1 December 2016

கணவனை நல்லாவே புரிந்து வைத்திருக்கும் மனைவி :)

        ''என்னம்மா,பணத் தட்டுப்பாடு உள்ள இந்த நேரத்திலே மோதிரம் கேட்கிறாரே மாப்பிள்ளை ..உலகம் தெரியாத ஆளாயிருக்காரே !''
      ''கவலைப் படாதீங்க அப்பா ,அவர் 'உலோகம்' தெரியாத ஆளும் கூட ... கவரிங் மோதிரம் வாங்குங்க போதும் !''

பொண்ணோட சைசுக்கு இது தேவையா :)
           ''கல்யாணத்தில் அம்மி மிதிக்கிற சடங்கெல்லாம் வேண்டாம்னு சொன்னேன் ,கேட்டீங்களா?''
           'என்னாச்சு ?''
          ''அம்மிக் கல்லே உடைஞ்சு போச்சே !''

மாமூல் நூறு வகை :)
            ''அந்த  ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் ,மற்றவங்களுக்கு வழிகாட்டியா இருக்காரா ,எப்படி ?''
            ''மாமூல் வரும் நூறு வழிகள்னு புத்தகம் எழுதி வெளியிட்டு இருக்காரே !''

அதுவுமா இருக்கும் :)
          ''அந்த அகராதிகிட்டே  கல்யாண ஆல்பத்தைக் காட்டாதேன்னு   சொன்னா ,கேட்டியா ?''
          '' அதுக்கென்ன இப்போ  ?''
          ''பஸ்ட் நைட்  போட்டோ ஒண்ணுமே இல்லையேங்கிறான் !''

இவர் நம்ம ஊர் சர்தார்ஜி போலிருக்கு:)
        ''ஆனந்தவிகடன்  வாங்கவா வாராவாரம் பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டு பார்டர் ஊரான ஹோசூருக்கு  வந்து போறீங்க?''
        ''அங்கே வாங்கினா 27 ரூபாய் ,இங்கே வாங்கினா 25 ரூபாய் ஆச்சே !''

சுய ஒளி சூரியனாய் இருக்கணும் !
   இரவில் நிலா மின்னுவது 
   இரவல் ஒளியால் ..
   இரவல் வாங்கி ,வாங்கியே 
   ஒருநாள்  ஓடி ஒளிந்துக் கொள்கிறதோ ?

23 comments:

  1. லோகத்த நல்லா புரிஞ்சி வச்சிருக்காய்... அதுக்கு ஏம்மா இவ்வளவு தூரம் வந்தாய்... பக்கத்திலேயே ஒன்ன வாங்கிக் காட்டிட வேண்டியதுதானே...!

    ‘குண்டு(க்கு) கல்யாணம்’ வேணாமுன்னா இப்படியா சிம்பாலிக்கா காட்டுறது...?!

    அந்தப் புத்தகத்தைவிட ‘கம்பி என்னாமல் தப்பிக்கிறதுக்கு 100 வழி’ புத்தகம்தான் நல்ல சேல்ஸ் ஆகுதாம் போலிஸ் ஸ்டேசன்ல...!

    ‘குறுக்கு வழியில் வாழ்வு தேடக்கூடாதின்ட்டா...!’ மொத மொத அவ பேச்சத் தட்டக் கூடாதின்னு இருந்திட்டேன்...!

    வரவு எட்டணா... செலவு பத்தணா... அதிகம் ரெண்டனா கடைசியில் துண்டனா துண்டனா துண்டனா...!

    வாங்கியதற்கு வட்டியாக... எதையாவது கொடுத்துத்தானே ஆக வேண்டும்... இல்லையென்றால் சும்மா விடுவானா...?! ஒரு நாள்தானே... மாசத்திற்கு ஒரு நாள்... அம்மா ஆசை...!

    த.ம. 1


    ReplyDelete
    Replies
    1. இருந்தாலும் மாமனார் கையால் பெற்றுக் கொண்டால்தானே மருமகனுக்கு மரியாதை :)

      அம்மி மிதிக்காம தாராளமா பண்ணிக்கட்டும் ,நமக்குஎதுக்கு குண்டு பெண் பாவம் :)

      அதை எதுக்கு போலீஸ் ஸ்டேஷன்லே விக்கணும் ,புத்தகத் திருவிழாவிலேயே விக்கலாமே :)

      இல்லைன்னா அதுவும் வியாபாரத்துக்கு வந்திருக்குமா ,சேசே .என்ன புருசன்டா:)

      இப்பவே துந்தனாதான்:)

      இரவல் தந்தவன் கேட்கின்றானோ :)

      Delete
  2. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. இரவல் ஒளிஎன்றாலும் இனிமைதானே :)

      Delete
  3. Replies
    1. கவ'ரிங்' அருமைதானே :)

      Delete
  4. உலகம் - உலோகம்.... ரசித்தேன்.

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. லோ லோ என்று அலையும் மருமகனுக்கு இந்த உலோகம் போதும்தானே :)

      Delete
  5. சுய ஒளி சூரியனாய் இருக்கணும்!
    "இரவில் நிலா மின்னுவது
    இரவல் ஒளியால்...
    இரவல் வாங்கி, வாங்கியே
    ஒருநாள் ஓடி ஒளிந்துக் கொள்கிற" என்றவாறு
    நம்மாளுங்க இருப்பதை
    வானிலிருந்து கடவுளும் பார்க்கிறார்!
    தன்னொளிப் பகலவனாக
    (சுய ஒளிச் சூரியனாக )
    எப்ப தான் நம்மாளுங்க
    மின்னப் போறாங்களோ
    எனக்கும் தெரியவில்லையே!

    ReplyDelete
    Replies
    1. சூரிய ஒளி குளியலின் போது வேண்டுமானால் மின்னலாம் :)

      Delete
  6. அனைத்தும் அருமை ஐயா.நன்றி

    ReplyDelete
    Replies
    1. நூறு வழிகளுமா :)

      Delete
  7. பொண்ணு ரொம்பத்தான் கொடுத்து வைத்தவர்!

    ReplyDelete
    Replies
    1. பொண்ணோட அப்பாவும்தானே:)

      Delete
  8. Replies
    1. ஹோசூர் வந்து செல்பவரின் ஐடியாவும் அருமைதானே :)

      Delete
  9. லோகம் புரியுதோ இல்லையோ, உலோகத்தை புரிஞ்சா புழைச்சிக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. நாலுநாளில் கவ'ரிங்' பல்லை இளிக்கும் போது அவர் புரிஞ்சிக்குவார் :)

      Delete
  10. இப்படியான மனைவி மார்கள் எல்லாரும் தங்கள் கணவன்மார்களை புரிந்து இருந்தால் பிலச்சனையே வராதே.....

    ReplyDelete
    Replies
    1. தற்போதைக்கு பிரச்சினை இல்லைதான் :)

      Delete
  11. அம்மிக்கல் இரண்டானதையுமா :)

    ReplyDelete
  12. உலகம் உலோகம்....அனைத்தும் ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. நாலும் தெரிந்து நடந்துகிட்டா நல்லாயிருக்கலாம்தானே :)

      Delete