20 August 2015

பிள்ளைங்களுக்கு இது தெரிந்தால் அசிங்கம்தானே :)

                  ''நான் 'நெட்'டைப் பார்த்தால்  , 'போர்ன்விட்டா '  தரமாட்டியா ,ஏன் ?''
                 ''பார்க்கிறது போர்ன்சைட் ,போர்ன்விட்டா  கேட்குதா உங்களுக்கு ?''



ஜூஸிலும் ரெண்டு வகையா ?

                            
                  ''சாத்துக் குடி ஜூஸ் கேட்டா ,தண்ணிச்சாற்றை 

கொண்டுவர்றீயே,நியாயமா ?''

                     'தனிச் சாறு நூறு ரூபாயாகும் ,கொண்டுவரவா ?''



ஆசை மட்டுமா நூறு வகை ,நோயும்தான் !


                 ''முழு உடல் பரிசோதனை செய்துக்கிட்டு ஒரு மாசமாச்சே ,இன்னுமா உங்க உடம்பிலே என்ன நோய் இருக்குன்னு ன்னு கண்டுபிடிக்க முடியலே ?''

             ''என்ன நோய் இல்லைன்னு கண்டுபிடிக்கத்தான் முடியலையாம் !''



டாட்டா .பிர்லா பொறந்ததும் 'லேபர் 'ரூமில்தான் !

லேபர் ரூமிலே பிறந்தாலும் கூட ...
சாகும்போது லேபராய் இருப்பதும் ,இல்லாததும் 
அவரவர் கையிலேதான் இருக்கிறது !




  1. கடைக்குள் நுழைந்தவுடனேயே உங்களுக்கு கற்பனை பொங்கி விடுகிறது.

    சாத்துக்குடி ஜூஸ் என்று கேட்பதற்குள்ளாகவே ஐஸ் போட்டா ஐஸ் போடாமலா என்று வேறு கேட்கிறார்கள். டாட்டாவாக இருந்தாலும் பிர்லாவாக இருந்தாலும் கடைசியில் உலகுக்கு டாட்டா சொல்லும்போது கையில் ஒன்றுமில்லை.
    த.ம.4 
    ReplyDelete

    Replies


    1. எந்தக் கடைக்குள் நுழைந்ததும் என்பதை தெளிவாகச் சொல்லுங்கள் ,குடும்பத்தில் குழப்பம் வந்திடக் கூடாதில்லே ?

      உலகத்திற்கு டாட்டா சொல்லும்போது ஒன்றும் கொண்டு போகாமல் இருக்கலாம் ,ரேஷன்அரிசியை வாங்க வேண்டுமென்றாலும் சம்பாதித்து தானே ஆகணும் ?

24 comments:

  1. அப்ப போர்ன்சைட் விட்டாத்தான் போர்ன்விட்டா உண்டாமாக்கும்...? அப்படி ஒன்னும் வேண்டாமே...!


    “குடுத்ததைக்குடி... இல்லாட்டி சாத்துதான்...குடி...!”


    “நோய் நாடி... நோய் முதல் நாடி... அது தணிக்கும்
    வாய் நாடி..வாய்ப்பச் செயல்...” -ம்...ம்....நாடி பேசலயே...”
    “நீங்க நாடி வைத்தியரா...? அப்ப நா ஓடிப்போறேன்...! ”

    “நான்கூட சீமான்களும் சீமாட்டிகளும் இருப்பார்கள் என்று எண்ணி ஏமாந்து போனேன்...எல்லாம் லேபர்ஸ் கூட்டம்...!”


    த.ம.+1






    ReplyDelete
    Replies
    1. அதுசரி ,அவருக்கு தெம்பு எது கொடுக்குமோ அதையே அனுபவிக்கட்டும் :)

      காசையும் கொடுத்து சாத்தும் வாங்கணுமா,எனக்கு ஜூஸ் வேண்டவே வேண்டாம் :)

      எந்த நோய்க்கு முதல்லே சிகிச்சை தர்றது :)

      பிளடி லேபர்ஸ்னு சொல்லாம விட்டீங்களே:)

      Delete
  2. அப்போ பூஸ்ட் குடிக்கலாமாக்கும்?

    அப்படித்தான் நடக்குது!

    அடப்பாவமே... தலைகீழா இருக்கே...

    அது உண்மை. பிறப்பது சம்பவமாய் இருந்தாலும், இறப்பது சரித்திரமாய் இருக்கவேண்டும் என்பார்களே... அதுபோல.

    ReplyDelete
    Replies
    1. கணவனின் இந்த பழக்கத்தை மனைவி பூஸ்ட் செய்தால் குடிக்கலாம் :)

      அதுவும் நம்ம ஏரியா கடை ஒன்றில் ,தனிச் சாறு கிடைக்கும் என்றே எழுதி இருக்கிறார்கள் :)

      நோயும் ஒரு தொடர் கதைதான் போலிருக்கிறது :)

      பிறப்பே சரித்திரம் ஆகணும்னா சிரிச்சுகிட்டே பிறந்தால்தான் உண்டு :)

      Delete
  3. Replies
    1. சரி ,காம்பிளான் குடுன்னு கேட்காமல் போனாரே :)

      Delete
  4. அனைத்துமே அருமை. போர்ன்விட்டா அதிகம் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. குடிச்ச மாதிரியே இருக்குமே :)

      Delete
  5. போர்ன்விடா குடிக்கும் போதும் “ போர்ன்” விடாமல் துரத்தினால்...? நோயற்ற வாழ்வே... என்று படிக்கிறோம் முழுக்க நோயுள்ள உடலா. எதற்கு வைத்தியம்?எந்தக் கடைக்குள் நுழைந்ததும் என்பதை தெளிவாகச் சொல்லுங்கள் ,குடும்பத்தில் குழப்பம் வந்திடக் கூடாதில்லே ?/ தெளிவாய்த்தான் இருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நெட் கட் ஆகும் அடுத்த மாதத்தில் இருந்து :)
      உடம்புலே நோயில்லை ,நோயில்தான் உடம்பே :)
      இது உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா :)

      Delete
  6. 01. பார்ட்னரையும் சேர்த்திருந்தால் கிடைச்சிருக்குமோ...
    02. அப்படீனாக்கா அவன் தண்ணிச்சாறுனு எழுதிப்போட வேண்டியதுதானே,,,
    03. மார்க்கண்டேயன் வாழ்க...
    04. உண்மையே.. ஜி.

    ReplyDelete
    Replies
    1. அடிதான் கிடைச்சிருக்கும் :)
      எவன் வருவான் :)
      இவனா மார்க்கண்டேயன் :)
      எல்லோருக்கும் உறைக்க மாட்டேங்குதே :)

      Delete
  7. எது அருமை ,தண்ணிச்சாறா:)

    ReplyDelete
  8. தனிச்சாறு என்பது.. என்னச்சாரு....?????

    ReplyDelete
    Replies
    1. தண்ணி,சர்பத் கலக்காத சாறாம்:)

      Delete
  9. சூப்பர் ஜோக்ஸ்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இனி நீங்க போர்ன்விட்டா குடிக்க மாட்டீங்க ,அப்படித்தானே :)

      Delete
  10. போர்ன் விடா குடிச்சாத்தான் தெம்பாப் பாக்கலாமோ?

    ReplyDelete
    Replies
    1. அப்படி பார்க்ககூடாதுன்னு தான் போர்ன்விட்டா கட் :)

      Delete
  11. Replies
    1. போனால் போகட்டும் போர்ன்விட்டான்னு பாடுவாரோ :)

      Delete
  12. இங்க ஊரில் இப்படி ஒரு காமெடி உண்டு. கொஞ்சம் தண்ணி மோரு என்பார்கள்.அதாவது தண்ணீர் முகண்டு வா என அர்த்தம். உண்டனே முறைகார பெண்கள். தண்ணியா? மோரா ? மாமா என்பார்கள் கேலியாக:) அது நினைவுக்கு வருது பாஸ்!

    ReplyDelete
    Replies
    1. எங்க ஊர்லேயும் 'பைய கொடுங்க 'என்பார்கள் ..அதற்கு அர்த்தம் 'மெதுவா கொடுங்க' :)

      Delete