12 April 2017

கணவன் மனைவி சண்டையில் மூக்கை நுழைக்கலாமா :)

ஒரு வாக்குறுதி இப்பவே நிறைவேறிடுச்சு  :)
            ''அந்த கட்சியின் தேர்தல் அறிக்கையைப் பற்றி என்ன நினைக்கத் தோணுது ?''
           ''அதான் 'பல்பு 'தருவோம்னு அவங்களே சொல்றாங்களே !''
இதிலுமா கணக்கு பார்க்கிறது :)                
              ''படியிலே தாவி தாவி,மாடிக்கு வந்த பையனை அடி அடின்னு அடிக்கிறார் ...கணக்கு வாத்தியாரை ஏண்டா கட்டிக்கிட்டோம்னு இருக்குடி !''
              ''ஏனாம் ?''            
             ''எதையுமே 'ஸ்டப் பை ஸ்டப் 'பா  செய்யணுமாம் !''

கணவன் மனைவி சண்டையில்  மூக்கை நுழைக்கலாமா :)
            ''பக்கத்து வீட்டிலே புருஷன் பெண்டாட்டி சண்டைன்னா...நாம ஒரு தப்பு செய்யலாம் ,ஒரு தப்பு செய்யக்கூடாதா ,என்னங்க சொல்றீங்க ?''
             ''காதை  தீட்டிக்கிட்டு ஒட்டு கேட்கலாம் ,சமரசம் செய்யப் போனாதான் தப்பு !''

சொல்லிக்க நல்லா இருக்காதே :)
           ''பத்து வீடு பார்த்ததில் நடுத் தெருவீடுதான் பிடிச்சிருக்கு ,நீங்க ஏன் வேண்டாங்கிறீங்க ?''
           ''நடுத் தெருவிலே இருக்கேன்னு சொன்னாச் சிரிப்பாங்களேன்னு யோசிக்கிறேன் !''

பெண்களில் 'மசாலா 'வும் உண்டு 'மலாலா 'வும் உண்டு :)
காண்போர் நாணும் அளவிற்கு 
மறைந்துள்ள மச்சத்தையும் காட்டும் 
'மசாலா 'ப் பெண்கள் ஒருபுறமும் ...
உரிமைக்கு முன் உயிர்க்கூட துச்சமென 
தோட்டாவைக் கூடத் தாங்கும் 
'மலாலா 'ப் பெண்களும்  இன்னொரு புறமும் ...
இருப்பதால்தான் பெண்மை தலை நிமிர்ந்து நடக்கிறது !

22 comments:

  1. நடுத்தெரு வீட்டிற்கு இப்படியும் பொருள் கொள்ளலாமா?

    ReplyDelete
    Replies
    1. சொல் ஒன்றுதான் ,அர்த்தம்தான் வேறு வேறு :)

      Delete
  2. நடுத்தெரு நல்லமணிக்கு இந்த நிலையா ?

    ReplyDelete
    Replies
    1. நல்ல மணியாய் இருக்கப் போய்தான் நடுத் தெருவுக்கு வந்திருக்கிறார் :)

      Delete
  3. maths teacher ...
    irr
    nice to read
    thama +

    ReplyDelete
    Replies
    1. இந்த அம்மா இப்படி அங்கலாய்ப்பது சரியில்லை ,கணக்கு வாத்தியாரை 'கணக்கு' பண்ணும் போதே யோசித்து இருக்கணும் :)

      Delete
  4. காந்திய வழியில் நடக்கலாமுன்னா விடமாட்டேங்கிறிங்களே... ரோஸ் காந்தி வழியில...! தேர்தல் கமிஷன்... கமிஷன் வாங்க மறுக்குதே... இது நியாயமா...? பல்பு எரியல... வயிறு எரியுது...!

    நீங்க படி தாண்டா பத்தினின்னு நிருபிச்சிட்டீங்க...!

    சமரசம் உலாவும் இடமே நம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே

    முழுசும் நனஞ்சாச்சு... முக்காடு எதுக்கு...?

    சிவப்பு விளக்கும் எரிகின்றது... பச்சை விளக்கும் எரிகின்றது...!

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே இப்படி காந்தி கணக்காகிப் போச்சே :)

      பையனும் அப்படியே வரணும்னு நினைப்பதில் தப்பில்லையே :)

      அங்கேயும் ஜாதிக்கொரு தகனமேடை இருக்கே ,சமரசம் அங்கேயும் இல்லையே :)

      நனைவது யாருன்னு மற்றவங்களுக்கு தெரியாம இருக்க முக்காடு தேவையாயிருக்கே :)

      மஞ்சள் விளக்கு என்னாச்சு :)


      Delete
  5. 'ஸ்டப் பை ஸ்டப் ' ரசித்தேன் ஜி...

    ReplyDelete
    Replies
    1. இடையிலே 'பல்பு 'வாங்கலையே :)

      Delete
  6. நல்ல விஷயம்தானே நம் வாழ்வில் ஒளி ஏற்றுவார்களல்லவா
    ஒவ்வொரு ஸ்டெப்பிலும் அடியா
    சுவர்களுக்கும் காது இருக்காமே
    நடுத்தெரு ஆனாலும் வீட்டில்தானே
    சில இடங்களில் அதிகமாகவே நிமிர்ந்து நடக்கிறது கூடவே வரும் இன்னல்களைத் தெரிந்து கொள்ளாமல்

    ReplyDelete
    Replies
    1. வாழ்வில் ஒளி பிறந்தால் பரவாயில்லை ,அறையில் தானே ஏற்றப் போகிறார்கள் :)
      அடித்தாலும் கணக்காய்தான் அடிப்பாரா :)
      ஒரு காது ரெண்டு காதில்லே,நிறைய :)
      அப்படின்னு விளக்கம் தரணுமே :)
      பனியன் சனியனை அழைத்து வருமோ :)

      Delete
  7. ராஜா காது கழுதை காது மாதிரி ஆகாம இருந்தால்....ஒட்டு கேட்கலாம்....

    ReplyDelete
    Replies
    1. ஒட்டு கேட்கலாம்,ஓட்டுதான் கேட்கக் கூடாது ,இல்லையா தோழரே :)

      Delete
  8. ஒவ்வொரு ஸ்டெப்புமே சொல்கிறதே ஜோக்காக

    ReplyDelete
    Replies
    1. வாழ்க்கையே போர்க்களம் ,ஒவ்வொரு ஸ்டெப்பையும் ஜோக்காக வைப்பதில் தப்பில்லையே :)

      Delete
  9. நாம பல்பு வாங்காம இருந்தா சரி!!1

    ஸ்டெட் பை ஸ்டெப் ஹஹஹஹ்

    அனைத்தும் ரசித்தொம் ஜி

    ReplyDelete
    Replies
    1. வாங்கலைன்னாலும் கொடுக்காமல் இருக்கமாட்டாங்களே:)

      இதான் கணக்கு வாத்தியாருக்கு அழகா :)

      Delete
  10. நடுத்தெருவையும் ரசித்தோம்...விட்டுப் போனது அதில் சொல்ல...

    ReplyDelete
    Replies
    1. அவரை நீங்களும் நடுத்தெருவில் நிறுத்தலாமா :)

      Delete
  11. "பெண்களில் 'மசாலா'வும் உண்டு 'மலாலா'வும் உண்டு" என்ற பதிவு அருமை!

    ReplyDelete
    Replies
    1. காதலில் சைவமுண்டு அசைவமுண்டு ...பாடல் நினைவுக்கு வருதா :)

      Delete