18 April 2016

மனைவி தூக்கத்தைக் கெடுத்ததற்கு பிரதியுபகாரம் :)

படிக்க நேரம் இல்லைன்னா  எதுக்கு பேப்பர் வாங்கணும் :)
            '' நீங்க எடைக்குப் போடுற பேப்பருக்கு  மட்டும் கிலோவுக்கு ஐந்து ரூபாய் அதிகமாத் தரணுமா ,ஏன்  ?''
            ''வர்ற பேப்பரை அப்படியே உன்னிடம் போட்டு விடுறோம் ,நாங்க பிரிக்கிறதுகூட இல்லையே !''
யோசிக்க வேண்டிய விஷயம் இது :)          
                 ''என்னங்க ,பசி மயக்கத்தில்  காது கேட்கலைங்கிறதை  நம்ப முடியலே ! ''
                  ''ஏன் ?''     
                 ''சாப்பாடு ரெடின்னு சொன்னதும் , கையைக் கூட  கழுவாம  தட்டைத் தூக்குறீங்களே !''
மனைவி தூக்கத்தைக் கெடுத்ததற்கு பிரதியுபகாரம் :)
            ''அந்த முதியோர்கள் இல்லத்திற்கு தேவையான தூக்க மாத்திரையை தானமா தர்ற ,உன் வீட்டுக்காரரின் தாராள மனசைப்  பாராட்டலாமே !''
           ''தாராள மனசுமில்லே,ஏராள மனசுமில்லே ...தினசரி குறட்டை விட்டு என் தூக்கத்தைக் கெடுக்கிற குற்ற உணர்வுதான் அதுக்கு காரணம் !''
நன்றி மறவாத வெஜிடேரியன் :)
          ''நம்ம வீட்டு விசேசத்திற்கு வந்துபோன நண்பர் SMS ல் என்ன எழுதி இருக்கார் ?''
           ''சிக்கனற்ற, சிக்கனமற்ற ,மட்டனற்ற விருந்து படைத்தமைக்கு மட்டற்ற மகிழ்ச்சியாம் !''
தடை எதுக்கு வரணுமோ ,அதுக்கில்லையே :)
மீனைப் பிடிக்ககூட தடைக் காலம் போடுறவங்களாலே ...
சிங்கள ராணுவம் நமது மீனவனைப் பிடிப்பதை ஏன் தடை செய்ய  முடியலே ?
மீனைக் கூட கொல்லாமல் பிடிக்கும் நிராயுதபாணி  மீனவனைக்
கொன்றுக் குவிப்பதை  ஏன் தடை செய்ய  முடியலே ?

20 comments:

  1. அனைத்தையும் ரசித்தேன். sms டாப்!

    ReplyDelete
    Replies
    1. பசி மயக்கத்தில் இருந்தவரை உங்களுக்கும் தெரிந்து இருக்குமே :)

      Delete
  2. வாங்கிறது ஆங்கில நாளேடு... எழுதப் படிக்கத் தெரியாத எனக்கு... ஆங்கிலப் பேப்பர்னாலே கொஞ்சம் அதிகமாத் தரக்கூடாதா...?

    பசி வந்தால் பத்தும் இல்ல... ஒன்பதுதான் பறந்து போயிருக்கு...!

    ‘உன்போல் குறட்டைவிட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்...!’

    நான் ‘வெஜ்’ங்கிறது... ‘நான்வெஜ்’ஆன அவருக்கு தெரியாம விருந்துக்கு வந்திட்டார்...!

    ஆடு அறுக்கிறவனைத்தான் நம்புவாம்... வளர்க்கிறவனை நம்பாதாம்...!

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. ஆங்கிலப் பேப்பர் தரம் அதிகம்னு காசு அதிகம் தரத்தான் செய்கிறார்கள் :)

      அந்த பத்தில் காதும் அடங்காதே :)

      வயதான பின்னாலே எந்தக் கோட்டையைப் பிடிக்கணும் :)

      ஆனாலும் ,உண்டதற்கு விசுவாசமா இருக்காரே :)

      அறுக்கிறவன்கிட்டே விற்கப் போற வளர்ப்பவனை எதுக்கு நம்பணும்:)

      Delete
  3. ஹா ஹா ஹா ஜி
    அத்தனையும் அருமை ஜி
    நன்றி மறவாத வெஜிடேரியன்
    அருமை ஜி

    ReplyDelete
    Replies
    1. மொய் வைக்காமல் சாப்பிட்டு போனவர் ,நன்றி சொல்வதில் அதிசயம் இல்லையே ஜி :)

      Delete
  4. சிரித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. sms யை படித்துத் தானே அய்யா :)

      Delete
  5. 'சிக்கனற்ற, சிக்கனமற்ற ,மட்டனற்ற விருந்து படைத்தமைக்கு மட்டற்ற மகிழ்ச்சியாம் !''//ஹஹஹஹஹ்ஹ்

    அனைத்தையும் ரசித்தோம் ஜி!!

    ReplyDelete
    Replies
    1. சிக்கனும் மட்டனும் இல்லையே என்று மற்றவர்கள் வாடிக்கிடக்க ,இவருக்கு மட்டற்ற மகிழ்ச்சியாமே :)

      Delete
  6. Replies
    1. பிரதியுபகாரம்,சரிதானே :)

      Delete
  7. குற்ற உணவுர்க்கு பிரதியுபகாரம் செய்தால் சரியாக போய்விடும் என்றுதானே எல்லா ஊழல் அரசியலார்கள் இருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. வோட்டுக்கு பணம் கொடுப்பது கூட அந்த அடிப்படையில்தானே :)

      Delete
  8. 01. அறிவாளிதான்
    02. காரியக்கார காது
    03. குற்ற உணர்வு இதைக்கூட செய்யுதே...
    04. ஊமைக்குத்துதான்
    05. அருமையான சிந்திக்க வைத்த கேள்வி ஜி

    ReplyDelete
    Replies
    1. காசை இப்படி கரியாக்குகிறோமே என்று யோசிக்க வேண்டாமா :)
      காதுக்கும் இருக்குமோ பசி :)
      நல்லது செய்தால் சரி :)
      அடுத்த தடவை வெள்ளாட்டைப் போட்டுற வேண்டியதுதான் :)
      சம்பந்தப் பட்டவர்கள் சிந்திக்க மறுக்கிறார்களே :)

      Delete
  9. வணக்கம்
    ஜி
    இரசித்தேன் வாழ்த்துக்கள் ஜி த.ம9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி மறவாத வெஜிடேரியனை ரசிக்க முடிந்ததா :)

      Delete
  10. Jokkali,

    Nice Blog. I am one Ex Blogger and I want to Add your Blog in Opera Mini (the company I work for). I am bringing Tamil Section in our Discover News and I want to Add yours in Lifestyle Section.

    One Small request. Please Add one HQ Image in each blog post you are Posting. at least 400 x 400 +. Small Images don't look good in Retina Devices, iPhones.

    Take Care.

    Ravi

    ReplyDelete
    Replies
    1. நல்ல வாய்ப்பு தந்தமைக்கு மிக்க நன்றி !
      உங்களின் ஆலோசனையின்படி ,இனி படத்தை இணைக்கிறேன், செந்தழல் ரவி ஜி :)

      Delete