7 April 2017

தேசீய நோயாகி விட்டதே டயாபெடிக் :)

டாக்டரின் சிபாரிசு சரிதானா :)
                ''கண் பார்வை நல்லாத் தெரியணும்னா காரட் சாப்பிடலாம் , என்ன கறி  சாப்பிடலாம் டாக்டர் ?''
               ''காரட்டைச்  சாப்பிடுற முயல் கறியைச் சாப்பிடலாமே !''

தேசீய நோயாகி விட்டதே டயாபெடிக் :)         
          '' விருந்து பரிமாறுகிறவர் சொல்ற விஷயத்தை  நம்பத்தான் வேண்டியிருக்கா ,ஏன் ?''
         ''பக்கத்து இலைக்கு பாயாசம் ஊற்று,அப்படியே எனக்கும் ஊற்றுன்னு  இப்போதெல்லாம்  யாருமே கேட்கிறதில்லையாம் !''

மருமகளை இந்த நிலையிலும் நம்பலைன்னா ....?
         ''உன்  மாமியாருக்கு இரக்கமே இல்லைன்னு  ஏண்டி சொல்றே ?''
        ''நான் காக்கா வலிப்புலே துடிச்சாலும்  பீரோ சாவியை என் கையிலே தரவே இல்லையே !''

நடிகைக்கு பிடிக்காத 'பெர்சனல் டச் ' :)
           ''அந்த இயக்குனர் படங்களில் 'பெர்சனல் டச் ' சீன்கள் சூப்பராய் இருக்கும்னு நடிகைகள் தவிக்கிறாங்க ,நீங்க  சான்ஸ்  கிடைத்தும்  ஏன்  விலகிட்டீங்க ?''
           ''பெர்சனல் டச்சை  அவர் படத்தோட நிறுத்திக்க மாட்டாராமே  ..அதான் !''

நதிமூலம் ,ரிஷிமூலம் மட்டுமா பார்க்கக் கூடாது :)
தோழிகளிடம் ...
தோழிகள் கொடுத்த 'டெட்டிபியர் 'கள் !
தோழிகளுக்கு ...
கைகழுவிய 'பாய் ப்ரண்ட்ஸ் 'கள் கொடுத்தது !

22 comments:

  1. முதலாவது என்னோடது... வோட்டைச் சொன்னேன்:).

    ReplyDelete
    Replies
    1. நானும் வோட்டைத் தான் நினைத்தேன் ,வேறென்ன இருக்கு :)

      Delete
  2. கண்பார்வை நல்லாத் தெரிஞ்சா ஓடற முயலைப் பிடித்து விடமாட்டாரா என்ன!

    இப்போல்லாம் நேரடியாவே கேட்டுவிடுவதே வழக்கம். டயாபெடிக்ஸ் இருந்தாலும்!

    காக்கா பிரியாணி செஞ்சு கொடுக்கச் சொல்லுங்க.. சாவியை கைல கொடுத்துடுவாங்க.

    இயக்குநர் மட்டும்தானா!

    ஓ...!

    ReplyDelete
    Replies
    1. அடடா முன்பே இது தெரியாம போச்சே :)

      இனிப்பு ஆசை விடாதே :)

      காக்கா பிரியாணிக்கு அவ்வளவு சக்தியிருக்கா :)

      இயக்குனரை இயக்குபவரும்தான் :)

      டெட்டிபியர் மூலம் பார்க்கக் கூடாது :)

      Delete
  3. எந்தக் காய்கறி வேண்டுமானலும் சாப்பிடலாம்...!

    பாயாசத்திற்கு ஆயாசப்பட வேண்டியதில்லை...!

    சாவியைக் கொடுத்தா மாமி சாக வேண்டியதுதான்னு தெரியுமுல்ல...!

    என்ன ரொம்ப டச் பண்ணிட்டீங்க...!

    கழுவிற மீன்ல நழுவுற மீன் இதுதானா...?!

    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. கறிக்கு மட்டும்தான் விதிவிலக்கு :)

      ஆயாசப் பட்டதால் வந்தது தானே டயாபெடிக்:)

      உயிரின் சூட்சுமம் புரிந்தது :)

      இதிலே அளவுமா இருக்கு :)

      நழுவினா பரவாயில்லை ,நழுவ விடுறாங்க வேணும்னே :)

      Delete
  4. முயல்க்கறி விலை ஏறிடாம... இருக்கணும்.

    ReplyDelete
    Replies
    1. கழுதைப் பாலே லிட்டர் இருநூறு ரூபாயாமே :)

      Delete
  5. பெர்சனல் டச்சிங் டச்சிங்தான்

    ReplyDelete
    Replies
    1. முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு போட்டுக்க முடியுமா :)

      Delete
  6. பந்தையக் கதையில் ஆமைதான் வென்றது ஆகவே ஆமைக்கறியே நல்லது என்று சொல்லதவரைச் சரியே
    பக்கது இலைக்காரர் சொல்லுவார் என்று எதிர் பார்க்கக் கூடாது
    அடுத்தடுத்து இதே ஜோக்கா
    பெர்சனல் டச் பெறாத நடிகைகளுமுண்டா
    எப்படிக் கிடைத்தால் என்ன கிஃப்ட் கிடைக்கிறதே

    ReplyDelete
    Replies
    1. கதையில் வெல்லலாம் ,நிஜத்தில் :)
      வேணும்னா வாங்கிக்க வேண்டியதுதானே :)
      இப்போதான் அந்த ஒற்றுமையைக் கவனித்தேன் :)
      செய்யாத இயக்குனரும் உண்டா :)
      கிஃப்ட் இல்லை ,இது கிக் :)

      Delete
  7. Replies
    1. கொஞ்ச நாளா ஆளைக் காணாமே,ஏதாவது மின்னூல் வெளியிடும் முயற்சியில் இருக்கீங்களா :)

      Delete
  8. டயாபெடிக்ஸ் தேசிய நோயாகிவிட்டதா?
    எல்லாம்
    தெருக் கடைச் சாப்பாட்டாலே!

    ReplyDelete
    Replies
    1. வீட்டுக்கு வரும் பல சரக்கும் மெல்லக் கொல்லும் விஷம்தானே :)

      Delete
  9. ....முயல் கறி யா...கண் நல்லா தெரிஞ்சா முயல் கரியே வேணாமே...

    ஜி டையபட்டிஸ்...மக்கள் வாங்கி சாப்பிட்டுட்டு கூட ஒரு மாத்திரை போட்டுக்கறாங்க....

    அனைத்தும் ரசித்தோம்

    ReplyDelete
    Replies
    1. தெரிந்தால் எதற்கு :)

      அப்படி செய்வது தவறுதானே :)

      Delete
  10. அருமையான நகைச்சுவை
    அனைத்தும் ரசித்தேன் நண்பரே ..!!

    ReplyDelete
    Replies
    1. 'டெட்டிபியர் ரகசியம் புரிந்ததா :)

      Delete
    2. ஓ புரிந்ததே..!!!!

      Delete
  11. தேசீ..ய நீரோட்ட்த்துல..கலந்துர கூடாதுன்னுதான் பாயசம் வேண்டாம் என்கிற நல்ல எண்ணத்தில்தான்..இப்படி...

    ReplyDelete