13 April 2016

குளிக்கிறதைப் பார்க்க நினைப்பாங்களா :)

நன்னடத்தைக்கு  ,அவங்க அகராதியில்  இதான் அர்த்தமா :)      
              ''  நன்னடத்தைக் காரணமா ,அவருக்கு எம் .எல் .ஏ. சீட் கொடுத்து இருக்காங்களாமே,என்ன செய்தார் அவர் ?''
               ''ஜாதிக் கலவரத்தைத் தூண்டி , நாலு பஸ்ஸை எரித்தாரே !''
 இது சென்ற ஆண்டு ஜோக் :)         
          ''இன்னைக்கென்னடி விசேஷம் ?  மல்லிகைப் பூ விற்பனை அமோகமா இருக்கே ?''
          ''இருக்காதா பின்னே ,பிறந்திருக்கிறது 'மன்மத 'வருசமாச்சே !''
குளிக்கிறதை  பார்க்க நினைப்பாங்களா :)
           ''உனக்கேன்டி , இந்த விபரீத ஆசை ?முத்து குளிக்கிறதைப்  பார்க்கணுங்கிறே  ?''
          ''அட நீ வேற ,கடல்லே முத்து எடுக்கிறதைப் பார்க்கணும்னு  சொன்னா ,தப்பா  அர்த்தம் எடுத்துக்கிறீயே !'' 
குட்டி யானைக்கு பெயர் வைத்தால் ,இப்படியா  :)
            ''ஜூவுக்குப் போன அந்த நடிகை ,குட்டி யானைக்கு தன்னோட பெயரை வைச்சது தப்பா போச்சா ,ஏன் ?''
        '' கிசுகிசுவிலே குட்டியானை நடிகைன்னு எழுத ஆரம்பிச்சுட்டாங்களே !''
ருசியான ரசத்திற்கு ஏங்கும் USA மாப்பிள்ளை :)
மணப்பெண் தேவை !
முறத்தால் புலியை விரட்டத் தெரியாவிட்டாலும் 
ரசத்திற்கு புளியைக் கரைக்கத் தெரிந்தாலே போதும் !

18 comments:

  1. கட்சிய வளர்க்க உயிரப்பணயமா வச்சு என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கு...! ஏற்கனவே தலைவரால ஏகப்பட்ட சொத்து நஷ்டம்... இப்ப கொஞ்ச நஞ்சமிருக்கிறதையும்... எம் .எல் .ஏ. சீட் கொடுத்து எடுக்கிலாமுன்னு இந்த சதியா... எப்படியும் ஜெயிக்க போறது இல்ல...! ம்...ம்... எல்லாம் தலைவிதி...!

    மன்மத ராசா மன்மத ராசா... கன்னி மனச கிள்ளாதே... மல்லி... மல்லி... மதுரை மல்லி...!

    முத்து குளிக்கிறதைப் பார்க்கணுமுன்னே சொன்னேன்... இன்னைக்கு ‘முத்து’ படத்துக்குக் கூட்டிட்டுப் போங்க...! இல்லாட்டி ‘சிப்பிக்குள் முத்து’ படத்துக்காவது கூட்டிட்டு போங்க...! முத்துக்குளிக்க வாறீகளா...?

    குட்டி... யானை தப்பி வந்தா...! அவள் வருவாளா...? தப்பி வருவாளா...அவள் எப்படி வருவான்னு பாத்திடுறேன்...!

    புலிய வனத்துறையே விரட்ட முடியல... சுட்டுத் தள்ளுறாங்க... புலியை நினைத்தாலே வயித்தில புளியக் கரைக்கிது...! என்ன கதை விடுறீங்க...?

    த.ம. 1






    ReplyDelete
    Replies
    1. ஜெயிக்க போறது இல்ல..ஆசை யாரை விட்டது :)

      மல்லிக்குத் தெரியுமா ,மன்மத வருஷமும் ,துர்முகி வருஷமும் :)

      நீ கூப்பிட்டு நான் வராமல் இருப்பேனா :)

      எவன் பெயரைச் சொல்றான் ,பெயர் வைத்த திரிஷாவைத் தானே நினைக்கான் :)

      சிலரின் ரசமும் வயிற்றில் புளியைக் கரைக்குதே :)

      Delete
  2. ஆஹா பகவான் ஜி நண்பரே
    காமெடியால கலக்குறீங்க....
    படித்தே ரசித்தேன் சிரித்தேன் ...

    ReplyDelete
    Replies
    1. முறத்தால் புலியை விரட்டும் பெண் இன்றும் இருக்காளா :)

      Delete
  3. Replies
    1. இன்றும் முறமும் இல்லை ,விரட்டும் திறமும் இல்லை ,இல்லையா ஜி :)

      Delete
  4. இன்றைய நிலையை சொன்ன முதல் ஜோக்குக்கு எனது வாக்கு.
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. தேர்தல் முடியும் வரை நமக்கு மேட்டருக்கு பஞ்சம் இருக்காது ,இல்லையா செந்தில் ஜி :)

      Delete
  5. ஜோக்காளி தம்பி !!
    மன்மத வருஷம் முடிஞ்சு போச்சு
    வரப்போவுது நாளைக்கு துர்முகி.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. மணக்கிற மன்மத வருஷம் அதுக்குள்ளே முடிஞ்சு போச்சா ?'துர்'முகி மணக்குமா :)

      Delete
  6. 01. அடடே இதுக்கெல்லாம் கிடைக்குமா ? நானும் உடனே அபுதாபியில் தொடங்கலாம் போலயே....
    02. ஆஹா... அப்படியா ? சேதி..
    03. இதுக்குத்தான் முத்து பேரு வைக்க கூடாதுன்னு பெரியவாள் சொன்னாளோ... ?
    04. இதில் ஊமைக்குத்து இல்லையே....
    05. அருமை

    ReplyDelete
    Replies
    1. அது சரி ,அங்கே பஸ்ஸை எரித்தால் வெளியே இருக்க விடுவார்களா :)
      முடிந்த பிறகு ஆஹாவா:)
      பெரியவாள் எதைத்தான் சொல்லாம விட்டாக :)
      நிஜக் குத்துக்கே தாங்க முடியலே ,இதில் ஊமைக்குத்தா :)
      நாக்கு செத்துக் கிடக்கும் போல :)

      Delete
  7. சித்திரையாள் ,தமிழக மக்களின் நித்திரையை இந்த வருடமாவது கலைப்பாளா:)

    ReplyDelete
  8. முதல் ஜோக் இன்ப்போதைய நிலைமையைச் சொல்லுகின்றதோ??!!! எல்ல்லாமே ரசித்தோம்

    ReplyDelete
    Replies
    1. சீட்டு பெற தகுதி ,நன்நடத்தை என்று சொன்னால் சிரிப்பாகத்தானே இருக்கு :)

      Delete
  9. குளிக்கிறதைப் பார்க்க நினைப்பாங்களா ----- நானும் முதலில் தப்பாகத்தான் நிணைத்தேன்....

    ReplyDelete
    Replies
    1. புது வருசப் பிறப்பும் அதுவுமா பல்பு வாங்கிட்டீங்களே ஜி :)

      Delete
  10. மணப்பெண் தேவை என்பதையும் தானே அய்யா :)

    ReplyDelete