20 April 2017

பொண்ணு மாப்பிள்ளை மட்டுமா பொருத்தம் :)

பொண்ணு பார்க்கும் போதே சமைச்சுக்  காட்டச் சொல்லலாமா :)          
              ''வெளிநாட்டிலே இருக்கிற உங்க பையன்,  சமைச்சு சாப்பிட்டு வேலைக்கு போக கஷ்டப்படுறான்னு கல்யாணம் பண்ணி வைச்சது தப்பாப் போச்சா ,ஏன் ?''
             ''பெண்டாட்டிக்கும் சேர்த்து இப்போ சமைக்க வேண்டியதா இருக்காம் !''            

பரம்பரையா  சொத்து மட்டும் வரலே :)
         ''தாத்தா ,பாட்டியை மறக்கவே முடியாதா ,அவங்க மேலே  அவ்வளவு பாசமா  ?''
         ''எனக்கிருக்கிற  சர்க்கரை நோய் பாட்டி கொடுத்தது ,அதுக்கு செலவு பண்ற பணம் தாத்தா கொடுத்ததாச்சே !''
நான்வெஜ் சமைக்கத் தெரிந்தாலும் இதை செய்ய முடியுமா :)
           ''வீட்டிலே அட்டகாசம் பண்ற  பெருச்சாளியை  அடிக்காதீங்கன்னு ஏன் சொல்றே ?''
          ''கொன்றால்  பாவம் தின்றால் போச்சுன்னு சொல்றாங்க ,எலிக்கறியை யாருங்க சாப்பிடுறது?''
                  முன்பு ,  இந்த ஜோக்குக்கு வந்த ..ரசிக்கவைத்த கருத்தும் ,என் மறுமொழியும் ....
Chokkan Subramanian>>.அப்ப நீங்க வீட்டுல எலி எல்லாம் வளர்க்கிறீங்களா?Bagawanjee>>>விலைவாசி தாறுமாறா ஏறிப் போச்சு,உங்களை மாதிரி வீட்டுக்கு வர்ற விருந்தாளிகளுக்கு கறி விருந்து வைக்க வேண்டாமா ?
Chokkan Subramanian>>>ஆஹா. முன்னாடியே சொல்லிட்டீங்க. அதனால உங்க வீட்டுக்கு ஒரு பெரிய கும்பிடு.
Bagawanjee>>. அப்படியெல்லாம் சொல்லப்படாது ,அன்பாய் அவுல் கொடுத்தாலும் 'பகுத் அச்சா'ன்னு சொல்லி சாப்பிடுறதுதான் ,நமது பண்பாடுங்கிறதை மறக்கலாமா ?
Chokkan Subramanian>>ஹலோ, அவல் எங்கேயிருக்கு, எலிக்கறி எங்க இருக்கு. உங்களுக்கே இது அநியாயமா தெரியலையா. அதுவும் ஒரு சைவக்காரனிடம் எலிக்கறி சாப்பிடுங்கன்னு சொன்னா எப்படியிருக்கும்??
Bagawanjee>> இந்தப் பாட்டை நீங்கள் கேட்டு இருப்பீர்களே ...
#சைவப் பொருளாய் இருப்பவனே அன்று
ஓட்டல் கறியை கேட்டவனே....
ஹிஹி...பிள்ளைக்கறியை கேட்டவனே...
அதே அதே சபாபதே! அதே அதே சபாபதே!#(ஜம்புலிங்கமே   ஜடா ஜடா )
அந்த சொக்கனே பிள்ளைக் கறி கேட்டு சாப்பிட்டதா புராணம் இருக்கிறது ,இந்த சொக்கன் எலிக்கறி சாப்பிடக் கூடாதா ?
துரை செல்வராஜூ>>>கறிக் கடைக்கு இவ்வளவு ஆதரவு இருக்கா!...
Bagawanjee >>ஒரு நிமிடம் பறக்கிற ஈசலையே வறுத்து தின்கிற உலகமாச்சே இது ,கறிக்கு சொல்லவா வேணும் ?

பொண்ணு மாப்பிள்ளை மட்டுமா பொருத்தம் :)
          ''இன்ஸ்பெக்டர் அய்யா ,உங்க மக வாழ்க்கைப் படப் போறது வசதியான இடத்தில் தானா ?''
         ''என்ன அப்படி கேட்டுட்டீங்க ,பையனோட அப்பா மாசமானா நமக்கே லட்ச ரூபா மாமூல் கொடுத்துக்கிட்டு இருக்காரே !''

24 comments:

  1. மீ த 1ஸ்ட்டூஊஊஊஊஊ:) ஆனா வோட்ட்ல 2 கண்டூஊஊஊ:(..

    ReplyDelete
    Replies
    1. நீங்கதான் ஒண்ணு முன்னாடி உள்ளது டெஸ்டுக்காக என் வோட்டு :)

      Delete
    2. ஹா ஹா ஹா அப்போ இப்பூடி எனக்கும் போடோணும் சொல்லிட்டேன்ன்:) அதாவது டெஸ்ட்டுக்காக ஒண்ணு:).. புளொக்குக்காக ஒண்ணு:)..

      Delete
    3. அர்த்தராத்திரியில் பதிவை தமிழ் மணத்தில் இணைத்ததும் ,வாக்கு பெட்டி ஒகேயான்னு என் வோட்டைப் போட்டு டெஸ்ட் பண்ணிடுவேன் ,ஏன்னா,காலையில் யாரும் புகார் பண்ணக் கூடாதில்லே :)

      Delete
  2. //முன்பு , இந்த ஜோக்குக்கு வந்த ..ரசிக்கவைத்த கருத்தும் ,என் மறுமொழியும் ..//

    அப்போ பழையதைத்தான் கிளறிப், புதுசுபோல போட்டிருக்கிறீங்களா?:).. கறி இப்போ கருவாடாகியிருக்குமே:).

    ReplyDelete
    Replies
    1. அது பழசுதான் !கறி சாப்பிட வராத நீங்க தான் ,இந்த கருவாடு ருசியா இல்லையான்னு சொல்லலாமே :)

      Delete
  3. இனி பேரப்புள்ளைகளுக்கும் சமைக்கணுமே...

    ReplyDelete
    Replies
    1. பாட்டிக்கு அப்பவும் சமைக்க வராதா :)

      Delete
  4. எத்தனை காலம் அவங்க சமைச்சு நாம சாப்பிட்டிருக்கிறோம்? இது உல்டா காலம்!

    ReplyDelete
    Replies
    1. வெளியிலே சமைக்க ஆம்பளை,வீட்டிலே மட்டும் பொம்பளைதான் சமைக்கணுமா :)

      Delete
  5. Replies
    1. வெளிநாட்டிலே இருக்கிற பையனுக்கு வந்த கஷ்டத்தை ரசிக்க முடியுதா :)

      Delete
  6. Replies
    1. பரம்பரை சொத்து எதுக்கு செலவாகுது ,பார்த்தீங்களா ஜி :)

      Delete
  7. சம்பந்திகளும் நல்ல பொருத்தம்தான்....

    ReplyDelete
    Replies
    1. பணம் பணத்தோடுதானே சேரும் :)

      Delete
  8. ரசித்தோம்.....அனைத்தும்..ஜி

    ReplyDelete
    Replies
    1. பேரனின் வரவும் செலவும் சரிதானே ஜி :)

      Delete
  9. அனைத்தும் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. ஒரு நிமிடம் பறக்கிற ஈசலையே வறுத்து தின்கிற உலகம் ,சரிதானே ஜி :)

      Delete
  10. தனியாவா சமைக்கப் போறிங்க... ஒரு கை பிடி அரிசய சேர்த்துப் போட வேண்டியதுதானே...!

    தா(த்)தா... பெரிய தாதாவா...?!

    ஒரு நிமிடம் பறக்கிற ஈசல் வாழ்க்கையைக் கெடுத்தவர்னு சொல்லுங்க...!

    மாமனார் வீடு அவருக்கு அத்துப்படி...!

    த.ம. 10

    ReplyDelete
    Replies
    1. அதானே ,நீங்களா கிண்டப் போறீங்க ,குக்கர்தானே:)

      ஏன் மிராசுதாரா இருக்கக் கூடாதா :)

      அவ்வளவு நல்ல மனசுக்காரர் :)

      மாமூலா நடக்கிற விசயம்தானே இது :)

      Delete
  11. Replies
    1. இனி சம்பந்திகள் சமபந்தியில் உட்கார்ந்து சாப்பிடலாம்தானே :)

      Delete