27 April 2016

பெண் பார்க்க ரெண்டு நாள்தான் ,நல்ல நாளா :)

மரமும் அவரைப் போலத்தானா :)                
                    ''நீங்க முன்பு எப்போதாவது மரக்கன்றை நட்டு இருக்கீங்களான்னு ஏன் கேட்கிறீங்க ?'' 
                    ''நீங்களே பாருங்க தலைவரே  ,நீங்க போஸ் கொடுக்கிற மாதிரியே இருக்கே !''
பெண் பார்க்க ரெண்டு நாள்தான் ,நல்ல நாளா :)
                  ''என்னங்க ,நம்ம பொண்ணைப் பார்க்க வர்றவங்களை சனி ,ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டிட்டு வரச் சொல்றீங்களே ,ஏன் ?''
            '' டிவி சீரியல்களைப் பார்க்காமல் ,அன்னைக்குத்தானே உங்க இரண்டு பேர் முகமும் அழுது வடியாம இருக்கு   !''
வாயை மூடி பேசவும் முடியும் என்றால் .....!
          ''அந்த படத்தைப்  பார்க்கப் போறேன்னு சொன்னா ...காதை  மூடி கேட்கவும்னு ஏன் சொல்றீங்க ?''
          ''இரட்டை அர்த்த ஜோக்குகள் நிறைய இருக்கே !''
குறள் வழி நடக்கும் நாய் !
சிலர் நாய் வாலை வெட்டிவிடுகிறார்கள் ...
நாய் வாலறுந்த பின்னாலும் 
வெட்டியவர்களை 'வெட்டி விடாமல் 'விசுவாசமாய் 
சுற்றி சுற்றி வருகிறதே !
கல்யாணமானா ஒரே சோகம்தானா :)
         ''நீங்க கல்யாணம் ஆன பிறகுதான் ஜோக் எழுத ஆரம்பிச்சீங்களா,ஏன் ?''
         ''நாமதான் சிரிக்க முடியலே ,மத்தவங்களாவது சிரிக்கட்டுமேன்னுதான் !''
இதற்கு வந்த சுவையான பின்னூட்டங்கள் ....
அம்பாளடியாள் 
உண்மையச் சொல்லுங்கள் நீங்களும் கல்யாணம் ஆன பின்னாடி தான்
ஜோக் எழுத வந்தீங்களா சகோதரா ?...:)))
Bagawanjee KA
இங்கே என் கதையே தலைக்கீழ் ...நான் ஜோக்காளியையே கட்டிக்கிட்டு அழுறேன்னு,என்னை கட்டிக்கிட்ட வூட்டம்மா அழுவுறாக!
Mythily kasthuri rengan
நான் கேட்கனும்னு நினைத்தேன் . அவங்க கேட்டுட்டாங்க:))
Bagawanjee KA
உங்க சார்பா நான் அவங்களுக்கு நன்றி சொல்லி விடுகிறேன் !
சைதை அஜீஸ் 
இப்போது வரும் படங்களெல்லாம் கண்ணை மூடிக்கொண்டுதான் பார்க்கமுடியும்! 
Bagawanjee KA
அதனாலதான் ஜனங்களும் காசை செலவழிக்காமல் பார்க்க நினைக்கிறார்கள் !
விமல் ராஜ்
ஹா..ஹா...ஜீ ...பேசாம நீங்க எழுதின ஜோக்கை எல்லாம் தொகுத்து ஒரு புத்தகமா போடலாம்... அதுவே ரெண்டு மூணு பாகங்கள் போகும் !!! வாழ்த்துக்கள்...
Bagawanjee KA
ஜோக்குக்கு வந்த ரசனையான கமெண்டுக்களையும் சேர்த்து தொகுத்தால் நல்லாத்தான் இருக்கும் ...ஆனால் என்ன. வராத மொய் கணக்கிலே நான் ஒரு பத்தாயிரம் ரூபாய் செலவு செய்ய வேண்டி இருக்கும் ,தேவையா ?
 டிபிஆர்.ஜோசப்
கல்யாணத்துக்குப் பிறகுதான் நகைச்சுவை உணர்வு அதிகமாகும் போலிருக்கு! பிறருக்காகத்தான்னாலும் அதற்கும் ஒரு பெருந்தன்மை வேணுமே :))
Bagawanjee KA
மனைவியானவள் நகையை மட்டுமே ரசிக்க ஆரம்பித்து விடுகிறாள் ,கணவனானவன் மனைவியிடம் புன்னகையை மட்டுமே எதிர்ப்பார்ப்பதால் ,நகைச்சுவை உணர்வு அதிகமாகத்தானே செய்யும் ?

16 comments:

  1. கூடவே ஒரு துரோகியா!

    அடடே... நல்ல ஐடியா..

    கண்ணுக்கு மட்டும் வேலை...!!

    அதற்கு என்ன தெரியும் பாவம்? அல்லது சோறு கிடைக்க இந்தப் பாழாய்ப்போன மனிதர்களைத்தானே நம்பியிருக்க வேண்டியிருக்கிறது!

    முன்பு என் பின்னூட்டம் அங்கு இல்லையா ஜி?


    ReplyDelete
    Replies
    1. துரோகி வேறெங்கும் இல்லை ,தோள் மேலேயே :)

      ஐடியா ,வொர்க் அவுட் ஆகுமா :)

      பிரேமுக்கு பிரேம் ஹீரோயினை குளுகுளுன்னு காட்டுறாங்களோ :)

      ஆறறிவு என்றால் பழிக்குப் பழி வாங்கியிருக்கும் :)

      ரசிக்க வைத்த உங்க கமெண்ட் இதோ.... ஹா...ஹா...ஹா... ரொம்ப நெட்டையாக இருப்பவர்கள் என்ன செய்வார்கள்?

      ஹா...ஹா...ஹா... கொசு புண்ணியம் கட்டிக் கொள்கிறது!

      ஹா...ஹா...ஹா... அப்போ மைசூர்ப் பாகுல மைசூரைக் காட்டச் சொல்லுங்கள்!

      Delete
  2. பாஸ்... ஒங்க போஸ்... பாஸ்... பாஸ்...!

    நாளைக்கு நடக்கப் போறத நெனைச்சா கவலையாத்தான் இருக்கு... ஏங்க... அவ செத்துப்போயிடுவாளா...இல்ல... பொழச்சுக்குவாளா... ஏங்க... சொல்லுங்க...! நெஞ்சு ‘பக் பக்’குன்னு அடிச்சுக்கிது...!

    எதையுமே மூடி வச்சுப் பாக்கப் பிடிக்காதே...!

    நாய் வாலை நிமிர்த்த முடியாதுதான்... ஆனால் நாய் வாலை வெட்ட முடியாதுன்னு சொல்ல முடியாதில்ல...! ‘நன்றி கெட்ட மனிதனைவிட நாய்கள் மேலடா...!’

    சிரிப்பாய்ச் சிரிக்கிது...! நகை எதற்கு...? புன்னகை போதுமே...! சிரி... சிரி... சிரி...!

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. நடிப்பிலே சிவாஜியை மிஞ்சிட்டீங்க பாஸ் :)

      உன் கவலைய திங்கக் கிழமைக்கு தள்ளிவை ,ரெண்டு நாள் சிரிச்ச முகத்தோட இரு :)

      முழுக்க திறந்து காட்டினாலும் பிடிக்காம போயிடுமே :)

      நாய் ,வாலை ஆட்டுவதுதான் அழகு ,அதையும் வெட்டினா ..ரசனைக் கெட்ட ஜென்மங்கள் :)

      நகை வாங்கிக் கொடுங்க ,இன்னும் எப்படி சிரிப்பு வருதுன்னு பாருங்க :)

      Delete
  3. ஜோக்ஸும் பின்னூட்டங்களும் சூப்பர்,

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டமும் சேர்த்து ஒரு ஜோக்ஸ் புத்தகம் வெளியானால் அது புதுமைதானே ஜி :)

      Delete
  4. 01. இவனே மர(த)த்தலைவன்.
    02. உண்மைதானே..
    03. காதை மூடி எப்படி கேட்பது ?
    04. நன்றியுள்ளவர்
    05. ஜி வீட்டில் படித்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்.
    06. நல்ல மணம்தான் உங்களுக்கு....

    ReplyDelete
    Replies
    1. மடையர்களுக்கு மரத் தலைவனே போதும் :)

      சீரியல் பார்த்து வாழ்கையைச் சிந்திக்க மறுக்கலாமா :)

      உதட்டு அசைவைப் பார்த்தால் புரியாதா :)

      நாயார்தானே :)

      எப்படி முடியும் ,அபுதாபியில் இருக்கிற நீங்களே படிக்க முடியும் போது:)

      எல்லாம் அந்த தமிழ் மணம் தந்தது :)

      Delete
  5. ஜோக்கும் படமும் அருமை!
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. மரம் அபூர்வம் ,தலைவர்கள்தான் ஒரே மாதிரி இருக்கிறார்கள் :)

      Delete
  6. ஹஹஹ் பெண்பார்க்கும் நாள் செம ஐடியா...அனைத்தும் ரசித்தோம். இணையம் பிரச்சனை..இது போறதுக்குள்ள கட் ஆகாம இருக்கணும்...

    ReplyDelete
    Replies
    1. நம்ம நல்ல நேரம் கட் ஆகலே ,பெண் பார்ப்பவர்களுக்கும் நல்ல நேரம் வரட்டும் :)

      Delete
  7. அருமையான ஜோக்ஸ்...
    ரசித்தும் சிரித்தோம்
    சிரித்தும் ரசித்தோம்...

    ReplyDelete
    Replies
    1. உங்களின் தும் தோமை நானும் ரசித்தேன் :)

      Delete
  8. சனி , ஞாயிறு அந்த நாட்களில்..திரைக்கு வந்த சில நாட்களே ஆன படத்தை போடுறாங்களே....!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. அதைப் பார்த்து யாரும் அழுவதாய் தெரியவில்லை,தயாரிப்பாளர் உள்பட :)

      Delete