10 April 2016

'நொறுக்குத் தீனி'யர்களே, ஞாபகம் வைச்சிக்குங்க !

குடிகாரன் என்பதை இப்படியா குத்திக் காட்டுவது :)       
           '' பால் கார்டு வாங்கப் போற அப்பா ,பால் பூத் நம்பரைக் கேட்டா ,ஏம்மா எரிஞ்சு விழுறே ?''
           ''மாசாமாசம் சொன்னாலும் மண்டையில் ஏற மாட்டேங்குது ,டாஸ்மாக் கடை நம்பரைச் சொன்னா போதும்  ,அது இருக்கிற இடத்தை  சரியா சொல்றாரே !''
மாமியார் ,மருமகளுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை :)
          "என்னதான் சண்டை போட்டாலும் மாமியார் மருமகள் ,ஒரு விஷயத்திலே ஒற்றுமையா  இருக்காங்களா ,எதிலே?"
          "புருசன்களை திட்டுவதில் தான் !" 
கணவர் ரஜினி ரசிகர் என்பதற்காக இப்படி பாடலாமா :)
      ''உன் புருஷன்  இமயமலைக்கு போகத்  துடிக்கிறாரா ?'சேலை சோலையே 'ன்னு பாடிகிட்டு ,உன்னை சுற்றி சுற்றி வந்தவராச்சே அவர் ?''
      ''இப்போ 'சேலையில் சிக்கிக் கொண்டா  சொர்க்கத்தின் வழியேதும் தெரியாது'ன்னு  பாட ஆரம்பித்து விட்டார்டி!''
'நொறுக்குத் தீனி'யர்களே, ஞாபகம் வைச்சிக்குங்க :)
           ''என்னங்க ,அந்த மனோ தத்துவ டாக்டர் என்ன சொல்லி உங்களைத் திருத்தினார் ?''
         ''பசியும்  ,ஃபிரிட்ஜ் பல்பும் ஒண்ணு ...கதவை திறந்தா மட்டும் பல்பு எரியுறமாதிரி ,பசிச்சா மட்டும்தான் சாப்பிடணும்னு சொன்னாரே !''

தானாடா விட்டாலும் தன் சதை ஆடுமோ :)
மேடையில் முழங்கும் தலைவர் ...
தன்னையறியாமல்  ஒப்புதல் வாக்குமூலம் தந்தார் ...  
''பாரதி அன்றே சொன்னார்  ,
பெண்மை வாழ்கவென்று கூத்தடிப்போமடா ''என்று !

22 comments:

  1. அது கால் தானாகவே இழுத்துச் சென்று விடுமே! டாஸ்மாக் கடைக்கு நம்பர் எல்லாம் உண்டா?

    நொறுக்குத் தீனியர்களுக்கு நல்ல அறிவுரை!

    ReplyDelete
    Replies
    1. கண் போன கால் போகலாமா ,கால் போன போக்கிலே மனிதன் போகலாமா :)

      ஃபிரிஜ்ஜின் மேல் எழுதி ஒட்டி விடலாமா :)

      Delete
  2. பாம்புக்குப் பால் வார்த்த கதையால்ல எல்லாம் பாழாப்போச்சு...! படியில பார்த்து கால வை... படிப்படியா கடைய மூடப்போறாங்க...!

    புருச(னிய)ன்... வீட்டில் வாழப்போகும் பெண்ணே! சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு...!

    கண்ணை நம்பாதே... உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்... உண்மை இல்லாதது...ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ
    ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம்... சுக‌மே ம‌ந்திர‌ம்... ம‌னித‌ன் எந்திர‌ம்...!

    டாக்டர் சொலறது எனக்கு கேக்கிது... வயிறு கேக்க மாட்டேங்கிதே...! இனி கதவை திறந்தா பிரிட்ஜ் பல்பு எரியாத மாதிரி பாத்திக்க வேண்டியதுதான்...!

    சொக்கத்தின் திறப்பு விழா... புது சேலைக்கு வசந்த விழா... எங்கிருந்தாலும் பெண்கள் வாழ்க...!

    த.ம. 2













    ReplyDelete
    Replies
    1. ஐந்தாண்டு அவகாசம் போதாதா :)

      சனியன் இல்லை சனியன்கள் :)

      மாயா மாயான்னு மங்கைகளுடன் கூத்தடித்தால் சரியாய் போகுமா :)

      வாய் கட்டுப்படாது என்பது உண்மைதான் :)

      சேலையா ,சோலையா,இப்போ எனக்கே சந்தேகம் வந்திடுச்சு :)


      Delete
  3. Replies
    1. குத்திக் காட்டியதையும் ரசிக்க முடியுதா :)

      Delete
  4. மருமகளும் மாமியாரும் இதுலையாவது
    ஒற்றுமையா இருக்காங்களே.....

    ReplyDelete
  5. மருமகளும் மாமியாரும் இதுலையாவது
    ஒற்றுமையா இருக்காங்களே.....

    ReplyDelete
    Replies
    1. உங்க கண்ணே பட்டுடும் போலிருக்கே :)

      Delete
  6. Replies
    1. வெயிலுக்கு ரொம்ப கூலா இருக்கா :)

      Delete
  7. அனைத்தும் அருமை. மாமியார் மருமகள் ஒற்றுமை மிகவும்.

    ReplyDelete
    Replies
    1. மாமியார் மருமகள் ,ஒரு விஷயத்தில் ஒற்றுமையாய் இருப்பதே அருமை என்றால் ,எல்லா விஷயத்திலும் என்றால் புருஷன்மார்கள் பாடு கஷ்டம்தான் :)

      Delete
  8. 01. இதெல்லாம் ஒரு பிரச்சினையா ? யாருக்கு எது முக்கியமோ.. அதுதான் மண்டையில் ஏறும்.
    02. இரண்டும் ஓரினம்தானே..
    03. அனுபவம் சரியில்லையோ.... ?
    04. நல்ல டாக்டர்தான் இவரு எந்த ஊருல குப்பை கொட்டுறாரு... ?
    05. சரியாத்தான் புழிஞ்சு இருக்காரு...

    ReplyDelete
    Replies
    1. அதானே ,தேவையுள்ளவை தானே மந்டையுஇல் ஏறும் :)
      பிறகேன் ,மல்லு கட்டுகிறார்கள் :)
      போகப்போக அப்படித்தானே:)
      நம்ம ஊருலேதான் :)
      அவருக்கு புரிதல் அப்படித்தான் :)

      Delete
  9. தல சூப்பர் தல
    தம ஏழு

    ReplyDelete
    Replies
    1. பிரிட்ஜ் பல்பு தத்துவம் சரிதானே :)

      Delete
  10. 'நொறுக்குத் தீனி'யர்களே, ஞாபகம் வைக்காம இருக்கும்போது.... நமக்கு எதற்கு...!!!

    ReplyDelete
    Replies
    1. அதானே ,நம்ம வீட்டிலே ஃபிரிஜ்ஜும் இல்லே ,நொறுக்குத் தீனியும் இல்லை ,அதனால் ஒரு கவலையும் இல்லை :)

      Delete
  11. நொறுக்குத் தீனித் தத்துவம் சூப்பர் நல்ல விஷயம்.

    டாஸ்மாக், பால்பூத் அஹ்ஹஹஹ் அதான் இப்பத்த நிலைமை

    மாமியார் மருமகள் பெண்களாச்சே..!!!

    ReplyDelete
    Replies
    1. ரசிப்புக்கு நல்ல தீனிதானா:)

      பால் பூத்களை விட டாஸ்மாக் கடை அதிகம் இருக்கலாம் :)

      மற்ற விஷயங்களில் ஏன் ஒத்துப் போவதில்லை :)

      Delete