''உங்க கணவரோட கல்லறையை , பூசினதும் செட் ஆகிற சிமெண்ட்டால் கட்டணும்னு சொல்றீங்களே ,ஏன் ?'' ''கல்லறைக் காயும் முன்னாடியே அடுத்த கல்யாணத்தைப் பண்ணிகிட்டானு யாரும் என்னைச் சொல்லக் கூடாதில்லே !'' சங்கீத சாம்ராட் இப்படிப் பாடலாமா :) ''பைரவி ராகப் பாடலா இது ? கிணற்றுக்குள்ளிருந்து பாடுற மாதிரி இருக்கே !'' ''ஒரு வேளை,பாதாள பைரவி ராகமா இருக்குமோ ?'' ஓட வைக்கும் தொப்பைக்கு ஜே :) ''அதோ.. அந்த அறுவை மன்னனைக் கண்டாலே எல்லோரும் ஓடுவார்கள் ,இப்போ அவரே ஒடுறாரே ,ஏன் ?'' ''அதுக்குக் காரணம் ,அவரது தொப்பைதான் !''
கஞ்சப்பிசினாரிக்கு ஏற்ற மனைவி:) ''மேடம் ,,நீங்க பற்பசையை வாங்கினால் கூட ஏன் பழைய சரக்கை மட்டுமே கேட்கிறீங்க ?'' ''எதையுமே அதோட காலாவதி தேதி வரைக்கும் பயன்படுத்தணும்னு என் வீட்டுக்காரர் சொல்றாரே ...அதான் ,சீக்கிரம் காலி பண்ண இந்த ஐடியா !'' மழை அளவு குறைவு தரும் பாடம் :) ஊரிலே ஒரு நல்லவர் இருந்தாலும் மழை பெய்யுமாம் ... 'நான் இருப்பதால்தான் மழை பெய்கிறது 'என எல்லோரும் நினைத்துக் 'கொல்' கிறார்கள் ! பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் பூஜாருக்கு ரொம்பத்தான் சேட்டை ...
''ஒரு கிட்னிதான் இருக்குன்னு முன் கூட்டியே சொன்னதால் , பண்ண இருந்த ஆபரேசன் கேன்சல் ஆயிடுச்சே !''
நடிகையின் அசர வைக்கும் ஆங்கில அறிவு :) ''நடிக்க வந்த சில வருடங்களில் நிறைய வேடங்களில் நடித்து விட்டீர்கள் ,இதுவரை வந்த 'கேரியரில் ' மறக்க முடியாதது எது ?'' '' மீன் குழம்பும் ,நண்டு வருவலும்தான் ...தயாரிப்பாளர் எனக்காக ஸ்பெசலா கேரியரில் அடிக்கடி கொண்டு வர்றாரே !''
மெண்டல் குடும்பப் பொண்ணுன்னு வேண்டாம் என்றாரோ :) ''பொண்ணைப் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டுப் போனவங்க ,இப்ப ஏன் வேண்டாங்கிறாங்க?'' ''எங்க பரம்பரையைப் பற்றி ,எங்க ஃபேமிலி மனநல டாக்டர்கிட்டே விசாரித்து தெரிஞ்சுக்குங்கன்னு சொன்னது தப்பாப் போச்சு !'' நாடி ஜோதிடமே ஒரு ?அதிலும் இரட்டை நாடி ஜோதிடமா :) ''உன் வீட்டுக்காரரோட நாடி ஜாதகத்தை பார்க்கவே முடியாது போலிருக்கா ,ஏன் ?'' ''அவருக்கு இரட்டை நாடி , இரட்டை நாடி ஜோதிடம் யாரும் பார்க்கிறமாதிரி தெரியலேயே !'' நாம் செய்த மாதவம் தமிழராய் பிறந்தது :) யாரும் இங்கே ராமன் இல்லை ... கருவாடு மீனாகாது கறந்தபால் மடிபுகாது ... அவள் பத்தினியுமில்லை நான் முற்றும் துறந்த முனிவனுமில்லை ... காலத்தால் அழியாத பொன்மொழிகள் இவை ! தமிழனாய் பிறந்ததற்கு மாதவம்தான் செய்திருப்போம் போலிருக்கிறது !
அது மல்டி ஸ்பெசாலிட்டி ஆஸ்பத்திரியா இருக்குமோ :) ''அந்த கண்டக்டருக்கு வாய்க் கொழுப்பு ஜாஸ்தியா ,ஏன் ?'' ''லட்ச லட்சமா சேர்த்துவச்சுகிட்டு இருக்கிறவங்க எல்லாம் ,இந்த ஆஸ்பத்திரி ஸ்டாப்பிலே இறங்குங்கன்னு சொல்றாரே !''
ரகசியம் பெண்களிடம் தங்காது என்பது உண்மையா :) ''மேனேஜர் சார் ,உங்களுக்குன்னு தனியா லேடி டைப்பிஸ்ட் இருக்காங்களே .இந்த லெட்டரையும் அடிக்கச் சொல்ல வேண்டியதுதானே ?'' ''இது ரகசிய கடிதம் ...ரகசியம்னா பெண்கள் மனதிலே தங்காதே !''
எப்படியாவது தலைவராகணும் :) ''நாலடி உயரம் இருக்கிற நான் பஞ்சாயத்து தலைவர்கூட ஆக முடியாது போலிருக்கு !'' ''என்ன செய்யலாம்னு இருக்கீங்க ?'' 'கட்டப் ' பஞ்சாயத்து தலைவர் ஆகப் போறேன் !'' மனைவி சொல்வதும் சரிதானே :) ''நீங்க ஆரம்பித்த டென்னிஸ் கோச்சிங் சென்டரை மூட ,உங்க மனைவிதான் காரணமா ,ஏன் ?'' ''கொசு பேட்டினால் ஒரு கொசுவை அடிக்கத் தெரியாத ,நீங்கெல்லாம் ஒரு டென்னிஸ் கோச்சரான்னு கிண்டல் பண்றாளே !''
உருட்டுக் 'கல்லை'யும் சேர்த்து ஆட்டுவாங்களோ :) ''பொங்கல்லே கல்லு இருக்குன்னு சொன்னா ,சர்வர் திமிரா பதில் சொல்றானா ,எப்படி ?'' ''பொங்''கல்'னா வரத்தான் செய்யுமாம் !'' நல்லவர்கள் விரல் எண்ணிக்கையில் அடங்கி விட்டார்கள்,ஆனால் ......? கடையேழு வள்ளல்கள் வாழ்ந்த மண்ணில்தான் ... கடைந்தெடுத்த அயோக்கியர்கள் கணக்கு வழக்கு இல்லாமல் வாழ்கிறார்கள் !
தமிழ் மேல் ஆர்வமில்லை :) ''புதுசா வந்திருக்கிற அதிகாரிக்கு தமிழ்ப் பற்று அதிகம் போலிருக்கு ...கதவுலே pushனு இருந்ததை 'தள்ளு 'ன்னு எழுதச் சொல்லிட்டாரே !'' '' இந்த 'தள்ளு 'க்கு என்ன அர்த்தம்னு பார்க்கத் தானே போறீங்க !''
மரமும் அவரைப் போலத்தானா :) ''நீங்க முன்பு எப்போதாவது மரக்கன்றை நட்டு இருக்கீங்களான்னு ஏன் கேட்கிறீங்க ?'' ''நீங்களே பாருங்க தலைவரே ,நீங்க கும்பிடுற மாதிரியே இருக்கே !''
பெண் பார்க்க ரெண்டு நாள்தான் ,நல்ல நாளா :) ''என்னங்க ,பெண் பார்க்க வர்றவங்களை சனி ,ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் வரச் சொல்றீங்களே ,ஏன் ?'' '' டிவி சீரியல்களைப் பார்க்காமல் ,அன்னைக்குத்தானே உங்க இரண்டு பேர் முகமும் அழுது வடியாம இருக்கு !'' வாயை மூடி பேசவும் முடியும் என்றால் .....! ''அந்த படத்தைப் பார்க்கப் போறேன்னு சொன்னா ...காதை மூடி கேட்கவும்னு ஏன் சொல்றீங்க ?'' ''இரட்டை அர்த்த ஜோக்குகள் நிறைய இருக்கே !'' கல்யாணமானா ஒரே சோகம்தானா :) ''நீங்க கல்யாணம் ஆன பிறகுதான் ஜோக் எழுத ஆரம்பிச்சீங்களா,ஏன் ?'' ''நாமதான் சிரிக்க முடியலே ,மத்தவங்களாவது சிரிக்கட்டுமேன்னுதான் !'' குறள் வழி நடக்கும் நாய் :) சிலர் நாய் வாலை வெட்டிவிடுகிறார்கள் ... வாலறுந்த நாய் ... வெட்டியவர்களை 'வெட்டி விடாமல் 'விசுவாசமாய் சுற்றி சுற்றி வருகிறதே !
படித்ததில் இடித்தது :) ''ஏனுங்க ஆபிசர் ,மனுஷனுக்கு கை விரல்ரேகை வாங்கினீங்க ,மாட்டுக்கு என்ன வாங்குவீங்க ? அடுத்து pan கார்டும் கொடுப்பீங்களா ?குட்டிப் போட்டா birth சர்டிபிகேட் கொடுப்பீங்களா ?'' இடித்த செய்தி >>>மாடுகளுக்கும் ஆதார் கார்டு வழங்கப்படும் -மத்திய அரசு !
கதவைத் திறக்க கண்டக்டரின் ஐடியாவா :) ''காலிங் பெல் பக்கத்திலே ஒரு விசில் தொங்குதே ,ஏன் ?'' ''கரண்ட் கட் நேரத்தில் இந்த விசிலை ஊதி அழைக்கவும்னு எழுதி இருக்கேனே ,படிக்கலையா ?'' இந்த காதல், தாலியில் முடியுமா :) ''டார்லிங் ,நேற்று ஒரு கெட்ட கனவு ...நீயும் நானும் ரயில் தண்டவாளத்தில் படுத்திருக்கிறோம் !'' ''அய்யய்யோ ,அப்புறம் ?'' ''நீயும்தானே இருந்தே ,அப்புறம் நடந்தது உனக்குத்தான் தெரியுமே !'' வாலாட்ட யோசிக்கும் நாய்கள் :) ''டைப்பிஸ்ட் சாந்திகிட்டே யாரும் வாலாட்ட மாட்டேங்கிறார்களே ,ஏன் ?'' ''அவங்க டைப் 'அடிக்கிற ' வேகத்தைப் பார்த்தே அரண்டு போயிருக்காங்களே !'' எது நிம்மதி காதலா ,கல்யாணமா, காதல் கல்யாணமா :) காதலே நிம்மதி என்று ... திருமணம் முடிந்த சில நாளிலேயே புரிந்துவிடுகிறது !
செருப்புக்குப் பதிலா இதுவா :) ''மந்திரி மேலே ஏன் நூலையும் ஊசியையும் எறியுறாங்க ?'' ''உருப்படியா ஒரு காரியமும் செய்யலைன்னாலும், பேச்சு மட்டும் வாய் 'கிழிய ' பேசுறாராமே!''
இந்த ஐடியாவின் காப்பிரைட் எனக்கே :) ''நீரிழிவு நோயாளிகளின் ஒட்டு மொத்த வாக்குகளையும் அந்த கட்சி அள்ளிடுமா,ஏன் ?'' ''தேவைப்படுவோர்க்கு , ரேஷனில் சீனிக்குப் பதிலா சுகர் ப்ரீ மாத்திரை தருவோம்னு தேர்தல் அறிக்கையிலே சொல்லி இருக்காங்களே !'' முட்டாள்களை வேலை வாங்க முடியுமா :) ''என்னை ஏன் வேலையிலிருந்து நீக்குறீங்க ,முதலாளி ?'' '' ஃபோர்மேனைக் கூப்பிடுன்னு சொன்னா ,நாலு பேரைக் கூட்டி வர்றீயே !'' சம்பாதிக்க முடியாதவனை ஆம்பளையான்னு மனைவி கேட்கிற மாதிரி ....! '' பக்கத்து வீட்டு பரமசிவத்துக்கு ஓட்டுக்குப் பணம் கிடைக்கலை போலிருக்கா ,ஏன் ?'' '' பணம் தர வக்கற்றவன் எல்லாம் தேர்தல்லே ஏன் நிற்கணும்னு ஆவேசமா கேட்டுகிட்டு இருக்காரே !'' இராத்திரி 12 மணிக்கு கதவைத் தட்டலாமா :) ''உங்க வீட்டுலே குடியிருக்கிறவர் ரொம்ப ,ரொம்ப நாணயமானவரா ,எப்படி ?'' ''ஒண்ணாம் தேதி பிறந்ததும் இராத்திரி 12மணிக்கே வாடகையோட வந்து கதவை தட்டுகிறாரே !'' விண்மீன் உயரத்தில் மீன் விலை ! உயிரையும் பணயம் வைத்து ... நடுக்கடலில் மீனவன் மீன்பிடிக்க... தரையில் நிற்பவன் விலையை வைக்கிறான் .. பிராய்லர் கோழிக்குகூட பண்ணை வேண்டும் தீனியும் போடவேண்டும் ... கடல் அன்னை இலவசமாய் தரும் மீனின் விலையோ கோழி விலைக்கும் அதிகம் ... மீன் தரகருக்கு என்று வருமோ தடைக்காலம் ? இதான் ,நம்ம அதிரா பூஸ்>>>
பூசார் ஓடியே விட்டார் ,நான் அழைத்தாலும் வர மாட்டேனென்று :) சிஸ்டத்தை ரீஸ்டார்ட் செய்து, அதிரா பூசாரை இழுத்துட்டு வந்துட்டேன் ...ங் கொய்யாலே ,மதுரகாரன் கிட்டேவா:)
ஆளில்லாக் கடையில் டீ ஆற்றிய காலம் போயிண்டே :) '' பிரதமர் மோடிக்கு பன்னீர்செல்வம் மேல் தனி பிரியம் இருக்கும் போலிருக்கா ,ஏன் ?'' ''இருவருமே ஆரம்பத்தில் டீ விற்றவர்கள்தானே !'' இடித்த செய்தி ....மோடி டீ விற்ற ஸ்டேசனுக்கு 8கோடி ஒதுக்கீடு !
படித்ததில் இடித்தது :) ''டாஸ்மாக் கடைகளைத் திறக்க மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாலும் ,குடிநீர் கிடைக்காமல் வாட்டர் லாரிகள் ஓடாமல் நிற்பதாலும் ...அரசு போர்க்கால அடிப்படையில் புதிய திட்டம் போட்டிருக்கா ,எப்படி ?'' ''அந்த லாரிகள் மூலமா ஒயின் ,பிராந்தி ,பீர் ,ரம் சப்ளை செய்யும் 'நடமாடும் டாஸ்மாக் கடை ' திறக்கப் போகிறார்களாம் !'' இடித்த செய்தி >>>>மதுக்கடையைச் சுற்றி 6 அடி ஆழத்தில் அகழி வெட்டிய மக்கள்! நல்லவேளை ,தாலி கட்டும் முன்பே தெரிந்தது :) ''காதலனை ஏன் கை விட்டுட்டே ?'' ''ரெஜிஸ்டர் ஆபீஸ் அல்லது கோவில் ..இதில் எங்கே திருமணம் செய்துகிட்டா செலவு மிச்சமாகும்னு கேட்கிறாரே !'' கஸ்டமரை கஷ்டப் படுத்தக் கூடாது தானே :) ''ஹலோ ,கஸ்டமர் கால் சென்டருக்கு கால் பண்ணிட்டு ...எனக்கு கல்யாணம் ஆயிடுச்சான்னு ஏன் கேட்குறீங்க ?'' ''எவ்வளவு திட்டினாலும் சிரிச்சுகிட்டே பதில் சொல்றீங்களே ,உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு !'' சாப்ட்வேர் டீம் லீடர் ,இப்படி வேலை வாங்கலாமா :) ''காலையிலே , தலைமுடி நல்லாத் தானே இருந்தது ,சாயந்திரம் வேலை முடிந்து ,வழுக்கைத் தலையனா வர்றீயே ,ஏன் ?'' ''எங்க டீம் லீடர் ,நாலுநாள் வேலையை இன்னைக்கே 'கையோட முடி'க்கணும்னு 'மண்டையைப் பிய்ச்சுக்க' வைச்சுட்டாரே !''
108டிகிரி வெயில் இப்படி கேட்க வைக்குதோ :) ''அந்த காபி மாஸ்டருக்கு கொழுப்பு ஜாஸ்தியா .ஏன் ?'' ''டிகிரி காபி கேட்டா ,எத்தனை டிகிரி இருக்கணும்னு கேட்கிறாரே !'' நெனைப்புதான் பொழப்பைக் கெடுக்குது :) ஒரே உறையில் இரண்டு கத்தி ... என யாராவது சொன்னால் ... மாமியார் மருமகள் உறவு நினைவுக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை !
பொண்ணு பார்க்கும் போதே சமைச்சுக் காட்டச் சொல்லலாமா :) ''வெளிநாட்டிலே இருக்கிற உங்க பையன், சமைச்சு சாப்பிட்டு வேலைக்கு போக கஷ்டப்படுறான்னு கல்யாணம் பண்ணி வைச்சது தப்பாப் போச்சா ,ஏன் ?'' ''பெண்டாட்டிக்கும் சேர்த்து இப்போ சமைக்க வேண்டியதா இருக்காம் !''
பரம்பரையா சொத்து மட்டும் வரலே :) ''தாத்தா ,பாட்டியை மறக்கவே முடியாதா ,அவங்க மேலே அவ்வளவு பாசமா ?'' ''எனக்கிருக்கிற சர்க்கரை நோய் பாட்டி கொடுத்தது ,அதுக்கு செலவு பண்ற பணம் தாத்தா கொடுத்ததாச்சே !''
நான்வெஜ் சமைக்கத் தெரிந்தாலும் இதை செய்ய முடியுமா :) ''வீட்டிலே அட்டகாசம் பண்ற பெருச்சாளியை அடிக்காதீங்கன்னு ஏன் சொல்றே ?'' ''கொன்றால் பாவம் தின்றால் போச்சுன்னு சொல்றாங்க ,எலிக்கறியை யாருங்க சாப்பிடுறது?'' முன்பு , இந்த ஜோக்குக்கு வந்த ..ரசிக்கவைத்த கருத்தும் ,என் மறுமொழியும் .... Chokkan Subramanian>>.அப்ப நீங்க வீட்டுல எலி எல்லாம் வளர்க்கிறீங்களா?Bagawanjee>>>விலைவாசி தாறுமாறா ஏறிப் போச்சு,உங்களை மாதிரி வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கு கறி விருந்து வைக்க வேண்டாமா ? Chokkan Subramanian>>>ஆஹா. முன்னாடியே சொல்லிட்டீங்க. அதனால உங்க வீட்டுக்கு ஒரு பெரிய கும்பிடு. Bagawanjee>>. அப்படியெல்லாம் சொல்லப்படாது ,அன்பாய் அவுல் கொடுத்தாலும் 'பகுத் அச்சா'ன்னு சொல்லி சாப்பிடுறதுதான் ,நமது பண்பாடுங்கிறதை மறக்கலாமா ? Chokkan Subramanian>>ஹலோ, அவல் எங்கேயிருக்கு, எலிக்கறி எங்க இருக்கு. உங்களுக்கே இது அநியாயமா தெரியலையா. அதுவும் ஒரு சைவக்காரனிடம் எலிக்கறி சாப்பிடுங்கன்னு சொன்னா எப்படியிருக்கும்?? Bagawanjee>> இந்தப் பாட்டை நீங்கள் கேட்டு இருப்பீர்களே ... #சைவப் பொருளாய் இருப்பவனே அன்று ஓட்டல் கறியை கேட்டவனே.... ஹிஹி...பிள்ளைக்கறியை கேட்டவனே... அதே அதே சபாபதே! அதே அதே சபாபதே!#(ஜம்புலிங்கமே ஜடா ஜடா ) அந்த சொக்கனே பிள்ளைக் கறி கேட்டு சாப்பிட்டதா புராணம் இருக்கிறது ,இந்த சொக்கன் எலிக்கறி சாப்பிடக் கூடாதா ? துரை செல்வராஜூ>>>கறிக் கடைக்கு இவ்வளவு ஆதரவு இருக்கா!... Bagawanjee >>ஒரு நிமிடம் பறக்கிற ஈசலையே வறுத்து தின்கிற உலகமாச்சே இது ,கறிக்கு சொல்லவா வேணும் ? பொண்ணு மாப்பிள்ளை மட்டுமா பொருத்தம் :) ''இன்ஸ்பெக்டர் அய்யா ,உங்க மக வாழ்க்கைப் படப் போறது வசதியான இடத்தில் தானா ?'' ''என்ன அப்படி கேட்டுட்டீங்க ,பையனோட அப்பா மாசமானா நமக்கே லட்ச ரூபா மாமூல் கொடுத்துக்கிட்டு இருக்காரே !''
படித்ததில் இடித்தது :) ''டெல்லியில் நேற்று 'புல் தின்னும் போராட்டம் ' நடத்தின விவசாயிகளைப் பார்த்தால் பாவமாயிருக்கா ,ஏன் ?'' ''அவங்க ரொம்ப நாளைக்கு அசை போட்டுகிட்டே இருக்கணும்னு.... கேவலப் படுத்துற மாதிரியிருக்கே,பிரதமரின் நேற்றையப் பேச்சு !'' இடித்த செய்தி >>> 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரு மடங்காக உயர வாய்ப்புள்ளது #பிரதமர் மோடி உரை !
நடிகையான பின் இதைத் தவிர்க்க முடியுமா :) ''மேக்கப் போட்டுக்கிறது கஷ்டமாயிருக்கு ,டைரக்டர் ஸார்!'' ''போட்டுக்கலைன்னா பார்க்கிறவங்களுக்கு கஷ்டமா போயிடுமே !''
( இந்த ஆறு நடிகைகள் யார் என்று யாராவது சொல்ல முடியுமா :) 'ஆண்' வரிசையில் பெண் வரலாமா :) ''அந்த பெண்மணி மட்டும் ஆண்கள் வரிசையில் வந்து நிற்கிறாங்களே ,ஏன் ?'' ''(ஆண்)ONலைன்லே ஈசியா டிக்கெட் வாங்கலாம் என்பதை தப்பா புரிஞ்சிகிட்டாங்க போலிருக்கு !'' நல்ல வேளை ,ஜட்டி சைஸை கேட்கலே :) ''பத்து வருசமா என் உப்பைச் சாப்பிட்டுகிட்டு இருக்கே,இப்ப திடீர்ன்னு என் பனியன் சைஸை கேட்கிறீயே ,ஏன் ? '' ''உப்பிட்டவரை உள் 'அளவும் 'நினைன்னு சொல்லி இருக்காங்களே ,முதலாளி !'' முகூர்த்த நேரம் தாமதம் என்பதற்காக அவசரப் படலாமா :) ''சீக்கிரம் மாப்பிள்ளையை தாலி கட்டச் சொல்றீங்களே ,ஏன்? ''அட்சதை தூவக் கொடுத்த அரிசியை இப்பவே பாதிப்பேர் மென்று தின்னுட்டாங்களே !''
படிக்க நேரம் இல்லைன்னா எதுக்கு பேப்பர் வாங்கணும் :) '' எடைக்குப் போடுற பேப்பருக்கு , கிலோவுக்கு ஐந்து ரூபாய் அதிகமாத் தரணுமா ,ஏன் ?'' ''வர்ற பேப்பரை அப்படியே போட்டு விடுறோம் , பிரிக்கிறதுகூட இல்லையே !'' யோசிக்க வேண்டிய விஷயம் இது :) ''பசி மயக்கத்தில் எனக்கு காது கேட்கலைங்கிறதை நம்ப முடியலையா ,ஏன் ?'' ''சாப்பாடு ரெடின்னு சொன்னதும் , கையைக் கூட கழுவாம தட்டைத் தூக்குறீங்களே !'' மனைவி தூக்கத்தைக் கெடுத்ததற்கு பிரதியுபகாரம் :) ''அந்த முதியோர்கள் இல்லத்திற்கு தேவையான தூக்க மாத்திரையை தானமா தர்ற ,உன் வீட்டுக்காரரின் தாராள மனசைப் பாராட்டலாமே !'' ''தாராள மனசுமில்லே,ஏராள மனசுமில்லே ...தினசரி குறட்டை விட்டு என் தூக்கத்தைக் கெடுக்கிற குற்ற உணர்வுதான் அதுக்கு காரணம் !''
நன்றி மறவாத வெஜிடேரியன் :) ''நம்ம வீட்டு விசேசத்திற்கு வந்துபோன நண்பர் SMS ல் என்ன எழுதி இருக்கார் ?'' ''சிக்கனற்ற, சிக்கனமற்ற ,மட்டனற்ற விருந்து படைத்தமைக்கு மட்டற்ற மகிழ்ச்சியாம் !'' தடை எதுக்கு வரணுமோ ,அதுக்கில்லையே :) மீனைப் பிடிக்ககூட தடைக் காலம் போடுறவங்களாலே ... சிங்கள ராணுவம் நமது மீனவனைப் பிடிப்பதை ஏன் தடை செய்ய முடியலே ? மீனைக் கூட கொல்லாமல் பிடிக்கும் நிராயுதபாணி மீனவனைக் கொன்றுக் குவிப்பதை ஏன் தடை செய்ய முடியலே ?
படித்ததில் இடித்தது :) ''சென்னை ஆர் கே நகரில் டூரிஸ்ட் வேனே கிடைக்க மாட்டேங்குதா ,ஏன் ?'' ''வோட்டுக்கு கிடைச்ச பணத்திலே எல்லோரும் ஜாலியா ஊட்டி ,கொடைக்கானல்னு கிளம்பிட்டாங்களே!'' இடித்த செய்தி ....ஓட்டுக்கு ரூ.6,000 வினியோகம் சுற்றுலா செல்லும் ஆர்.கே.நகர் மக்கள்!
மகன் பெரிய விஞ்ஞானியா வருவான் :) ''எதுக்குடா ,நான் பயன்படுத்திய இன்சுலின் ஊசியை வேணும்னு கேட்கிறே ?'' ''இங்க் பில்லரா அதைப் பயன்படுத்திக்கலாம்னுதான் , அப்பா !''
இப்படியும் சந்தேகம் வரலாமா :) '' வாத்தியார் ,மூட் அவுட் ஆனமாதிரி இருக்காரே ,ஏன் ?'' ''வரிக் குதிரைக்கு ,கருப்பு தோல் மேல் வெள்ளை வரியா ,வெள்ளை தோல் மேல் கருப்பு வரியான்னு எவனோ ஒருவன் கேட்டுட்டானாமே?'' கட்டாம வைச்சிருக்கிறது தப்பா :) ''என்னங்க , உங்க நண்பர் 'கட்டாமலே இன்னும் எத்தனை நாள் வைச்சுக்கிட்டு இருக்கப் போறீங்க 'ன்னு போன்லே கேட்டது என் காதுலே விழுந்ததே ,உண்மையைச் சொல்லுங்க !'' ''அடப் பைத்தியமே ,சும்மா போட்டு வச்சிருக்கிற பிளாட்டைப் பற்றி அவன் கேட்டான் ...அதைப் போய் தப்பா நினைக்கிறீயே !'' ஆளுயர மாலையைப் போட்டா ஆள் காலி :) '' தலைவர் மாலை எல்லாம் வேண்டாம்னு சொல்றாரே , அவ்வளவு தன்னடக்கமா ?'' ''அடநீங்க வேற ,அவருக்கு கடுமையா கழுத்து வலிங்க !'' படிப்பை 'கவர்ச்சி 'கவுத்துவிடக் கூடாது ,ஜாக்கிரதை :) கவர்ச்சி நடிகை BA பாஸான செய்தி ஊடகம் எங்கும் ... கனவுக் கன்னியாய் கோட்டைக் கட்டி ... படிப்பைக் 'கோட்டைவிட்ட' ரசிகர்கள் எத்தனைப் பேரோ ?
படித்ததில் இடித்தது :) '' வந்திருக்கிறக் கூட்டத்தைப் பார்த்தால் ,இறந்தவர் பெரிய ஆளாய் இருப்பார் போலிருக்கே ?'' ''அட நீங்க வேற ! இலவச 'ஃவை ஃபை 'க்காக மயானத்துக்கு வந்திருக்கிற கூட்டமுங்க இது !'' இடித்த செய்தி ...சுடுகாட்டில் இலவச 'வை - பை' வசதி; முதல்முறையாக அறிமுகம் ! 'சர்பத் 'தால் சோம்பேறியான மனைவி :) ''என்னடா சொல்றே ,உன் பெண்டாட்டி படு சோம்பேறி ஆயிட்டாளா ?'' ''டீ ,காபியில் சீனிக்குப் பதிலா , சர்பத்தைக் கலக்க ஆரம்பித்து விட்டாளே !''
எப்படி வந்தது ,அவருக்கு இந்த 'துணி 'ச்சல் :) ''எடைக் குறைவான சேலையை வாங்க வேண்டியதுதானே ?'' ''நான் கட்டிக்கப் போறேன் ,மெஷின் துவைக்கப் போவுது ,உங்களுக்கென்ன ?'' '' அதை காயப் போடுறது நான்தானே !'' இருக்கும் போதுகூட மாமியார் மேல் இம்புட்டு பாசமில்லே :) ''என்னங்க ,அமாவாசை அதுவுமா ...ஜன்னல்லே காக்கா வந்து கரையுதுங்க,நெய்ச்சோறு கலந்து வைக்கட்டுமா ?!'' ''ஏன் ?'' ''கலரும் ,குரலும் உங்க அம்மாவை ஞாபகப்படுத்துதே ,அதான் !'' வழக்குச் செலவுக்கே ஒத்தி காசு சரியா போயிருக்குமே :) ''ஒத்தி முடிந்தும் உங்க வீட்டைக் காலி செய்ய மாட்டேங்கிறவர் மேலே போட்ட கேஸ் என்னாச்சு ?'' ''அதையேன் கேட்கிறீங்க ,நீதிபதியும் தீர்ப்பை ஒத்தி வச்சுகிட்டே இருக்கார் !'' லஞ்சத்திற்கு தூக்குத் தண்டனை எப்போது :) ஊரெங்கும் பணம் தரும் தானியங்கி எந்திரங்கள் ... நம்மைச் சுற்றிலும் பணம் பிடுங்கும் மனித எந்திரங்கள் !
எது சரி :) ''காலிங் பெல் ரிப்பேரான்னு ஏன் கேக்குறீங்க ?'' ''கதவுலே 'தட்டுங்கள் திறக்கப் படும்'னு வாசகம் இருக்கே !'' புருசனைத் தாக்க மட்டுமா பூரிக்கட்டை :) ''பூரிக் கட்டையை இப்படியும் பயன்படுத்தலாம்னு இன்னைக்குத் தான் தெரிஞ்சுதா ,எப்படி ?'' ''தீர்ந்து போன டூத் பேஸ்ட்டை ,பிதுக்கி எடுக்கிறதுக்கு பதிலா பூரிக்கட்டையால் உருட்டி எடுத்தாளே என் பெண்டாட்டி !'' ( பெண்டாட்டி அப்படின்னா 'டாஸ்மாக் அடிமை 'புருஷன் இப்படித்தான் பூரி மாவை உருட்டியாகணும்..ஹி..ஹி:)
நண்பனின் மனம் அறிந்த நண்பேண்டா :) ''பக்கத்துத் தெருவிலே இருக்கிற அந்த ராசியான மருத்துவமனையின் பெயரும் ,டாக்டரின் பெயரும் ஞாபகத்தில் வரவே மாட்டேங்குதே.....!'' ''சரி ,சரி ..நர்ஸோட பெயரைச் சொல்லு,நான் போய் பார்த்துக்கிறேன் !'' ஓடிப் போனா... மனைவி பெயரும் மாறிடுமா :) ''உன் மனைவி பெயர் கலாவதிதானே ,காலாவதின்னு ஏன் சொல்றே ?'' ''ஓடிப் போனவளை வேற எப்படி சொல்றது?'' போலிகள் நிறைந்த உலகமடா :) ''நீங்க போலி டாக்டர்னு பேசிக்கிறாங்க ,நீங்க தர்ற மாத்திரையும் போலின்னா ,எப்படி குணமாகும் ?'' ''ஸ்கேனைப் பார்த்து நான் சொன்ன நோயும் போலிதான் ,டோன்ட் ஒர்ரி !'' ஒரு தலைக் காதல் ஜெயிக்குமா :) நீ விரும்புவதோ அவளை ... அவள் விரும்புவதோ அவனை ... மூணு சீட்டிலேயே உன்னால் ஜெயிக்க முடியாது ! முக்கோண காதலில் ...?நோ சான்ஸ் !
ஒரு வாக்குறுதி இப்பவே நிறைவேறிடுச்சு :) ''அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையைப் பற்றி என்ன நினைக்கத் தோணுது ?'' ''அதான் 'பல்பு 'தருவோம்னு அவங்களே சொல்றாங்களே !''
இதிலுமா கணக்கு பார்க்கிறது :) ''படியிலே தாவி தாவி,மாடிக்கு வந்த பையனை அடி அடின்னு அடிக்கிறார் ...கணக்கு வாத்தியாரை ஏண்டா கட்டிக்கிட்டோம்னு இருக்குடி !'' ''ஏனாம் ?'' ''எதையுமே 'ஸ்டப் பை ஸ்டப் 'பா செய்யணுமாம் !'' கணவன் மனைவி சண்டையில் மூக்கை நுழைக்கலாமா :) ''பக்கத்து வீட்டிலே புருஷன் பெண்டாட்டி சண்டைன்னா...நாம ஒரு தப்பு செய்யலாம் ,ஒரு தப்பு செய்யக்கூடாதா ,என்னங்க சொல்றீங்க ?'' ''காதை தீட்டிக்கிட்டு ஒட்டு கேட்கலாம் ,சமரசம் செய்யப் போனாதான் தப்பு !'' சொல்லிக்க நல்லா இருக்காதே :) ''பத்து வீடு பார்த்ததில் நடுத் தெருவீடுதான் பிடிச்சிருக்கு ,நீங்க ஏன் வேண்டாங்கிறீங்க ?'' ''நடுத் தெருவிலே இருக்கேன்னு சொன்னாச் சிரிப்பாங்களேன்னு யோசிக்கிறேன் !'' பெண்களில் 'மசாலா 'வும் உண்டு 'மலாலா 'வும் உண்டு :) காண்போர் நாணும் அளவிற்கு மறைந்துள்ள மச்சத்தையும் காட்டும் 'மசாலா 'ப் பெண்கள் ஒருபுறமும் ... உரிமைக்கு முன் உயிர்க்கூட துச்சமென தோட்டாவைக் கூடத் தாங்கும் 'மலாலா 'ப் பெண்களும் இன்னொரு புறமும் ... இருப்பதால்தான் பெண்மை தலை நிமிர்ந்து நடக்கிறது !
இந்த சந்தேகம் தீருமா :) ''சேலை கட்டிய மாதரை நம்பாதேன்னு சொல்றதை நீங்க நம்புறீங்களா ?'' ''அதையும் நம்ப முடியலே ,அதைச் சொன்னவர் ஔவையார் என்பதையும் நம்ப முடியலே !'' எம்டனுக்கு எம்டன்கள்:) ''பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டுப் போய் ஒரு மாசமாச்சே ,அடுத்து பேசவே இல்லையே ,நியாயமா ?'' ''அன்னைக்கு ,பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொன்னாதான் டிபன்னு சொன்னீங்களே ,அது மட்டும் நியாயமா ?'' மனைவிக்குத் தெரியாமல் வச்சுக்கலாமா :) "ATM ரூமுக்குள்ளே போனாதான் தெரியுது ...பலபேர் , மனைவிக்குத் தெரியாமல் வச்சுக்கிட்டு இருக்காங்கன்னு ........!" "எதை ?" "பேங்க் பாலன்ஸ்சை தான் !அதை மறைக்க பாலன்ஸ் சிலிப்பை கிழிச்சு போட்டுட்டு போயிடறாங்களே! " ஆண்களுக்கு 'டைம் பாஸ் ' சரி ,பெண்களுக்கு :) ''டைம் பாஸ் வார இதழில் ஆண்களுக்கான 'கில்மா ' மேட்டர்தான் வருது ! நாம படிக்கிற மாதிரி இல்லேடி !'' ''ஒண்ணும் கவலைப் படாதே !அடுத்து பெண்களுக்காக 'மெனோ பாஸ் 'னு வார இதழ் வரலாம் !''
உயிரே ,உன் விலை என்ன :) கோழிகளின் கழுத்து அறுபடும் போதுகூட ஏற்படாத பரிதாபம் ... 'கோழிக் கறி கிலோ ரூ 100,உயிருடன் கிலோ ரூ 80' என்பதைப் படிக்கையில் ஏற்படுகிறது ! உயிருக்கு என்னதான் மதிப்பு ?
பாட்டிலே கதின்னு இருந்தா :) ''தலைவரோட கட்டுப்பாட்டில் கட்சி இல்லைன்னு தெரிஞ்சு போச்சா ,எப்படி ?'' ''அவரே ,அவர் கட்டுப்பாட்டில் இல்லையே !''
இருந்தாலும் இவருக்கு இவ்வளவு கரிசனம் கூடாது :) ''மேற்கூரையில் திறக்கிற மாதிரி மூடி வச்சிருக்கீங்களே ,ஏன் ?'' ''கூரையைப் பிச்சுகிட்டுக் கொடுக்கிறக் கடவுளுக்கு வீண் சிரமம் கொடுக்கக் கூடாதுன்னுதான் ..!'' கரண்ட் இல்லேன்னாலும் அவருக்கு காரியம் ஆகணும்:) ''அய்யா பெரியவரே ,கிராமத்தில் இருந்து வந்து இருக்கீங்க சரி ,மேட்னி ஷோவுக்கான 'கரண்ட் 'புக்கிங் முடிஞ்சுப் போச்சே !'' ''அப்படின்னா ஜெனரேட்டர் புக்கிங் ஆரம்பீங்க !'' குடிகாரங்க சாப்பிட வேண்டியதும் ,வேண்டாதமும் :) ''உங்க வீட்டுக்காரர் உடம்பு தேறணும்னா நிறைய பழங்கள் சாப்பிடணும் !'' ''பழங்'கள் ' சாப்பிட்டு பாழாப்போன மனுசனுக்குப் புரியுற மாதிரி சொல்லுங்க ,டாக்டர் !'' 'கடனே'ன்னு எதையும் செய்யக் கூடாது :) கொள்ளை,கொலைச் செய்யும் ... ரௌடிகளுக்கும் கூட தனித்துவமான அடைமொழி பெயர்கள் ! அவர்களின் பெயரில் மட்டுமே உள்ள தனித்துவத்தை நாம் செயலில் காட்டினால் நாமும் இங்கே ஹீரோதான் !