12 December 2016

நடிகை போகக் கூடாத இடம் :)

             '' எந்த  நடிகையும் காய்கறி வாங்க , மார்க்கெட் பக்கம்  போக மாட்டாங்களாமே ,ஏன் ?''
           ''மார்க்கெட் போன நடிகைன்னு  செய்தி வந்தா ,சினிமா சான்ஸ் கிடைக்காதே !''

உண்மையை சொன்ன உண்மை நண்பன் :)
        '' எனக்கு நல்லா பால் கறக்கத் தெரியும்னு சொல்லி  ,பாங்கிலே மாட்டு லோன் கேட்டா ,தர மாட்டேங்கிறாங்க ,ஏன்னு தெரியலே ? ''
        ''பணத்தை உன்னிடமிருந்து கறக்க முடியாதுன்னு அவங்களுக்கும் தெரிஞ்சுருக்கும் !''

 ரசனைக் கெட்ட ஜென்மங்களோ :)
        '' என் பொண்ணு வீணை  கத்துக்கிறதுலே,என்னைவிட  நீங்கதான் சந்தோசமா இருக்கீங்க ,ஏன் சார் ?'
        ''வீட்டைக் காலி பண்ணமுடியாதுன்னு  சொன்ன ,  பக்கத்து போர்ஷன்காரங்க  சொல்லாம கொள்ளாம ஓடிட்டாங்களே !'' 
பிள்ளைங்க விளையாட்டுலே பெத்தவன் தலையிடலாமா :)
          ''என்னங்க ,நீங்கதான் போலீஸாச்சே ,நம்ம புள்ளைங்க போலீஸ் திருடன்னு விளையாடினா ஏன் எறிஞ்சு விழறீங்க ?''
          ''மாசம் பொறந்தா மாமூல் கொண்டு வந்து தரத் தெரியாதா நாயேன்னு கேட்கிறானே !''

இது திருமண வாழ்த்தா ,சாபமா :)
இரயில்வே தண்டவாளம் போல்  
இணை பிரியாமல் தம்பதியர் வாழ்கவென 
வாழ்த்தியவர்  சிந்திக்கவில்லை ...
தண்டவாளங்கள்  ஒன்று சேருவதே இல்லையென்று !

16 comments:

  1. ''மார்க்கெட் போன நடிகை
    - ''பணத்தை...கறக்க
    - வீணை....'வீட்டைக் காலி
    எல்லாம் ரசித்தேன் சகோதரா.
    தமிழ் மணம் - 2 (1)
    https://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. உங்களின் த ம இரண்டில் ஒன்றை ரசித்தேன் :)

      Delete
  2. Replies
    1. இது எந்த 'ஓகே' ஜி :)

      Delete
  3. அனைத்தையும் ரசித்தேன். மார்க்கெட் அருமை.

    ReplyDelete
    Replies
    1. இந்த மார்க்கெட்டில் எல்லாமே விலை மலிவுதான்:)

      Delete
  4. சரிந்த மார்க்கெட்ட தூக்கி நிறுத்தப் போறாங்களாம்...!

    கமிஷனக் காட்டி லோனக் கரந்திட்டேன்ல்ல...! மேனேஜர் வீட்ல ரெய்டாம்...!

    ஒங்க பொண்ணுக்கு இனி ஏகப்பட்ட கிராக்கிதான்னு சொல்லுங்க...!

    ‘தாயைப்போல் பிள்ளை’ பழமொழி இருக்கில்ல...!

    ‘இரயில்வே தண்டவாளம் போல் இணை சேராமல் தம்பதியர் வாழ்க...!’

    த.ம. 7

    ReplyDelete
    Replies
    1. கஷ்டமான் காரியமாச்சே :)

      வங்கிக்கு வந்த புது நோட்டு மொத்தமுமே அவர் வீட்டில் சிக்கிச்சாமே :)

      கச்சேரி சான்ஸ் கிடைக்காட்டியும் வருமானம் பார்த்துக்கலாம் :)

      தந்தையைப் போல பிள்ளைன்னு சொல்லணும் :)

      இது வாழ்த்து :)

      Delete
  5. மார்க்கெட் போகாமல் அவங்க சூப்பர் மார்க்கெட் போனால் அவங்களுக்கு சூப்பர் மார்க்கெட் என்று சொல்லுவாங்களா ?

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் பிகர் என்று வேண்டுமானால் சொல்லலாம் :)

      Delete
  6. 'மார்க்கெட் போனா போனதுதானா..........ஃஃஃஃ

    ReplyDelete
    Replies
    1. என்னதான் மேக்கப் செய்தாலும் வரவா போவுது இயற்கை அழகு :)

      Delete
  7. மாமூல் கொண்டு வந்து தரத் தெரியாதா நாயே என்பதையும்தானே :)

    ReplyDelete
  8. வீணையின் டொயிங் டொயிங் சத்தத்தையுமா :)

    ReplyDelete
  9. இது திருமண வாழ்த்தா ,சாபமா:)
    அருமையான வரிகள்

    ReplyDelete
    Replies
    1. இப்போது ,செல்லும் சிம்மும் போல சேர்ந்து வாழ்க என்று வாழ்த்தலாமா :)

      Delete