4 April 2016

செல்போன் ,மனைவியா கணவனா :)

 தலைஎழுத்து  அவரவர் தாய் மொழியில் தானா  :)
                 ''ஜோசியரே ,என் நண்பரோட ஜாதகத்தைப் பார்த்து ,அவர் தலைஎழுத்தைச் சொல்ல முடியாதா ,ஏன் :)
                   ''அவர் மலையாளியாச்சே !''
செல்போன், மனைவியா கணவனா :)
               ''என்னங்க ,செல்போனைப்  பார்த்தா என் நினைப்பு  வருதா ,ஏன்?''
               '' இருந்தாலும் தொல்லையா இருக்கு ,இல்லாட்டியும் கஷ்டமா இருக்கே !''

கணவன்கிட்டே உரிமையா சண்டை போடலாம் ,வெளியில் :)
         ''என்னங்க , என் குரல்லே நடுக்கம் தெரியுதுன்னு பாட்டுப்போட்டி தேர்வில் இருந்து என்னை நீக்கிட்டாங்க !''
         ''என் புருஷனையே நடுங்க வைக்கிற என் குரல்லே நடுக்கமான்னு சண்டை போட்டிருக்க வேண்டியது தானே ?''
பித்ருக்களை அறியாத சத்ருக்களின் கேலி :)
       ''நீங்க எச்சில் கையாலே காக்கையை விரட்ட மாட்டீங்களாமே,ஏன்  ?''
       ''என் பித்ருக்களான காக்கைகளுக்கு  எதுக்கு எச்சில் பருக்கைன்னுதான் ? ''
 சேவலின் அவசரச் செய்தி ,நமக்கல்ல :)
கோழி கூவியா பொழுது விடியப் போகிறது ?
இல்லை ,சேவல் கூவியா பொழுது விடிகிறது ?
சேவல் இனமே இல்லாதபோது விடியாமலா இருந்தது ?
'நான் ஒருத்தன் இங்கே இருக்கேன் 'னு சேவல் 'சிம்பாலிக்காய் 'பெட்டைக் கோழிக்கு சொல்வதை எல்லாம் ...
நாம் சீரியசாய் எடுத்துக் கொள்ளக் கூடாது !

20 comments:

  1. ஹஹஹஹ்ஹ்...

    செல்ஃபோன்....தொல்லையா இருந்தாலும் தூக்கிப் போடவா முடியும்..

    சேவலின் அவசரச் செய்தி ஹஹஹஹ்ஹ .
    .

    ReplyDelete
    Replies
    1. போட்டால் நட்டம் நமக்குதானே :)

      நான் ரெடி நீங்க ரெடியான்னு சேவல் கேட்கிறதா :)

      Delete
  2. அனைத்தையுமே ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. தமிழ் மணம் ,நீங்கள் சொன்னது போல் auto mode ஆகி விட்டது போலிருக்கே ,யாரும் சரி செய்வதாக தெரியவில்லையே !சில நேரங்களில் மட்டுமே வோட்டு போட முடிகிறது :)

      Delete
  3. அனைத்தும் அருமை வழக்கம்போல்.

    ReplyDelete
    Replies
    1. வழக்கம் போல் ,தமிழ் மணம் ஒத்துழைத்தால் சந்தோசப் படலாமே அய்யா :)

      Delete
  4. இதுக்கு மொழி ஒரு தடையில்லையே... நீங்க என்ன உண்மையா சொல்லப் போறீங்க... சும்மா அடிச்சு விடுங்க...! ஜோசியரே ஒங்க தலையெழுத்து நல்லா இருக்கு...!

    எப்ப பாத்தாலும் சினிங்கிக்கிட்டே இருக்கே...! அடியே... பிடி... இருந்தாலும் ஆயிரம் பொன்... இல்லைன்னாலும் ஆயிரம் பொன்...மிச்சம்...! சுக வேதனை...!

    ஏழு கழுத வயசாச்சு... கை காலே நடுங்குது... குரல் நடுங்குதாமாம்... போயி சோறு பொங்கிற வேலைப் பாருடி... ஒன்ன கல்யாணம் செஞ்சதில இருந்து நா பாடாப் படுறேன்... பாட்டு வேறயா...?

    ‘அவர்அவர் எச்சத்தால் காணப்படும்’-ன்னு காக்கை சொல்லிவிடக் கூடாதில்ல...!

    பெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை கட்டி வைத்தவன் யாரடா...?!

    த.ம. 2





    ReplyDelete
    Replies
    1. அடிச்சு விடுறதுக்கு முன்னாடி ,எனக்கு மலையாளமும் தெரியும் என்று சும்மா அடிச்சு விடுங்க :)

      சுகமான சுமைகள் இல்லையா :)

      ஏழு கழுதை வயசுன்னா எவ்வளவுன்னு ஒரு கழுதைக்கும் தெரியாது :)

      எச்சில் பருக்கைக்குப் பதிலாய் பிரியாணி கொடுப்பாரா ,என்னவோ :)

      அதுக்கு தாலி எடுத்து கொடுத்தவன் எவனடா :)

      Delete
  5. ரசித்தேன் ஜி!
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. தலைஎழுத்தே என்று படிக்காமல் ரசித்தமைக்கு நன்றி ஜி :)

      Delete


  6. செல்ஃபோன்....தொல்லையா இருந்தாலும் தூக்கிப் போடவா முடியும்.. ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. வயசானாலே செல்போன்(ம்) தொல்லைதான் :)

      Delete
  7. ஆஹா நண்பரே
    செல்போன் இருந்தாலும் தொல்லை
    இல்லாட்டியும் கஷ்டம்
    அருமையான காமெடி.....

    சேவல் காமெடி சிறப்பு...

    ReplyDelete
    Replies
    1. இதை சொன்னாலும் குத்தம் ,சொல்லாட்டியும் குத்தாமா:)

      Delete
  8. கணவனுக்கு மனைவியாகவும்..மனைவிக்கு கணவனாகவும் ஆக இந்த உலிகத்திலே.. ரெண்டுமாக இருப்பது செல்போன்தான் தலிவரே...

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வ்வ்வ்வ் ,உண்மையை இப்படி போட்டு உடைச்சீட்டிங்களே :)

      Delete
  9. 01. ஆஹா மொழிப்பிரச்சினை.
    02. ரெண்டும் ஒண்ணாகிப்போச்சா ?
    03. பருப்பு வெளியில் வேகாது போல...
    04. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாமல் பேசணும்.
    05. ஸூப்பர் தகவல் ஜி

    ReplyDelete
    Replies
    1. பிரச்சினை தராத மொழியில் அல்லவா தலைஎழுத்து இருக்கும் :)
      இரண்டுமே புண்ணாக்கிவிட்டது :)
      வேக வேண்டிய இடத்தில் வெந்தால் சரி :)
      அது எல்லாராலும் முடியாதே :)
      தகவலா இது ,தத்துவமாச்சே :)

      Delete
  10. வழமை போல அனைத்தும் ரசித்தேன் ஜி!

    ReplyDelete
    Replies
    1. சேவலின் அழைப்பு யாருக்கு என்று புரிந்து இருக்குமே ஜி :)

      Delete