26 August 2015

தாஜ்மகால் காதலின் சின்னமா ,எச்சரிக்கையா :)

---------------------------------------------------------------------------------

சான்ஸ்  கிடைக்கும் போது விடுவாளா மனைவி :)             
            ''அதிர்ச்சியான செய்தியைச் சொன்னால் விக்கல் நின்னுடும்னு ,என் மனைவிகிட்டே உன்னை டைவர்ஸ் செய்யப் போறேன்னு சொன்னேன் ...''
            ''விக்கல் நின்றதா ?''
             ''விக்கல் நின்னுடுச்சு ,நான் சொன்னதை உண்மைன்னு நினைச்சு,எப்போ டைவர்ஸ் பண்ணப் போறீங்கன்னு அனத்த ஆரம்பிச்சுட்டாளே !'' 

                      

தொந்தி உடையார் விழுவதற்கு அஞ்சார் ?

     
         ''ஏட்டையா,திருடனைப் பிடிக்க ஓடும்போது குப்புற விழுந்துட்டீங்களாமே ,மூக்கிலே அடி படலையா ?''
        
         ''நல்ல வேளை.தொந்தி இருந்ததால் மூக்குக்கு ஒண்ணும் ஆகலே !''
   



தாஜ்மகால் காதலின் சின்னமா ,எச்சரிக்கையா ?

தாஜ்மகாலை ...
அன்பின் சின்னம்  என்கிறார்கள் ...
அதீத அன்பும் ஆளைக் கொல்லும் என்பதற்கு எச்சரிக்கை சின்னமாய்தான்  கண்ணுக்கு படுகிறது ...
பதினான்கு  முறை பிரசவித்து 
முப்பத்தொன்பது வயதிலேயே மரணமுற்ற 
மும்தாஜை நினைத்தால் பாவமாய்த்தான் இருக்கிறது !

  கரந்தை ஜெயக்குமார்Tue Aug 26, 06:08:00 a.m.
தொந்தியால் இப்படி ஒரு பயனும் உள்ளதா?




  1. விழுந்தால் மீசையில் கூட மண் ஒட்டாதாமே!

    1. அம்பாளடியாள் வலைத்தளம்Tue Aug 26, 03:10:00 p.m.
      அப்போ இனி நீங்க தொந்தியைக் குறைக்காதீங்க ஜீ :))




      1. தொந்தியை விட எனக்கு மூக்கு நீளமாச்சே!
        1. உலகளந்த நம்பிTue Aug 26, 06:00:00 p.m.

          //''ஏட்டையா,திருடனைப் பிடிக்க ஓடும்போது...//

          ஏட்டய்யா ஓடினாரா? நம்ப முடியல பகவான்ஜி.
        2. என்ன இப்படி கேட்டுட்டீங்க ?அவரோட துப்பாக்கியை திருடிக்கிட்டு ஓடினால் விடுவாரா ?




32 comments:

  1. 01. தவளை தன் வாயாலே கெட்டுச்சாம்
    02. நல்லவேளை மல்லாக்க விழலை
    03. மக்கள் மறந்த வரலாறு

    ReplyDelete
    Replies
    1. தவளைச் சத்தம் பாம்பறியும் என்று நாம்தாம் நம்புகிறோம் :)
      அப்படி விழுந்திருந்தா என்ன ஆகியிருக்கும் :)
      இருந்தாலும் சரித்திரம் முக்கியம் இல்லையா:)

      Delete
  2. என்ன ஒரு எதிர்பார்ப்பு!

    என்ன ஒரு வசதி!!

    அதானே! என்ன வொரு சிந்தனை!!!

    ReplyDelete
    Replies
    1. என்னவொரு சிந்தனை உங்களுக்கு ...கருத்தைச் சொல்வதிலும் :)

      Delete
  3. சபாஷ்... பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லி இருக்கீங்க...விக்கல் நின்னுடுச்சு ... ஆனா அவளோட நக்கல் இன்னும் நிக்கல...!


    நல்ல வேளை...மூக்குக்கு வந்தது தொந்தியோட போச்சுன்னு சொல்லுங்க...!


    அப்ப...மும்தாஜ் பதினான்கு பெற்று பெறு வாழ்வு வாழ்ந்தவருன்னு சொல்லுங்க...! ஆமா... இன்னொருவரின் மனைவியத்தான் ஷாஜகான் கட்டிக்கிட்டாறாமே...உண்மையைச் சொல்லுங்க...! இதெல்லாம் அந்தக் கால(த)த்தில சகஜமப்பாங்கிறீங்களா...?!

    த.ம. 3





    ReplyDelete
    Replies
    1. இது நக்கல் இல்லைங்கோ :)

      அவர் என்னைக்கும் கடமைப் பட்டிருக்கார் :)

      சாதாரண மனிதனுக்கே சகஜம் ,ராஜாவைக் கேட்கவா வேண்டும் :)

      Delete
  4. அனைத்தையும் ரசித்தேன். தொந்தி நகைச்சுவை மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. தொந்தியும் நல்ல கெட்அப் தானா :)

      Delete
  5. பிளஸ் கூடவே நீங்க அடி வாங்கின மாதிரி நினனச்சுப் பார்த்தன் சிரிப்ப
    அடக்க முடியல சாமி :)))))))))) வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. உங்க நினைப்புக்கும் ஒரு அளவே இல்லையா,அவ்வ்வ்வ் :)

      Delete
  6. Replies
    1. நானும் உங்கள் உறைப்பனி உலகை ரசித்தேன் :)

      Delete
  7. தாஜ்மகால் ...
    .
    அதீத அன்பும் ஆளைக் கொல்லும் என்பதற்கு
    எச்சரிக்கை சின்னமாய்தான் கண்ணுக்கு படுகிறது ...

    ReplyDelete
    Replies
    1. இதுக்குத் தான் அதிகமா யோசிக்கக் கூடாதுன்னு சொல்றாங்களோ :)

      Delete
  8. டைவொர்ஸ் அதிர்ச்சியான செய்தியா. ஆவலுடன் எதிர்பார்த்த செய்தியா.?நல்லவேளை குப்புற வீழ்ந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை. மல்லாக்க விழுந்துஇருந்தால் மண்டையில் அடி பட்டு மண் போட வேண்டியிருக்குமே. எல்லாவற்றையும் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. மனைவியின் முடிவு அதிர்ச்சிதான் அவருக்கு :)
      'மண்'டை போடுவது சரிதானே :)

      Delete
  9. ஹ்ஹ்ஹஹ்ஹ டைவர்ஸ்..அதிர்ச்சியாகத் தெரியவில்லையே...ஹஹ்ஹ

    தொந்தியின் பயன் ஆஹா....அப்போ தொந்தி இருந்தா மீசைல மண் ஒட்டாதுனு சொல்லுங்க ஜி...

    ReplyDelete
    Replies
    1. அதிர்ச்சி ,பூமராங் போல் ஆயிடுச்சே :)

      இதுக்காக யாரையாவது தள்ளிவிட்டா சோதிக்க முடியும் :)

      Delete
  10. அடடா ஜோக்காளி ஜிக்குத் தொந்தி இல்லையே...

    ReplyDelete
    Replies
    1. நான் போலீசும் இல்லையே :)

      Delete
  11. தொந்தி ஜோக் சூப்பர்! அதிர்ச்சி வைத்தியம் இவருக்கே அதிர்ச்சியாயிருச்சோ! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தொந்தியால் படும்பாடு அவருக்குத்தானே தெரியும் :)
      தன் வினை தன்னை சுடுமே :)

      Delete
  12. ஹஹஹ தவளை தன் வாயால் கெட்டுச்சாம் கில்லர்ஜி சொன்னதையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. பொருத்தமா சொல்வதில் கில்லர்ஜி,கில்லாடி ஆச்சே :)

      Delete
  13. கணவனுக்கு விக்கல் வந்ததா?

    ReplyDelete
    Replies
    1. மயக்கமே வந்தது :)

      Delete
  14. தொந்திக்கும் பயன் இருக்கிறது!ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. மூக்கு, மண்ணை முத்தமிடாமல் தடுத்த தொந்தி வாழ்க வாழ்க :)

      Delete
  15. வணக்கம்
    ஜி

    அனைத்தும் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்.11

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தாஜ் மகாலின் சிறப்பையும் ரசீத்தீர்களா :)

      Delete
  16. நோட்டு கட்டு உள்ளவர்களுக்கும்... ஏழு எட்டு அடி உயரமுள்ள பெரிய சாதிகளுக்கும் தாஜ்மகால் காதலின் சின்னம். இது இரண்டும் இல்லாதவர்களுக்கு தாஜ்மகால் எச்சரிக்கை...

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் ஒரு கோணம் இருக்கா ?எப்படி பார்த்தாலும் தாஜ் மகால் அழகுதான் :)

      Delete