18 December 2016

'தேவதாஸ்'களின் புலம்பல் :)

 இரண்டிலுமே பொய்தானே அதிகம் இருக்கும் :)           
           ''மேனேஜர் ஸார்,உங்க மகளுக்கு நான்தான் லவ் லெட்டர் கொடுத்தேன்னு எப்படி கண்டுபிடீச்சீங்க ?''
             ''வழக்கமா ,லீவ் லெட்டர்லே சொல்ற பொய்களை  லவ் லெட்டரிலும் சொல்லி இருக்கீங்களே!''

முதலீடே இன்றி என்றும் வருமானம் :)
           ''மனுஷனுக்கு பிரச்சினை  இருக்கும் வரை கடவுளுக்கு அர்ச்சனை இருக்கும் ...இதைப் பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க ?''
           ''கடவுளுக்கு அர்ச்சனை இருக்கும் வரை  அர்ச்சகருக்கு  தட்சணை இருக்கும் !''

நோயாளிக்கு பேச்சு வராது ,டாக்டருக்குமா :)
           ''நாலு மாசத்திலே எட்டு லட்ச ரூபாய் செலவு செய்ஞ்சும் உங்கப்பாவுக்கு பேச்சு வரலேன்னா ,டிஸ்சார்ஜ் செய்யச் சொல்ல வேண்டியது தானே ?''
          ''மூச்சு இருக்கிறவரைக்கும் டிஸ்சார்ஜ் என்கிற பேச்சுக்கே இடமில்லைன்னு டாக்டர் சொல்றாரே !''

பயத்துக்கும் ஒரு அளவில்லையா:)
         ''ஊரெல்லாம் மர்ம காய்ச்சல் ...கடையிலே விற்கிற பாக்கெட்டை வாங்கக்கூட பயமா இருக்கா ,என்ன பாக்கெட் ?''
        ''புளிக் ' காய்ச்சல்' பாக்கெட்தான் !''

தேவதாஸ்களின் புலம்பல் :)
    பெண்ணின் மனதை அறியவே முடியாதாம் ...
    ஆணின் மனதில் உள்ளது மட்டும் ...
    நெற்றியில் 'டைட்டில் 'போல தெரிகிறதா  என்ன ?

16 comments:

  1. அன்பில்... பொய்யாமொழி...!

    தட்சணம் கிடைத்தால் வீட்டில் பட்சணம் பண்ண முடியும்...! ‘மனுசனை மனுசன் சாப்பிடுறான்டா... இது மாறுவதெப்போ தீருவதெப்போ நம்ம கவலை...!’

    ‘மீண்டு(ம்) உயிருள்ளவரை உஷா(ர்)’ படம் எடுக்கப்போறாராம் டாக்டர்...! உசாரைய்யா உசாரு... ஊரு சனம் உசாரு...!

    பாக்கெட்ட வாங்கிட்டு வரச்சொன்ன... பக்கெட்ட வாங்கிட்டு வந்து நிக்கிறீங்களே...!

    ‘ஆழமுன்னா ஆழம் அது பொம்பள மனசுதாங்க...’ ஆலம் நடிகை வந்துட்டாங்க்ளா...?!

    த.ம. 1





    ReplyDelete
    Replies
    1. வள்ளுவரே சொல்லிட்டாரே ,நல்லது நடக்கும்னா பொய்யும் சொல்லலாம்னு :)

      ஒருத்தரோட பிரச்சினை ,இன்னொருத்தருக்கு எப்படி பட்சணம் ஆகுது பாருங்கோ :)

      உசிரு கொடுத்தார் என்றால் அவர் டாக்டரில்லே,தெய்வம் :)

      உங்களுக்கு மர்ம காய்ச்சல் வர மாட்டேங்குதே:)

      ஆட்டம் போட்ட ஆலம் காலமெல்லாம் போயே போச்சு :)

      Delete
  2. நன்கு ரசித்துச் சிரித்தேன் சகோதரா.
    மிக்க நன்றி.
    தமிழ் மணம் 4

    ReplyDelete
    Replies
    1. லவ்வுக்கும்,லீவுக்கும் ஒற்றுமை இருக்குதானே :)

      Delete
  3. //''கடவுளுக்கு அர்ச்சனை இருக்கும் வரை அர்ச்சகருக்கு தட்சணை இருக்கும் !''//

    மனுஷனுக்குப் பிரச்சினை தீர்வதில்லையே!

    ReplyDelete
    Replies
    1. அதான் ,நிரந்தர வருமானம் உள்ள தொழில் என்று சொன்னேன் :)

      Delete
  4. ரசித்தேன் சிரித்தேன் சுவைத்தேன்

    ReplyDelete
    Replies
    1. முத்தேனுக்கும் நன்றி :)

      Delete
  5. அனைத்தும் ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. புளிக் காய்ச்சல் உங்க ஊரிலே கிடைக்குதா :)

      Delete
  6. அருமையான நகைச்சுவைத் துளிகள்

    ReplyDelete
    Replies
    1. நீங்க துளின்னு சொன்னதும் ,மேலே அசோகன் ஜி சொன்ன தேன்தான் ஞாபகம் வருது :)

      Delete
  7. பின்னூட்டங்கள் சர்வர் கிடைக்காததால் காணாமல் போய் விட்டது

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டம் இட்டபின் காபிபேஸ்ட் செய்து கொண்டால் சரியாக போய் விடுகிறது .செய்து கொள்ளாவிட்டால்மக்கர் செய்து விடுகிறது ,மறுபடியும் அதே பின்னூட்டங்களை மீண்டும் அடிக்க சிரமாமாகிறது ,நாளை பார்க்கலாம் ஸார்:)

      Delete
  8. தேவதாஸ்கள் மாதிரி தேவதாஸிகளும் புலம்பாமலா இருந்திருப்பார்கள்....?

    ReplyDelete
    Replies
    1. அதிகமா புலம்பியிருப்பார்கள் !தேவதைகளே புலம்பும் உலகமாச்சே :)

      Delete