5 April 2016

இப்படியொரு 'லிப் லாக்'கை கமலும் செய்ததில்லை :)

          ''என்னடா சொல்றே ,அந்த 'லிப் லாக்'கைப் பார்த்து அசந்து போயிட்டியா ?''
          ''நீயே பாரேன் !''
மனைவி கேள்விபட்டது உண்மையா :)
            '' மூக்குத்தியை ஏன் கழற்றிட்டே ?''
            ''மூக்குத்தி போட்டுகிட்டா புருஷன் ரொம்ப நாள் வாழ்வான்னு சொல்றாங்களே !''
மனைவி என்றதும் மனதில் தோன்றும் பிம்பம் :)
              ''தலைவரோட சம்சாரம் ஏன் பத்ரகாளி ஆயிட்டாங்க ?''
             ''வரப் போற புயலுக்கு உன் பெயரை வைக்க சிபாரிசு பண்ணியிருக்கேன்னு தலைவர் சொன்னாராம் !''
காதிலே பூ சுத்துறதுக்கும் அளவில்லையா :)
         ''எக்ஸ்ட்ரா சைஸ் பட்ஸ் கிடைக்கும்னு போட்டு இருக்கீங்களே ,எப்படி இருக்கும் ?''
         ''வலது காதில் நுழைத்து இடது காதையும் ,இடது காதில் நுழைத்து வலது காதையும் கிளீன்  பண்ணலாம் !''
அழுவோரைத் தேற்றுவாரில்லை :)
குழந்தையின் முதல் அழுகையை கேட்பதற்கு  மட்டுமே 
அனைவரும் ஆவலோடு இருக்கிறார்கள் !

32 comments:

  1. ஸ்நேக் டான்ஸ், ஸ்னேக் சூப் எல்லம் தெரியும்... ஸ்னேக் கிஸ்ஸா ?

    அவங்க லாக்காகட்டும்... எனக்கு மெர்ஸலாகுது !!!

    நன்றி
    சாமானியன்



    எனது புதிய பதிவு " முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 1 "
    http://saamaaniyan.blogspot.fr/2016/04/1.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஸ்நேகா கிஸ் என்றால் ரசிக்கலாம் ,ஸ்னேக் கிஸ் கொஞ்சம் நெருடலாய் இருந்தாலும் ,அந்த பெண்மணிக்கு வாழ்த்துக்கள் :)

      உங்கள் பதிவுக்கு வந்தேன் ....நாளைக்கு படிக்கிறேன் ,இப்போ குட் நைட் :)

      Delete
  2. ‘என்ன சத்தம் இந்த நேரம்... உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உணர்ந்து போனதோ...’ பாம்புக்கு காது இல்லை என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறோம்... பல்லும் இல்லையா...?

    ஆயுச தீர்கக... முடிவு பண்ணிட்டாய்... தீர்க்க ஆயுசா நல்லா இரு...!

    ‘பொல்லாத ஆசைக்கு ஏன் இந்த அலைச்சல்... கல்லாட்டம் இருக்கேனே எனக்கென்ன குறைச்சல்... மூக்கிருக்கு… மூழியிருக்கு… அழகில்லையோ நேக்கும்... ஆடிக் காட்டடுமா...?’ பொறுத்தது போதும் பொங்கி எழு...!

    காது... கேக்காது... செவிடன் காதில் ஊதிய சங்குதான்... காதுக்கு...!

    அழாத பிள்ளை... வாயில்லாப் பிள்ளை...! அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்...!

    த.ம. 2







    ReplyDelete
    Replies
    1. பல் இல்லையென்றாலும் பரவாயில்லை ,விஷ நாக்கு இருக்கே ,அதுக்கும் பயப்படவில்லையே அந்த பெண்மணி :)

      புருசனைக் கொன்னுட்டு சுமங்கலியாய் இரு :)

      பத்ரகாளியின் அந்த ஆட்டத்தை , இன்னும் மறக்கவே முடியலே என்னாலும்:)

      இந்த காதில் வாங்கி அந்த காதில் விட ரொம்ப சௌரியம் :)

      முதல் அழுகையை கிள்ளியாவது வரவழைப்பார்களோ :)

      Delete
  3. அனைத்தையும் ரசித்தேன் ஜி. இன்று உங்கள் படைப்பு வெளியிடப்பட்டுள்ளது. நன்றி உங்கள் படைப்பை எங்களுக்கு அனுப்பி வைத்ததற்கு.

    ReplyDelete
    Replies
    1. என் கதையை 'கேட்டு வாங்கிப் போடும் கதை'யாக வெளியிட்டமைக்கு மிக்க நன்றி ஜி !
      நான் செய்ய முடியாமல் இருந்தது , நீங்கள் செய்து விட்டீர்கள் அதற்கும் நன்றி !

      Delete
  4. அனைத்தும் அருமை. முதல் நகைச்சுவை, பயங்கரம்.

    ReplyDelete
    Replies
    1. பயங்கரம் என்றாலும் பெண்மணியின் தைரியத்தைப் பாராட்டலாமே:)

      Delete
  5. ரசனை ஜி.....:)))

    தம 4

    ReplyDelete
    Replies
    1. ரசிக்க வைக்குதே பாம்பு :)

      Delete
  6. ஸ்னேக் பாபுவின் புண்ணா இருப்பாளோ...

    புருசன் உயிர்ல அவ்ளோ அக்கரை...

    தலைவரோட சம்சாரம் புயல் மாதிரி...

    எக்ஸ்ட்ரா சைஸ் பட்ஸ்
    க்ளீன் பண்ணினா செத்தான்டா சேகரு...

    குழந்தையை அழவைத்து பார்ப்பதில்
    அவ்ளோ ஆனந்தம்...

    ReplyDelete
    Replies
    1. பெயரும் கூட சினேஹா என நினைக்கிறேன் :)

      கொல்றதுக்கு இப்படியும் ஒரு வழியிருக்கா :)

      அதான் பொருத்தமாச் சொல்லியிருக்காரே :)

      மூக்குலே நூலை விட்டு வாய் வழியா இழுக்கும் சேகரை நீங்க பார்த்ததில்லையா :)

      வளர்ந்த பின் அழுதால் ,முதுகுலே நாலு போடு போடுங்கள் என்பார்களோ :)

      Delete
  7. அனைத்தையும் ரசித்தேன்.

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. அசத்தலான படத்தையும்தானே :)

      Delete
  8. எங்கிருந்து கிடைத்தது இந்தப் படம்
    அசத்தல்
    ஆனால் முட்டாள்தனம் இல்லையா

    நகைப்பணி தொடர்க
    தம +

    ReplyDelete
    Replies
    1. நான் பிடித்த படமல்ல ,ஆனால் எனக்கு பிடித்த படம் !
      இதை விட பெரிய பெரிய முட்டாள்தனங்கள் கின்னஸ் சாதனை ஆகின்றனவே :)

      Delete
  9. அனைத்தையும் ரசித்தோம் ஜி ...ஆனா அந்த முதல் படம் தான் பயமுறுத்துது...ஹஹஹ்

    ReplyDelete
    Replies
    1. பெண் முத்தமிடும் படமே பயமுறுத்துதா:)

      Delete
  10. ஒருவேளை பெண் பாம்பாக இருந்திருந்தால் செய்திருப்பார் கமல்!
    த ம 9

    ReplyDelete
    Replies
    1. கமலின் அடுத்த படத்தில் இதையும் எதிர்பார்க்கலாமா :)

      Delete
    2. பாம்புக்கு அடித்த யோகமா ,கில்லர்ஜி :)

      Delete
  11. முதல் படம்:
    அதுக்கு தான் காலாகாலத்தில் கல்யாணம் செய்யணும்! இல்லைன்னா இப்படித்தான்! கலி முத்திடுத்து!
    புது மொழி: பெண்ணென்றால் பாம்பும் இரங்கும்! பாம்பு பல் இறங்காத வரை சரி!

    ReplyDelete
    Replies
    1. பாம்பு இறங்குன மாதிரி தெரியலே .பெண்தான் நெடுஞ்சாண்கிடையாக இறங்கிவந்திருக்கிறார் :)

      Delete
  12. அனைத்தும் சிறப்பு..

    ReplyDelete
    Replies
    1. படத்தைப் பார்த்ததும் ,பச்சை நிறமே பச்சை நிறமே என்று பாடத் தோன்றுதா :)

      Delete
  13. 01. கஷ்டம்தான் ஜி
    02. தர்ம பத்மினி
    03. புயல் வந்தால் மக்களுக்குதானே கஷ்டம்.
    04. இன்னொரு பின் ஜாய்ண்ட் பண்ணினால் மூக்கையும் குடைந்து வருமே.....
    05. அருமையான உண்மை ஜி

    ReplyDelete
    Replies
    1. கஷ்டம் பாம்புக்கா :)
      ஜாக்கிரதையாய் இருந்தாலுமா இந்த பெயர் :)
      அவர் மட்டுமே பட்ட கஷ்டம் எல்லோருக்கும் புரியும் இல்லையா :)
      த்ரீ இன் ஒண்ணா :)
      என்ஜாய் என்போமா :)

      Delete
  14. உண்மைதான் ...அந்த 'லிப் லாக்'கைப் பார்த்து அசந்துதான் போய்விட்டேன்..........

    ReplyDelete
    Replies
    1. அசந்து தான் போகணும் ,டிரை பண்ணி பார்க்கவா முடியும் :)

      Delete
  15. தமிழ் சினிமா காட்சியா காதலன் பாம்பு உருக் கொண்டவனா?
    உண்மையான காரணம் கணவனுடன் சேரும்போது இடைஞ்சல் கூடாது என்பதற்காக இருக்கும்
    சில நேரங்களில் பெண்களின் உண்மை சொரூபம் வெளிப்படுகிறது
    காதிலே பட்ஸ் . பூஅல்ல
    குழந்தை அழுவதற்கு பதில் சிரித்தால்.......!

    ReplyDelete
    Replies
    1. நீயா பெண் பாம்பு ,ஆண் வேஷமும் போடுமோ :)
      இதான் இடைஞ்சல் பண்ணுதாக்கும்:)
      வெளியாகும் நேரத்தில் நாம் தப்பிக்க முடியாதோ :)
      உள்ளே பட்ஸ் வெளியே பூ :)
      சிரித்தாலும் கண்ணீர் வரும் :)

      Delete