28 December 2016

மனைவியைத் தூங்கவே விடாத புருஷன் :)

            ''என்னடி சொல்றே ,உன் புருஷன் தூங்கியும் கூட உன்னைத் தொந்தரவு பண்றாரா ?''
           ''அவரோட குறட்டைச் சத்தத்தால் என் தூக்கம் கெடுதே !''
நன்றி மறக்காத டாக்டர் :)
              ''டாக்டர்,அறையிலே  நிறைய பேர் போட்டோவை  மாட்டிவச்சிருக்காரே ,ஏன்  ?''
              ''டாக்டர்கிட்டே காசையும் கொடுத்து ,உயிரையும் தியாகம்  செய்தவங்களாச்சே அவங்க ! ''

மந்திரி செருப்படி வாங்கியதில் தவறே இல்லை :)
            '' மந்திரி என்ன சொன்னார்னு ...இப்படி அவர் மேலே செருப்பை எறியுறாங்க ?''
            ''இப்போது வாழைத் 'தார் 'விடும் சீசன் ஆரம்பித்து விட்டதால் விரைவில் ரோடுகள் போடப்படும்னு சொன்னாராம் !''

வருத்தப் படாத வாலிபர்கள்னா இப்படித்தானே இருக்கணும் :)
            ''வருத்தப்படாத வாலிபர் சங்கத்தைத் தலைவர் ஏன் கலைச்சுட்டார் ?''
            ''அவர் ஆக்சிடென்ட்ஆகி  ஆறுமாசமா ஆஸ்பத்திரியில் கிடந்தப்போ ,எவனுமே அவரை வந்து பார்க்கலையாம் !''
                                           
குண்டம்மா தடைச் சட்டம் வருமா :)
             ''மை  லார்ட் !என் கட்சிக்காரர்  பெண்மணி என்பதால் குண்டர் தடைச் சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்தது செல்லாது என அறிவிக்க வேண்டுகிறேன் ! ''

தேர்தல் .தொடக்கமும் ,முடிவும் :)
    மனுத் தாக்கலில் தொடங்கி 
    மனுசத் தாக்குதலில்  முடிவது !

25 comments:

  1. தூங்கியும் தொந்தரவு...! ஹா.... ஹா...... ஹா...

    ReplyDelete
    Replies
    1. புருஷன் திருந்தினால் நல்லது ,இல்லைன்னா விவாகரத்து பண்ண வேண்டிவரும் :)

      Delete
  2. டாக்டரின் ரூஉமில் தியாகிகள் ஹஹஹஹ....

    தார்...ஹஹஹ

    ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. வளர்த்து விட்டவர்களை மறக்கக்கூடாது அல்லவா :)

      Delete
  3. Replies
    1. டார்ச்சர் தாங்கமுடியலைடா சாமின்னு மனைவியை புலம்ப வைத்து விட்டாரே :)

      Delete
  4. ‘உன்போல் குறட்டைவிட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்...!’ கோட்டையைப் பிடிக்கிற வழியைப் பாருங்கள்...!

    நன்றி மறப்பது நன்றன்று அல்லவா...?!

    ரோடு கள் போடப்படும்... பிறகு வாழையடி வாழையாக... தார் போடப்படும்... இது ‘தார்’மீக உரிமை...!

    இதுக்குப் போயி வருத்தப்படலாமா... வாலிபர்களே...!

    ‘குண்டர்’ பலர்பால் என்பதால் பெண்பாலுக்குப் பால்விதி பொருந்தாதா... என்பதை ஆராய்ந்துதான் தீர்ப்புச் சொல்ல வேண்டும்...!

    மனுசனை மனுசன் தாக்குறான்டா தம்பிப்பயலே... இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை...‘ஒரு நாள் இந்த நிலைமைகெல்லாம் மாறுதல் உண்டு... அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு...!’

    த.ம. 2


    ReplyDelete
    Replies
    1. இவரெங்கே கோட்டைப் பிடிக்கப் போறார் ,உள்ளதைக் காப்பாற்றிக் கொண்டாலே போதும் :)

      வள்ளுவ நெறியில் வாழும் டாக்டர் போலிருக்கு :)

      இந்த தாரில் கமிஷன் பார்ப்பதும் தார்மீக உரிமைதானா :)

      சாவுக்கும் வரமாட்டாங்க போலிருக்கே :)

      மாணவர் என்பதும் பலர்பால் என்கிறார்கள் ,பிறகு எதுக்கு தனியா மாணவி :)

      atm வாசலில் நிற்கிறவன் எல்லாம் இப்படித்தான் நம்பி வோட்டு போட்டான் ,என்னாச்சு :)

      Delete
  5. குண்டம்மா தடைச் சட்டம் - ஹா.... ஹா....

    ReplyDelete
    Replies
    1. காலத்தின் தேவையா இருக்கே இந்த புத் சட்டம் :)

      Delete
  6. மருத்துவரின் நன்றியுணர்ச்சியை என்னவென்று சொல்ல :)

    ReplyDelete
    Replies
    1. இவர் மக்களுக்கு செய்ற தொண்டு ,மருத்துவத்தைக் கை விடுவது ஒன்றுதான் :)

      Delete
  7. Replies
    1. படத்தில் உள்ள கடிகாரம் காட்டும் நேரத்தைக் கவனித்தீர்களா ஜி :)

      Delete
  8. பழகிவிட்டால் குறட்டைச் சத்தம் கேட்காவிட்டால் தூக்கம்வராது
    எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் .....
    தாரில் தொடங்கி ரோடில் முடிந்து அவரையும் செருப்படி வாங்க வைத்து விட்டதே
    நிஜத்தை சங்கம் வைத்துதான் தெரிந்து கொள்ள வேண்டுமா
    சட்டத்தில் பால் மாற்ற வேண்டும்
    தேர்தல் பற்றிய நல்ல கணிப்பு

    ReplyDelete
    Replies
    1. குறட்டைச் சத்தம் இருந்தால் ஒரு நொடிகூட எனக்கு தூக்கம் வராது :)
      குறளை இப்படியுமா கடைப் பிடிப்பது :)
      காரணம் ,iq இல்லாததால்தான் :)
      ஐயகோ ,இதான் நிஜமா :)
      நல்ல பிராண்ட் பால் எதாவது இருக்கா :)
      இந்த கணிப்பு எப்போதும் தோற்காது :)

      Delete
  9. அருமையான இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. குறட்டைச் சத்தம்தான் நாராசமாய் கேட்கும் :)

      Delete
  10. Replies
    1. ஆக்சிடென்ட்ஆகி ஆறுமாசமா ஆஸ்பத்திரியில் இருக்கும் தலைவர் நிலைமை ,பாவம்தானே :)

      Delete
  11. //டாக்டர்,அறையிலே நிறைய பேர் போட்டோவை மாட்டிவச்சிருக்காரே...//

    பெயர்ப் பட்டியலும் வச்சிடலாம்!!!

    ReplyDelete
    Replies
    1. கண் தானம் ,இரத்த தானம் போல் உயிர் தானம் செய்தோர் பட்டியலா :)

      Delete
  12. படத்தை பார்த்தவுடனே..புரிந்து கொண்டேன்..குர் குர் கர்“கர்தான் என்று.........

    ReplyDelete
    Replies
    1. இப்படி பொருத்தமான படம் பல நேரங்களில் கிடைப்பதில்லை :)

      Delete
  13. மனைவி இப்படி கணவன் மூக்கை அழுத்துவது நல்லாவா இருக்கு :)

    ReplyDelete