1 August 2015

வயசுப் பிள்ளைங்களை பூட்டி வைக்க முடியுமா :)

  --------------------------------------------------------------------------------------------------
  விட மனசில்லை என்றாலும் :)         
         ''காசிக்குப் போனா எதையாவது விட்டுட்டு வரணும்னு சொல்வாங்க ,நீங்க எதை விட்டீங்க?''
        '' என் பல் செட்டை விட்டுட்டு வந்தேன், குளிக்கும் போது அடிச்சுகிட்டு போயிடுச்சே !''

பெண்டாட்டின்னா இந்த பயம் இருக்கணும் !

              ''தக்காளி விக்கிற விலையிலே குப்பையிலே போடுறீங்களே ,ஏன் சார் ?''
                 ''அதெல்லாம் உடைஞ்ச தக்காளி .... நல்ல தக்காளி மட்டும் பொறுக்கி எடுத்தால் கடைக்காரனுக்கு பிடிக்கலே ,உடைஞ்ச தக்காளியை கொண்டு போனா பெண்டாட்டிக்குப் பிடிக்கலே ,அதான் !''




           
 வயசுக்குப் பிள்ளைங்களை பூட்டி வைக்க முடியுமா ?

          ''என்னங்க ,காணாமப் போன நம்ம பையன் போன்லே என்ன சொன்னான் ?''

              ''பிரியாவை தேட வேண்டாம்னு பக்கத்து வீட்டிலே போய் சொல்லச் சொல்றான் !'


பணம் இருக்கிறதென்று பிறந்த நாளைக் கொண்டாடலாமா ?

இறந்தபின்னும் நம் பிறந்தநாளைக் கொண்டாடவும் 
நாலு பேர்கள்  இருக்கிறார்கள் என்றால் ...

இன்று நாம் ,நம் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் அர்த்தம் உள்ளது !




  1. வலிப் போக்கன்Fri Aug 01, 02:51:00 p.m.
    பொண்டாட்டி இருக்கிறவுகபொண்டாட்டிக்கு பயப்படுவாக சரி, இல்லாதவுக யாருக்கு பயப்படுவாக...ஜீ






    1. பெண்டாட்டி இருந்தாலும் இல்லைன்னாலும் மனசாட்சிக்கு பயந்தால் போதும்,கடவுள் கூடத் தேவையில்லை !

29 comments:

  1. இன்றைய நாள் சிரிப்புடன் தொடங்குகிறது ஜோக்காளியின் வலைபதிவுக்கு வந்தபின்

    ReplyDelete
    Replies
    1. ஒன்பது நிமிடங்களுக்கு முன்பே வந்து விட்டதால் ,நல்லதே நடக்கும் !இன்னைக்கு நீங்க போடுற பதிவு தமிழ்மண மணி மகுடம் சூடும் என்று உள்ளேயிருந்து ஒரு பட்சி சொல்லுது :)

      Delete
  2. தானா கழண்டு போச்சா...? அப்போ எதையும் விடலே...!

    ReplyDelete
    Replies
    1. கட்டிக்கிட்ட பெண்டாட்டியைக்கூட விடுவார் ,கட்டிக்கிட்ட பல் செட்டை விட எப்படி மனசு வரும் :)

      Delete
  3. காணாமல் போன பையன் ஃபோன் செய்த ஜோக்கை ரொம்ப ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ரசித்தீங்களா ,பொண்னோட அப்பன் ஸ்தானத்தில் இருந்து பாருங்களேன் :)

      Delete
  4. உங்கள் பதிவுகளை ரசிக்கிறேன் ஓரளவுக்காவது ஈடு செய்யும் மாதிரிப் பின்னூட்டம் எழுத முடிவதில்லை. ஆகவே ரசித்தேன் என்று சொல்லிக் கொள்வதோடு நிற்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. உள்குத்து ஏதும் இல்லையே:)

      Delete
  5. வயசுப்பிள்ளையை பூட்டி வச்சாலும்........!!!!

    ReplyDelete
    Replies
    1. என்னாகும்னு நீங்க நினைக்கிறீங்க :)

      Delete
  6. “““““''என்னங்க ,காணாமப் போன நம்ம பையன் போன்லே என்ன சொன்னான் ?''
    ''பிரியாவை தேட வேண்டாம்னு பக்கத்து வீட்டிலே போய் சொல்லச் சொல்றான் !'“““““““

    பிரியாவிடை பிரியாவிற்குக் கொடுக்காதவரை சரிதான் :)

    ReplyDelete
    Replies
    1. இப்போதானே ஓடிப் போயிருக்காங்க ,பிரியாவிடைக்கு காலம்தான் பதில் சொல்லும் :)

      Delete
  7. வணக்கம்,
    அனைத்தும் அருமை ஜீ,,,,,,,,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பிரியா செய்த காரியம் சரிதானா :)

      Delete
  8. பையனின தொலைபேசி !இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு நாசூக்கா சொல்றான் :)

      Delete
  9. பல் செட்டு தானே போச்சு நல்லவேளை வெற எதாவது அடிச்சிட்டு போயிருந்தா???
    அப்புறம் அந்த பையனும் ரொம்ப நல்லவன் போல!!!

    ReplyDelete
    Replies
    1. வேற என்னய்யா அடிச்சிட்டு போகப் போவுது :)

      ரொம்ப நல்லா வருவான் :)

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. சிரித்து மாளவில்லை முதல் ஜோக்கை படித்துவிட்டு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. விட வேண்டாம் என்று நினைத்தாலும் எங்கே முடிகிறது :)

      Delete
  12. நல்ல விட்டு... போனால் போகட்டும்க்கு விட்டுவிட்டு போடான்னு வந்திட்டீங்க..!


    எப்படியோ . நல்லா... பொறுக்கின்னு நிருபிச்சிட்டீங்க... சபாஷ்...!


    “ஓ... பையன் எப்படி இவ்வள பிரியா பேசுறான்...!”
    “நான்தான் அப்பவே சொன்னேன்...பிரியா பேசுறான்...பிரியா பேசுறான்னு சொன்னேன்...”
    “நீ பிரியா பேசுறான்னு சொன்னீயே தவிர... பிரியாவோடன்னு சொல்லலையே...!”


    நாலு பேருக்கு நன்றி.

    த.ம.9.


    ReplyDelete
    Replies
    1. பல் செட் அது கிடக்கும் ஆழத்தில் போய் தேட முடியுமா :)

      ஆமாம் நல்லதை மட்டுமே பொறுக்கும் பொறுக்கி :)

      இப்போ பேசிகிட்டுதான் போகட்டுமே :)

      காசு வாங்கிக்காம தூக்கி வச்சு பேசுறவங்களுக்கு தான் நன்றி சொல்லணும் :)




      Delete
  13. வயசுக்கு வந்த பிள்ளைகளை பூட்டி வைக்க முடியுமா ஜோக் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.
    த ம 11

    ReplyDelete
    Replies
    1. சிரிப்பை பூட்டி வைக்காமல் சிரிக்கிறது நல்லது தானே :)

      Delete
  14. பிறந்த நாள் கொண்டாடுவது சூப்பர் தத்துவம் ஜீ..

    காசிக்குப் போனவர் பல் செட்டை விட்டுவிட்டு வந்தது கூட பரவாயில்லை எங்க பக்கத்து வீட்டுக்காரர் அவர் பையனையே விட்டு வந்திருக்கிறார்.

    God Bless YOU

    ReplyDelete
    Replies
    1. என்ன சாதித்தோம் என்று நினைத்து பார்த்து ,பிறந்த நாளைக் கொண்டாடுவது நல்லது:)

      Delete
  15. Replies
    1. பல் செட் போன பொக்கை வாயை ரசிக்க முடிந்ததா :)

      Delete