29 April 2017

நடிகையின் அசர வைக்கும் ஆங்கில அறிவு :)

ஒரு கிட்னி  ஏற்கனவே ஆட்டை ஆயிடுச்சே  :)

        ''என்ன நர்ஸ் சொல்றீங்க ,நான் சொன்ன உண்மைதான் என்னைக் காப்பாற்றி இருக்கா ?''

        ''ஒரு கிட்னிதான்  இருக்குன்னு முன் கூட்டியே சொன்னதால் , பண்ண இருந்த ஆபரேசன் கேன்சல் ஆயிடுச்சே !''


நடிகையின் அசர வைக்கும் ஆங்கில அறிவு :)

            ''நடிக்க வந்த சில வருடங்களில் நிறைய வேடங்களில் நடித்து விட்டீர்கள் ,இதுவரை வந்த 'கேரியரில் ' மறக்க முடியாதது எது ?''
           '' மீன் குழம்பும் ,நண்டு  வருவலும்தான் ...தயாரிப்பாளர் எனக்காக ஸ்பெசலா கேரியரில் அடிக்கடி  கொண்டு வர்றாரே  !''
மெண்டல் குடும்பப் பொண்ணுன்னு வேண்டாம் என்றாரோ :)
          ''பொண்ணைப் பிடிச்சிருக்குன்னு  சொல்லிட்டுப் போனவங்க ,இப்ப ஏன் வேண்டாங்கிறாங்க?''
          ''எங்க பரம்பரையைப் பற்றி ,எங்க  ஃபேமிலி மனநல டாக்டர்கிட்டே விசாரித்து தெரிஞ்சுக்குங்கன்னு சொன்னது தப்பாப் போச்சு !''

நாடி ஜோதிடமே ஒரு  ?அதிலும் இரட்டை நாடி ஜோதிடமா :)
           ''உன் வீட்டுக்காரரோட நாடி ஜாதகத்தை பார்க்கவே முடியாது போலிருக்கா  ,ஏன் ?''
           ''அவருக்கு இரட்டை நாடி , இரட்டை நாடி ஜோதிடம் யாரும் பார்க்கிறமாதிரி தெரியலேயே !''

நாம் செய்த மாதவம் தமிழராய் பிறந்தது :)
யாரும் இங்கே ராமன் இல்லை ...
கருவாடு மீனாகாது கறந்தபால் மடிபுகாது ...
அவள்  பத்தினியுமில்லை நான் முற்றும் துறந்த முனிவனுமில்லை ...
காலத்தால் அழியாத பொன்மொழிகள் இவை !
தமிழனாய் பிறந்ததற்கு மாதவம்தான் செய்திருப்போம் போலிருக்கிறது !

30 comments:

  1. சந்தோசம் பொயிங்குதே.. சந்தோசம் பொயிங்குதே...
    சந்தோசம் மனதில் பொயிங்குதே...:)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.. ஒரு நொடி போச்சே..

      Delete
    2. டமில் மனத்தில:) இணைச்சு பின்பு வோட்டும் போடவேண்டிக்கிடக்கே ஆண்டவா:) இப்பூடி வேறு எங்காவது நடக்குமா?:).. இதைத்தட்டிக் கேட்க இங்கின ஆருமே இல்லயோ:)..

      Delete
    3. ஆவ்வ்வ்வ்வ் பூஸார் போஸ்ட்டில் இடம் பிடிச்சிட்டார்ர்ர்:) ஹையோ இனி ஊரெல்லாம் புகைப்போகப்போகுதே:) மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்:).

      Delete
    4. ஒலிம்பிக் தடகள ஓட்டத்தில், நொடியின் நூறில் ஒரு பங்கு நேரத்தில் வெற்றிக் கோட்டைத் தொடுவதுபோல் ... பூஜார் இன்னைக்கு ஜெயிச்சாச்சு :)

      Delete
    5. கில்லர்ஜி , பூஜார் வேட்டைக்கு இப்போதான் கிளம்புற நேரம் ,நாம அசறுகிற நேரமாச்சே .கவலையே விடுங்க :)

      Delete
    6. #இதைத்தட்டிக் கேட்க இங்கின ஆருமே இல்லயோ:)..#
      யாரு வரணும்னு நினைக்கிறீங்க ?தட்டிக் கொடுக்க நான் இருக்கேனே ...இந்த வேகத்திலே போனா பூஜார்தான் சீக்கிரமே 'தம'ன்னா முதல்வன் (முதல்வி :)

      Delete
    7. பூஸார் போஸ்ட்டில் இடம் பிடிச்சிட்டார்ர்ர்:) சரி ,போஸ்ட்டில் உள்ள எது பூஜார் மனதில் இடம் பிடித்தது ஒன்றுமே சொல்லவில்லையே :)

      Delete
    8. ///இந்த வேகத்திலே போனா பூஜார்தான் சீக்கிரமே 'தம'ன்னா முதல்வன் (முதல்வி :)///

      ஆங்ங்ங்ங்ங்ங்ங் இது இது இந்தப் பயம் எப்பவும் இருக்கட்டும்:).. ஹா ஹா ஹா அப்பூடி என்ன சொல்லிட்டேன்ன்? ஏன் இப்பூடி முறைக்கிறீங்க?:)

      Delete
  2. உண்மை உயிரை காப்பாற்றி விட்டதோ ?

    ReplyDelete
    Replies
    1. இருக்கிற ஒரு கிட்னியையும் தெரியாம உருவிஇருந்தால் கதை கந்தலாகியிருக்குமே :)

      Delete
  3. Replies
    1. நாடி ஜோதிடமே ஒரு ?தானே :)

      Delete
  4. நடிகையின் பதில் சிரிக்க வைத்தது!

    ReplyDelete
    Replies
    1. உண்ட வீட்டுக்கு இரண்டகம் பண்ணாமல் போனால் சரிதானே :)

      Delete
  5. '' மீன் குழம்பும் ,நண்டு வருவலும்தான் ...தயாரிப்பாளர் எனக்காக ஸ்பெசலா கேரியரில் அடிக்கடி கொண்டு வர்றாரே !''//

    நடிகை ஒரு சாப்பாட்டு ராமி[ராமனுக்குப் பெண்பால்] என்பதைத் தயாரிப்பாளர் நன்றாகவே புரிந்திருக்கிறார்!

    ReplyDelete
    Replies
    1. ராமிதான்,மாமியாய் இருந்தால் இதைச் சாப்பிடுவாரா?ஆனால் ,ஒரு மாமி முன்னணி நடிகை பாட்டிலுடன் காட்சி தருவது வேறு விஷயம் :)

      Delete
  6. எனக்கு ஏற்கனவே உம்மை தெரிஞ்சு போச்சு சாமியோ...!

    அந்த கேரியரை வீட்ல வச்சுருக்கேன்... சில்வர் கேரியர்...டைரக்டர்ட்ட இருந்து இதுதான் வாங்க முடிஞ்சதாம்...!

    அவனே ஒரு மென்டல்...!

    ஜோதிடருக்கு இரட்டை நாக்கு... கவலைப்படாதிங்க...!

    ‘சார்... ஒரு சின்ன சந்தேகம்... நீங்க சோறுதானே திங்குறீங்க...!’ இதுவும் அந்த வரிசையில் இடம் பெறாதா...?!

    த.ம. 8

    ReplyDelete
    Replies
    1. அதனாலேதான் இருக்கிறது ஒரு கிட்னிதான்னு பொய் சொல்லி தப்பிச்சேன் :)

      வச்சுகிட்டா டைரெக்டர் தர மாட்டேன்னார் :)

      மெண்டல் டாக்டரா :)

      ஒற்றை நாக்கிலே சொல்றதே விளங்க மாட்டேங்குது :)

      இது எந்த தலைவரும் சொல்லவில்லையே :)

      Delete
  7. நகைப்பணி தொடரட்டும் நண்பரே

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ஆதரவுடன் தொடர்கிறேன்
      ,தோழரே :)

      Delete
  8. அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. பூஜாரின் கருத்தும் ரசிக்க வைக்கிறதுதானே :)

      Delete
  9. கிட்னி கொடுக்க வந்தவருக்கு தன்னிடமிருக்கும் ஒரு கிட்னி பணம் பண்ண உதவாதுஎன்று தெரியவில்லையோ
    உணவுக்கேரியரரை நினைத்துவிட்டார் அவ்வளவுதான்
    நுணலும் அதன் வ்வாயால் கெட்டதே
    நல்ல காலம் இப்பவாவது தெரிந்ததே இல்லையென்றால் இரட்டைப் பணம் கொடுத்திருக்க வேண்டுமோ
    அவள் பத்தினியுமில்லை நான் முற்றும் துறந்த முனிவனுமில்லை .../ ஒரு அரசியல் தலைவர் சொன்ன வாக்குபோல அல்லவா இருக்கிறது
    /

    ReplyDelete
    Replies
    1. டாக்டருக்கும் அது தெரிய வேண்டும் என்று சொன்னார் :)
      அவருக்குத் தெரிந்ததை தானே சொல்வார் :)
      சொல்வதிலும் சொல்லாமை நன்றோ :)
      அதானே ,எப்படி வேண்டுமானாலும் ஜோதிடர் அள்ளிவிடக்கூடும் :)
      தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை ஒழித்துக் கட்டிய மாமேதை சொன்னது தான் :)

      Delete
  10. பொன்மொழிகள் தமிழ்ச்சமூக வரலாற்றைத் தொகுப்பவை.

    இரசித்தேன் பகவானே!

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பழமொழிகள் போலத்தான் நம் தலைவர்களின் பொன் மொழிகளும் காலத்தின் கண்ணாடி:)

      Delete
  11. அட...அம்புட்டு ஆங்கீல் அறிவா...??????????????????

    ReplyDelete
  12. ஆங்கீல் அறிவில்லை ,தலை கீழ் அறிவு :)

    ReplyDelete