24 April 2016

இராத்திரி கதவைத் தட்டுவது நாணயமா :)

 இந்த ஐடியாவின் காப்பிரைட்  எனக்கே :)          
             ''நீரிழிவு நோயாளிகளின் ஒட்டு மொத்த வாக்குகளையும்  அந்த கட்சி அள்ளிடுமா,ஏன் ?''
           ''தேவைப்படுவோர்க்கு , ரேஷனில் சீனிக்குப் பதிலா  சுகர் ப்ரீ  மாத்திரை தருவோம்னு தேர்தல் அறிக்கையிலே சொல்லி இருக்காங்களே !''
முட்டாள்களை   வேலை வாங்க முடியுமா :)
          ''என்னை ஏன் வேலையிலிருந்து  நீக்குறீங்க ,முதலாளி ?''
          '' ஃபோர்மேனைக் கூப்பிடுன்னு சொன்னா ,நாலு பேரைக் கூட்டி வர்றீயே !''
சம்பாதிக்க முடியாதவன் ஆம்பளைன்னு மனைவி கேட்கிற மாதிரி ....!
          ''நம்ம பக்கத்து வீட்டு பரமசிவத்துக்கு ஓட்டுக்கு   பணம் கிடைக்கலே போலிருக்கா ,ஏன் ?''
           '' பணம் தர வக்கற்றவன்  எல்லாம் தேர்தல்லே ஏன் நிற்கணும்னு ஆவேசமா கேட்டுகிட்டு இருக்காரே !''
இராத்திரி கதவைத் தட்டுவது நாணயமா :)
             ''உங்க வீட்டுலே குடியிருக்கிறவர் ரொம்ப ,ரொம்ப நாணயமானவரா ,எப்படி ?''
             ''ஒண்ணாம் தேதி பிறந்ததும் இராத்திரி 12மணிக்கே வாடகையோட வந்து கதவை தட்டுகிறாரே !''
விண்மீன் உயரத்தில் மீன் விலை !
உயிரையும் பணயம் வைத்து ...
நடுக்கடலில் மீனவன் மீன்பிடிக்க...
தரையில் நிற்பவன் விலையை வைக்கிறான் ..
பிராய்லர் கோழிக்குகூட பண்ணை வேண்டும் 
தீனியும் போடவேண்டும் ...
கடல் அன்னை இலவசமாய் தரும் 
மீனின் விலையோ கோழி விலைக்கும் அதிகம் ...
மீன் தரகருக்கு என்று வருமோ தடைக்காலம் ?

16 comments:

  1. உண்மையில் அப்படியொரு வாக்குறுதி கொடுக்கும் கட்சி வாக்குகளை அள்ளிவிடும்.
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. சர்க்கரை நோய்க்கு முக்கியத்துவம் தருமா கட்சிகள் :)

      Delete
  2. இனி வெளிநாடுகளுக்குத்தான் சீனி வாசம் செய்ய வேண்டி இருக்கும்...!

    என்னைய வேலையிலிருந்து நீக்குனதுக்கு ரொம்ப நன்றிங்க முதலாளி... இந்த வேலை ரொம்ப போர் அடிக்குது...!

    இங்கு வாக்கு வியாபாரிகள் வசிக்கும் இடம்...!

    வீட்டுக்காரர் இல்லேங்கிறது எப்படித் தெரிந்து கொண்டார்...?

    நாங்கள்தான் இலவசமா எதையும் தரவேண்டாமுன்னு சொல்றோமுல்ல...!

    த.ம. 2



    ReplyDelete
    Replies
    1. சீனிக்கு பதிலாய் சுகர் பிரீ இறக்குமதி செய்துக்கலாமா :)

      திட்டமிட்டே செய்து இருப்பாரோ :)

      இடமில்லே நாடு :)

      அவர் வேறங்காவது வசூலுக்கு போயிருப்பாரோ :)

      இது கடல்அன்னைங்கோ :)

      Delete
  3. இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. மீன் விலை அநியாயம்தானே அய்யா :)

      Delete
  4. இராத்திரி கதவைத் தட்டுவது நாணயமா :)

    நாணயம் தான்....
    ஆனால் இதெல்லாம் அவனுக்கே
    கொஞ்சம் ஓவரா தெரியலையா...!

    ReplyDelete
    Replies
    1. மணவையார் சொன்ன மாதிரி ஏதாவது வில்லங்கம் இருக்குமோ :)

      Delete
  5. வாய்விட்டு சிரிக்கவைக்கும் நல்ல நகைச்சுவைகள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஒண்ணு ரெண்டுன்னு தரம் பிரிங்க :)

      Delete
  6. நாணயம்அவசியம் என்பதை தெரிந்தவர்...

    ReplyDelete
    Replies
    1. நாணயம் மனுஷனுக்கு அவசியம் என்ற பாடலை விரும்பி கேட்பாரோ :)

      Delete
  7. நாணயம்அவசியம் என்பதை தெரிந்தவர்...

    ReplyDelete
    Replies
    1. நீங்க இருமுறை சொல்வதைப் பார்த்தால் ,அது உண்மைதான் போலிருக்கே :)

      Delete
  8. 01. அரசியல்ல இப்படியெல்லாம் இருக்கா....
    02. இங்கிலீச்சூ ரொம்ப படிச்சா இப்படித்தான்.
    03. ஆதங்கங்தான்.
    04. வேற ஏதும் ப்ளானோ..
    05. நியாயம்தான் ஜி

    ReplyDelete
    Replies
    1. இருந்தால் நல்லதுதானே :)
      வேலைய விட வேண்டியிருக்குமோ :)
      இப்படியும் பேச வைக்குமா :)
      உங்களுக்கும் சந்தேகமா :)
      அநியாய விலைதானே :)

      Delete