12 August 2015

கணவனின் சந்தோசம் இதற்குத் தானா :)

  இந்த பயபிள்ள பாஸாவானா :)            
           ''பரீச்சைத் தாளை லவ் லெட்டர் மாதிரி நினைச்சு எழுதணும்னு  ஏன் சார் சொல்றீங்க ?''
                          
                      ''மனசுக்குள்ள  ஒண்ணுமே இல்லைன்னாலும் பக்கம் பக்கமா எழுத வருமே !''


கொள்கைப் பிடிப்புள்ள மாணவர்கள் !                  

            ''பொன் விழா கண்ட நம்ம பள்ளி இதுவரை மாநில அளவில் முதல் இடம் வராததற்க்கு காரணம் ,பள்ளியோட இலச்சினை தானா?''
     ''ஆமா ,'பிறர்க்கு வாழ் 'என்பதை  மாணவர்கள் அனைவரும் கடைப்பிடிக்கிறார்களே!''


கணவனின் சந்தோசம் இதற்குத் தானா ?

                 ''என்னங்க , அரசாங்க வேலை  கிடைச்சாச்சு ... நான் சனி ...ஞாயிறு வீட்டுலேத்தான் இருப்பேன் !
                  ''ரொம்ப சந்தோசம் ..... நீ  'சனி''ங்கிறதை இப்படியாவது ஒத்துக்கிட்டியே !''



இந்த இசையை ரசிக்க முடியலே !

 விடாமல் அடிக்கும் 'டய்ங் டய்ங்' மணி சத்தமும் ...
இடை இடையே சங்கொலி சத்தமும் ...
'பாடியை சீக்கிரம் தூக்குங்கடா 'என்றுச் சொல்ல வைத்து விடுகிறது !



21 comments:

  1. லவ் லெட்டர் ஜோக் அருமை.

    சனி ஞாயிறு வீட்டில் இருப்பது கொஞ்சம் கஷ்டம்தான்.

    தளம் புதுப் பொலிவுடன் இருக்கே..!

    God Bless You

    ReplyDelete
    Replies
    1. நிறைய படித்தாலும் எதுவும் நினைவுக்கு வருவதில்லை ,லவ் லெட்டர் என்றால் வரும்தானே :)

      சனி இருக்கும் இடத்தில் நாம் இருப்பது அதை விட கஷ்டமாச்சே :)

      இருந்தாலும் ,ஓபன் ஆவதில் தாமதமாகிறதா?நீங்கதான் சொல்லணும் :)

      Delete
  2. ரசிக்க வைத்தன

    ReplyDelete
    Replies
    1. முதன் முறையாய் வருகை தந்து ரசித்தமைக்கு நன்றி நாகேந்திர பாரதி ஜி :)

      Delete
  3. பக்கம் பக்கமா எழுதறது எண்ணமோ உண்மைதான்...வாத்தியாரு வாழ்க்கையில ‘லவ்’ பெயிலராம்... அவரோட வாழ்க்கையும் முட்டையாப் போச்சு... நானும் கூமுட்டையாயிட்டேன்... பாஸ்... பாஸ் பண்ண வழியில்ல...?!


    'பிறர்க்கு வாழ் 'என்பதை மாணவர்கள் தப்பா புரிஞ்சிகிட்டு 'பிறர்க்கு வால்’ ன்னு நெனச்சிட்டாங்கன்னு நெனக்கிறேன்...!


    ஒனக்கு சனியன் பிடிச்சிடுச்சு...! இனி எங்கேயும் சும்மா ஜாலியா இருக்கப் போறான்னு சொல்லாம சொல்றாய்....!


    ‘நிம்மதியா நா நித்திரை கொள்(ல்)ற எடத்தில சீக்கீரம் கொண்டு போய் என்ன படுக்க வையுங்க... ஒங்க இம்சை தாங்கமுடியல... ரொம்பத்தான் ஆட்டம் போடாதிங்கடா...! ஆடி அடங்கி நீங்களும் அப்புறமா அங்கதான் வரணும்...! ஆமாம்... !’

    த.ம.1





    ReplyDelete
    Replies
    1. ஒ ..அவர் தாடி வளர்த்த வாத்தியாரா :)

      பிறர்க்கு வாழ்ந்த மாணவர்களில் நானும் ஒருவன் ,அதனால்தான் வால்தனம் குறையலே:)

      புரிஞ்சிகிட்டா சரி :)

      அந்த காலத்திலே நான் ஆடாத ஆட்டமா :)

      Delete
  4. சனிக்கு இப்படியும் ஒரு பொருள் உண்டோ, சிறந்த நகைச்சுவை.

    ReplyDelete
    Replies
    1. சனி இரண்டெழுத்து ,இரண்டு அர்த்தம் இருந்தா தப்பா :)

      Delete
  5. சனி... ஞாயிறு! :) ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. 'எங்கள் பிளாக்'போய் 'திங்க 'கிழமையும் ரசிக்கலாம் :)

      Delete
  6. Replies
    1. பாஸ் பாஸ் நீ இப்போ பாஸ் பாஸ் :)

      Delete
  7. சனி ஞாயிறு ஹஹஹ

    நல்லா எழுதுவான் பையன்...பரீட்சை...ஹஹஹ்

    ReplyDelete
    Replies
    1. எக்ஸ்ட்ரா பேப்பர்கூட கேட்டு எழுதுவான் :)

      Delete
  8. அப்படியா, மனதில் நிறைய இருக்கு,,,
    ஆனா எழுத முடியல,,,,,,
    அப்ப என்ன செய்வது???
    அனைத்தும் அருமை,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு தலைக் காதல் என்றால் ஒரு தலைப்பு கூட தோன்றாது :)

      Delete
  9. லவ் லெட்டர் போல எழுது! சூப்பர் பாடம்! ரசித்தேன்! நன்றி!

    ReplyDelete
  10. 01. அவன் ‘’பாட்டு’’க்கு கண்ணே கலைமானே.... அப்படினு எழுதிட்டா...?
    02. உண்மைதானே விட்டுக் கொடுக்கும் தன்மை.
    03. காலை வாற சந்தப்பம் கிடைச்சுருச்சு பிறகு பார்த்துக்கிறலாம்...
    04. இதுதான் எழவொலி.

    ReplyDelete
    Replies
    1. 1.சோகப் பாட்டுக்கு வாழ்நாள் முழுதும் சோகப் பட வேண்டியது வரும் :)
      2. எனக்கு இவ்வளவு நல்ல விஷயத்தை கற்றுத்தந்தது ,என் பள்ளிதான் :)
      3.யாரை எப்போ சந்திக்கணும்னு கற்றா தரணும்,நீங்க வேற சப்போர்ட்டா :)
      4.ஒரே மாதிரி ஒளியைக் கேட்க காதுக்குப் பிடிக்கலே ,கண்ணும் அப்படித்தான் விதவிதமாய் பார்க்க நினைக்கிறது :)

      Delete
  11. அட..கனவர்மார்கள் இப்படியும் சந்தோசபட்டுக் கொள்கிறார்கள்.....

    ReplyDelete
    Replies
    1. இருக்காதா ,தான் நினைப்பது தன்னிலை விளக்கமாய் வந்தால் :)

      Delete