26 April 2017

இந்த காதல், தாலியில் முடியுமா :)

 படித்ததில் இடித்தது :)
                 ''ஏனுங்க ஆபிசர் ,மனுஷனுக்கு கை விரல்ரேகை வாங்கினீங்க ,மாட்டுக்கு என்ன வாங்குவீங்க ? அடுத்து pan கார்டும் கொடுப்பீங்களா ?குட்டிப் போட்டா birth சர்டிபிகேட்  கொடுப்பீங்களா ?''
      இடித்த செய்தி >>>மாடுகளுக்கும் ஆதார் கார்டு வழங்கப்படும் -மத்திய அரசு !
கதவைத் திறக்க கண்டக்டரின் ஐடியாவா :)
         ''காலிங் பெல் பக்கத்திலே ஒரு விசில் தொங்குதே ,ஏன் ?''        
          ''கரண்ட் கட் நேரத்தில் இந்த விசிலை ஊதி அழைக்கவும்னு எழுதி இருக்கேனே ,படிக்கலையா ?''

இந்த காதல், தாலியில் முடியுமா :)
           ''டார்லிங் ,நேற்று ஒரு கெட்ட கனவு ...நீயும் நானும் ரயில் தண்டவாளத்தில்  படுத்திருக்கிறோம் !''
            ''அய்யய்யோ ,அப்புறம் ?''          
           ''நீயும்தானே இருந்தே ,அப்புறம் நடந்தது உனக்குத்தான் தெரியுமே !''

வாலாட்ட யோசிக்கும் நாய்கள் :)
          ''டைப்பிஸ்ட் சாந்திகிட்டே யாரும் வாலாட்ட மாட்டேங்கிறார்களே ,ஏன் ?''
         ''அவங்க டைப் 'அடிக்கிற ' வேகத்தைப் பார்த்தே அரண்டு போயிருக்காங்களே !''

எது நிம்மதி காதலா ,கல்யாணமா, காதல் கல்யாணமா :)
    காதலே நிம்மதி என்று ...
   திருமணம் முடிந்த சில நாளிலேயே புரிந்துவிடுகிறது !

28 comments:

  1. மனுசனைவிட மாடு முக்கியமாக போச்சு ஆனால் விவசாயம் அவசியமில்லை இன்றைய அரசுக்கு.

    ReplyDelete
    Replies
    1. விவசாயி சாகணுமாம்,மாடு வாழணுமாம் ,நல்ல கொள்கைதான் :)

      Delete
  2. அனைத்தும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மாடுகளுக்கும் ஆதார் கார்டாம் ,தேவையா ஜி :)

      Delete
  3. Replies
    1. மாடுகளுக்கும் ஆதார் கார்டு என்பது உதைக்கத் தானே செய்யுது :)

      Delete
  4. முதல் ஜோக்கை அனுபவித்துச் சிரித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. மனுசனுக்கும் ஆதார் ,மாட்டுக்கும் ஆதார்ன்னா நல்லாவா இருக்கு :)

      Delete
  5. நம்ம கிட்டே ஓட்டு வாங்கிட்டு நம்மகிட்டே ஆதார் வாங்கிட்டு உதார் உடுற வேலைதான் நடக்கு நாட்டிலே

    ReplyDelete
    Replies
    1. ஆட்டுக்குட்டிக்கு மட்டும்தான் ஆதார் பாக்கி :)

      Delete
  6. இப்பத்தானே..ஆரம்பிச்சு இருக்காங்கே.......போகப் போகப் தெரியும்ல.....

    ReplyDelete
    Replies
    1. சரியாகத் தான் சொல்லியிருக்காக ..கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா.....:)

      Delete
  7. மாடும் அல்ல மற்றையவையும் கூட.

    படிப்பறிவு இல்லீங்க சாமி...!

    ரயில் போவதற்காகப் போடமா வச்சிருக்கிற புதுத் தண்டவாளத்தில யார்தான் தலைவச்சுப் படுக்க மாட்டாங்களாம்...!

    டைப் மெஷினே நகர மாட்டேங்கிதாம்...!

    ‘காதல் என்பது எது வரை? கல்யாணக் காலம் வரும் வரை...!’ போதும் ஒங்க நடிப்பு...!

    த.ம. 7


    ReplyDelete
    Replies
    1. மாடல்ல மற்றையவைன்னு வள்ளுவர் சொன்னது சரிதானா :)

      சுயபுத்தி இருக்கில்லே:)

      படுப்பதற்கு வேற இடம் கிடைக்கலையா :)

      சிஸ்டம் வந்த பிறகு யாரும் வாங்குவதே இல்லையே ,எப்படி நகரும் :)

      உண்மைக் காதல் தாலிக்குப் பிறகும் தொடர வேண்டாமா :)

      Delete
  8. என்னாது மாடுகளை முதன் முதலில் மனிசராக்கி, ஆதார் கார்ட்டா? அப்போ பூஸ் க்கு கொடுக்கும்போது மறக்காமல் எனக்கு தகவல் அனுப்பிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்:)..

    கோலிங் பெல் அருகில் விசில்:) நல்ல ஐடியா:)..

    ஊசிக்குறிப்பு:
    நான் இன்று வாயே திறக்காமல் போகிறேன் என ஜோக்காளிக்குச் சொல்லிடுங்கோ:).

    ReplyDelete
    Replies
    1. நீங்களே எடுத்து இருக்க மாட்டியளே ,பூஸைக் கூட்டியாங்கோ ,அட்டாச் கார்டா போட்டுறலாம் :)

      பயபிள்ளைங்க விளையாட்டுக்கு ஊதப் போறாங்கோ :)

      அதான் ஏன்னு கேட்கிறேன் :)

      Delete
    2. சரி விடுங்கோ இப்போ சொல்லி என்ன வரப்போகிறது?:) முதலிடம் போச்சே:) ஹா ஹா ஹா:)

      Delete
  9. மாடுகள் கோமாதாக்கள் அவைகளுக்கு உரிய மரியாதை தராவிட்டால் என்ன காவி அரசு வேண்டிக்கிடக்கு
    விசிலை யாராவது லவட்டிக் கொண்டு போகலாம் அப்ப என்ன செய்வீங்க
    இந்தக் காதல் ரயில் அடியில் முடியலாம்
    அடிக்கிற அடியைப் பார்த்து வால் சுருண்டு விட்டதாம்
    உங்கள் அனுபவம் எப்படி

    ReplyDelete
    Replies
    1. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் நாமதான் நம்பர் ஒண்ணாம்!வெளிநாட்டுக் காரனைச் சாப்பிட விடுபவர்கள் ,உள்நாட்டுக் காரனைச் சாப்பிட விடாமல் தடுப்பது என்ன நியாயம் :)
      நாய் செயினில் அடுத்து கட்டிட வேண்டியதுதான் :)
      முடிந்த வரலாறு இங்கேயே இருக்கே :)
      வால் மறுபடியும் நிமிறுமா,சந்தேகம்தான் :)
      உங்களை மாதிரிதான் ,வாலிபத்தில் காதலிக்க ........:)

      Delete
  10. நகைப்பணி தொடர்க

    ReplyDelete
    Replies
    1. மாட்டு உருவமாவது ஆதார் கார்டில் தெளிவாக இருக்குமா மது ஜி :)

      Delete
  11. அனைத்தும் ரசித்தோம்..ஜி. மொபைலில் இருந்து...அதான்...ஷார்ட்...

    ReplyDelete
    Replies
    1. ஷார்ட் கருத்து கூறலாம் ,ஷார்ட் டெம்பரா இருக்கக் கூடாது :)

      Delete
  12. காலிங் பெல் பக்கத்திலே ஒரு விசில் தொங்குதே
    அதுவா, நம்மாளுங்க கண்டுபிடிப்பு!
    எதுக்கு?
    கரண்ட் கட்டானால் ஊதி அழைக்கத் தான்...

    இப்படி எங்களைச் சிந்திக்க வைக்கிறியளே!

    ReplyDelete
    Replies
    1. உங்களை சிந்திக்க வைக்கும் விபரீத எண்ணம் நிச்சயமாய் எனக்குக் கிடையாது :)

      Delete
  13. வணக்கம் ஜி !

    ஆமா அந்த ஆதர காட்டில் அப்படி என்னையா விசேசம் இருக்கு ஒருவேளை மாடும் மனுசனும் ஒண்ணுதான் என்று சிம்பாலிக்கா சொல்றாங்களோ ம்ம்ம்ம் இருக்கட்டும் ஒரே ஒரு டவுட்டு காதலே போதுமானது என்று அனுபவிச்சு தானே சொல்றீங்க ஆங் .....

    அத்தனையும் ரசித்தேன் ஜி விசில் குறும்பு சுப்பர்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. புல்லு கொடுத்தா பாலு கொடுக்கும்உன்னால முடியாது தம்பின்னு கூட கிண்டல் பண்ணுவாங்க :)
      காதல் சுகமானது ,இன்று நினைத்தாலும் :)

      Delete
  14. tamil manam - 12
    அனைத்தும் வாசித்து இரசித்தேன் சகோதரா.
    https://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete