8 April 2017

கரண்ட் இல்லேன்னாலும் அவருக்கு காரியம் ஆகணும்:)

பாட்டிலே கதின்னு இருந்தா :)     
            ''தலைவரோட கட்டுப்பாட்டில்  கட்சி இல்லைன்னு தெரிஞ்சு போச்சா  ,எப்படி ?''
           ''அவரே ,அவர் கட்டுப்பாட்டில் இல்லையே !''

இருந்தாலும் இவருக்கு இவ்வளவு  கரிசனம் கூடாது :)           
              ''மேற்கூரையில்   திறக்கிற மாதிரி  மூடி வச்சிருக்கீங்களே ,ஏன்  ?''
              ''கூரையைப் பிச்சுகிட்டுக் கொடுக்கிறக்  கடவுளுக்கு வீண் சிரமம் கொடுக்கக் கூடாதுன்னுதான் ..!''

கரண்ட் இல்லேன்னாலும் அவருக்கு காரியம் ஆகணும்:)
            ''அய்யா பெரியவரே ,கிராமத்தில் இருந்து வந்து இருக்கீங்க சரி ,மேட்னி  ஷோவுக்கான 'கரண்ட் 'புக்கிங் முடிஞ்சுப் போச்சே !''
           ''அப்படின்னா ஜெனரேட்டர் புக்கிங் ஆரம்பீங்க !''

குடிகாரங்க  சாப்பிட வேண்டியதும் ,வேண்டாதமும் :)
           ''உங்க வீட்டுக்காரர் உடம்பு தேறணும்னா நிறைய பழங்கள் சாப்பிடணும் !''
            ''பழங்'கள் ' சாப்பிட்டு பாழாப்போன மனுசனுக்குப் புரியுற மாதிரி சொல்லுங்க ,டாக்டர் !''

'கடனே'ன்னு எதையும் செய்யக் கூடாது :)
கொள்ளை,கொலைச் செய்யும் ...
ரௌடிகளுக்கும் கூட  தனித்துவமான அடைமொழி பெயர்கள் !
அவர்களின் பெயரில் மட்டுமே உள்ள  தனித்துவத்தை 
நாம் செயலில் காட்டினால் 
நாமும் இங்கே ஹீரோதான் !

25 comments:

  1. Replies
    1. மனிதனும் நாயும் ஒன்றாகி விட்டதையும் தானே :)

      Delete
  2. எந்த நாயும் நம்ம கட்டுப்பாட்டில் இல்லைன்னு சொல்ல முடியாம பண்ணிட்டாருல்ல...!

    எம் மதமும் சம்மதமுன்னு சொல்லியும்... கடவுள் எவனும் கொடுக்கிற மாதிரி தெரியலையே...!

    அதெல்லாம் முடியலைன்னா... ஆடினரி புக்கிங் செஞ்சு ஒரு டிக்கட் மட்டும் கொடுங்க...!

    ஒரே மரத்துக் கள்தானே டாக்டர்...!

    என்னை என்ன காலின்னு நெனச்சியாடா...? கபாலிடா...!

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. தலைவர் எப்படியோ தொண்டனும் அப்படியே கட்சி விளங்கிடும் :)

      எந்த கடவுளும் இருந்தால்தானே :)

      ஐந்தோ பத்தோ மேலே வாங்கிக்குங்க :)

      அந்த மரத்தோட இவரை நேர்ந்து விட்டுடலாமா :)

      கபாலி சிங்கிலா வா ,வச்சிக்கிறேன் :)

      Delete
  3. எனக்கென்னமோ சந்தேம்...

    ''மேற்கூரையில் திறக்கிற மாதிரி மூடி வச்சிருக்கீங்களே ,ஏன் ?''
    ''கூரையைப் பிச்சுகிட்டுக் கொடுக்கிறக் கடவுளுக்கு வீண் சிரமம் கொடுக்கக் கூடாதுன்னுதான் ..!''

    இந்த கரிசனத்தை காட்டினது நீங்கதானோ என்னமோனு...!!

    ReplyDelete
    Replies
    1. மண்டையைப் பிய்ச்சிக் கிட்டு யோசித்தது மட்டுமே நான் :)

      Delete
  4. தலைவரோட பொண்டாட்டி கையிலதானே இருக்கு... அப்புறமென்ன ?

    ReplyDelete
    Replies
    1. தலைவருக்கு பெண்டாட்டியே தேவலை :)

      Delete
  5. அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. 'கடனே'ன்னு என்று ரசிக்க வில்லை தானே :)

      Delete
  6. 'கடனே'ன்னு நீங்க எதுவும் செய்வதில்லை ஜி...

    ReplyDelete
    Replies
    1. உண்மைதானே இரண்டு நாள் வெளியூர் வாசம் ,செல் மூலம் மறுமொழி கூறிக் கொண்டிருக்கிறேனே :)

      Delete
  7. பழங் "கள்" ஹஹஹ

    அனைத்தும் ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. நமக்குபழங்களே போதும்:)

      Delete
  8. ஜோக்குகளை ரசித்தேன். குடிமகனின் அரவணைப்பை வெகுவாக ரசித்தேன் பகவான்ஜி!

    ReplyDelete
    Replies
    1. இப்படி நாயோடு இவன் படுத்தால் மனைவிதான் என்ன செய்வாள் :)

      Delete
  9. காரியக்காரர் என்று சொல்வது இவரைத்தானா..........

    ReplyDelete
    Replies
    1. காரியக் கிறுக்கு என்றும் சொல்லலாம் :)

      Delete
  10. அவருக்கு பாட்டில் தட்டுப்பாடு
    ஜன்னலைத் திறந்து வையுங்கள் காற்று வீசட்டும் என்ற்றாராமொருவர் இவர் ஒருபடி மேலே போய் கூரையைத் திறந்து வைக்கிறார் கொடுக்கும் தெய்வதுக்கு சுலபமாக இருக்க
    விவரமான கிராமவாசிதான்
    பழங்”கள்ளிலே “ முங்கியவர் பழங்களில் திருப்தி அடைவாரா
    கடனே என்பதையும் உடனே செய்தால் த்னித்துவமாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. அதான் குடம் குடமா குடிக்கிறாரா :)
      அந்த வழியா கொள்ளைக் காரன் வந்து விடப் போறான் :)
      கொய்யாலே முடியுமா :
      உடம்பு தேறுமா :)
      வேகம்தான் முக்கியமா :)

      Delete
  11. பழங்'கள் ' கூடாதுதானே :

    ReplyDelete
  12. அனைத்தும் சிரிக்க வைத்தன. குறிப்பாக இரண்டாவது ஜோக் சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. கூரை ஓட்டை கொடுக்குமா ,இருப்பதையும் எடுக்குமா :)

      Delete
  13. ' 'பழங்'கள் ' சாப்பிட்டுப் பாழாப்போனவருக்கு
    "நிறைய பழங்கள் சாப்பிடணும்!'' என்கிறாரோ
    டொக்டர்

    ReplyDelete
    Replies
    1. உண்மையான அர்த்தம் இப்போதாவது புரிந்து இருக்குமா :)

      Delete