அர்த்தம் எடுத்துக்கிறீயே !'' 
            Mythily kasthuri rengan14 April 2014 at 11:22
பாவம் கல்யாணம் ஆனவுடனே சில பயபுள்ளைக இப்படி தான் மந்திரிச்சு 
விட்டமாதிரி ஆய்டுதுக :((
          Bagawanjee KA14 April 2014 at 11:31
ஜலதோஷம் வராத அளவிற்கு ஜலக்கிரீடை செய்துக்கச் சொல்லலாம் ,ஆனால் தண்ணிக்கு எங்கே போறதுன்னுதான் தெரியலே !
அம்பாளடியாள் வலைத்தளம்14 April 2014 at 11:16
அது அது :)
Bagawanjee KA14 April 2014 at 11:21
      அது அதுவாய் இருக்கும் வரை எதுவும் நமக்கு பிரச்சினை இல்லை !

குட்டி பத்மினி தெரியும் ,குட்டி யானை த்ரிசாவா ?

            ''ஜூவுக்குப் போன அந்த நடிகை ,குட்டி யானைக்கு 
தன்னோட பெயரை வைச்சது தப்பா போச்சா ,ஏன் ?''
        '' கிசுகிசுவிலே குட்டியானை நடிகைன்னு எழுத ஆரம்பிச்சுட்டாங்களே !''

ருசியான ரசத்திற்கு ஏங்கும் USA மாப்பிள்ளை !

மணப்பெண் தேவை !

முறத்தால் புலியை விரட்டத் தெரியாவிட்டாலும் 
ரசத்திற்கு புளியைக் கரைக்கத் தெரிந்தாலே போதும் !

26 comments:

  1. அன்பு நண்பரே!
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. கவிதையில் வாழ்த்து சொன்ன தங்களுக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

      Delete
  2. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் !

      Delete
  3. மல்லிப்பூ விற்பனை மட்டும்தான் அமோகமாஜி!

    ஹா...ஹா...ஹா.. அப்புறம் முத்து கடலில் எதை எடுத்தான்னு கேட்டாலும் கேட்பாள் அந்தத் தோழி!

    அடப்பாவமே.... பொருத்தமில்லாம இருக்கே!

    பாவம் நாக்கு செத்துப்போன மனுஷன் போலேருக்கு!

    தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. கரும்பு விற்பனையும்தான் ,ஆனால் ,கரும்பை வில்லாய் வளைக்க முடியலே :)

      சிப்பி எடுக்கவா முத்துக் குளிப்பான் :)

      அதானே ,மானுக்கு பெயர் சூட்டிய குட்டி மான் என்றாலாவது பொருத்தமாய் இருக்குமே :)

      செத்து போன நாக்குக்கு உயிர் தருவாளா ,வரப்போகிறவள் :)

      தங்களுக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் !

      Delete
  4. தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் !

      Delete
  5. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜி...

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள் ஜி !

      Delete
  6. புளி ரசத்தை குடித்தாவது புளியை அடித்து .கரைத்து ரசம் வைத்து சாப்பிட்ட வீர பரம்பரைன்னு அப்படியாவது சொல்லிக்கில்லாம் அல்லவா...தலைவரே..

    ReplyDelete
    Replies
    1. சொல்லும் போது புலியா ,புளியா என்று தெரியவா போகிறது ,தாராளமா வீரப் பரம்பரைன்னு சொல்லிக்கலாம் :)

      Delete
  7. 1) அப்ப கரும்பு வியாபாரமும் களைகட்டுமின்னு சொல்லுங்க...!
    2)அந்தத் தோழி, முத்து, எதை எடுக்கிறத பார்க்க நினைக்கிறேன்னு திரும்பக் கேக்கலையே அது வரை நல்லதுதான் :))
    3) இதுக்கு அந்த யானையே நல்லாருக்கு அதுகிட்ட கால்ஷீட் கேட்டுப் போயிடப் போறாங்க :))
    4) புலி பசித்தால் புல்லையும் புல்லாய்த் தின்னும் காலமாயிற்றே இது....:))

    த ம 7 தமிழ்மணத்தில் நுழைய

    ReplyDelete
    Replies
    1. 1.மீன் கொடியையும் பட்டியல்லே சேர்த்துக்கலாம் :)
      2.என்னுயிர் தோழி கேளடி சேதின்னு தலைவி சொல்லாததும் சரிதான் :)
      3.அந்த யானைக்கு செம்மரக் கட்டைன்னா ரொம்ப இஷ்டமாச்சே :)
      4.அந்த புலிதான் ,இந்த புளியை தேடுது :)
      த ம வாசகர் பரிந்துரையில் நுழைத்ததற்கு நன்றி :)

      Delete
  8. வணக்கம்
    இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்த.ம9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்:)

      Delete
  9. வார்த்தை விளையாட்டில் நகைச் சுவை ரசித்தேன் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. முத்து குளிக்கிறது பார்க்க ரசிக்கும்படி இருக்காதே :)

      Delete
  10. மன்மத ராசா...மன்மத ராசா... கன்னி மனச கிள்ளாதே... மல்லிகைப் பூப் போன்றது...!

    முத்துக்குளிக்க வாரீகளா...? முத்தம் கொடுக்க வாரீகளா...?

    குட்டி தப்பி வந்தா...? தப்பி வந்தப்ப மதம் பிடிச்சிருந்திச்சின்னா? ஒரேதா பிளிர்ரதப் பாத்தா சந்தேகமாத்தான் இருக்கு...!

    இப்பவே புளியக் கரைக்க ஆரம்பிடிச்சிடுச்சு... எப்ப U.S.A. கூட்டிட்டுப் போவாங்க...!

    நன்றி.
    த.ம. 10.

    ReplyDelete
    Replies
    1. மனசைக் கிள்ளாதேன்னா என்ன அர்த்தம் :)

      முத்துக் குளிக்கையில் மாஸ்க் போட்டுக்கிட்டா ,எப்படி முத்தம் கொடுக்கிறது :)

      கோவில் யானைக்கே மதம் பிடிக்கும் :)

      புளிக்கரைச்சல் பாக்கெட் வாங்கிட்டு போக வேண்டியதுதான் :)

      Delete
  11. 01. எப்படியோ.... பூக்கடைக்காரவுங்களாவது சந்தோஷமாக வாழட்டும்.
    02. யாரு ? குமரிமுத்தா ?
    03. வெறும் வாய்க்கு அவ(ள்)ல் கிடைச்சுருச்சோ ?
    04. இப்படியெல்லாம் எழுதி அடி வயித்துல புளியைக்கரைக்கியளே ஜி

    இனிய தமிழ் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. 1.பூக்கடைக் காரங்க சந்தோசம் ,பூவை வாங்குகிறவங்களுக்கு இல்லாமல் போகுமா :)
      2.குமரி முத்துஇடி இடிக்கிறமாதிரி சிரிப்பார் ,முத்துக் குளிப்பாரா :)
      3.சினி ஃபீல்ட்டில் அவலுக்கா பஞ்சம் :)
      4.புலியை விரட்டிய தாய்க்குலத்தில் ,இப்போ புளியை கரைக்கக்கூட ஆள் இல்லாமல் போகும் போலிருக்கே :)
      தங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !

      Delete
  12. ரதி ஆண்டு ஏனில்லை..... நல்ல கேள்வி!

    இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்......

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. அறுபது ஆண்டுகளில் ஏனில்லை ,இதிலும் ஆணாதிக்கமா :)

      தங்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் !

      Delete
  13. மன்மத ஆண்டில் மன்மத ராசாக்கள் பெருகாமல் இருந்தால் சரி! ஏற்கனவே பேப்பர்ல இவங்கதான் ஆட்சி...ரதி ஆண்டா ???!!! ஜி...அப்புறம் லோகம் என்னத்துக்காறது?!!!

    ரசம்....ஹஹஹ்ஹஹ் ரசமாக இருந்தது ஜி!!!



    ReplyDelete
    Replies
    1. மன்மத ராஜாக்களுக்கு எப்பவும் அவங்க ஆண்டு தானே :)

      ஆனாலும் ,அந்த மனுஷன் .. ரசத்துக்கு இப்படி ஏங்கக்கூடாது தானே :)

      Delete