1 April 2017

காதல் சின்னம் மட்டுமா இது :)

யார் ஜெயித்தாலும் ,தோற்றாலும் :)       
           ''என்ன சொல்றீங்க ,இந்த  தேர்தலால்  லாபம் அடையப் போறது தேர்தல் கமிஷன்தானா ?''
           ''ஆமா , போட்டியிடும் பலரும் டெபாசிட் தொகையை  இழக்கப் போகிறார்களே  !''

விடாக் கண்டனும் கொடாக் கண்டனும் :)
        ''உன் கல்யாணம் என்னைக்குன்னு சொல்லு ?''
        ''ஃகிப்ட்  வாங்க  மறந்துறக் கூடாதுன்னு தானே கேட்கிறே ?''
        ''அட நீ ஒண்ணு, ,என்னோட வாழ்த்தை   smsல் அனுப்பலாம்னு  கேட்டா ஏதேதோ கற்பனை பண்றீயே !''

காதல் சின்னம்  மட்டுமா இது :)
             "மனைவிக்காக தாஜ் மஹாலை கட்டிய ஷாஜஹானை ,சிறை வைத்தது அவர் மகன்தானாமே ,இதிலிருந்து என்ன தெரியுது ?"
            "நல்ல கணவனா இருந்தா மட்டும் போதாது ,நல்ல அப்பனாவும்  இருக்கணும்னு  தெரியுது !"  

பொண்ணு பிடிக்கலைன்னு இப்படியும்  சொல்லலாமா :)
              ''இனிமேல் பொண்ணுப் பார்க்க வர்றவங்களுக்கு மட்டமான ஸ்வீட் ,காரம் கொடுத்தா போதுமா  ,ஏன் ?''
              ''ஏற்கனவே பார்த்துட்டு போனவங்க 'ஸ்வீட் ,காரம் மட்டும்தான் பிடிச்சது 'ன்னு சொல்றாங்களே !''

மழை அளவு குறைவு தரும் பாடம் :)
ஊரிலே ஒரு நல்லவர் இருந்தாலும் மழை பெய்யுமாம் ...
'நான் இருப்பதால்தான் மழை பெய்கிறது 'என 
எல்லோரும் நினைத்துக் 'கொல்' கிறார்கள் !

21 comments:

  1. நடுநிசியில் நகைப்பணியா ?
    தொடர்க
    தம

    ReplyDelete
    Replies
    1. பிசியா இருந்தா பகலாவது ,இரவாவது :)

      Delete
  2. தேர்தல்... கமிஷனா...?!

    வாழ்த்து... ‘கள்’ வேண்டுமானால் அனுப்பி வை...!

    இருக்கிற செல்வத்தெல்லாம் நீயே காலி பண்ணிட்டா எ மனைவிக்கு நான் எதைக் கட்டுவது...?!

    பொண்ணு மட்டும்தான் எதுவும் கொடுக்க மாட்டோம்... வரனுக்கு தட்சணையும் வைக்க மாட்டோம்...!

    உனக்கு என்ன மாலைக் கண்ணா... மழை எங்கடா பெய்யுது...?!

    த.ம. 3



    ReplyDelete
    Replies
    1. சட்டம் அங்கீகரித்த கமிஷன் தானே இது :)

      கள் உண்டு என்றால் நேரிலேயே வந்து விடுவாரே :)

      உனக்கு உன் பெண்டாட்டி மாதிரி எனக்கு என் பெண்டாட்டி முக்கியம் இல்லையா :)

      உங்க வீட்டிலே நாங்க பொண்ணு எடுக்க மாட்டோமே :)

      கண்ணுக்குத் தெரியாட்டியும் நனைஞ்சு பாரு தெரியும் :)

      Delete
  3. தேர்தலால் பலருக்கும் முன்றேற்றம் நாட்டு மக்களைத்தவிர...

    ReplyDelete
    Replies
    1. ஜனநாயகம் கேலிக் கூத்து ஆகி விட்டதே !பணம்தான் ஜெயிக்கிறது ,நியாயம் தோற்கிறதே :)

      Delete
  4. தேர்தல் ஜோக் நச்! ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் காப்புத் தொகை யாருக்கு சேர்கிறதோ :)

      Delete
  5. Replies
    1. நல்ல அப்பாவாக இருக்க வேண்டியது அவசியம் தானே :)

      Delete
  6. மட்டமான ஸ்வீட் ,காரத்தையுமா :)

    ReplyDelete
  7. ''ஏற்கனவே பார்த்துட்டு போனவங்க 'ஸ்வீட் ,காரம் மட்டும்தான் பிடிச்சது 'ன்னு சொல்றாங்களே !''//

    பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொன்னா மட்டும் ஸ்வீட், காரம் கொடுக்கலாம். மத்தவங்களுக்கு வெறும் ‘பை’ போதும்!

    ReplyDelete
    Replies
    1. பையும் எதுக்கு ,குட் பை சொல்லி விடலாம் :)

      Delete
  8. தாஜ்மகாலும் நல்ல ஜோக்குதான்

    ReplyDelete
    Replies
    1. படிப்பினை என்று கூடச் சொல்லலாமே :)

      Delete
  9. எல்லாவற்றையும் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. தந்தை மகன் உறவுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு தானே :)

      Delete
  10. ...தேர்தல் செம.....அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. இடைத் தேர்தல் என்றாலே கேலிக் கூத்தா ஆகிப் போச்சே ஜி :)

      Delete
  11. நல்லப்பனாக இல்லாவிட்டால் இதுதான் கதியா.....!!!

    ReplyDelete
    Replies
    1. எட்டு கல்யாணம் எண்பது பிள்ளை என்றால் எப்படி நல்ல அப்பன் என்று பெயர் வாங்க முடியும் :)

      Delete