அழையா விருந்தாளின்னா அவமதிப்புதானா :)
''பந்தியிலே சாப்பிட உட்கார்ந்தவரை எழுப்பி ,அடிச்சு விரட்டுறாங்களே ,ஏன் ?''
''வெறும் கையோட வந்து ,புது செருப்பு காலோட போறதே அவர் வழக்கமாம் !''
டீச்சர் முகத்தில் கோழி தெரிவதேன் :)
'' டீச்சரைப் பார்த்தா ,உனக்கு மட்டும் ஏண்டா கோழி ஞாபகம் வருது ?''
''இவங்களும் முட்டைதானே போடுறாங்க !''
சன்னி லியோன் பிறந்ததும் மதுரையில் தானா :)
உயிருடன் உள்ள அமைச்சருக்கும் ,MLAக்கும் இறப்புச் சான்றிதழ் வழங்கி சாதனைப் படைத்த மதுரை மாநகராட்சி ...
தற்போது பிறப்புச் சான்றிதழ் வழங்கியதிலும் சாதனை படைத்து இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது ...
டெல்லி முதல்வராக பதவி ஏற்கவிருக்கும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் பிறந்தது ...
மதுரையில் தான் என்று வழங்கப் பட்டிருக்கும் பிறப்புச் சான்றிதழ் வக்கீல்களின் கையில் கிடைத்துள்ளது ...
அதனை ஆட்சியரிடம் ஒப்படைத்து புகார் அளித்து உள்ளார்கள் ...
நம் மதுரையில் பிறந்தவர் டெல்லிக்கே முதல்வர் ஆகப் போகிறார் என்ற நமது மகிழ்ச்சியைக் கெடுக்கும் விதமாய் ...
அந்த பிறப்புச் சான்றிதழ் பொய்யானது ,விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளோம் என்கிறார்கள் உயர் அதிகாரிகள் ...
ஒபாமா ,பான் கீ மூன் ,ஏஞ்சலினா ஜோலி ,சன்னி லியோன் ,ஐஸ்வர்யா ராய் ஆகியோரும் அநேகமாய் மதுரையில் பிறந்து இருக்கும் விபரம் விசாரணையில் வெளியாகும் என்று நம்பலாம் ...
சோனியா காந்தி பெயரில் பிறப்புச் சான்றிதழ் வழங்கப் பட்டிருப்பின் ...
அவரும் இந்தியப் பிரஜை என்ற அடிப்படையில் ...
அடுத்த பிரதமருக்கான வேட்பாளர் ஆக அறிவிக்கப் படக்கூடும் ...
கணவன் ,மனைவிகள் கற்பூர வாசனை அறியாதவர்களா:)
கழுதைகள் உதைக்கும் காரணம் புரிந்தது ...
கணவனோ,மனைவியோ
'கழுதைக்கு வாழ்க்கைப் பட்டாச்சு 'என்றபோது !
அன்புள்ள வலையுலக உறவுகளே !
வெளியூர் பயணத்தின் காரணமாக ,இன்றிலிருந்து நான்கு நாட்களுக்கு மீள்பதிவு மட்டுமே :)
அன்புள்ள வலையுலக உறவுகளே !
வெளியூர் பயணத்தின் காரணமாக ,இன்றிலிருந்து நான்கு நாட்களுக்கு மீள்பதிவு மட்டுமே :)
|
|
Tweet |
முதல் ஜோக் பாவமா இருக்கு. என்னதான் இருந்தாலும் பாதிச் சாப்பாட்டில் எழுப்பி விரட்டலாமோ.... அதுவும் அடித்து விரட்டலாமோ...
ReplyDeleteமற்றவற்றை ரசித்தேன் ஜி!
அழையா விருந்தாளிக்கு வேறென்ன மரியாதைக் கிடைக்கும் :)
Deleteவெறும் கையோட வந்தாலும்... வெறும் காலோடு போகக் கூடாதுங்கிறதுதான் அவரோட கொள்கை... என்னதான் இருந்தாலும் கொள்கை முடிவை மாத்த முடியுங்களா...?!
ReplyDeleteமுட்டை போடுறதோட... கூமுட்டைன்னு திட்டுறதும் அவுங்கதானே...!
மதுரை மல்லி மட்டுமல்ல... சான்று இதழ் மலிவில் இங்கு விற்கப்படும்... எது வேண்டும் சொல் மனமே...!
இதுக்குத்தான் சின்ன வயதில் கழுதை பால் குடுக்காதிங்கன்னு சொன்னாக் கேக்கனும்...!
த.ம. 4
நல்ல கொள்கையைப் பிரச்சாரம் செய்து பரப்பாமல் போனால் சரி :)
Deleteபோடுறது அவங்க ,திட்டு மட்டும் மற்றவங்களுக்கா :)
இறப்பு சான்றிதழை உடனே பெற்றுக் கொள்ளுங்கள் :)
பசு மாட்டுப் பாலை விட கழுதைப் பால் விலை அதிகமாமே ,வாங்க இவ்வளவு கஷ்டப் பட்டிருப்பாங்க :)
பயணம் சிறக்க வாழ்த்துகள் ஜி...
ReplyDeleteபிளைட் பிடிச்சு டெல்லிக்கா போகப் போறேன் ,பணியின் காரணமான பயணம் ஜி இது :)
Deleteரசித்தேன்.
ReplyDeleteவாழ்த்துகள்.
கழுதைப் பழமொழி ஞாபகம் வந்ததா :)
Deleteممتاز (Mumtaz)
ReplyDeleteமும்தாஜ் இல்லே ,சன்னி லியோன் :)
Deleteபூமணக்கும் மதுரை புகழ் மணக்கும் பலரது பிறப்பிடம் என்று கூறக் கேட்டால் மகிழ்ச்சி வரவில்லையா
ReplyDeleteமகிழ்ச்சிதான் ,அவங்க சொல்லிக்க தயாராய் இல்லையே :)
Deleteகடைசி செய்தி இன்னும் சில பதிவுகளுக்கும் வராமல் இருந்தாலும் தவறு இல்லை என்று எண்ண வைக்கிறது
ReplyDeleteஉங்கள் எண்ணம் போல் செய்யுங்கள் :)
Deleteநல்ல ஜோக்குக்குமகிழ்ச்சி
ReplyDeleteஉங்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சியும் :)
Deleteநாய்க்கு தெரியுமா..கற்பூரவாசனை தெரியுமா...? என்று சொல்வது..இவங்களை இல்லீ..யா....
ReplyDeleteகுங்குமம் சுமந்த கழுதைகள் என்று வேண்டுமானால் இவர்களை சொல்லலாம் :)
Deleteமுதல்...பாவம் ஜி...
ReplyDeleteமற்றதை ரசித்தோம் ஜி
திட்டமிட்டு ஏமாற்றுபவர்களை பாவமென்று நினைக்கலாமா :)
Delete