11 December 2016

புருஷனுக்கும் 'நெக்லஸ்' வாங்கி வந்த மனைவி :)

கடமை தவறாத பையன் :)    
      ''  சூ போட்டுக்காம ,சாக்ஸ்சை மட்டும் போட்டுகிட்டு வந்திருக்கீயே ,ஏன் ?''
       '' ஆளுக்கொரு சூவை கையிலே பிடிச்சுகிட்டு அப்பா அம்மா  வீட்டிலே சண்டை போட்டுக்கிட்டு இருக்காங்களே ,சார் !''

இப்படியும் விளம்பரம் வருமோ :)
         ''என்னங்க ,கொடுமையா இருக்கே !கண்மாய் நடுவிலே அடுக்கு மாடிக் குடியிருப்பைக் கட்டியிருக்கீங்களே ?''
        ''அவசரத்துக்கு ஆகும்னு தரைத் தளத்திலே போட் பார்க்கிங்  வசதியை பண்ணியிருக்கிறோமே !''

கழுத்தை அறுப்பது மனைவி மட்டுமல்ல:)
       '' என் பெண்டாட்டி இப்படி ஓடிப்போவான்னு முன்னாடியே தெரிஞ்சு இருந்தா அவ கழுத்திலே மஞ்சக் கயிறு கட்டி இருக்கவே மாட்டேன் !''
       ''வேறென்ன கயிறு கட்டி இருப்பே ?''
       ''மாஞ்சாக் கயிறு தான்! ''

புருஷனுக்கும் நெக்லஸ் வாங்கி வந்த மனைவி :)
            ''ஷாப்பிங் போன உங்க மனைவி நெக்லஸ் வாங்கிகிட்டாங்க சரி ,உங்களுக்கு ?''
           '' பனியன்தான்,அதுலேயும் நெக்லஸ் !''
கொசு ஒழிக்க திட்டம் ..ஆனா மக்கள் ஒத்துழைப்பு ???
            ''தண்ணி தேங்கிற இடத்தில் ,கொசு முட்டையை  சாப்பிடுற மீன்களை  வளர்த்தும்  கொசு  குறையலையே ,ஏன்?''
           ''அந்த மீன்களை எல்லாம் பிடித்து மக்கள் தின்னுட்டாங்களே !  

தொடையில் மச்சம் என்று  பதிந்தால் எப்படி காட்டுறது :)
அங்க அடையாளத்தை காட்டு என்று 
யாராவது கேட்கும் போதுதான் ....
தொடையில் மச்சமாய் சிரிக்கும் அப்பாவை 
கிள்ளி எறிய வேண்டும் போல் இருக்கிறது !

15 comments:

  1. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. நெக்லஸ் பனியன் அருமைதானே:)

      Delete
  2. தங்களுக்கு மட்டும் தம வாக்கு உடனே விழுகிறதே எப்படி நண்பரே
    ஏதேனும் ரகசியம் உண்டா?
    காலையில் இருந்து முயன்று கொண்டே இருக்கிறேன் மற்ற வலை நண்பர்களுக்கு வாக்களிக்க
    ஆனால் அசராமல் சுற்றிக் கொண்டே இருக்கிறது
    மெல்ல மெல்ல எனக்கும் தலைசுற்றத் தொடங்கிவிடும் போலிருக்கிறது
    எனது வலையில் அடிக்கடி தம வாக்குப் பட்டையே காணாமல் போய்விடுகிறது
    ஏதேனும் ரகசியம் இருந்தால் கூறுங்களேன்
    தம +1

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு ஒரு இப்படி பிரச்சினை என்றால் ,எனக்குள்ள பிரச்சினை ....நெட்டே கிடைக்கவில்லை ,கிடைக்கும் போது வேலை செய்ய வேண்டியுள்ளது !bsnlல் புகார் கூறி நான்கு நாட்களாகிறது ,எந்த தீர்வும் கிடைக்கவில்லை ,வேறு நெட்கனெக்சன் வாங்கிவிடலாம் போலிருக்கிறது :)

      Delete
  3. சூ சூ மாரி... சூ மந்திரகாளி... சொன்னாலும் சூ வரமாட்டேங்கிதே...!

    தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் மிதக்க வைத்தான்... ஓடமும் ஒருநாள் தண்ணியில் ஏறும்... தண்ணியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் தெரியணுமுல்ல...!

    ‘கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா...?’ பாட்டப் போடாதிங்கனா கேட்டாத்தானே...!

    ‘நெக்’குருகிடக் கூடாதில்ல...!

    தண்ணி தேங்கிற இடம் டாஸ்மாக்தான் நினைச்சிட்டாங்களாம்... மீன வருத்து எடுத்திட்டாங்க...!

    ஆடாதொடை இதுதானோ...?! தனாடாவிட்டாலும் தன் தசை ஆடுமல்லவா...?!

    த.ம. 5




    ReplyDelete
    Replies
    1. இனிமேல் வந்தாலும் போட்டுக் கொல்லான் படியா இருக்காதே :)

      கண்மாய் நடுவிலே வீடு மட்டுமா இருக்கு ?ரோடும் இருக்கு ,ரோட்டு மேலே ஆஸ்பத்திரியும் இருக்கே :)

      ஓடுகாலி முதல்லேயே ஓட வேண்டியதுதானே :)

      அதுசரி ,நெக்குருகி தூக்கு போட்டுக்கக் கூடாது :)

      சரக்குக்கு சைட் டிஷ் ஊறுகாய் இருக்க வறுவல் மீன் ஏன் :)

      தொடை நடுங்குகிறதாம்,அங்க அடையாளத்தைச் காட்டச் சொன்னால் :)

      Delete
  4. இப்படியொரு ஒரு போட்டோ எடுக்க உங்களுக்கு சந்தர்ப்பம் வந்திருக்கா ஜி :)

    ReplyDelete
  5. அனைத்தும் அருமை. குறிப்பாக முதல் ஜோக் சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறது

    ReplyDelete
    Replies
    1. சிந்திக்க வைப்பதில் தவறு உண்டா ஜி :)

      Delete
  6. புருஷனுக்கும் 'நெக்லஸ்' வாங்கி வந்த மனைவி இருக்கும்போது.. அவன் கொடு்த்து வைத்த புருஷன்

    ReplyDelete
    Replies
    1. முண்டா பனியன் போட்டுக்க கொடுத்து வேறு வைத்திருக்க வேண்டுமா :)

      Delete
  7. 500 கிராம் கட்டுப்பாடு இவங்களுக்கு கிடையாதோ ? ஏனுங்கோ இப்படி படத்தைப் போட்டா மக்கள் கடுப்பா ஆக மாட்டாங்களா ?

    ReplyDelete
    Replies
    1. கழுத்துதான் எப்படி தாங்குகிறதோ :)

      Delete
  8. Replies
    1. தொடை மச்சம் அருமைதானா :)

      Delete