18 April 2015

கட்டாம வச்சிருக்கிறது தப்பா ?

-----------------------------------------------------------

இப்படியும் சந்தேகம் வரலாமா ?
             ''இனிமேல்   யாரும் எந்த சந்தேகத்தையும்  என்னிடம் கேட்கக் கூடாதுன்னு வாத்தியார் சொல்றாரே ,ஏன் ?''
                 ''வரிக் குதிரை  என்ன நிறம் ,கருப்பு தோல் மேல் வெள்ளை வரியா ,வெள்ளை தோல் மேல் கருப்பு வரியான்னு எவனோ  ஒருவன் கேட்டுட்டானாமே?''

           

கட்டாம  வச்சிருக்கிறது தப்பா ?

      ''என்னங்க ,போன்லே உங்க நண்பர் 'கட்டாமலே இன்னும் எத்தனை 
நாள் வைச்சுக்கிட்டு இருக்கப் போறீங்க 'ன்னு கேட்டது என் 
காதுலே விழுந்துதே ,உண்மையைச் சொல்லுங்க !''
        ''அடப் பைத்தியமே ,சும்மா போட்டு வச்சிருக்கிற பிளாட்டைப் பற்றி 
அவன் கேட்டான் ..அதைப் போய் தப்பா நினைக்கிறீயே !''



புத்திசாலியாய் இருப்பார்போல இருக்கே
நமக்கெல்லாம் இப்படி சட்டென மூளை
சட்டென வேலை செய்யாது
பெண்டாட்டி சந்தேகப் படுறான்னா நியாயம் இருக்கு ..இப்படி எல்லோருமே அவர் காலை வாருவது சரியா ?நீதியா ?
அம்பாளடியாள் வலைத்தளம்18 April 2014 at 13:44
இமயக் கில்லாடி தான் அந்த ஆளு இன்றைக்கு இல்லாது போனாலும் என்றைக்கோ ஒரு நாள் மாட்டினா கஞ்சி தாண்டி மவனே :)))))))
அதை அவங்க பார்த்துக்குவாங்க ,நீங்க ரிலாக்ஸ் பிளீஸ் !
துரை செல்வராஜூ18 April 2014 at 17:25
அடடா.. இன்னுமா கட்டி முடிக்கலே!?.. என்ன கொடுமை இது சரவணன்!.. 
(சரவணன் யாருன்னு கேட்டா.. இவருதான் அந்த மனை (Plot) க்கு பழைய ஓனர்!..
அந்த சரவணனுக்கு மனையும் ரெண்டு ,மனைவியும் ரெண்டுன்னு சொன்னாங்களே ,உண்மைதான் போலிருக்கு !

  1. ஆளுயர மாலையைப் போட்டா ஆள் காலி !

           '' தலைவர் மாலை எல்லாம் வேண்டாம்னு சொல்றாரே , அவ்வளவு தன்னடக்கமா ?''

              ''அடநீங்க வேற ,அவருக்கு கடுமையா  கழுத்து வலிங்க !''


    படிப்பை 'கவர்ச்சி 'கவுத்துவிடக் கூடாது ,ஜாக்கிரதை !

    கவர்ச்சி நடிகை BA பாஸான செய்தி ஊடகம் எங்கும் ...
    கனவுக் கன்னியாய் கோட்டைக் கட்டி ...
    படிப்பை 'கோட்டைவிட்ட' ரசிகர்கள் எத்தனைப் பேரோ ? 


27 comments:

  1. 01. சிவப்புக்குதிரைக்கு கருப்பு வெள்ளைக் கோடுனு சொல்ல வேண்டியதுதானே...
    02. நல்லவேளை அவரு இப்படி இடிக்கலாமானு கேட்கலை.
    03. அந்தப்பணத்தை பணமாலையாக எதிர் பார்கிறாரோ ? என்னமோ ?
    04. தென்னை மரத்துல தேள் கொட்டினா ? பனை மரத்துல நெறி கட்டுமாம்.

    ReplyDelete
    Replies
    1. 1.பயபிள்ளைங்க விவரமானவங்க ,இப்படியெல்லாம் சமாளிக்கமுடியாதே :)
      2.யாரை இடிச்சீங்கன்னு ,அவர் தலை மேல் இடி இறங்கியிருக்குமோ :)
      3.அது சொல்லித்தான் தெரியணுமா:)
      4.நெறியை, பனை மரத்தில் ஏறி பார்த்தது யாரோ :)

      Delete
  2. 1. ம்ம்ம்.... கூகிள் பண்ணி பதில் சொல்ல வேண்டியதுதானே!

    2. நண்பர் ஃபோன் பில் பற்றிக் கூடக் கேட்டிருக்கலாம்!!

    3. அடடா.... என்ன கொடுமை!

    4. படிச்சுதான் என்ன கோட்டை கட்டப் போறாங்க... விடுங்க!

    ReplyDelete
    Replies
    1. 1.அதுக்கு எங்கே நேரமிருக்கு ,பயபிள்ளைங்க முழிக்கிறதைப் பார்த்து சிரிக்கிறாங்களே :)
      2.அதைதான் கட்டியாச்சேன்னு திரும்ப அடிப்பாங்களே :)
      3.பண மாலைப் போட்டால் தாங்கிக்குவார்;)
      4.அதுதானே ,படிக்காமலே கோட்டைக் கட்டிட்டு போகட்டுமே :)

      Delete
  3. வாத்தியாருக்கே குழப்பமா ஜி...?

    ReplyDelete
    Replies
    1. யானைக்கும் அடி சறுக்கும்தானே :)

      Delete
  4. வாத்தியாருக்கு பதில் தெரிஞ்ச... சந்தேகத்தத்தானே கேக்கனும்.... இருங்க மிருகக்காட்சி சாலைக்குப் போயி வரிக்குதிரையைப் பார்த்திட்டு வந்து பேசிக்கிறேன்!


    “ம்...ம்... எனக்குத் தெரியாமா யாருக்கு பிளாட் வாங்கிக் கொடுத்தீங்க...?”

    “கோவிச்காதம்மா... கல்யாணம் ஆன புதுசுல... மனைவிக்கு வாங்கிக் கொடுத்தது... நீ ஒன்னுத் தப்பா நினைச்சுக்காதே!”


    “ஆள் உயர மாலையைப் போடச் சொன்னா... இப்படி மாலையப்போட்டு ஆளச் சாச்சுப்புட்டீங்களே...!” அடுத்த தலைவருக்கு ஆள் இல்லையேப்பா... இப்ப என்ன செய்யிறது...? உடனே நீங்கதான் தலைவருன்னு நீங்க மனசுல நெனைக்கிறது... எனக்குத் தெரியுது...”
    “விவேக் நோய் ஒங்களுக்கு வந்திருச்சா..! தலைவருக்கு பூவின் மென்மையினும் மென்மையான புனித உள்ளமுன்னு தெரிஞ்சிரிந்தா... சத்தியமா இவ்வளவு பெரிய மாலையைப் போட்டிருக்க மாட்டேன்...”
    “சரி... ஆனதையே பேசிக்கிட்டு இருந்தா எப்படி...? இனி ஆகவேண்டியதப் பத்தி பேசுவியா...!”


    “அப்பவே எ ஜாதகத்தில... பி.ஏ. முடிச்ச கவர்ச்சி நடிகைதான் ஒனக்கு மனைவியா வருவான்னு எழுதியிருக்கிறதப் பாருங்க...“
    ”அப்ப எழுதின மாதரி தெரியலையே...! உண்மையைச் சொல்லு... எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு...!
    “எது... அவுங்க பி.ஏ. பாஸ் பண்ணுனதா..?”

    த.ம.3.

    ReplyDelete
    Replies
    1. மிருகக்காட்சி சாலைக்குப் போனாலும் சந்தேகம் தெளியாது :)

      அப்படின்னா ,எனக்கு பங்களா கட்டிக் கொடுங்க :)

      இனிமேல் ஆகவேண்டியது ,ஐஸ் ஃபிரிஜ்ஜுக்கு சொல்றதுதான் :)

      அவங்க ஒப்பனா நடிச்சா பிடிக்குது ,அவங்க ஓபன் யூனிவர்சிட்டியில் படிச்சாங்க என்றால் மட்டும் பிடிக்கலையா :)


      Delete
  5. வாத்தியாருக்கே இந்த நிலையாா................!!!

    ReplyDelete
    Replies
    1. எல்லாரும் வாத்தியாருக்கு பரிதாபப் படுறீங்க சரி ,அவர்கிட்டே வரிக் குதிரை உண்மையைச் சொல்ல மாட்டேன் என்கிறீர்களே :)

      Delete
  6. எல்லா ஜோக்குகளையும் ரசித்தேன். வரிக்குதிரைக்கு, கருப்பு தோல் மேல் வெள்ளை வரியா அல்லது வெள்ளை தோல் மேல் கருப்பு வரியான்னு யோசிக்க வைத்து விட்டீர்கள். ஒரு படத்தில், கவுண்டமணியும் செந்திலும் சலவைத் தொழிலாளிகளாக வரும் ஒரு நகைச் சுவைக் காட்சியை “மிக்ஸ்” பண்ணிப் பார்த்தேன்.
    த.ம.8

    ReplyDelete
    Replies
    1. உங்கள் 'மிக்ஸ்'சிங்கை கற்பனையில் நானும் ரசித்தேன் :)

      Delete
  7. ஜோக்குகள் எல்லாம் அருமை அதிலும் வரிக்குதிரை, கட்டாம போட்ட நிலமும் மிக அருமை.
    த ம 9

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கமெண்ட் அருமை ,அதிலும் குறிப்பிட்டுச் சொல்லி இருப்பது மிகவும் அருமை :)

      Delete
  8. பையன் பெரிய விஞ்ஞானியா வருவான் போல! ஹாஹா! ரசித்தேன்! சிரித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. அந்த விஞ்ஞானி என்னிடம் சொன்னான் ,வரிக் குதிரை தோல் வெள்ளைதான் கோடுகள்தான் கருப்பு என்று :)

      Delete
  9. காலி மனையை ரசித்தீர்களா :)

    ReplyDelete
  10. Replies
    1. கலங்காமல் சொன்னதற்கு நன்றி :)

      Delete
  11. வணக்கம்
    இரசித்தேன் ஜி பகிர்வுக்கு நன்றி த.ம 11
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கற்பனைக் குதிரை என்ன நிறம் ,யோசிப்போமா ரூபன் ஜி :)

      Delete
  12. இப்படி ஒரு கேள்வி கேட்டு வாத்தியாரை கவுத்துட்டாங்களே! :)

    ReplyDelete
    Replies
    1. இந்த காலத்துலே வாத்தியார் வேலை பார்க்கிறது ,கஷ்டம்தான் :)

      Delete
  13. பதிவைவிட பின்னூட்டங்களுக்கு நீங்கள் தரும் மறுமொழிகள் இன்னும் ரசனையாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. பதிவு நாலு வரி ,மறுமொழி நாற்பது வரி ...இது ,ஜோக்காளி வெற்றியின் ரகசியமாச்சே :)

      Delete
  14. பய புள்ள விவரமான புள்ள....நல்ல கேள்வி.....ஆசிரியருக்கு விவரம் பத்தலை விடுங்க ஜி....

    கட்டாமப் போனது நிறைய இருக்குமே ஜி!!!! எத அவரு கேட்டாரோ....

    அப்படினா தலைவரைக் கவுக்கறதுக்கு ஆல் இருப்பாங்களே ஜி!

    ReplyDelete
    Replies
    1. பய புள்ள தெரிஞ்சிகிட்டே இப்படிக் கேட்கிறானே :)

      ஒண்ணா ரெண்டா ,எடுத்துச் சொல்ல :)

      அதானே ,மாலை வேண்டாம்னு சொல்றவர் தலைவராய் இருக்கவே தகுதி இல்லாதவர் ஆச்சே :)

      Delete