4 April 2015

செல்போன் மனைவியா ,கணவனா :)

               ''செல்போனைப்  பார்க்கும் போதெல்லாம் என் நினைப்பு  வருதா ,ஏன்?''

            '' இருந்தாலும் தொல்லையா இருக்கு ,இல்லாட்டியும் கஷ்டமா இருக்கே !''

கணவன்கிட்டே உரிமையா சண்டை போடலாம் ,வெளியில் ?

        ''என்னங்க , என் குரல்லே நடுக்கம் தெரியுதுன்னு பாட்டுப்போட்டி 
தேர்வில் இருந்து என்னை நீக்கிட்டாங்க !''
         ''என் புருஷனையே நடுங்க வைக்கிற என் குரல்லே நடுக்கமான்னு 
சண்டை போட்டிருக்க வேண்டியது தானே ?''
கரந்தை ஜெயக்குமார்4 April 2014 at 06:19
நடுக்கமா என் பாட்டிலா?
Bagawanjee KA4 April 2014 at 07:14
நெற்றிக்கண் திறப்பினும் நடுக்கம் நடுக்கமே என்று ரிஜெக்ட் செய்து விட்டார்களே !
ரூபன்4 April 2014 
மனைவி அமைவது இறைவன் கொடுத்த வரம்......சூப்பர்......
வாழ்த்துக்கள்
Bagawanjee KA4 April 2014 at 08:57
கல்யாணம் ஆனபிறகு ஏன் பலபேர் நாத்திகவாதிகளாய் ஆகி விடுகிறார்கள் என்று இப்ப புரியுது !

பித்ருக்களை அறியாத சத்ருக்களின் கேலி !

       ''நீங்க எச்சில் கையாலே காக்கையை விரட்ட மாட்டீங்களாமே ?''
       ''எதுக்கு விரட்டணும் ,என் பித்ருக்களான காக்கைகளுக்கு  பிரியாணி வைக்கிறதுதான் என் வழக்கம்  !''

 சேவலின் அவசரச் செய்தி ,நமக்கல்ல !

கோழி கூவியா பொழுது விடியப் போகிறது ?

இல்லை ,சேவல் கூவியா பொழுது விடிகிறது ?
சேவல் இனமே இல்லாதபோது விடியாமலா இருந்தது ?
'நான் ஒருத்தன் இங்கே இருக்கேன்'னு சேவல் 'சிம்பாலிக்காய் 'சொல்வதை எல்லாம் ...
நாம் சீரியசாய் எடுத்துக் கொள்ளக் கூடாது !

28 comments:

  1. 01. கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையா ?
    02. குரல் அமைவது குரல்வளை அமையும் வரம்.
    03. பிரியாணி பித்தரோ ?
    04. சேவலே இல்லாத நாட்டிலும்கூட விடியுதே...

    ReplyDelete
    Replies
    1. 1.மீசை இருந்தா கூழ் குடிக்கக் கூடாதா :)
      2.குரல் வளை அமைவது வாங்கி வந்த வரமா :)
      3.அப்படின்னா ,பிரியாணியில் காக்காவை அடிச்சுப் போட்டிருப்பாரே :)
      4.விடியுறது சேவல் கூவுவதால் இல்லை ,சரிதானே :)

      Delete
  2. செல்போன் சைலன்ஸர் மோடில் இருக்கும்போது அது ஆண்(கணவன்)
    செல்போன் பிஸி டோனில் இருந்தால் அது பெண் (மனைவி)
    போதுமா பகவான் ஜி விளக்கம்!
    த ம +1
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. தமிழ் சங்கமே தீர்த்து வைக்காத சந்தேகத்தை தனியொரு புலவனாய் வந்து தீர்த்து வைத்த நீவீர் வாழ்க பல்லாண்டு :)

      Delete
  3. வணக்கம்
    ஜி
    என்ன தத்துவம்... இரசித்தேன்...j.ம2
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தத்துவம் என்றால் இதுதானா ....அவ்வ்வ் :)

      Delete
  4. 1) ஹா....ஹா...ஹா... ஆனா செல்போனை அப்பப்போ புதுசா மாத்திக்கலாம்!!

    2) ஹா....ஹா... புருஷன் மட்டும்தான் நடுங்குவான் போல!

    3) ஆமாங்க... அப்படி வச்சாத்தான் காக்காக் கூட இப்போல்லாம் சாப்பிடவே வருது!

    4) ம்ம்ம்.... என்னவோ சொல்ல வர்றீங்க... அது தெரியுது! :)))))))))))

    ReplyDelete
    Replies
    1. 1.ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தால் வாங்கலாம் தானே :)
      2.நடுங்குவார் மட்டுமில்லே ,நட்டுவாங்கமே ஆடுவார் :)
      3.உயிர் விட்டவங்க காக்காக்கள் ஆனா ,காக்காவுக்கு என்வி என்றால் உயிரா இருக்கே :)
      4.கோழிக்கு புரிஞ்சா போதும் :)

      Delete
  5. சேவல் கூட தூங்கும் உலகை கூவி எழுப்பும் குரலாலே...
    ஏவல் செய்யும் காவல் காக்கும் நாய்களும் தங்கள் குணத்தாலே...
    இரை எடுத்தாலும் இல்லை என்றாலும் உறவை வளர்க்கும் காக்கைகளே...
    இரை எடுத்தாலும் இல்லை என்றாலும் உறவை வளர்க்கும் காக்கைகளே...
    இனத்தை இனமே பகைப்பது எல்லாம் மனிதன் வகுத்த வாழ்க்கையிலே...

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் சரி ,கடைசிவரியில் ஒரு திருத்தம் ...இனத்தை இனமே அழிப்பது எல்லாம் மனிதன் வகுத்த வாழ்க்கையிலே...:)

      Delete
  6. செல்ஃபோன் - மனைவி - என்ன ஒரு ஒப்பீடு! :)))

    அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. பலரும் செல்போனை அடிக்கடி மாற்றிக்க முடியுது என்று அங்கலாய்க்கிறார்களே :)

      Delete
  7. நகைப் பணி தொடர்க ..
    ஏழாம் வாக்கு

    ReplyDelete
    Replies
    1. சேதாரமில்லாமல் தொடர நீங்கதான் உதவணும்:)

      Delete
  8. ரசித்தேன் நண்பரே
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ரசித்தது அறிய மிக்க மகிழ்ச்சி :)

      Delete
  9. அன்புள்ள பகவான் ஜீ,

    “ ஒன்னோட ஒரே தொல்லையாப் போக்சு”

    “அப்படி எல்லாம் சொல்லப் படாது... நேத்துத்தான் சொன்னீங்க... டெலிபோன் மணிபோல் சிரிக்கிறேனென்று...”

    “அது நேத்து... இது இன்னக்கி... பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்...”

    “ஏ... அத்தான் ஒரேதா கோபப்படுறீங்க...சுக வேதனைன்னு அழகாச் சொல்லுங்கள் அத்தான்...இந்தாங்க அத்தான் நீங்க வாங்கிக் கொடுத்த ஓட்ட செல்போன்... ஸ்மாட் போனுக்கு என்ன மாத்துங்க... ஸ்மாட் அத்தான்...!”



    “ஐ... நான் ஐஸ்ஸ நெரையாப்போட்டு கொடுத்த சர்பத் வேலை செஞ்சிடுச்சா... என்னையா நடுங்க வக்கிறா?”


    “நா... எச்சில காக்கைய விரட்டமாட்டேன்... எ பொண்டாட்டிய மட்டும்தான்... நீங்க வேணுமுனா கேட்டுப் பாருங்க...”


    “ நீ கூவியா பொழுது விடியுது... ரொம்பதான் கொக்கரிக்காதே“

    த.ம. 8.

    ReplyDelete
    Replies
    1. ஸ்மார்ட் போன் வேணும்னு நேரடியா கேட்க வேண்டியதுதானே ,அதுக்கு இவ்வளவு பீடிகையா :)

      அப்படின்னா ,அவரோட பதி செய்த சதிதானாஅது :)

      கேட்டுப் பார்த்தேன் ,என் முன்னாலே எச்சிலைக் கூட துப்ப மாட்டார்ன்னு சொன்னாங்க :)

      ஏனிந்த கொக்கரிப்பு என்று கோழிக்குத்தானே புரியும் :)

      Delete
  10. கணவன் செத்துப்போனா...மனைவி அழுவாங்க....!! செல்போன் அழுமா...???

    ReplyDelete
    Replies
    1. செல்போனுக்கு நடிக்கத் தெரியாது என்பது உண்மைதான் :)

      Delete
  11. Replies
    1. இதைப் போட்டால்தான் எனக்குத் தெரியுமா ...நான் தனியாக இதை சுட்டிக்காட்டி இருப்பதைச் சொன்னேன் :)

      Delete
  12. செல்லில் நாம் பேசலாம் செல் நம்மிடம் பேசாது கோபம் தலைக்கேறினாலும் குரலில் நடுக்கம் வருமாமே காகம் தான் எழுந்து விட்டதைக் கூற கூவுகிறது. அதற்கும் காரணம் கற்பிக்கிறார்களே,

    ReplyDelete
    Replies
    1. நாம்தானே பேசிக் கொண்டிருக்கிறோம் ,மனைவி எங்கே பேசுகிறாள் ,எப்பவும் வள்வள் :)
      முடிவு தெரியும் முன்பே அவருக்கு நடுக்கம் வருதே :)
      காகம் சரி ,சேவல் :)

      Delete
  13. அனைத்தும் அருமை. இனி சேவலை கூவலைப் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாமோ?

    ReplyDelete
    Replies
    1. எதுக்கு எடுத்துக்கணும் ,அது கூவுறதுக்குள்ளே நமக்கு விழிப்பு வந்திடுதே :)

      Delete
  14. யானை இருந்தாலும் பொன், இறந்தாலும் பொன் மாதிரி ஆயிப் போச்சோ?!!!!

    அனைத்தும் ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. நீங்க மனைவியை ஜாடை மாடையா யானைன்னு சொல்லி இருக்க மாட்டீங்கன்னு உறுதியா நம்புறேன் :)

      Delete