30 April 2016

கஞ்சப்பிசினாரிக்கு ஏற்ற மனைவி:)

 சங்கீத சாம்ராட் இப்படிப் பாடலாமா :)            
              ''பைரவி ராகப் பாடலா இது ? கிணற்றுக்குள்ளிருந்து பாடுற மாதிரி இருக்கே !''
             ''ஒரு வேளை,பாதாள பைரவி ராகமா இருக்குமோ ?''
 ஓட வைத்தவரை ,தொப்பை  ஓட வைக்குதே :)                
           ''அதோ.. அந்த  அறுவை மன்னனைக்  கண்டாலே  எல்லோரும்  ஓடுவார்கள் ,இப்போ அவரே ஒடுறாரே ,ஏன் ?''
           ''அதுக்குக் காரணம் ,அவரது தொப்பைதான் !''

கஞ்சப்பிசினாரிக்கு  ஏற்ற மனைவி:)
        ''மேடம் ,,நீங்க பற்பசையை வாங்கினால் கூட ஏன் பழைய சரக்கை மட்டுமே கேட்கிறீங்க ?''
        ''எதையுமே அதோட காலாவதி தேதி வரைக்கும்  பயன்படுத்தணும்னு என் வீட்டுக்காரர் சொல்றாரே ...அதான் ,சீக்கிரம் காலி பண்ண இந்த ஐடியா !''
பொண்ணு பிடிக்கலைன்னு இப்படிச் சொல்லலாமா :)
           ''இனிமேல் பொண்ணுப் பார்க்க வர்றவங்களுக்கு மட்டமான ஸ்வீட் .காரம் கொடுத்தா போதுமா  ,ஏன் ?''
            ''ஏற்கனவே பார்த்துட்டு போனவங்க 'ஸ்வீட் ,காரம் மட்டும்தான் பிடிச்சது 'ன்னு சொல்றாங்களே !
மழை அளவு குறைவு தரும் பாடம் ?:)
ஊரிலே ஒரு நல்லவர் இருந்தாலும் மழை பெய்யுமாம் ...
'நான் இருப்பதால்தான் மழை பெய்கிறது 'என 
எல்லோரும் நினைத்துக் 'கொல்' கிறார்கள் !

21 comments:

  1. ஹா ஹா நண்பரே
    காமெடி அருமை...
    நடு ராத்திரி சிரிக்க
    வத்தீரே நன்றி ஜி...

    ReplyDelete
    Replies
    1. அக்கம் பார்த்து சிரிங்க ஜி :)

      Delete
  2. சிந்துவுக்கு கேட்கக் கூடாத பைரவியாக்கும்...! சிந்து(ம்) பைரவி...!

    ‘அறுவை சிகிச்சை செய்து கொள்ளுங்கள்...!’-ன்னு சொன்னதை அவரு தப்பா புரிஞ்சிக்கிட்டாரு போல ‘அறுவை செய்து கொல்லுங்கள்...!’-ன்னு.

    உங்க பேரு கலாவதிதானே... காலாவதின்னு மாத்திங்கங்க...!

    சர்க்கரை... மிளகாய் மற்றும் வெந்நீர் மட்டும் கொடுத்திடுவோம்...! இதைவிட மட்டமா வேற என்ன கொடுப்பது...? யோசித்துப் பார்ப்போம்...!

    ‘ஊரிலே... ஒரு நல்லவர் இருந்தாலும் மழை பெய்யும்...?!’ மழைபெய்யிற மாதிரி தெரியல... வெயில்தான்...! வெளியூர்ல இருந்து ஒருத்ராவது நல்லவரு... வல்லவரு... வாங்க மக்களே... வாங்க...!

    த.ம. 1



    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள ஜீ,
      இன்று பிறந்தநாள் காணும் தங்களுக்கு வாழ்த்துகளைத் தெரி வித்துக் கொள்கிறேன். வாழ்க வளமுடன்! -மாறாத அன்புடன், மணவை ஜேம்ஸ்.

      Delete
    2. மூக்கில் இருந்து பாடினால் எந்த ஜந்துவுக்கும் கூட பிடிக்காதே :)

      அறுவை ,ஓடுவதால் நின்று விட்டதே :)

      பொருத்தமாயிருக்கும் :)

      அப்படியும் திருந்துவாங்களா :)

      வேலூரில் இருந்து வந்து விடப் போகிறார் :)

      Delete
    3. நன்றி !வாழ்த்து சொன்ன அனைவருக்கும் கேக் தரணும்னு ஆசை ,மாசக் கடைசியாச்சே ..ஹிஹிஹி :)

      Delete
  3. அனைத்தையும் ரசித்தேன் நண்பரே...

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ரசிப்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜி :)

      Delete
  4. படம்தான் ரசிக்கும் படி இல்லையோ :)

    ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்தவர் என்கிற உலக சாதனை படைத்த ரோஹித் சர்மாவின் பிறந்த தினமும் இன்றுதானாம் ,நானும் உலக சாதனை செய்யணும்னுதான் நினைக்கிறேன் ,ஆனால் உள்ளூரிலேயே பருப்பு வேக மாட்டேங்குதே:)

    ReplyDelete
  5. 01. பாதாள பைரவியேதான்
    02. ஐயோ பாவம்
    03. இப்படியும் சொலவு வைக்கும் மனைவியா ?
    04. இது பலாகாரக் கோஷ்டிதான்
    05. அவரையும் கொல்’’லணுமா ?

    ReplyDelete
    Replies
    1. TV யில் அறுபதுகளில் வந்த 'பாதாளப் பைரவி 'படப் பாடலை .. நேற்று கேட்டவுடன் தோன்றிய மொக்கை இது !இது க்ளிக் ஆக இத்தனை வருஷம் தாமதம் ஆகியிருக்கு !
      அறுப்பதற்கு நேரமில்லாமல் ஓடிக் கொண்டே இருக்கிறார் :)
      அதானே ,மூடியை மட்டும் திறந்து மூடிக் கொண்டிருந்தால் செலவே வராதே :)
      அடுத்து வந்தா பால்லே பாலிடாலே கலந்து கொடுத்து விட வேண்டியதுதான் :)
      நானைக் கொன்றவர்களுக்கு நல வாழ்வுதானே :)

      Delete
  6. கொடும்பாவி சாகாளோ
    கொழுத்த மழை பெய்யாதோ
    எனக் கொடும்பாவி எரிப்பார்களே...
    அதன்படிக்கு
    நல்லவர் இருந்தாலும் மழை பெய்யுமாமோ

    ReplyDelete
    Replies
    1. கொடும்பாவி பெண்பாற் பெயராயிருக்கே,நியாயமா :)

      Delete
  7. கஞ்சப்பிசினாரிக்கு மனைவிக்கு ஐடியாவெலாம் தோனுதா.....!!!!

    ReplyDelete
    Replies
    1. இல்லையென்றால் இத்தனை காலம் அவருடன் வாழமுடியுமா :)

      Delete
  8. Replies
    1. பைரவி ராகப் பாடல் அருமைதானே :)

      Delete
  9. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...ஜி...

    ReplyDelete
    Replies
    1. வாராது வந்த மாமணியே ,வாழ்த்துக்கு நன்றி :)

      Delete
  10. ரசித்தேன் ஜி....
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜி.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் ரசனைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி ஜி :)

      Delete