30 December 2016

பயபிள்ளே ரொம்பத்தான் காய்ந்து கிடக்கான் :

                ''நம்ம ரூமிலே இருக்கிற  நண்பர்களில், நீதான் நல்லா சமைக்கிறே ,ஆனால் உங்க சொந்தக்காரங்க வந்தா மட்டும் சொதப்பிவிடுறியே ,ஏன் ?''
               '' என் அப்பா அம்மாவிடம்  'பாவம் பையன் சாப்பாட்டுக்கு கஷ்டப் படுறான் ,கல்யாணத்தைப் பண்ணி வைங்க 'ன்னு ஞாபகப் படுத்தணும்னுதான் !''

பியூட்டி பார்லரிலா இப்படிச் செய்வது :).
           ''உன்  மருமகள் நடத்துற பியூட்டி பார்லர்  கடைக்குப் போய் ,எதுக்கு சண்டை போட்டே ?''
          ''என் போட்டோ கீழே 'என்னைப் பார் யோகம் வரும்'னு  எழுதி போட்டிருக்காளே!''
நல்ல பொருத்தம் தான் :)
          ''ஜோடிப்பொருத்தம் சூப்பர்னு சொல்றீங்களே ,ஏன் ?''
         ''தூக்கத்திலே  நடந்தாக்கூட அந்த தம்பதிகள் ஜோடியா நடக்கிறாங்களே !''

மீசையில் மண் ஓட்டலே,ஆணுக்கு மட்டும்தானா:)
              ''சிறைக்குப் போன தலைவர்  கஞ்சாவுக்கு  அடிமை ஆயிட்டாராமே ?''
             '' சிறைக்'கஞ்சா ' சிங்கம்கிற  பட்டம் இப்பத்தான் அவருக்கு ரொம்பப் பொருத்தமாயிருக்கு !'

பெண்களையும் விடுவதில்லை பெண் கொசுக்கள் :)
கொசுத் தொல்லையை  ஒழிக்க என்ன செய்தாலும் பலன் இருப்பதாகத் தெரியவில்லை ...
நம் அரசுத் தரப்பிலும் கொசு முட்டை நிலையில் 
இருக்கும்போதே தின்றுவிடக் கூடிய மீன்களை நீர்நிலைகளில் விட்டுப் பார்த்தார்கள் ...
கொசு முட்டைகளை மீன் தின்றதாகத் தெரியவில்லை ...
மனிதர்கள்தான் மீன்களை பிடித்து தின்று விட்டார்கள் போலிருக்கிறது ...
மீன்கள் காணாமல் போய்விட்டன ...
கொசுக்கள் பல தலைமுறைகள் தாண்டி பெருகிவிட்டன ...
ஸ்பைனிலும் இந்த தொல்லைதான் ...
முள்ளை முள்ளால் எடுப்பதைப் போல ...ஸ்பெயின் 
மரபியல் விஞ்ஞானிகள் ஆலிவ் பழக் கொசுக்களை உருவாக்கி இருக்கிறார்கள் ...
அவை ஆலிவ் மரங்களில் அடைந்துக் கிடைக்குமாம் ....
அரிப்பெடுத்த பெண் கொசுக்கள் ஆலிவ் பழ ஆண் கொசுக்களுடன் இணையுமாம்...
ஆண் கொசுவின் அணுக்கள் பெண் கொசுவை அடைந்ததும் ...
பெண் கொசு, ரத்தம் கக்காமலே இறந்து விடுமாம் ...
ஏழு கொலை செய்தவனுக்கு தூக்கு தண்டனை 
விதிக்கப் பட்டால் ...சில மனித உரிமைப் 
போராளிகள் நம்ம ஊரில் எதிர்ப்பு தெரிவிப்பதைப் போல ...
இந்த ஆலிவ் பழக் கொசு சுற்றுச்சூழலுக்கு தீங்கு 
என்று போர்க்கொடி தூக்குகிறார்களாம் சில ஆராச்சியாளர்கள் ...
கொசுக்கடியில்  இருந்து மனித இனத்திற்கு 
எப்போதுதான் தீர்வு கிடைக்குமென்று தெரியவில்லை ...
நமது மீனவர் பிரச்சினைப் போல் நீண்டுகொண்டே செல்கிறது !

நின்று கொல்லும் சிலந்தி :)
        படையெடுத்துச்  செல்லாமல் எதிரியைக் கொல்கிறது ...
        நூலாம் படை !

18 comments:

  1. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. எதிரிக்கு வலைதானே நூலாம் படையும் :)

      Delete
  2. அப்ப உன் காதலை எப்பவுமே அப்பாட்ட சொல்றதா இல்லையா...? என்ன கல்யாணத்த பத்தி பேசிக்கிட்டு இருக்கியா...?!

    நூலாம் படையைக் கொல்ல நாலாம் படை வருகிறது...!

    த.ம. 2

    மருமகளுக்கு நல்ல யோகமுன்னு சொல்லுங்க...!

    நீங்க வேற கைக்கட்டு போட்டு இருக்கிறத கவனிக்கலையா...?!

    ‘கஞ்சன்சிங்கா நெஞ்சன்’னு பட்டம் கொடுத்திட வேண்டியதுதானே...!

    ‘நீ ரத்தம் கக்கி சாவாய்...’என்று யாரும் சொல்லாமலே... ரத்தம் கக்காமலே சாக வேண்டியதுதான்...!







    ReplyDelete
  3. Replies
    1. கழுதையிடம் உதை வாங்கிய மருமகள் போலிருக்கே :)

      Delete
  4. பாவம் பய புள்ளைக்குக் காதலிக்கல் தெரியல போல...

    அனைத்தையும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. காதலிக்க நேர்மில்லையாமே :)

      Delete
  5. வணக்கம்

    அருமை இரசித்தேன் ஜி வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரூபன் ஜி :)

      Delete
  6. //,கல்யாணத்தைப் பண்ணி வைங்க 'ன்னு ஞாபகப் படுத்தணும்னுதான் !''//

    இதுக்கு இத்தனை கஷ்டப்படணுமா, போகிற போக்கில் பக்கத்து வீட்டுக் குமரியின் கையைப் பிடிச்சி இழுத்தாப் போதுமே?!

    ReplyDelete
    Replies
    1. இந்த எண்ணத்திலேதான் இழுக்கிறாங்களா,சரியாபோச்சு :)

      Delete
  7. தெரிந்தோ தெரியாமலோ வரும் மனைவிக்கு இவர் சமையல் பற்றித் தெரியக்கூடாது பின் ஆயுசு பூரா சமைத்துக் கொண்டுதான் இருக்கவேண்டும்
    யோகம் என்பது மாமியாரின் பெயரா
    க்கத்தில் நடப்ப்து கற்பனையா
    அது ஒரு வியூகம் உயிர்வாழ
    வார்த்தை விளையாட்டு ?
    மீண்டும் கொசுவா ? ஆலிவ் பழ ஆண்கொசுக்கள் மாதிரி மனிதரில்யாராவது இருக்கிறார்களா வேண்டாத மனைவியைத் தவிர்க்க



    ReplyDelete
  8. பயபிள்ளைக்கு அந்த அறிவாச்சும் இருந்துச்சே.....

    ReplyDelete
  9. அனைத்தும் ரசித்தேன்.

    ReplyDelete