கொழுப்பு அதிகமாகாமல் என்ன செய்யும் :)
''பொறித்த அப்பளம் எங்கே கிடைக்கும்னு ஏன் கேட்கிறீங்க ?''
''வீட்டிலே எண்ணெய் வாங்குவதை விட்டுடுங்க என்று டாக்டர் சொல்லி விட்டாரே !''
தொழில் செய்வதிலும் தலைக்கீழ் தானா :)
''உங்கப்பா ஐம்பது வருடம் முன்னாலே செய்த வியாபாரத்தை ,நீ இப்போ தலைக்கீழா செய்றீயா ,அப்படின்னா ?''
''ரவை வியாபாரம் அவரோடது ,வைர வியாபாரம் என்னோடது !''
மறைக் கழன்றதை மனைவியிடம் மறைக்க முடியுமா :)
''உங்க வீட்டுக்காரர் மெண்டாலிட்டி சரியா இருக்கான்னு ஏன் செக் பண்ணச் சொல்றீங்க ?''
'' ATM ல் பணம் எடுத்து , பணத்தை குப்பைக்கூடையில் கிழிச்சுப்போட்டுட்டு ,பாலன்ஸ் சிலிப்பைக் கொண்டு வந்திருக்கிறாரே,டாக்டர் !''
நாட்டுப் பற்றிலே இது ஒருவகை :)
''நாட்டுப் பற்று அதிகமா இருப்பதால்தான் குடிக்கிறேன்னு சொல்றீயே ,ஏன்?''
''டாஸ்மாக் வியாபாரம் நொடிச்சுப் போச்சுன்னா....அரசாங்கம் பணத்துக்கு எங்கே போகும் ?''
இதுக்கு காவிரித் தண்ணீர் தேவையில்லை :)
திருமணம் ஆயிரம் காலத்து பயிர் ...
வரதட்சனைக் கண்ணீரால்
வாடாத அபூர்வப் பயிர் !

|
|
Tweet |
அனைத்தையும் ரசித்தேன் ஜி.
ReplyDeleteடாக்டர் சொன்னதை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறார்கள் தானே :)
Deleteவீட்டிலே எண்ணெய் வாங்காமல்... வெளியில அறுத்த கோழி மொளகு போட்டு வறுத்து வச்சிருக்கிறதா பாத்து வச்சிருக்கிறேன்... கோழி ருசியா இருந்தா கோழிய வெட்டப் போறேன்...!
ReplyDelete‘வைரமோ.. என் வசம் வாழ்விலே.. பரவசம் வீதியில்.. ஊர்வலம் விழியெலாம்.. நவரசம்...!’ ரவை என்னடா ரவை ரவை... வைரம் தானடா நிரந்தரம்...!
‘பணம் என்னடா பணம் பணம்...?!’
விழுந்தாலும் விழாவிட்டாலும் நாட்டுக்கு...! சரக்கு வச்சிருக்கேன்... உள்ளே இறக்கி வச்சிருக்கேன்...! ‘குடிமகளே..ஹ.ஹ ஹா பெருங்குடிமகளே.. ம்... நான் கொடுக்கட்டுமா அதை உனக்கு... கொடுத்து எடுக்கட்டுமா கொஞ்சம் எனக்கு...?!’
வாடிய வாடாமலர்...!
த.ம. 3
இதையே தொடருங்க ,ஆரோக்கியமா இருப்பீங்க :)
Deleteரவைப் பாட்டு சூப்பராயிருக்கே ,எந்தப் படத்திலே வருது :)
பார்த்தால் மைன்ட் ஏதோ ஸ்லிப் ஆனமாதிரி இருக்கே :)
குடி மகளுக்கு நீங்க கொடுக்கவே வேண்டாம் ,அவங்க போஸ் கொடுக்கிற ஸ்டைல்லைப் பார்த்தால் ராவாவே அடிப்பாங்க போலிருக்கே :)
வாடா மலரும் ஒருநாள் வாடத்தானே செய்யும் :)
ரசித்தேன் ஜி...
ReplyDeleteஒயினைக் கையில் எடுத்து ஒயிலாய் காட்சி தரும் பெண்ணின் படம் ,நல்லாவாயிருக்கு :)
Deleteரவை ஸூப்பர் ஜி
ReplyDeleteஇந்த ரவை போதுமா ,துப்பாக்கி ரவை வேணுமா :)
Deleteஅனைத்தும் ரசிக்க வைத்தன
ReplyDeleteஇளம்பெண் இப்படி காட்சி தருவதைதான் சகிக்க முடியவில்லை ,சரிதானே :)
Deleteவைர ரவை மிகவும் அழகான வார்த்தை விளையாட்டு ரசித்தோம் ஜி..
ReplyDeleteஅனைத்தும் ரசித்தோம் ஜி
ரவா உப்புமா என்றாலே சலித்துக் கொள்ளும் அளவுக்கு சாதாரணம், ஆனால் வைரமதிப்பு ,காஸ்லியாச்சே:)
Deleteகண்டிப்பாக மறைக்க முடியாதுதான்.....
ReplyDeleteமறைத்தாலும் கண்டுபிடித்து விடுவார்களே:)
Deleteஆயிரம் காலத்து பயிர் இப்படி வளர்வது வருத்தம் தரக்கூடிய ஒன்று தானே :)
ReplyDeleteஅனைத்து நன்றாக இருக்கிறது
ReplyDeleteகுடிகாரனின் நாட்டுப் பற்றுமா :)
Delete