7 August 2015

பெயர்தான் ஜூலிபுளோரா ,குத்தினால் வலி :)

-------------------------------------------------------------------------

குடும்ப 'மனநல 'மருத்துவர் என்று  சொல்லக்கூடாதோ :)

               ''பொண்ணைப் பிடிச்சிருக்குன்னு  சொல்லிட்டு,இப்ப ஏன் வேண்டாங்கிறாங்க?''
              ''எங்க பரம்பரையைப் பற்றி ,எங்க பேமிலி மனநல டாக்டர்கிட்டே விசாரித்து பாருங்கன்னு சொன்னது தப்பாப் போச்சு !''


பெயர்தான் ஜூலிபுளோரா ,குத்தினால் வலி ?

              ''ஜூலிபுளோரா குத்தின இடத்தில் இருந்து ரத்தம் கொட்டுதுன்னு சொல்றீங்களே ,அது யார் உங்க மனைவியா ?''
             ''அட நீங்க வேற ,சீமைக் கருவேல மரத்தின் விஞ்ஞான பெயர்தான் அது !''

வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சி தரும் போராட்டம் !

          ''ரயில் போறவரைக்கும் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் ,இப்போ ரயிலுங்க வரிசையா நிற்குதே ,ஏன் ?''
           ''கேட் கீப்பர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி  ரயில் நிறுத்தும் போராட்டம் பண்றாங்களாம் !''



தாய் மனம் பூவினும் மெல்லியதா ?

குரங்கு கூட ஈன்ற பின்னும்  தன் குட்டியை 
தன்னுடனே சுமந்துக் கொண்டே திரிகிறது ...
இதைப் பார்த்தபின்பும் பிறந்த சிசுவை குப்பையில் வீச 
சில  'நாய் 'மார்களுக்கு எப்படி  மனசு வருகிறதோ ?



  1. உலகளந்த நம்பிThu Aug 07, 07:12:00 p.m.
    //ஜூலிபுளோரா குத்தின இடத்தில் இருந்து ரத்தம் கொட்டுது//

    மனைவி செல்லமா குத்தினா என்ன கொட்டும்?




    1. அன்பு !







30 comments:

  1. 'மனநல 'மருத்துவர்’ இப்ப கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறாரு... ஏன்னா...எ பொண்னோட மனச ரொம்ப புரிஞ்சு வச்சுக்கிட்டாரு...!


    சீமைக் கருவேல மரத்தின் விஞ்ஞான பெயர்தான் அது ...! எ மனைவி குத்தினா இம்மையில்ல... மறுமைதான்...! அதான் நா பொறுமையா இருக்கிறதுல இருந்து தெரியல...!


    இந்த போராட்டமெல்லாம் நடக்குமுன்னு தெரிஞ்சுதான் மேம்பாலம் கட்டிட்டாங்க...! நீங்க வேணுமுன்னா கேட்டுப்பாருங்க...!


    பெற்ற மனம் பித்துங்கிறது இதுதானோ...? அதான் பிள்ளை மனம் கள்(ல்) ஆயிடுதோ...?

    த.ம. 1


    ReplyDelete
    Replies
    1. பொண்ணோட மனசை புரிஞ்சிக்க முடியுமா :)

      பொறுமையுடன் இருந்து பாருங்கள் ,பொக்கிஷமே கிடைக்கலாம் :)

      மேம்பாலம் இதுக்குத்தானா ,மேம்போக்கா யோசித்தேன் அதான் புரியலே :)

      பிறப்பு குப்பை தொட்டியில் ,வளர்ப்பு டாஸ்மாக்கிலா:)

      Delete
  2. ஹா...ஹா...ஹா...!

    மனிதகுல எதிரியின் பெயர்!

    அவங்களுக்கும் சம உரிமை இருக்கே! ஜனநாயக வழியில் போராட்டம்!

    ம்ம்ம்ம்ம்ம்....

    ReplyDelete
    Replies
    1. ஒரு காலத்தில் இதுதான் பசுமை ,இப்போ மனித குல எதிரி என்கிறார்கள் :)

      இருப்பு பாதை வழியில் போராட்டம் :)

      Delete
  3. குடும்ப மனநல மருத்துவர்.... :))))

    அனைத்தையும் ரசித்தேன்.

    த.ம. 5

    ReplyDelete
    Replies
    1. பரம்பரையா இப்படியான்னு சந்தேகம் வருமா ,வராதா :)

      Delete
  4. வணக்கம்,
    நாய் மார்கள் நல்ல பதம்,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நாய்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது :)

      Delete
  5. 01. மேமிலி டாக்டருல மனநல மருத்துவருமா ?
    02. இந்த பெயரை மனைவிக்கும் வைக்கலாம் போலயே....
    03. அடடே புல்லரிக்குது நட்புணர்ச்சி.
    04. நல்ல சவுக்கடி

    ReplyDelete
    Replies
    1. ஸாரி ஃபேமிலி என்று படிக்கவும்

      Delete
    2. 1.இருக்கக் கூடாதா :)
      2.பெயர் என்னவோ நல்லாத்தான் இருக்கு ,குணத்தைக் காட்டிவிடக் கூடாது :)
      3.எத்தனை நாள்தான் ரயில் கடக்கும் வரை காத்திருப்பது :)
      4.ஆனாலும் உறைக்கமாட்டேங்குதே :)

      Delete
  6. குரங்கிலிருந்து தோன்றியிருந்தாலும்,குரங்கை விடக் கேவலம்?!

    ReplyDelete
    Replies
    1. பொம்பளை குரங்கு இப்படின்னா ,ஆம்பளைக் குரங்கு டாஸ்மாக்கே கதின்னு கிடக்கே :)

      Delete
  7. கருவேல மரம் பசுமை என்றாலும் இப்போது ரசிக்க முடியலே, இல்லையா நண்பரே :)

    ReplyDelete
  8. Replies
    1. நகைச் சுவை இல்லையா:)

      Delete
  9. பதிவு விலாவில் குத்தியது ...
    சிரித்தேன்

    ReplyDelete
    Replies
    1. விலாவில் குத்த ஒருத்தருக்குத் தானே உரிமையிருக்கு :)

      Delete
  10. Replies
    1. உங்களை நானறிவேன் ,என்னை நீங்கள் அறிவீர்கள் .மொய் அறிவிப்பு எதற்கு (அதுக்காக மொய் வைக்காம இருந்திடாதீங்க :)

      Delete
  11. மனநல டாக்டர்.... ஹா.... ஹா....

    ReplyDelete
    Replies
    1. மன நல டாக்டரைப் பார்க்கப் போனாலே ,மெண்டலென்று முடிவு செய்து விடுவார்கள் போலிருக்கே :)

      Delete
  12. வணக்கம்
    ஜி
    அருமை இரசித்தேன்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நாய்மாரை ரசீத்திங்களா:)

      Delete
  13. குத்தினால் வலிக்குமுன்னு எப்ப சார்... கண்டுபிடுச்சிங்கே.......

    ReplyDelete
    Replies
    1. குத்து வாங்கியனதுக்கு பின்னாடி என்று நான் சொல்லணும்னு நினைக்கிறீங்க ,ஆனால் ,நீங்க சொல்லித்தானே எனக்கு தெரியும் அந்த வலி :)

      Delete
  14. ஒருவேளை இப்படிப் பேருவைச்சவன குத்தினவ பேரா இருக்குமோ 'ஜூலிபுளோரா’?

    :)

    ReplyDelete
    Replies
    1. எப்படி இருந்தாலும் அந்த பெயரைக் கேட்டாலே ,இளமை ஊஞ்சலாடுதே :)

      Delete
  15. Replies
    1. ஜூலிபுளோரா அழகான் பெயர்தானே :)

      Delete